32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3885 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 33 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 33)
நிறம் மாறும் உலகில் விமர்சனம் இது புதிது

நிறம் மாறும் உலகில் விமர்சனம்

நிறம் மாறும் உலகில், அதாவது நேரத்துக்குத் தக்கப்படி மாறிக் கொள்ளும் உறவுகளில், என்றுமே மாறாதது தாயின் அன்பு மட்டுமே என அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். தாயோடு கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறும் அபி எனும் இளம்பெண்ணை, டிடிஆர் நா.முத்துக்குமார் ட்ரெயினில் சந்திக்கிறார். அவர், அபிக்கு நான்கு கதைகளைச் சொல்கிறார். முதல் கதை, மும்பையில் டானாக இருக்கும் அப்துல் மாலிக் பற்றிய கதை. அப்துல் மாலிக்காக நட்டி நடித்துள்ளார். மும்பை சிகப்பு விளக்குப் பகுதியில் பிறக்கும் அப்துல்க்கு […]

07/03/2025 Dinesh R
மர்மர் விமர்சனம் | Murmur review சினிமா

மர்மர் விமர்சனம் | Murmur review

தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் (Found Footage) திரைப்படம். இப்படத்தில் பின்னணி இசையும் இல்லை, மற்ற படங்கள் போல் பிரத்தியேகமான கேமரா ஒளிப்பதிவும் இல்லை. போகிற போக்கில், நாம் மொபைலிலோ, கேமராவிலோ படம்பிடிக்கும் ரா ஃபூட்டேஜ்கள் (Raw footage) போல்தான் முழுப்படமுமே உள்ளது. அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களைப் பதிவிடும் ஏழு யூடியூபர்கள், ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிச்சாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாகப் பதிவு செய்யச் செல்கிறார்கள். அவர்கள் […]

07/03/2025 Dinesh R
TEST – கிரிக்கெட்டும், வாழ்க்கையளிக்கும் சோதனைகளும் அயல் சினிமா

TEST – கிரிக்கெட்டும், வாழ்க்கையளிக்கும் சோதனைகளும்

கிரிக்கெட் மைதானம், மூன்று பேரின் வாழ்வை மாற்றி அமைக்கும் ஒரு முடிவை எப்படி எடுக்க வைக்கிறது என்பதுதான் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் கதையாகும். ஏப்ரல் 4 அன்று, நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘டெஸ்ட்’ திரைப்படம் ப்ரீமியர் ஆகிறது. இதில் நடிகர்கள் ஆர். மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோருடன் மீரா ஜாஸ்மினும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. துணிச்சலான, அழுத்தமான கதைகளைத் […]

06/03/2025 Dinesh R
குடும்பஸ்தன் | Zee5 இல் மார்ச் 7 முதல் OTT

குடும்பஸ்தன் | Zee5 இல் மார்ச் 7 முதல்

திரையரங்குகளில் பெருவெற்றி பெற்ற குடும்பஸ்தன் படம், டிஜிட்டலில் மார்ச் 7, 2025இல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது. இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியுள்ள இப்படத்தில், கே. மணிகண்டன், ஷான்வி மேக்னா முன்னணி வேடங்களில் நடிக்க, நிவேதிதா ராஜப்பன், குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன், குதசனாட் கனகம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராபிக் டிசைனரான கதைநாயகன் நவீன், வேலை இழந்த பிறகு அவனது மனைவி வெண்ணிலா கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். வேலை இழப்பு, கடன் சிக்கல்கள், குடும்பப் பிரச்சனைகள் […]

05/03/2025 Dinesh R
எமகாதகி விமர்சனம் இது புதிது

எமகாதகி விமர்சனம்

நினைத்த காரியத்தை எப்படியும் சாதித்துவிடும் பெருந்திறல் மனம் வாய்க்கப் பெற்றோரை எமகாதகர் என்போம். அப்படி ஒரு நபராக உள்ளார் இப்படத்தின் நாயகி லீலா. லீலா எனும் இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் இறந்த அவளது உடலை வீட்டிற்குள் இருந்து எடுக்க முடியாமல் அமானுஷ்யமான முறையில் தடங்கல்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. உடல் துள்ளுகிறது, எழுந்து அமர்கிறது, அந்தரத்தில் சுவரோடு ஒட்டி நிற்கிறது. அந்த ஊரே செய்வதறியாமல் திகைக்கிறது. லீலாவிற்குத் தீங்கு நினைத்தவர்கள், அவளுக்குப் பிரச்சனை அளித்தவர்கள், அவள் […]

05/03/2025 Dinesh R
கட்டாளன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அயல் சினிமா

கட்டாளன் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘மார்கோ’ படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது, தனது கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் புதிய திரைப்படமான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தில், பிபி (ஆண்டனி வர்கீஸ்) முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். போஸ்டரில், […]

04/03/2025 Dinesh R
BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் சினிமா

BV Frames | களவும் காதலும் – ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர்

பிவி ஃப்ரேம்ஸ் (BV Frames) நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துப் படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் […]

03/03/2025 Dinesh R
பைரதி ரணகல் – தமிழிலும் மலையாளத்திலும் | SunNXT சினிமா

பைரதி ரணகல் – தமிழிலும் மலையாளத்திலும் | SunNXT

கீதா பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் தயாரிப்பில், இயக்குநர் நாரதன் இயக்கத்தில், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில், வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஆக்ஷன் அதிரடி திரைப்படமான “பைரதி ரணகல்” படம், இப்போது தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் SunNXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற மஃப்டி படத்தின் ப்ரீக்குவலாக உருவான படம் தான் “பைரதி ரணகல்”. மஃப்டி படம் தான் தமிழில் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் “பத்து தல” படமாக வெளியானது என்பது […]

02/03/2025 Dinesh R
The Indian In Me விமர்சனம் சினிமா

The Indian In Me விமர்சனம்

இது, 28 நிமிடங்கள் கால அளவு கொண்ட ஓர் ஆங்கிலோ-இந்தியக் குறும்படமாகும். மரணப்படுக்கையில் இருக்கும் ரிச்சர்ட் எனும் ஆங்கிலோ-இந்தியர், தனது பேரனின் இந்திய மனைவியான சாந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். சாந்தி பதறிப் போய், ‘ஏன் பப்பா? நீங்க என்னிடம் எப்பவும் அன்பாகத்தானே நடந்துக்கிட்டீங்க?’ எனக் கேட்கிறார். தன்னை எப்பொழுதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதும் ரிச்சர்ட், “அது என் குற்றவுணர்ச்சியால் அப்படி நடந்து கொண்டேன்” என்கிறார் எண்பது வயது ரிச்சர்ட். இந்தக் கதையில், ரிச்சர்ட், […]

02/03/2025 Dinesh R
“முழுமையான ரொமான்ட்டிக் திரைப்படம்” – ரியோ ராஜ் | ஸ்வீட் ஹார்ட் சினிமா

“முழுமையான ரொமான்ட்டிக் திரைப்படம்” – ரியோ ராஜ் | ஸ்வீட் ஹார்ட்

YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார், “’ஜோ’ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு […]

02/03/2025 Dinesh R
கிங்ஸ்டன் – நம்ம ஊரு பாட்டி சொன்ன கதை சினிமா

கிங்ஸ்டன் – நம்ம ஊரு பாட்டி சொன்ன கதை

ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் வெற்றிமாறன், ”ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே […]

02/03/2025 Dinesh R
கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன? சினிமா

கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன?

ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் […]

02/03/2025 Dinesh R
கூரன் விமர்சனம் சினிமா

கூரன் விமர்சனம்

கூரன் என்றால் கூர்மையான அறிவை உடையவன் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இப்படத்தில் கூர்மையான அறிவைக் கொண்டுள்லதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது ஒரு பெண் நாயாகும். தன் குட்டியைக் காரில் மோதிக் கொல்லுபவனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது ஜான்சி எனும் நாய். நாயின் அந்த வேதனையைப் புரிந்து, நாயின் சார்பாக வழக்காடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய்க்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை. கொஞ்சம் நம்ப முடியாத கதை என்றாலும், திரைக்கதையின் மூலமாகப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும்படி படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை, […]

01/03/2025 Dinesh R
அகத்தியா விமர்சனம் சினிமா

அகத்தியா விமர்சனம்

திருவண்ணாமலையைச் சேர்ந்த அகத்தியன், ஒரு படத்தில், முதல்முறையாகக் கலை இயக்குநராகப் பணிபுரிய ஒப்பந்தமாகிறார். அதற்காகப் பாண்டியில் ஒரு வீட்டில், சொந்த செலவில் கடன் வாங்கி செட் போட்டுவிடுகிறார். ஆனால், படப்பிடிப்பே நடக்காமல் அப்படம் நின்றுவிடுகிறது. வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதற்காக அவ்வீட்டை ‘பேய் பங்களா’வாக மாற்றுகிறார். அமானுஷ்யமான முறையில் அதுவும் தடைப்படுகிறது. அந்தப் பங்களாவில் நிகழும் அமானுஷ்யத்திற்கும் தனக்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது என்பதை உணர்கிறான் அகத்தியா. மேலும், இரத்தப் புற்றுநோயில் பாதிக்கப்பட்ட தன் தாயின் உடல்நலக் […]

28/02/2025 Dinesh R
சப்தம் விமர்சனம் சினிமா

சப்தம் விமர்சனம்

ஓர் அமானுஷ்ய சக்தி, சத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அதனால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள, அவ்வாமானுஷ்யத்தைப் புலனாய்வு செய்ய புலனுக்கெட்டாத (Paranormal) மர்மத்தைக் கண்டுபிடிக்க, மும்பையில் இருந்து ரூபன் வைத்தியலிங்கம் மூணாருக்கு வரவைக்கப்படுகிறார். அந்தச் சத்தத்தின் பின்னாலுள்ள மர்மத்திற்கான பதிலே இப்படத்தின் கதையோட்டம். ஈரம் படத்திற்குப் பிறகு, ஆதி, இசையமைப்பாளர் தமன், இயக்குநர் அறிவழகன் ஒன்றிணைந்துள்ளனர். நீரை மையமாகக் கொண்டு ஈரத்தில் கலக்கியவர்கள், இதில் சத்தத்தைத் தொட்டுள்ளனர். ஒலியைப் பயன்படுத்தியிருக்கும் விதத்தில், தொழில்நுட்ப ரீதியாக இப்படம் […]

28/02/2025 Dinesh R