32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1274 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 45 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 45)
தொரட்டி விமர்சனம் சினிமா

தொரட்டி விமர்சனம்

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம். ‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும். கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது. மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் […]

01/08/2019 Dinesh R
டியர் காம்ரேட் விமர்சனம் சினிமா

டியர் காம்ரேட் விமர்சனம்

காம்ரேட் என்றால் தோழர். முக்கியமாக கம்யூனிசத்தை அரவணைத்துக் கொண்டவர்கள், தங்கள் சங்கத்தின் சக உறுப்பினர்களைத் தோழர் என்றோ, காம்ரேட் என்றோ அழைப்பார்கள். ‘நீ நினைப்பதைச் சாத்தியமாக்க சக காம்ரேடாக உன் வாழ்நாள் முழுவதும் துணையிருப்பேன்’ என நாயகன் நாயகியிடம் கூறுகிறார். ஒரு காம்ரேடாக தான் சொன்னதை நாயகன் எப்படிச் செய்து காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை. சமீபமாக, தமிழ்ப் படங்களின் கால அளவு இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவோ, அல்லது அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாவது இருக்கிறது. […]

27/07/2019 Dinesh R
A1 விமர்சனம் சினிமா

A1 விமர்சனம்

ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் – திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; […]

26/07/2019 Dinesh R
கொளஞ்சி விமர்சனம் சினிமா

கொளஞ்சி விமர்சனம்

பெரியாரியவாதியான அப்பாசாமி, அவரது மூத்த மகன் கொளஞ்சி தவறு செய்யும்பொழுதெல்லாம் அடி வெளுத்து விடுகிறார். அதனால் கொளஞ்சி அவரது அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கிறான். அவர்களுக்கிடையில் பெரிதாய் ஏற்படும் விரிசல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கொளஞ்சியாக நடித்துள்ள பதின் பருவத்துச் சிறுவன் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். அரிவாளை அடமானம் வைத்து ஐஸ் வாங்குவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியையிடம் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்தாரெனத் தருவது என எண்ணற்ற சேட்டைகள் செய்கிறான் கொளஞ்சி. அதை […]

26/07/2019 Dinesh R
ஆடை விமர்சனம் சினிமா

ஆடை விமர்சனம்

இந்தப் படத்திற்கு, நேரடியாக ‘நங்கேலி’ என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அல்லது அவரது முதற்படம் போல் கவித்துவமாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். ஆனால், நேரடியாக உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆசையிலும், விளம்பரத்திற்காகவும் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் போல் இயக்குநர் ரத்னகுமார். ஆனால், இந்தத் தலைப்பே அவர் மறைக்கப் பார்க்கும் இஸத்தை (கொண்டையை) வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவரது முதல் படமான மேயாத மான்-இல் ஒரு வசனம் வரும். ‘வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, […]

21/07/2019 Dinesh R
கடாரம் கொண்டான் விமர்சனம் சினிமா

கடாரம் கொண்டான் விமர்சனம்

மலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர் கடாரம் ஆகும். அந்த மாநிலத்தில், பரவலாக ஒரு கலவரத்தினை உருவாக்கும் அளவு செல்வாக்கு கொண்டவன் நாயகன் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். 2010 இல் வெளிவந்த ‘ஆ பூ போர்தான்த் (À bout portant)’ என்ற ஃப்ரென்ச் படத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் தூங்கா வனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் ம செல்வா. ‘ஆ பூ போர்தான்த்’ என்றால் “மிக அருகில்” எனப் பொருள். இதே ஃப்ரெஞ்சு […]

19/07/2019 Dinesh R
தி லயன் கிங் விமர்சனம் அயல் சினிமா

தி லயன் கிங் விமர்சனம்

1994 இல் வெளியான ‘தி லயன் கிங்’ படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், ‘ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)’ எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் […]

19/07/2019 Dinesh R
வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம் சினிமா

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி விளையாட்டு என்றால் உயிர். தந்தையின் விருப்பத்தைத் தாமதமாக உணரும் விக்ராந்த், தனது சொந்த ஊரான கணக்கன்பட்டிக்குச் சென்று ‘வெண்ணிலா கபடி குழு’வில் இணைகிறார். 1989இல் நடக்கும் பீரியட் படம். கதை மட்டும் அக்காலகட்டத்தில் நிகழ்வது போலல்லாமல், படமே 80களின் இறுதியில் எடுக்கப்பட்டது போல் தொடங்குகிறது. இவர் தான் நாயகி, இவர் தான் நாயகன், இவர் நாயகனின் அப்பா, இது நாயகனின் குடும்பம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், காமெடியன் கஞ்சா […]

14/07/2019 Dinesh R
தோழர் வெங்கடேசன் விமர்சனம் சினிமா

தோழர் வெங்கடேசன் விமர்சனம்

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டும் கதையை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் இயக்குநர் மகாசிவன். அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் லாக் ஆகி, லட்சுமி சோடா ஃபேக்டரி முதலாளியான வெங்கடேசன் மீது மோதிவிடுகிறது. அவ்விபத்தில் அவரது இரண்டு கையையும் பறி கொடுக்கிறான் வெங்கடேசன். நஷ்ட ஈட்டிற்காக நீதி மன்றத்திற்கு நடையாக நடக்கிறான். தீர்ப்பு சாதகமாக அமைந்த பின்பும், அவருக்கு நியாயம் கிடைக்காமல் அவஸ்தைகள் தொடர்வதுதான் படத்தின் கதை. ‘ஓய்ய்.. நானொரு முதலாளி’ […]

13/07/2019 Dinesh R
கொரில்லா விமர்சனம் சினிமா

கொரில்லா விமர்சனம்

விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை […]

13/07/2019 Dinesh R
கூர்கா விமர்சனம் சினிமா

கூர்கா விமர்சனம்

லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள இப்படம், தமிழகமெங்கும் 300+ திரையரங்குகளில் யோகிபாபுவிற்குப் பிரம்மாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. ஜீவாவின் கொரில்லா உட்பட, இந்த வாரம் 5 படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு. பகதூர் பாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாகச் சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா இனத்தவனான […]

12/07/2019 Dinesh R
போதை ஏறி புத்தி மாறி விமர்சனம் சினிமா

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி […]

12/07/2019 Dinesh R
ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல் சினிமா

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். மார்வலின் மொத்த கூட்டமும் கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. சூப்பர் ஹீரோஸ் உச்சத்தில் இருந்தாலே தீயசக்திகளுக்குப் பிடிக்காது, இப்போது அவர்களே இல்லை எனும் போது மக்களை அழிக்கவே காத்திருக்கும் தீயசக்திகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? நிலம், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களின் வடிவமெடுத்து மக்களைக் கொன்று, உலகை ஆட்கொல்ல முடிவு செய்கிறது தீமை. அவஞ்செர்ஸின் தலைவன் நிக் ஃப்யூரிக்கு என்ன செய்வது, யாரைத் […]

07/07/2019 Dinesh R
ராட்சசி விமர்சனம் சினிமா

ராட்சசி விமர்சனம்

பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு ‘ராட்சசி’ எனும் அடைமொழி கிடைக்கிறது. சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, ‘இது தவறு, இப்படிச் செய்யலாம்’ எனச் சொல்லிக் […]

06/07/2019 Dinesh R
களவாணி 2 விமர்சனம் சினிமா

களவாணி 2 விமர்சனம்

மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் […]

06/07/2019 Dinesh R