Shadow

திரை விமர்சனம்

குடிமகன் விமர்சனம்

குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறேழு கி.மீ. தள்ளிப் போய்க் குடித்துக் கொண்டிருந்ததற்கும், ஊர்க்குள்ளேயே டாஸ்மாக் கொண்டு வந்ததற்கும், என்ன வேறுபாடு எனப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது 'குடிமகன்' படம். ஒரு ஊருக்குள் டாஸ்மாக் வருகின்றது. குடிப்பழக்கமில்லாத கந்தனுக்கு குடியைப் பழக்குகின்றனர் அவன் நண்பர்கள். குஇப்பழக்கத்திற்கு அடிமையாகும் கந்தனின் குடும்பம் எந்தக் கதிக்கு உள்ளானது என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டாய் நாயகனைக் குடிக்க வைக்கும் அவனது நண்பர்கள், நாயகனின் வீழ்ச்சிக்குச் சாட்சியாகிறார்கள். அரசாங்கமே மக்களின் குடிப்பழக்கத்தை நம்பித்தான் இயங்குகிறது என்னும் வாதம் எவ்வளவு அபத்தமானது? ஆபத்தானது? எத்தனையோ குடும்பத்தின் சிதைவிற்கு ஓர் அரசே காரணமாய் இருப்பதை விட மிகப் பெரிய கேவலம் வேறொன்று உண்டா? படத்தின் தொடக்கமே ஒரு கவிதை போலுள்ளது. தன் மகன் ஆகாஷைச் சுமந்து கொண்டு கந்தன் செல்லும் அந்தக் கிராமத்துப் பாதை ரம்மியாக...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சினிமா, திரை விமர்சனம்
தியாகராஜன் குமாரராஜாவின் உலகத்தில், வேம்பு, ஷில்பா, துளசி, லீலா என 4 பெண் கதாபாத்திரங்கள் பிரதான இடம்பெறுகின்றனர். படைப்பாளன் அவர்களுக்கு அளித்துள்ள குணம் (!?- குற்றம்), வாழ்விடம், தண்டனை குறித்து நான்-லீனியரில் அடுக்கினால், படைப்பாளனின் அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். குணவார்ப்பு: வேம்பு, தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்கிறார். ஷில்பா சர்வைவலுக்காகப் பிச்சை எடுக்கிறார், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார், குழந்தைகளைக் கடத்தி விற்கிறார். ஜோதி - நெருப்பு; பதிவிரதை; படி தாண்டாப் பத்தினி. லீலா, பார்ன் (Porn) படங்களில் நடித்து லீலைகள் புரிந்தவர். வாழ்விடம்: வேம்பு - நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். லிஃப்ட் வசதி உள்ள குடியிருப்பில் வசிப்பவர். ஷில்பா - சமூகத்தை விட்டு ஓடிப்போனவர். ஜோதி - பாரம்பரியமான வீட்டில். லீலா - குடிசை மாற்றுக் குடியிருப்பில். இனி தான் சூப்பர் டீலக்ஸின் விளைய...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சினிமா, திரை விமர்சனம்
எந்த ஒரு தமிழ்ப்படமும் தந்திராத அனுபவத்தைத் தந்துள்ளதால், சூப்பர் டீலக்ஸ் மிகப் பெரிய விவாதத்தைப் பொதுவெளியில் திறந்துவிட்டுள்ளது. படத்தினை விடப் பார்வையாளர்களின் கோணங்கள் வெகு சுவாரசியமாய் உள்ளது. ரசனையில் முதிர்ந்தோரை, இந்தத் தமிழ்த் திரையுலகம் தான் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது? ஷில்பாவை சக உயிராகப் பார்க்காமல் ஒரு ஜடமாகப் பார்த்துள்ளார் என்ற எனது குறைப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு மறுமொழி இது: 'மீட்சிக்காக, பாவமன்னிப்பிற்காகப் பயணம் போற ஒரு ஜீவன் ஷில்பா. சுனாமியில் தப்பித்து, ஏன் தப்பித்தோமெனத் தெரியாமல் குழம்பி, உள்ளம் உந்த மும்பை ஓடி, பெண்ணாக மாறி, பிழைப்பிற்காக அந்தப் பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்து, தான் செய்த செயலோட தீவிரத்தை உணரும் தருணத்தில் பாவமன்னிப்பு வேண்டி, தன் வீடடைந்து, கடைசியில் தான் மட்டும் தான் புறக்கனிக்கப்பட்டவன் அப்படிங்கற சுயபச்சாதாபத்தை விட்டு வெளிய வந்து தன் மனைவ...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கதை சொல்லட்டுமா? திருவாரூர் தொகுதியில், அமமுக கட்சியின் வேட்பாளர் பெயர் எஸ்.காமராஜ். அமமுக-விற்குக் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்த அதிகார மையம், அதே தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் B.காமராஜ்க்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கிக் குழப்பத்தை உண்டு செய்ய முயல்கிறது. தோட்டத்து வாசல் மூலம் உள்ளே நுழைவதில் பெரும் பிரேமை கொண்டவர்களின் தர்மம் (தேவை), இப்படியான குழப்பத்தை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கும். 'தென்னந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்’ தொடங்க உதவி செய்து தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய ‘ரெட் டீ’ நாவல் எழுதிய பி.எச்.டேனியலை அசிங்கப்படுத்துவது போல மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரத்தினைப் பரதேசி படத்தில் அமைத்திருப்பார் இயக்குநர் பாலா. பி.எச்.டேனியல் எனும் மனிதர் வாழ்நாளெல்லாம், தொழிலார்களுக்காகப் போராடி, அவர்களுக்கு உரிமையையும் அடிப்படை வசதியும் மீட்டதோடு, தே...
சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம். மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய ஒரு சிலையை ஆண்டவராக எண்ணி சதா பிரார்தித்துக் கொண்டிருக்கிறான் தனசேகர். இப்படி நான்கு கிளைக்கதைகளை ஒன்றிணைக்கும் தரமான கலகலப்பான அடலட் (A) மூவியாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது. நீளத்தை மட்டும் கத்தரித்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடி சலிப்பு தட்டாமல், முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் ரசித்திருக்க இயலும். முக்கி...
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்

ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன்: ஹிட்டேன் வேர்ல்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஹவ் டூ ட்ரெயின் யுவர் டிராகன் படத்தின் முதற்பாகம் 2010இலும், இரண்டாம் பாகம் 2014இலும், தற்போது மூன்றாம் பாகமும் வெளியாகியுள்ளன. டிராகன்களைக் கொல்லும் டிராகன் வேட்டையனான கிரிம்மலிடம் இருந்து தப்பிக்க, புதிய பாதுகாப்பான மறைவான வசிப்பிடத்தைத் தேடுகிறான் ஹிக்கப். ஹிக்கப்பின் டிராகனான டூத்லெஸ் எனும் நைட் ஃப்யூரி, லைட் ஃப்யூரியைச் சந்திக்கிறது. அதன் தொடர்ச்சியாய், டிராகன்கள் மட்டும் வசிக்கும் பிரத்தியேகமான டிராகன் உலகத்தைக் கண்டடைகின்றனர். கிரிம்மலிடமிருந்து அனைவரும் எப்படிப் பாதுகாப்பாகத் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. முந்தைய பாகங்களைப் போல் ஃபன் எலமென்ட் (fun element), இப்படத்தில் கம்மியென்றே சொல்லவேண்டும். ஆனால், படத்தின் முடிவில் மனதைக் கனக்கச் செய்துவிடுகின்றனர். ஒரு ட்ரைலாகியை முடிக்க அற்புதமான முடிவாக இப்படத்தைக் கொள்ளலாம். இரண்டாம் பாகத்திற்கும், மூன்றாம் பாகத்திற்குமே ஐந்து...
எம்பிரான் விமர்சனம்

எம்பிரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எம் + பிரான் என்பதற்கு 'எனது தேவன்' எனப் பொருள்படும். ஜெயாவிற்குப் பிரியன் மீது ஒருதலையாகப் பயங்கரமான காதல். எவ்வளவு முயற்சி செய்தும், தனது காதலை வெளிப்படுத்தும் தைரியம் அவளுக்கு ஏற்படுவதே இல்லை. காதலைச் சொல்லும் முன், அவள் கோமாவிற்குச் சென்று விடுகிறாள். ஜெயாவின் காதல், பிரியனை எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பதுதான் படத்தின் கதை. படம் லோ-பட்ஜெட் என்றாலும், கதாபாத்திர வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். உதாரணமாக, கதாநாயகி வீட்டில் அவளும், அவளது தாத்தாவும் என இரண்டு பேர்தான் உள்ளனர். தாத்தாவும் இறந்துவிட, கோமாவிக் ஹாஸ்பிட்டலில் இருக்கும் கதாநாயகியைப் பார்த்துக் கொள்ளக்கூட யாருமில்லை. உறவினர்கள், நண்பர்கள் என ஒரு எக்ஸ்ட்ரா பாத்திரமும் இல்லை. யார் நாயகியின் மருத்துவச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றது, கவனித்துக் கொண்டது என எந்தத் தர்க்கத்திற்குள்ளும் செல்ல இயக்குநர் விரும்பவில்லை. நா...
அகவன் விமர்சனம்

அகவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அகவன் என்றால் உள்ளிருப்பவன் எனப் படத்தின் உபத்தலைப்பிலேயே விளக்கம் உள்ளது. ஏகனான சிவன், அனைத்து உயிரினங்களுள்ளும் அநேகனாய் உறைந்துள்ளான் என்பதே படத்தலைப்பின் பொருள். பெருவெள்ளம் ஏற்பட்ட காலத்தில், லிங்கோத்பவராய் உயர்ந்து நிற்கும் சிவனின் ஓவியத்தைக் கண்ட ராஜராஜ சோழனுக்கு ஓரெண்ணம் எழுகிறது. அதன் படி, ஒவ்வொரு கோயிலின் ராஜ கோபுரத்திலும் சில ரகசிய ஏற்பாடுகளை அமைக்கிறார். அதென்ன ரகசியம் என்பதும், அந்த ரகசியத்தை அறிந்து கொண்ட தீயவர்களின் சதித்திட்டம் எப்படிக் கலையப்படுகின்றது என்பதும்தான் படத்தின் கதை. தத்துவச் சாயலுடைய தலைப்பெனினும், படம் நல்லதொரு த்ரில்லராய் ஈர்க்கிறது. மூன்று பொண்டாட்டிக்காரராக வரும் தம்பி ராமய்யாவின் காட்சிகளைக் கத்தரித்து, படத்தின் நீளத்தைச் சுருக்கி, முழு நீள த்ரில்லராய்த் தொடக்கம் முதலே கொண்டு போயிருக்கலாம் இயக்குநர் APG. ஏழுமலை. சிராஸ்ரீ, நித்யா ஷெட்டி எனப் படத்தில் இரண...
ஜூலை காற்றில் விமர்சனம்

ஜூலை காற்றில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னாலே உன்னாலே" படத்தில், 'ஜூன் போனா ஜூலை காற்றில்' என்ற பாடலை பா.விஜய் எழுதினார். ஜீவாவின் அப்படத்திற்கு, இந்தத் தலைப்பையும் அவர் ஓர் ஆப்ஷனாக வைத்திருந்தார். அவரது அசிஸ்டென்ட்டான KC.சுந்தரம், ஜீவாவிற்கு ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் தனது முதல் படத்திற்கு 'ஜூலை காற்றில்' எனத் தலைப்பிட்டுள்ளார். ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதலை, உறவுச்சிக்கலை மையமாகக் கொண்ட படமிது. படத்தை ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுந்தரம். கடைசி அத்தியாயமான 'Moving on (கடந்து செல்லு) தான் படத்தின் சாரம். காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மைண்ட் பிளாக்-கைக் காலகாலமான தமிழ்ப்பட நாயகர்கள் ஆழப் பதிந்து விட்டனர். ஓர் உறவில் இருந்து வெளியேறுவது என்பது மிகப் பெரிய குற்றமாகவே திரைப்படங்கள் சதா போதித்து வருகின்றன. சமூகம் ஒரு transition பீரியடில் உள்ளது. கணவன் இறந்தால் மன...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோவக்கார இளைஞனான கெளதம் மீது தாராவிற்குக் காதல் மலர்கிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஹரிஷ் கல்யாண் அருகில் ஒரு கதாநாயகி மிளிர்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். பியார் பிரேமா காதல் படத்திலும் கூட ரெய்ஸாவைப் பின்னுக்குத் தள்ளி தன் பிரகாசமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸை வெளிப்படுத்தியிருப்பார் ஹரிஷ். இப்படத்திலும், கதாநாயகியான ஷில்பா மஞ்சுநாத்க்கு அதே பிரச்சனைதான். அவரது நடிப்பாலும், ஃப்ரேமில் தனியாகத் தெரியும்பொழுது ஈர்த்தாலும், நாயகனுடனான க்ளோஸ்-அப் காட்சியில் சோடை போகிறார். மஞ்சுளாவைக் கல்லூரி மாணவியாகவும் ஏற்றுக் கொள்ளச் சிரமமாக உள்ளது. எனினும், இதய ராணியாக அவரது நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது. முடிவெடுக்க முடியாமல் குழம்பி, அக்குழப்பத்தை நாயகன் மேல் கோபமாகக் காட்டும் காட்சி என தன் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக நடித்துள்ளார். படத்தின் பலமே, பிரதான பாத்திரங்களின் கே...
கேப்டன் மார்வெல் விமர்சனம்

கேப்டன் மார்வெல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை 'அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார்' படத்தில் கொடுத்திருப்பார்கள். யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது. யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளனர். வொண்டர் வுமன் படத்தில் கேல் கேடோட் கதாபாத்திரத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கேப்டன் மார்வெலான ப்ரீ லார்சனுக்கு அந்தக் கொடுப்பிணை வாய்க்காததுதான் படத்தின் ஈர்ப்பளவில் சுணக்கம் ஏற்படுவதற்குக் காரணம். ...
கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

கும்பளாங்கி நைட்ஸ் – அன்பால் ஒளி வீசும் கதவற்ற வீடு

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது அல்ல. அன்பின் நிறைவு மட்டுமே ஒரு வீட்டை வீடாக மாற்றவல்லது. 'கும்பளாங்கி நைட்ஸின்' கதையை இப்படி ஒற்றை வரி 'க்ளிஷே'வுக்குள் அடக்கி விடலாமா என்றால்... கூடாது. இந்தத் திரைப்படம் சொல்லும் பல்வேறு அடுக்குகளில் அதுவுமொன்று என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எண்ணற்ற மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஆனந்தமும் கண்ணீரும் வீழ்ச்சியும் உயர்ச்சியும், வலியும் இறுமாப்பும், காதலும், பொறாமையும், வியப்பும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் அவைகளை இணைக்கும் ஒற்றை இழையாக அன்பும் நிறைந்து தளும்பும் அபாரமான உணர்வெழுச்சியென்றும் அடையாளப்படுத்தலாம். சமூகத்தில் உதிரிகளாக வாழ்ந்து முடிக்கும், இலக்கற்ற வாழ்க்கையை மேற்கொள்ளும் சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூட அடித்து உருளும் சகோதரர்களுக்கிடையே வாழ்க்கை எப்படி வ...
பூமராங் விமர்சனம்

பூமராங் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்திரேலியப் பழங்குடியினர்கள் (aboriginals) பயன்படுத்திய எறி ஆயுதத்தின் பெயர் தான் பூமராங். அவற்றை வீசி எறிந்தால், இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் வீசியவரிடமே திரும்பும். பழந்தமிழர்களிடமும், இதே தொழில்நுட்பத்திலான "வளரி" எனும் ஆயுதம் உபயோகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆயுதத்திற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பைக் குறியீட்டுப் பெயராகத்தான் புரிந்து கொள்ள வேண்டும். "லைஃப் இஸ் எ பிட்ச்" என்ற க்ளைமேக்ஸில் வில்லனிடம் சொல்ல வந்து, பிட்ச் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், 'லைஃப் இஸ் எ பூமராங்' என்பார் படத்தின் நாயகன். எந்த வினையை விதைத்தானோ அதே வினையால் அறுக்கப்படுவான் என்கிற பொருளில் புரிந்து கொள்ளவேண்டும். அதாவது, இரண்டு நதிகளை இணைப்பதில் ஈடுபடும் சக்தி என்பவரைக் கொன்ற வில்லனை, சக்தியின் முகத்திலேயே வந்து பழி தீர்க்கிறார் சிவா. யாரைக் கொன்றாரே, அவரே தி...
கபிலவஸ்து விமர்சனம்

கபிலவஸ்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொதுக் கழிப்பறையில் பிறந்த முருகன், அங்கேயே வளர்ந்து வேலை செய்கிறான். அந்தக் கழிப்படத்தை ஒட்டி வாழும் நடைபாதை மனிதர்களைப் பற்றிப் படம் பேசுகிறது. கபிலவஸ்து என்பதைக் காரணப் பெயராகக் கொள்ளலாம். லும்பினியில் பிறந்த சித்தார்த்த கெளதமர், இளவரசனாக வளர்ந்தது கபிலவஸ்துவில்தான். புத்தா ஃப்லிம்ஸ் என்பது படத்தைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் என்பது உபத்தகவல். சொந்த நாட்டிலேயே, குடியுரிமை அடையாளம் ஏதுமற்று அகதிகளாக வாழும் நடைபாதை மக்கள் வாழுவதற்குப்படும் சிரமங்களைப் பதிந்துள்ளார் இயக்குநர் நேசம் முரளி. தெருவோரங்களில், சாலை ஓரங்களில் உண்டு, உறங்கி, மடிந்து போகும் மனிதர்களைப் பற்றியது கபிலவஸ்து படம். எந்தக் கணக்கெடுப்புக்கும் அடங்காததாலும், கேட்பாரற்ற நிலை இருப்பதாலும், வழக்குகளை முடிக்க போலீஸ்காரர்களால் பலிகடாவாக்கப்படுகிறார்கள். வீடற்ற ஃபிளாட்பாரவாசியிடம் தட்டிப் பறித்த 200 ரூபாயைத் திருப்பித் தர விர...
ஸ்பாட் விமர்சனம்

ஸ்பாட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஸ்பாட் என்றால் ஓரிடம் அல்லது ஒருவரின் லோக்கேஷனைக் கண்டுபிடிப்பது எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்திற்கு, இரண்டு பொருளுமே பொருந்தும். முதற்பாதியில், நாயகியின் லோக்கேஷனை வில்லனின் ஆட்கள் அவரது ஃபோனை வைத்துக் கண்டுபிடித்த (spot) வண்ணம் உள்ளனர். இரண்டாம் பாதியில், நாயகன் ஓரிடத்திற்கு (spot) வில்லன்களை மொத்தமாக வர வைக்கிறார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை முழுவதுமே சேஸிங் (chasing) தான். மஹிந்திரா ஸ்கார்பியோவை, மிட்சுபிஷி பஜேரோ துரத்திக் கொண்டே உள்ளது. ஸ்கோர்பியாவில் நாயகன், நாயகி, நாயகனது மூன்று நண்பர்கள் உள்ளனர். சென்னையில் தொடங்கும் அந்த சேஸிங் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள கன்டெயினர் யார்டில் முடிகிறது. லொள்ளு சபா மனோகரின் மகன் ராஜ்குமார் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். நாயகனின் நண்பர்கள் மூவரில் ஒருவராக வருகிறார். கலகலப்பிற்கு உதவக்கூடிய ஸ்கோப் இருந்தும் அதற்கான மெனக்கெடல் இல்ல...