Shadow

திரை விமர்சனம்

திருமணம் விமர்சனம்

திருமணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாழ்நாள் சம்பாத்தியத்தைக் கல்யாணத்தில் சுலபமாக இழந்துவிடுவது நம் பெருமைகளில் ஒன்று. கையில் பணமில்லாவிட்டாலும், பணத்தை எப்படியேனும் புரட்டி வாழ்நாளைக் கடனாளியாகக் கழிக்க அஞ்சாத தற்கொலை மனோபாவம் இல்லாத நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மிகவும் அரிதானவை. சேரன் முன் வைக்கும் திருத்தம், திருமண வைபவத்தில் அதீதமாக விரயமாகும் பொருளாதாரத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒன்றை மட்டுந்தான். தலைப்பில் தொனிக்கும் திருத்தங்'கள்' என்ற பன்மை விகுதி ஒரு சினிமாட்டிக் எக்ஸாகிரேஷன் தான். சமூகத்தின் மீதான சேரனின் அதீத காதல் அவரது கலையார்வத்தையும் மிஞ்சிவிட்டது என்றே சொல்லவேண்டும். பெரியண்ணன் பாவனையில், தலைப்பிலேயே 'திருத்தங்கள்' என்று தன் சமூக அக்கறையை அடக்கமாட்டாமல் வெளிப்படுத்தியுள்ளார். சேரன் பேசிக் கொண்டேயிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டாரிடம் விவாதத்தை முன் வைக்காமல், இதுதான் சரியெனத் தான் நம்பும் விஷயத்தை இடம் பொருள் ஏ...
90 ML விமர்சனம்

90 ML விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. தண்ணியடிப்பது, தண்ணியடித்துவிட்டுக் காதலியிடம் காதலின் மாண்பையும் மகத்துவத்தையும் பிதற்றுவது, காதலியின் வீட்டிற்குச் சென்று கலாட்டா செய்வது, காதலியின் அப்பாவை ஒருமையில் பேசுவது, ஆற்றோரத்திலோ கடலோரத்திலோ 'பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது' என போதையில் நண்பர்களுக்குப் போதிப்பது என்பதெல்லாம் தமிழ்ப்பட நாயகர்கள் காலந்தோறும் கடைபிடித்து வரும் கலாச்சாரம். வாரத்துக்கு ஒரு படமாவது, பாரில் குத்துப்பாட்டு இல்லாமல் வருவதில்லை. சிகரெட் பிடிப்பது ஹீரோயிசம், தண்ணியடிப்பது ஆண்களின் பிறப்புரிமை என்பது சமூகத்தில் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், பெண்கள் குடித்தால் மட்டும் கலாச்சாரம் என்னாவது என்ற பதற்றம் ஆண்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. ஆண்கள் குடிப்பது தவறில்லை; பெண்க...
தா தா 87 விமர்சனம்

தா தா 87 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாதாவாக (Don) 87 வயது சாருஹாசனும், அவரது காதலி கீதாவாக 80 வயது சரோஜாவும் நடித்துள்ளனர். சரோஜா, கீர்த்தி சுரேஷின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சாருஹாசனை முன்னிறுத்தி இயக்குநர் விஜய் ஸ்ரீ, படத்திற்கு வேறொரு அடையாளத்தைக் கொடுத்துக் குழப்பியுள்ளார். அந்தக் குழப்பம் படத்தின் முதற்பாதி முழுவதிலுமே கூடத் தொடர்கிறது. மஞ்சள் துண்டு (பாமக), நீலத்துண்டு (விசிக) எனத் தெளிவில்லாத அரசியல், அவர்களை இயக்கும் ஆண்டவரின் அண்ணனான தாதா சத்யா, அதை விரும்பாத எம்.எல்.ஏ. என முதற்பாதி பயணிக்கிறது. பிறகு, கவிதை போன்ற இரண்டாம் பாதி தொடங்குகிறது. ஜெனியாக நடித்திருக்கும் ஸ்ரீபல்லவி விஸ்வரூபமெடுக்கிறார். அவரது தந்தை ஜனா நாயுடுவாக ஜனகராஜ் நடித்துள்ளார். ஜனா மகள் ஜெனி என்பது குழப்பினாலும், மகள் விருப்பப்பட்ட பெயரை வைத்துக் கொள்ள அனுமதிக்கும் மிக்க உறுதுணையான அப்பாவாக நடித்துள்ளார் ஜனகராஜ். சாய் தீனாவை ஞாபகப்படுத்தும...
தடம் விமர்சனம்

தடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர் கொலையாளி என்பதற்கான புகைப்படத் துப்பு காவல்துறையினர்க்குக் கிடைக்கிறது. அவ்விரட்டையரில் கொலையாளி யாரென்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றனர். கொன்றது யார், ஏன் கொன்றார், அவர் அழிக்காமல் விட்ட தடம் எது என்பதன் தான் படத்தின் கதை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யத் தொடங்கும் முதல் ஃப்ரேமிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறார் மகிழ் திருமேனி. சிகரெட் பிடிக்கும் சேச்சி; பெண்களின் மார்புக்கச்சைக்கும், கொல்கத்தா ஹெளரா பாலத்துக்கும் ஒரே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது எனும் நாயகனின் இன்ஜினியரிங் மேஜிக் வசனம் எனப் படத்தின் முதல் 35 நிமிடங்களுக்குக் கதைக்குள் போகாமல் காட்சிகளாலும் பாடல்களாலும் மட்டுமே ரசிக்க வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் ரசனையான எடிட்டிங்கே அதற்குக் காரணம். ஒரு கொலை நடந்து, இர...
LKG விமர்சனம்

LKG விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
LKG என்பது லால்குடி கருப்பையா காந்தியின் சுருக்கம். கவுன்சிலரான எல்கேஜிக்கு எம்.எல்.ஏ.வாக வேண்டுமெனக் கனவு. கனவு என்னானது என்பதுதான் படத்தின் கதை. ஆர்ஜே பாலாஜியின் அப்பாவாக நாஞ்சில் ச்மபத் நடித்துள்ளார். இன்னோவா சம்பத் என சகட்டுமேனிக்கு அவர் கிண்டல் செய்யப்பட்டாலும், மகனின் படிப்புக்குப் பணம் கட்ட இயலாத வாழ்க்கைதான் அவருடையது. மேடையேறி அலங்காரச் சொற்பந்தல் போட்டு அமைந்திடாத பொருளாதாரம், இனி சினிமாவில் அவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது. காமிக்கலான அவர் முகம் நகைச்சுவை கதாபாத்திரங்களுக்கு ஏற்றது. தேர்ந்த இயக்குநரின் கைப்பட்டால் சிறந்த குணசித்திர நடிகராகவும் மிளிர வாய்ப்புள்ளது. அதனால்தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவரை அணுகிய ஆர்ஜே பாலாஜி, தோற்ற அரசியல்வாதி பாத்திரத்தில் அவரது அப்பாவாக நாஞ்சில் சம்பத்தை நடிக்கவைத்துவிட்டார். போஜப்பனாக நடித்திருக்கும் ராம்குமாருக்கு இது மூன்றாவது படம். அரசி...
கண்ணே கலைமானே விமர்சனம்

கண்ணே கலைமானே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து, அதே பாணியிலான கதையைக் கையிலெடுத்துள்ளார் சீனு ராமசாமி. இம்முறை இன்னும் மென்மையான கிராமத்து டோனில். சோழவந்தான் வள்ளலான கமலக்கண்ணனுக்கு, வங்கி மேலாளரான பாரதி மீது காதல் எழுகிறது. அக்காதலுக்குக் கமலக்கண்ணனின் அப்பத்தா அழகம்மாள் சிவப்புக் கொடி காட்ட, கமலக்கண்ணனுடைய செயற்பாடுகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. புது மேலாளரை பூமாலையுடன் வரவேற்கும் வினோத வழக்கம் கொண்ட வங்கியாக உள்ளது மதுரா கிராம வங்கி. அவ்வங்கியின் மேலாளர் பாரதியாக தமன்னா நடித்துள்ளார். இது அவரது 50வது படம். தர்மதுரையிலும் சரி, இப்படத்திலும் சரி, கவர்ச்சிக்காக என நேர்ந்து விடாமல் தமன்னாவைக் கதையின் நாயகியாக சீனு ராமசாமி படைத்துள்ளார். படத்தலைப்பில் வரும் கலைமான் தமன்னாவையே குறிக்கும். தமன்னாக்கு இருக்கும் அழுத்தமான பாத்திரம் கூடக் கமலக்கண்ணனாக நடித்திருக்கும் உதயநிதிக்கு இல்லை. அதனாலே என்னவோ, இ...
டுலெட் விமர்சனம்

டுலெட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் உரசல், புது வீடு தேடி அலுக்கும் படலம், சொந்த வீட்டுக்கான விழைவு ஆகிய மூன்றையும் கடக்காதவர்கள், நூற்றுக்கு ஒரு சதவிகிதம் பேரே இருப்பார்கள். மீதி, தொண்ணூத்தொன்பது பேர்க்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும். சொந்த ஊரில் பத்து வீட்டை வாடகைக்கு விட்டுச் சொகுசாய்க் காலாட்டிச் சம்பாதிக்கும் பாக்கியசாலிகள் கூட, என்றேனும் எப்போதாவது இன்னொரு ஊரில் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஆக, டுலெட் 99 சதவிகிதத்தினருக்கு நிகழ்ந்த, நிகழும் 100 சதவிகிதம் உண்மையான கதை. 100 திரைப்பட விழாக்களில், 84 பரிந்துரைகளில் இந்திய அரசின் தேசிய விருது உட்பட 32 விருதுகளைப் பெற்றுள்ளது. அதிக விருதுகளை வாங்கிய தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெற்றுள்ளது டுலெட் திரைப்படம். கோலிவுட்டை நம்பியிருக்கும் எண்ணற்றவர்களில் ஒருவனான இளங்கோவின் காதல் மனைவி அமுதாவிடம், ஒரு மாதத்திற்குள்...
கோகோ மாக்கோ விமர்சனம்

கோகோ மாக்கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
96 நிமிடப் படம். தயாரிப்பாளரான அருண்காந்த் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதிப் பாடி இயக்கியதோடு இசையமைத்து, ஒலி வடிவமைப்பு, டப்பிங் இன்ஜினியரிங் செய்து, உடை வடிவமைத்து, கிராஃபிக் டிசைன், கோரியோகிராஃபி என 15 பிரிவில் பங்காற்றி நடித்துமுள்ளார். அருண்காந்திற்கு தனது இசை ஆல்பத்தை வீடியோ ஆல்பமாக மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராம்குமாரும் தனுஷாவும் வேலன்டைன்ஸ் டே-க்கு ரோட் ட்ரிப் போக, ப்ளூட்டோவை அனுப்பி தனுஷாக்குத் தெரியாமல் வீடியோ ஆல்பத்திற்காகப் படம்பிடிக்கச் சொல்கின்றார் அருண்காந்த். ரோட் ட்ரிப் என்னானது, மியூசிக்கல் வீடியோ ஆல்பம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. மொத்தப் படப்பிடிப்பையும் 12 நாளில், GoPro கேமிராவில் படம்பிடித்து அசத்தியுள்ளனர். வசனங்களை முன்னரே எழுதாமல், காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்று, கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வசனம் எழுதியுள்ளார் அருண்காந்த். அந்த அமெச்சூர்னஸ...
சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2006 ஆம் ஆண்டு, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தினைத் தயாரித்தவர்கள் “உலா” எனும் படத்தை ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கினார்கள். 2013 இல், படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’க்காக விளையாடிய ட்வெயின் பிராவோவை, ஒரு பாடல் காட்சிக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. சாஜன் மாதவின் இசையில் ‘டல்மேனி டல்மேனி டகுல் காட்டுது’ என்ற பாடலிற்கு, வேட்டி கட்டிக் கொண்டு ட்வெயின் பிராவோ ஆடும் நடனம் நன்றாக இருக்கிறது. திரையில் உலா வர வாய்ப்புக் கிடைக்காமல் இத்தனை காலம் கிடப்பில் இருந்த படம், ‘சித்திரம் பேசுதடி 2’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றுத் திரையேறுகிறது. விதார்த், அஜ்மல், அஷோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன் என ஐந்து பிரதான பாத்திரங்கள். 48 மணி நேரத்தில், இந்த ஐந்து பேருக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மையக்கரு. பிரதான பாத்திரங்கள் மட்டும...
தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாயாவிடம் யாராவது காதலைச் சொன்னால், அவர்களை அவளது தந்தை துர்மந்திரவாதியான கருடராஜா பட்டதாரி ஏவி விட்ட துஷ்ட சக்தி உண்டு இல்லை எனச் செய்துவிடுகிறது. சந்தானம் மாயாவிடம் காதலைச் சொல்ல, அந்தப் பேய் அவரையும் போட்டுப் புரட்டியெடுக்கிறது. சந்தானம் காதலில் எப்படி வெல்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஜில்.. ஜங்.. ஜக் படத்தில் பை எனும் பைந்தமிழாகக் காமெடியில் கலக்கியிருக்கும் பிபின், இப்படத்தில் துர்மந்திரவாதி கருடராஜ பட்டாதரியாக வருகிறார். அவர் முதலில் டெரராக அறிமுகமாகி, சந்தானம் அவரைச் சந்தித்த பின் நகைச்சுவைக்கு  மாறுகிறார். தில்லுக்கு துட்டு படத்தில், இரண்டாம் பாதி நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருந்த நான் கடவுள்’ ராஜேந்திரன், இப்படத்தின் சந்தானத்தின் மாமாவாக படம் முழுவதும் வந்தாலும், முதற்பாகம் அளவிற்கு நகைச்சுவைக்கு உதவவில்லை. நாயகியாக, மாயா பாத்திரத்தில் ஸ்ரீதா சிவதாஸ் அறிமுகமாகியுள்ள...
பொதுநலன் கருதி விமர்சனம்

பொதுநலன் கருதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மக்களின் பொதுநலனில் அக்கறை உள்ளதால், கம்மியான வட்டிக்குப் பணம் தருகிறோம் எனத் தனக்குத் தொழில் கற்றுக் கொடுத்தவரைக் கொன்றுவிட்டுத் தொழிலுக்கு வருகிறார்கள் உத்திரமூர்த்தியும், பாபு சேட்டும். இருவரும் தங்களுக்கென ஓர் எல்லையை வகுத்துக் கொண்டாலும், வளரத் தொடங்கியதும் இருவரில் யார் பெரியவரென்ற போட்டியும் பொறாமையும் முளைவிடுகிறது. அவர்கள் தொழிலாலும், அவர்களுக்கிடையேயான போட்டியாலும், யார் யார் பாதிப்படைகிறார்கள் என்பதே படத்தின் கதை. உத்திரமூர்த்தியிடம் வேலை செய்யும் நெப்போலியனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகன் என்று சொல்லக்கூடிய கதாபாத்திர அம்சங்கள் அனைத்தையும் பெற்று ஒரு ரவுடியாக அனைவரையும் போட்டுப் பிளக்கிறார். அவரது உயரத்திற்கு ஏற்ற ரஃப்பான ஒரு பாத்திரத்தில் முதன்முறையாகத் தோன்றியுள்ளார். உத்திரமூர்த்தியாக யோக் ஜபீ. அவரை இது போல் பாத்திரத்தில் பலமுறை பார்த்திருந்தாலும், அவரது...
மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'Queen of Scots: The True Life of Mary Stuart' என்ற ஜான் கை-யின் (John Guy) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம் இது. 15 வது வயதில் கல்யாணமாகி, 16 வது வயதில் தாய்நாடான ஃபிராண்ஸின் மகாராணியாகி, 18 வயதில் விதவையாகி, மறுமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனது தந்தை நாட்டிற்குத் திரும்பி, ஸ்காட்லாந்தின் ராணியாகப் பதவியேற்கிறார் மேரி ஸ்டூவர்ட். அவரது சகோதரி முறையுடைய மணமாகாத எலிசபெத் I, இங்கிலாந்தின் ராணியாக உள்ளார். மேரியின் வரவால், எலிசபெத்தின் அரியணைக்கு ஆபத்து வரலாமென எச்சரிக்கப்படுகிறார். ஏனெனில் மேரிக்கும் அதற்கான உரிமையுண்டு. கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மேரியை, ஸ்காட்லாந்து ப்ரொடஸ்டன்ட்ஸ் ராணியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், ஒரு பெண் ஆள்வதா என்றும் உள்ளுக்குள் புகைச்சலோடு உள்ளனர் ஆண்கள். எனவே மேரிக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ந்து கலகங்களை உருவாக்கி வருகிறார...
எஸ்கேப் ரூம் விமர்சனம்

எஸ்கேப் ரூம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பைக் கொண்டே படத்தின் கதையைச் சுலபமாக யூகித்துவிடலாம். ஜோ, பென், அமாண்டா, மைக், ஜேசன், டேனி ஆகிய ஆறு பேரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கின்றனர். அங்கு ஒரு க்ளூ கிடைக்கும். அதை உபயோகித்துத் தப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மரணம் உறுதி. அதிலிருந்து எத்தனை பேர் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. நெருப்பைக் கக்கும் ஓவனாக மாறும் அறை, உறைய வைக்கும் பனியைக் கொண்ட அறை, நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறை, விஷ வாயு பரவும் அறை, புத்தியைப் பேதலிக்க வைக்கும் அறை, ஆளை நசுக்கும் சுவர்கள் கொண்ட அறை எனப் படத்தில் வரும் ஒவ்வொரு அறையும் மரண பயத்தைக் காட்டுவன. குறிப்பாக நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறையின் கலை வேலைப்பாடு பிரமிக்க வைக்கும் நேர்த்தியும் அழகும் கொண்டது. அங்கு அனைத்துமே தலைகீழாக இருக்கும். மின்விசிறி தரையிலும், மேஜை நாற்காலிகள் அந்தரத்தில் தொங்கியவண்ணமும் இருக்கும். பனிவெள...
சகா விமர்சனம்

சகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ். சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை. ஷபீரின் இசையில், 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் அந்தப் பாடலில் மிக அழகாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் நம்பும்படியாக இல்லை. ரெளடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆய்ரா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளாமல், சரண் மீது காதல் வயப்படுகிறார். அதைச் சொல்லவும் செய்யாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவ ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ஆரோஹ...
வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க வ...