Shadow

திரை விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளியான 'தி லயன் கிங்' படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், 'ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)' எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் 'டிஸ்னி இந்தியா', நேரடியாகத் தமிழிலேயே 'டப்' செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு. வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொல்...
வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி விளையாட்டு என்றால் உயிர். தந்தையின் விருப்பத்தைத் தாமதமாக உணரும் விக்ராந்த், தனது சொந்த ஊரான கணக்கன்பட்டிக்குச் சென்று 'வெண்ணிலா கபடி குழு'வில் இணைகிறார். 1989இல் நடக்கும் பீரியட் படம். கதை மட்டும் அக்காலகட்டத்தில் நிகழ்வது போலல்லாமல், படமே 80களின் இறுதியில் எடுக்கப்பட்டது போல் தொடங்குகிறது. இவர் தான் நாயகி, இவர் தான் நாயகன், இவர் நாயகனின் அப்பா, இது நாயகனின் குடும்பம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், காமெடியன் கஞ்சா கருப்பு என அறிமுகப் படலத்திற்கென தனித் தனி காட்சிகள் வைத்துள்ளனர். கதையோடு ஒட்டாத நகைச்சுவைத் திணிப்புகள் படத்தின் ஆகப் பெரிய மைனஸ். 2009 இல் வந்த முதற்பாகம் போல், காதல் காட்சிகள் அவ்வளவு ரசனையாகவும் க்யூட்டாகவும் இல்லை. அர்த்தனா பினு, விக்ராந்துக்கும் இடையேயான காதல் காட்சிகளில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம். ப...
தோழர் வெங்கடேசன் விமர்சனம்

தோழர் வெங்கடேசன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டும் கதையை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் இயக்குநர் மகாசிவன். அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் லாக் ஆகி, லட்சுமி சோடா ஃபேக்டரி முதலாளியான வெங்கடேசன் மீது மோதிவிடுகிறது. அவ்விபத்தில் அவரது இரண்டு கையையும் பறி கொடுக்கிறான் வெங்கடேசன். நஷ்ட ஈட்டிற்காக நீதி மன்றத்திற்கு நடையாக நடக்கிறான். தீர்ப்பு சாதகமாக அமைந்த பின்பும், அவருக்கு நியாயம் கிடைக்காமல் அவஸ்தைகள் தொடர்வதுதான் படத்தின் கதை. ‘ஓய்ய்.. நானொரு முதலாளி’ என்ற குரலை மிக அழுத்தமாகப் பதிகிறான் வெங்கடேசன். பதிவதோடு மட்டுமல்லாமல், தனக்குக் கீழ் வேலை பார்ப்பவரிடத்தில் அதைக் காட்டவும் செய்கிறான். அப்படி அதிகாரத்துடன் நடந்து கொள்வதைக் கெளரவமாகவும் கருதுகிறான். இத்தகைய பூர்ஷ்வாத்தனத்தை உடைய வெங்கடேசனுக்கு தோழர் என்ற அடைமொழி வைத்திருப்பது பயங்கரமான மு...
கொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது. ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்தி...
கூர்கா விமர்சனம்

கூர்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் முதன்முறையாக வினியோகம் செய்துள்ள இப்படம், தமிழகமெங்கும் 300+ திரையரங்குகளில் யோகிபாபுவிற்குப் பிரம்மாண்டமான ஓப்பனிங்கைக் கொடுத்துள்ளது. ஜீவாவின் கொரில்லா உட்பட, இந்த வாரம் 5 படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேருகிறான் பகதூர் பாபு. பகதூர் பாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மால் எனும் பேரங்காடியை, பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாகச் சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா இனத்தவனான பகதூர் பாபு எப்படிக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி அவ்வளவாகக் கவரவில்லை. ரவி மரியாவின் சத்தமான போலீஸ் ட்ரெயினிங்கும், அதில் யோகிபாபு ஓபி அடிப்பதும், கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டே இருப்பதுமென படம் இம்சையாய்த் தொடங்குகிற...
போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

போதை ஏறி புத்தி மாறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்யாணத்திற்கு முன் தினம், நாயகனுக்குப் போதை ஏறி, அவன் புத்தி மாறுவதால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. விளையாட்டு விபரீதமாகிவிடுவதுதான் படத்தின் மையக்கரு. உண்மையில், போதை தேடும் நபர்கள் எல்லாம் ஸ்டெடியாக இருக்க, மணப்பெண்ணான ஜனனியிடம் சும்மா விளையாட நினைக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை தலைகீழாய்ப் புரள்கிறது. சமீபத்திய ஸ்பைடர்-மேன் படத்தில், தொழில்நுட்பம் கொண்டு வில்லன் உருவாக்கும் மாய உலகத்தை, போதைப் பொடியை மூக்கினுள் இழுத்துக் கொண்டு உருவாக்கிக் கொள்கிறான் கார்த்திக். அவன் புத்தி எப்படி எல்லாம் மாறுகிறது என படம் பேசுகிறது. நல்ல த்ரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். ஆனால், மெஸ்சேஜும் வேண்டுமென்ற இயக்குநர் K.R.சந்துருவின் உளக்கிடக்கை, அதற்கு எமனாகிவிட்டது. தலைப்பிலேயே அவரது விருப்பத்தைப் பட்டவர்த்தனமாய் உணர்த்திவிடுகிறார். போதை ஏறினால் புத்தி மாறிவிடும் என்...
ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

ஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் மார்வெல்

சினிமா, திரை விமர்சனம்
அயர்ன் மேன் டோனி ஸ்டார்க் இறந்துவிட்டார். மார்வலின் மொத்த கூட்டமும் கலைத்துப் போட்ட சீட்டுக்கட்டைப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது. சூப்பர் ஹீரோஸ் உச்சத்தில் இருந்தாலே தீயசக்திகளுக்குப் பிடிக்காது, இப்போது அவர்களே இல்லை எனும் போது மக்களை அழிக்கவே காத்திருக்கும் தீயசக்திகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? நிலம், நீர், காற்று,ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்களின் வடிவமெடுத்து மக்களைக் கொன்று, உலகை ஆட்கொல்ல முடிவு செய்கிறது தீமை. அவஞ்செர்ஸின் தலைவன் நிக் ஃப்யூரிக்கு என்ன செய்வது, யாரைத் தேடுவது எனப் புரியாத நிலையில் ஸ்பைடர்மேன் ஞாபகம் வருகிறது. உண்மையில் ஸ்பைடர்-கிட் என்றோ ஸ்பைடர்-அடல்ட் என்றோதான் படத்தின் பெயரை வைத்திருக்க வேண்டும். மேன்!! அவருக்கு இன்னும் வயதிருக்கிறது மேன். பாவம் அந்தப் பச்சிளம் பாலகனைப் பிடித்து, 'நீ தான் ஸ்பைடர்மேன். உங்கிட்ட பல அசாத்திய திறமைகள் இருக்கு. நீ தா...
ராட்சசி விமர்சனம்

ராட்சசி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு 'ராட்சசி' எனும் அடைமொழி கிடைக்கிறது. சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, 'இது தவறு, இப்படிச் செய்யலாம்' எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தலைமை ஆசிரியையான கீதா ராணி டீச்சர். படத்தில் ஏகத்துக்கும் வில்லன்கள் உண்டு. துணைத் தலைமை ஆசிரியர், தனியார் பள்ளி நிறுவனர், உள்ளூர் அரசியல்வாதி போன்றோர் தலைமை ஆசிரியைக்குக் குடைச்சல் தருவதை முதன்மை லட்சியமாகக் கொண்டுள்ளனர். உண்மையின் உரைகல்லாகவும், அவலங்களைச் சுட்டிக் காட...
களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான ஈ...
மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(க்சியா ஷி டி சி டென் - The bullet vanishes (2012))   சீனாவின் ஷாங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களைத் திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான். முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பைச் சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்தப் பெண்ணின் மீது தான் அபாண்டமாக குற்றம் சுமத்தியிருந்தால் இந்தத் துப்பாக்கி என்னைத் தண்டிக்கட்டும் என டிரிக்கரை அழுத்த, வெற்று சத்தத்துடன் டிரிக்கர் அமைதியாகிறது. பிறகு அதே துப்பாக்கியை மீண்டும் சுழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து அவளை சுட்டுக்கொள்ளச் செய்யும் போது துப்பாக்கியின...
அன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்

அன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஓர் அனுபவம் தான் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பேய்படம் பார்ப்பதும். அந்த இரவில் அந்த அமைதியில் அந்த திகிலில் ஜிலீரென நம்முன் வந்து நிற்கும் அந்தப் பேயை நினைத்துப்பாருங்கள். கற்பனை செய்து பார்க்கவே ஜிலீரென்று இல்லை! அன்னபெல் - கம்ஸ் கோம் நள்ளிரவு காட்சிக்கு முன்பதிவு செய்யும் போது என்னையும் சாண்டியையும் தவிர அரங்கில் வேறு யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. ஒருவேளை கடைசிவரை யாருமே முன்பதிவு செய்யாதிருந்தால் அந்த அனுபவம் இன்னும் திகிலாக இருந்திருக்கும். விதி வலியது. பாதி அரங்கம் நிறைந்திருந்தது. AMC Dolby Sound system உடனான அரங்கம். இசையின் துல்லியமும் உச்சத்தில் இருக்கும். காஞ்ஜூரிங் சீரஸ் பார்க்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டவை என்பது தான். எட் மற...
தர்மபிரபு விமர்சினம்

தர்மபிரபு விமர்சினம்

சினிமா, திரை விமர்சனம்
  வாரிசு என்ற அடிப்படையில் தர்மராஜாவின் மகனான தர்மபிரபு, எமன் பதவிக்கு வருகிறார். ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போக, அவளோடு சேர்த்து ஒரு சாதி கட்சித் தலைவரையும் காப்பாற்றி விடுகிறார் எமன். அரக்கனான அந்தத் தலைவரை ஏழு நாளுக்குள் கொல்லவில்லை எனில் எமலோகத்தைக் கொளுத்தி விடுவேன் என சிவன் சொல்லிவிட, தர்மபிரபு எப்படி அந்த சாதிக்கட்சித் தலைவரின் உயிரை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இயக்குநர் முத்துக்குமரன் தன்னை ஒரு தீவிர பெரியாரிஸ்ட் எனச் சொல்லிக் கொள்கிறார். நீதியின் காவலனான தர்மபிரபு, எமக்கோட்டைக்கு ஓர் இக்கட்டான சூழல் நேரும் பொழுது, பெரியார், அம்பேத்கர், நேதாஜி, காந்தி ஆகியோரைக் கூப்பிட்டு யோசனை கேட்கிறார். பெளத்தரான அம்பேத்கரும், நாத்திகவாதியான பெரியாரும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் பேசிய அரசியல் அனைத்தும் மிகப் பெரிய காமெடி என நிறுவப்படுகிறது. நால்வரும் தாங்கள் வரித்துக் ...
சிந்துபாத் விமர்சனம்

சிந்துபாத் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1001 இரவு அரேபியக் கதைகளில், ஏழு கடற்பயணயங்கள் மேற்கொண்ட சிந்துபாத்தின் கதை தனித்துவமானது. அதனால் தான் இதுநாள் வரை தினத்தந்தியின் கன்னித்தீவில் அவர் வாசம் செய்து வருகிறார். மனைவி வெண்பாவைக் காப்பாற்ற, சிந்துபாத் எனப் பெயரிடப்பட்ட போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்து பறக்கிறான் திரு. மனைவியை எப்படிக் காப்பாற்றினான் என்பதுதான் படத்தின் கதை. கேட்கும் திறன் சற்றே குறைந்த பலே திருடன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பர்ஸ், மோதிரம், பிரேஸ்லட், செயின் என விஜய் சேதுபதி அனைவரிடமும் திருடினாலும், கழுத்தில் காயத்தை ஏற்படுத்துவது மாதிரி செயின் பறிப்பில் எல்லாம்  ஈடுபடாத நல்லவர். சத்தமாய்ப் பேசும் அஞ்சலியின் உரத்த குரலைக் கேட்டதும் காதலில் விழுகிறார். காதல் கனிந்ததும் திருட்டுத் தொழிலை விடுகிறார். அஞ்சலி மலேசியா திரும்பும் நாள் அன்று, விமான நிலையத்தில், அஞ்சலியைக் குனியச் சொல்லி, சட்டென ...
ஜீவி விமர்சனம்

ஜீவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அறிவுஜீவி, புத்திஜீவி என்பதன் சுருக்கமாகத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஜீவி என்றால் ஜீவிப்பவர், அதாவது உயிர்வாழ்பவர் அல்லது பிழைப்பவர் எனப் பொருள் கொள்ளலாம். படத்தின் தலைப்பை, அறிவால்  ஜீீவிப்பவர் என்பதாகப் புரிந்து கொள்ளலாம். சரவண லெனின், தனது வீட்டு ஓனரான லக்ஷ்மி வீட்டில் திருடுகிறான். அப்பொழுது அவன் வீட்டில் தொடர் அசாம்பாவிதங்கள் நிகழ்கிறது. அதே போன்ற நிகழ்வுகள், லக்ஷ்மிக்கும் அவரது இள வயதில் நடந்துள்ளதை அறிகிறான். ஆக, லக்ஷ்மி குடும்பத்தில் நிகழ்வது அனைத்தும் தன் வீட்டிலும், பிரதி எடுத்தது போல் நடக்கும் என சரவண லெனின் நம்புகிறான். அதாவது இரண்டு குடும்பத்தில், வெவ்வேறு சமயங்களில் நடக்கும் நிகழ்வு ஒரே போலே இருக்கிறது. லக்ஷ்மி வீட்டில் நடக்கும் கெட்டவை போல் தன் வீட்டிலும் நிகழாமல் இருக்க நாயகன் எடுக்கும் முயற்சியே படத்தின் கதை. சரவண லெனின் என்பது நாயகன் வெற்றி ஏற்றிருக்க...
ஹவுஸ் ஓனர் விமர்சனம்

ஹவுஸ் ஓனர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்து, கரையோரம் இருந்த வீட்டிற்குள் எல்லாம் 12 அடி உயரத்துக்கும் மேலாகத் தரைத்தளத்தையே மூழ்கடிக்கும் அளவுக்கு நீர் புகுகிறது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான வெங்கடேசனும், அவர் மனைவி கீதாவும் வீட்டிற்குள் சிக்கிக் கொள்கின்றனர். வீட்டு வாசற்கதவைத் திறக்கும் சாவியோ தண்ணீரில் எங்கோ விழுந்து விடுகிறது. முட்டி, தொடை, இடுப்பு, மார்பு, கழுத்து என நீரின் அளவோ உயர்ந்து கொண்டே இருக்கிறது. கட்டில் மீது, நாற்காலி போட்டு அதன் மேலேறி நின்றாலும், கூரை வரை நிரம்பிவிடும் நீரிலிருந்து அவர்களால் தப்ப இயலவில்லை. 2 டிசம்பர் 2015 அன்று, நிர்வாகச் சீர்கேட்டினால் நேரிட்ட செயற்கை வெள்ளத்தால் ஏற்பட்ட எண்ணற்ற அவலங்களில் ஒன்றான இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் - ஹவுஸ் ஓனர். அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான வாசுதேவனுக்கு, தான் ஆசையாகக் கட்ட...