Shadow

திரை விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலை, நான்கு பேர் மீது சந்தேகம் என்ற அகதா கிறிஸ்டி பாணி மர்டர் மிஸ்ட்டரி படத்தை நான் லீனியர் திரைக்கதையில் விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மாறன். நாயகனை அதிமனிதனாகக் காட்டுவது தமிழ் சினிமாவில் தொன்று தொட்டு வரும் பாரம்பரியப் பண்பாடுகளில் ஒன்று. ஆனால் அதற்கான நியாயத்தை 99% படங்கள் தந்ததேயில்லை. இதிலும் பரத்தாக வரும் அருள்நிதி சர்வ சாதாரணமாக அனைவருடனும் சண்டையிடுகிறார். போலீஸை அடித்துத் தப்பிக்கின்றார், கொலையாளியைப் பிடிக்கத் திட்டமிடுகின்றார், வியூகங்கள் வகுக்கின்றார். இதற்கான குறைந்தபட்ச நியாயம் கூட அந்தக் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் வழங்கவில்லை. ‘எவ்வளவோ பார்க்குறீங்க, இதையும் ஏத்துக்கோங்க’ என வைத்து விட்டார் போல. வசதியானவர்களின் பலவீனங்களை உபயோகித்து பணம் பறிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட சிலர் அவர்களைப் பழி வாங்க முயற்சி செய்கின்றனர். இந்தச் சிக்கலில...
நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

அயல் சினிமா, கட்டுரை, சினிமா, திரை விமர்சனம்
சினிமா, இன்றளவும், ஆண்கள் மட்டுமே கோலேச்சி வரும் துறையாக உள்ளது. டி.பி.ராஜலட்சுமி, பானுமதி, சாவித்திரி போன்ற மிகச் சிலரே விதிவிலக்குகளாகத் தங்களுக்கான முத்திரையை அழுத்தமாகத் திரையுலகில் பதித்துள்ளனர். துடுக்கான உடற்மொழியாலும், துள்ளலான பாவனைகளாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்ற கலைஞர் சாவித்திரி. அவரைப் பற்றிய 'பையோ-பிக்' படமாகத் தெலுங்கில் "மகாநதி" என படம் எடுத்துள்ளார் நாக் அஷ்வின். மிக அற்புதமான ஒரு காண் அனுபவத்தைப் படம் தருகிறது. தமிழ் டப்பிங்கும் உறுத்தாமல், தேவையான இடத்தில் தெலுங்கு வசனங்களையே அப்படியே பயன்படுத்தியுள்ளது சிறப்பு. 'தொடரி' படத்தைப் பார்த்து விட்டு கீர்த்தி சுரேஷை, இந்தப் படத்தில் சாவித்திரியாக நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளார் நாக் அஷ்வின். படத்தின் உயிராய் மாறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். படத்தின் இரண்டாம் பாதியில், கீர்த்தி சுரேஷ் முற்றிலும் மறைந்து சாவித்திர...
என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் மீது தீவிர காதல் கொண்ட பெருங்கோபக்காரனான சூர்யா இராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறான். அவன் விருப்பப்பட்ட எல்லைக் காவல் வேலை, சூர்யாவிற்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 'கோபம் வந்துச்சு. அடிச்சேன்' என்ற சூர்யாவின் அறிமுக அத்தியாயமே தூள். 'இவன் தான் சூர்யா' எனப் பார்வையாளர்களை முழுப் படத்திற்கும் தயாராக்கிவிடுகிறார் இயக்குநர் வம்சி. முறுக்கேறிய உடலுடம் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன், சூர்யா பாத்திரத்திற்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துகிறார். கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்‌ஷ்மன் என நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்களும் சூர்யா பாத்திரத்திற்கு உரம் சேர்த்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். அதகளமான சண்டையில் தொடங்கும் படம், அதே போலொரு சண்டையினோடு இடைவேளையில் முடிகிறது. அதன் பின், அதிரடியான சண்டை ப்ரீ-க்ளைமேக்ஸில் தான் வருகிறது. ஆம், படத்தின் க்ளைமேக்ஸில் சண்டை இல்லை. மா...
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வெயிட்டிங் லிஸ்ட்' என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர். சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். புதுமையான கதைக்களன், கலவையான கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியமாகத் தொடங்குகிறது. எனினும் படம், 'தன்னைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும்' எ...
பக்கா விமர்சனம்

பக்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விக்ரம் பிரபு முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அரசன்குடியைச் சேர்ந்த ஜமீன்தாரின் மகளான நதியாவிற்கு, திருவிழாவில் பொம்மை கடை வைக்கும் பாண்டி மீது காதல் வருகிறது. தனது அந்தஸ்தினை நினைத்துத் தயங்கும் பாண்டியை ஊர் ஊராய்த் தேடிச் சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்து வந்துவிடுகிறார் நதியா. தாம்பரம் ரயில் நிலையத்தில் நதியாவை உட்கார வைத்து விட்டுச் செல்லும் பாண்டி திடீரெனக் காணாமல் போவதால், தற்கொலை புரிந்து கொள்ள தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார் நதியா. அச்சமயம், குடித்து விட்டு தண்டவாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தோனி குமார் நதியாவைக் காப்பாற்றுகிறார். பாண்டி போலவே இருக்கும் தோனி குமாரிடம் தன் காதல் கதையைச் சொல்கிறார் நதியா. இது படத்தின் முதல் பாதி. நதியாவிடம், ரஜினி ராதாவுடனான தன் காதல் கதையைச் சொல்கிறார் தோனி குமார். இது ப்ரீ க்ளைமேக்ஸ் வரைக்குமான கதை. பாண்டி என்னானார்? நதியா ...
தியா விமர்சனம்

தியா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கரு' உருமாறி 'லைக்காவின் கரு'வாகி, தியாவாக ஜனித்துள்ளாள். பக்தொன்பது வயதான துளசி கர்ப்பமடைந்து விடுகிறாள். துளசியின் வீட்டினரும், அவளது காதலனான கிருஷ்ணாவின் வீட்டினரும், சிறு சச்சரவிற்குப் பின், இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டு, துளிசியின் கருவைக் கலைக்கச் சொல்கின்றனர். 24 வயதில் இருவருக்கும் சொன்னபடி திருமணமும் செய்து வைக்கின்றனர். அதன் பின் அவர்கள் வீட்டில் தொடர் மரணங்கள் நிகழ்கிறது. எதனால் ஏன் என்பது தான் படத்தின் கதை. 'ப்ரேமம்' படப் புகழ் மலர் டீச்சரான சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் முதற்படமிது. கண்களால் புன்னகைக்கவோ, துள்ளலாய் நடனமாடவோ வாய்ப்பில்லாத ஒரு பாத்திரத்தில் வருகிறார் சாய் பல்லவி. ஆனால், மென் சோகத்தோடு வளைய வரும் அவர் தான் படத்தின் பிரதான குவிமையம். அதனைக் கச்சிதமாக உள்வாங்கிப் படத்திற்கு உயிரினை அளித்துள்ளார் துளசியாக வரும் சாய் பல்லவி. கதாநாயகியின் பாத்திரம் பிரதானமாய் இர...
மெர்க்குரி விமர்சனம்

மெர்க்குரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நிசப்தம் தான் வலுமிகு அலறல்’ என்ற கேப்ஷனோடு படம் சத்தமின்றித் தொடங்குகிறது. வசனங்களற்று தொழில்நுட்பம் கோலேச்சும் அற்புதமான முயற்சி. அப்படியும் முதற்பாதியில் தமிழ் சப்-டைட்டில் வருகிறது. கதையைப் படித்துப் புரிந்து கொள்ளுமாறு செய்கின்றனர். ஒருவழியாக ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து, இடைவேளைக்குப் பிறகு சப்-டைட்டிலுக்கும் குட்பை சொல்லிப் பெருமைப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். கதைக்களனும், கதையின் மாந்தர்களும், திரையின் நிறமும் மிகவும் புதிது. ஃப்ரேமில் பரவி நிற்கும் பச்சை நிற பின்புலம் திகிலையும் அமானுஷ்யத்தன்மையையும் தருகிறது. பச்சை நிற பின்புலம் பசுமையின் செழுமையாக இல்லாமல், மெர்க்குரியின் நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. அதனால் ஒரு நகரமே எப்படிப் பாதிக்கப்படுகிறது என நடுக்கம் தருமளவு சித்தரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். காது கேளாதவர்களை நடித்திருக்கும் சனந்த், இந்துஜா...
ட்ரூத் ஆர் டேர் விமர்சனம்

ட்ரூத் ஆர் டேர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஒரு விளையாட்டு - நட்பை உடைக்கிறது; காதலை முறிக்கிறது; நம்பிக்கையைக் காலி செய்கிறது; உயிரையும் எடுத்துவிடுகிறது. தெரியாத்தனமாகச் சிக்கிக் கொண்டால் அவ்விளையாட்டிலிருந்து மீள வழியே இல்லை. மெக்சிகோவிற்குச் சுற்றுலா சென்ற ஒலிவியாவும் அவரது நண்பர்களும், அங்குச் சந்திக்கும் நபரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு விளையாட்டைத் தொடங்குகிறார்கள். அதன் பெயர் “ட்ரூத் ஆர் டேர்”. விளையாடுபவரிடம் சுற்றியுள்ளவர்கள், ட்ரூத் ஆர் டேர் எனக் கேட்பார்கள். ‘ட்ரூத்’தைத் தேர்ந்தெடுத்தால், நண்பர்களிடம் உண்மையைச் சொல்லவேண்டும். ‘டேர்’ எனத் தேர்ந்தெடுத்தால், நண்பர்கள் சொல்லும் டாஸ்க்கைச் செய்யவேண்டும். உதாரணம், ‘மேலாடையைக் கழட்டவும்’ எனச் சொல்லப்பட்டால், மேலாடைகளைக் கழட்டவேண்டும். இப்படிக் குதூகலமாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு, அவர்கள் மெக்சிகோவை விட்டு வந்த பின்பும் அவர்களைத் தொடங்குகிறது. அனைத்தையும் கட்டுபடுத்தும் ஏதோ ஓர்...
பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் என்ற வார்த்தைப் பார்த்ததும் 2டி, 3டி போல் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டாம். உடை அணிவிக்கப்பட்ட உயிருள்ள முயல்களை அப்படியே பாத்திரங்களாகத் திரையில் உலாவ விட்டுள்ளார்கள். தன் பெற்றோரை இழந்து வாடும் பீட்டர் ரேபிட், ப்யா எனும் பெண்ணின் பாசத்தில் திளைக்கிறது. ப்யாவிற்கும், பக்கத்து வீட்டில் குடியேறும...
பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பசிஃபிக் ரிம் என்றால் பசிஃபிக் கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) மேற்கு கரை மாகாணங்களை அடங்கிய பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பசிஃபிக் பெருங்கடலின் விளிம்பிலுள்ள நாடுகள் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். பசிஃபிக் கடலுக்கடியில் இருந்து வெளிவரும் கைஜு (Kaiju) எனும் வேற்றுக் கிரக ஜந்துக்களை அழிப்பது தான் முதற்பாகமாகிய பசிஃபிக் ரிம் படத்தின் கதை. இரண்டாம் பாகத்தின் கதையும் அதன் தொடர்ச்சியே! கைஜு பூமிக்குள் நுழைய முடியாதபடி, அது வந்து செல்லும் வழியைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பான்-பசிஃபிக் டெஃபன்ஸ் கார்ப்ஸ் (PPDC - Pan Pacific Defence Corps). ஜேகர்கள் எனும் பெரும் ரோபோக்களைக் கொண்டு பி.பி.டி.சி., கைஜுக்களை எதிர்க்கும். ஆனால், கைஜுவின் மூளையை ஜேகர்களில் இணைத்து பி.பி.டி.சி.யையே நிர்மூலம் செய்து விடுவார் நியூட் கெய்ஸ்லர் எனும் விஞ்ஞானி (அவ...
கேணி விமர்சனம்

கேணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எல்லையைத் தீர்மானிக்கும் பொழுது, புளியன் மலையில் உள்ள வீடும் நிலமும் தமிழ்நாட்டின் பக்கமும், அந்த வீட்டுக்குப் பாத்தியப்பட்ட கிணறு கேரள பக்கமுமாகப் போய்விடுகிறது. அந்தக் கிணறு, அதன் உரிமையாளரான இந்திராம்மாவிற்கு மட்டுமல்லாமல் வறட்சியின் காரணமாக அந்த ஊரிற்கே அவசியமாகிறது. அந்தக் கிணறை மையப்படுத்திய அரசியல் தான் படத்தின் கதை. தண்ணீர் இல்லாத ஒரு பொழுதை யோசிக்கவே குலை நடுங்குகிறது. படம் தண்ணீரின் தேவையை, அதைப் பகிர்த்து கொள்வதில் எல்லைகளுக்கு இடையேயான சிக்கல் என மிக ஆழமானதொரு கருவைத் தொட்டுள்ளது. எனினும் படம் அந்த மையப் புள்ளியில் இருந்து விலகி, 'இந்திராம்மாடா! ப்பாஆஆ, என்ன ஒரு போராளி' எனத் தொடர்ந்து பதிகிறது. அதுவும் காட்சிகளாக இல்லாமல் வசனங்களாக. புளியன் மலையின் தலைவர் பார்த்திபன், சமூக அக்கறையுள்ள வக்கீல் நாசர், தமிழக எல்லையின் கலெக்டரான ரேவதி, புளியன் மலை ஊர்வாசியான அனுஹாசன், நீதிபதி ரேகா...
6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து '6 அத்தியாயம்' என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு. 1. சூப்பர் ஹீரோ இயக்கம் - கேபிள் சங்கர் தன்னை சூப்பர் ஹீரோவாக ஒருவன் கருதுகிறான். அவனது வீட்டினரோ அவனுக்கு மனநலக் கோளாறு உள்ளதாக நினைக்கின்றனர். அதனால் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்து விடுகின்றனர். அவருக்கும் மனநல மருத்துவருக்கும் நடக்கும் உரையாடலே படத்தின் கதை. 2. இது தொடரும் இயக்கம் - சங்கர் தியாகராஜன் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த ஒருவனைப் பேய்கள் எப்படிப...
ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம்

ஏண்டா தலையில எண்ண வெக்கல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலையில் எண்ணெய் வைக்காதவர்களின் லிஸ்ட்டை எடுத்து, அதிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து யமதர்மராஜன் ஒரு மரண விளையாட்டை விளையாடுகிறார். நான்கு டாஸ்க்-களை நாயகன் முடிக்காவிட்டால் அவன் மரணித்துவிடுவான். அந்த நான்கு டாஸ்க்-கள் என்ன, அவற்றில் நாயகன் வென்றானா இல்லையா என்பதே படத்தின் கதை. நாயகனாக அஸார் அறிமுகமாகியுள்ளார். புதுமுகம் என்றாலும், அடுத்த வீட்டுப் பையனைப் போன்ற பரீச்சயத்தைத் தோற்றுவித்துவிடுகிறார். வேலையில்லாததால் அவர் வீட்டினரால் கலாய்க்கப்படும் பொழுதும், ஆங்கிலம் தெரியாமல் இன்டர்வியூவில் சொதப்பும் பொழுதும், யமதர்மராஜாவால் சொதப்பப்படும் பொழுதும் அஸார் தன் முகபாவனைகளில் அழகாக வித்தியாசம் காட்டியுள்ளார். ஷர்மிளா, சுமதி, யோகி பாபு, அர்ச்சனா ஆகியோர் வரும் அத்தியாயம் கலகலப்பூட்டினாலும், தேவையில்லாத இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். நாயகனின் நண்பராக வரும் சிங்கப்பூர் தீபனும் ஆங...
மெர்லின் விமர்சனம்

மெர்லின் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றிக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் திரைக்கதையை எழுதி முடிக்கக் குறைவான கால அளவே உள்ள காலத்தில், அவரது அறை நண்பர்களால் நிரம்பி ஆராவாரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் உள்ளது. அறையில் உள்ளவர்களின் ஆராவாரத்தைக் குறைக்க, 'மெர்லின்' எனும் பேய் இரவுகளில் அச்சுறுத்துவதாகப் பீதியை ஏற்படுத்துகிறார். விளையாட்டு விபரீதம் ஆகி, அக்கற்பனைப் பேய் உண்மையிலேயே வெற்றியை ஆட்கொண்டு விடுகிறது. மெர்லினிடம் இருந்து வெற்றி எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் தொடக்கமே மிரட்டலாய் உள்ளது. நீர் இறைக்கும் விவசாயியை மோகினி பிடித்துக் கொள்கிறது. கிராமப்புறங்களில் மோகினி பற்றிய செவி வழி கதைகள் மிகப் பிரசித்தம். இயக்குநர் கீரா அதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார். மனிதனின் குற்றவுணர்வு தான் அவனைப் பீடிக்குமென இயக்குநர் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், மோகி...
கூட்டாளி விமர்சனம்

கூட்டாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜீவா, அறிவு, தண்டு, விக்கி ஆகிய நால்வரும் நண்பர்கள். சேட் பிபி (BB)-யிடம், வட்டி கட்டாத வண்டிகளைத் தூக்கும் வேலை செய்து வருகின்றனர். அறிவு, ஜீவாவை வளர்த்த பீட்டர், சேட் பிபி என ஜீவாவைச் சுற்றி அனைவருமே கொல்லப்படுகின்றனர். யார், ஏன் அனைவரையும் கொல்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. ஜீவாவாக நடித்துள்ள சதீஷின் முகம் மிகச் சுலபமாக மனதில் பதிகிறது. நாயகனாக தோன்றாமல் நமக்கு நன்கு தெரிந்த ஒரு பையன் என்ற உணர்வைத் தரும் முகம் அவருடையது. எந்த வாகனமாக இருந்தாலும், யாருடையது என்றாலும் தூக்கி விடுவார். நண்பர்களை எக்காரணம் கொண்டும் கைவிடாதவர். தன்னுடைய நண்பர்களில் ஒருவனின் மரணத்துக்குத் தனது காதலி தான் காரணமென அறிந்து, அவளைக் கொல்ல நாயகன் சபதமேற்பதில் இருந்தே படம் தொடங்குகிறது. திவ்யாவாக க்ரிஷா குரூப் நடித்துள்ளார். தனது தாயின் ஞாபகமார்த்தமாக வைத்திருக்கும் செயினை, வழிபறித் திருடனிடம் இருந்து மீட்பதா...