Shadow

திரை விமர்சனம்

கண்ல காச காட்டப்பா விமர்சனம்

கண்ல காச காட்டப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடக்கத்தில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டாலும், கலகலப்பான படத்திற்கு உத்திரவாதம் அளித்துள்ளார் மேஜர் கெளதம். எம்.எஸ்.பாஸ்கரும், யோகி பாபுவும் தமது டைமிங் சென்ஸாலும், மாடுலேஷனாலும் 2 மணி நேரத்திற்கும் குறைவான படத்தைக் கரையேற்றியுள்ளனர். கழிவறை கட்டும் திட்டத்தில் தமிழக அமைச்சர் ஊழல் செய்து சுருட்டிய 100 கோடியைக் கொலம்பியா வங்கியில் டெப்பாசிட் செய்ய, முதற்கட்டமாக ஹவாலா மூலம் மலேஷியா அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பணத்தை நாயகன், நாயகிகள், நகைச்சுவை நடிகர்கள் என மொத்தம் 8 பேர் திருட முனைகின்றனர். அமைச்சரின் பணம் யார் கையில் சிக்குகிறது என்பதுதான் படத்தின் கதை. கெட்டவனாக யோகி பாபு. டானாக (Don) வரும் கல்யாண் மாஸ்டரின் உதவியாளாக வருகிறார். படத்தில் சகட்டுமேனிக்கு அனைவரையும் கலாய்க்கிறார். "இருபது கோடி!!" என அதிசயித்து, "டொன்ட்டி லேக்ஸ்" என அவர் முடிக்கும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ...
கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாமிருக்க பயமே என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.கே-வின் இரண்டாம் படமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. பேய் உலகத்தில் இருந்து, முற்றிலும் விலகி இளமை, காதல் என்ற ஜானரை முயன்றுள்ளார் இயக்குநர். இரண்டு படத்துக்குமான ஒரே ஒற்றுமை, இரண்டு படங்களுமே நகைச்சுவையைப் பிரதான அம்சமாகக் கொண்டுள்ளது மட்டுமே! ஜீவாவும், காஜல் அகர்வாலும் சிறு வயது முதல் நண்பர்கள். காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட முதல் நாளே பிரிந்து விடுகின்றனர். காஜல் அகர்வாலுக்கு பாபி சிம்ஹாவுடன் காதல் ஏற்படுகிறது. பிரிந்த ஜோடிகள் ஒன்றிணைந்தனரா அல்லது காஜல் பாபியுடன் ஜோடி சேர்கிறாரா என்பதுதான் படத்தின் கதை. தம்பதிக்குள்ளான ஈகோவையும் புரிதலின்மையும் சுற்றி நிகழும் கதை. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் போதிய ஆழமில்லாததால், நாயகன் நாயகி சேரவேண்டுமென்ற எண்ணம் படம் பார்க்கும் பொழுது எழவில்லை. கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்த்துக் க...
பட்டதாரி விமர்சனம்

பட்டதாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலைக்குச் செல்லாமல், மதுரை மாநகரின் டீக்கடைகளில் பொழுது போக்குகிறார்கள் ஐந்து இளைஞர்கள். அவர்களில் நாயகன் சிவா மட்டும் பெண்கள் என்றால் பாராமுகமாய் உள்ளான். சிவா ஏன் அப்படி உள்ளான்? தன்னைக் காதலிக்கும் இலக்கியாவை அவன் ஏற்றுக் கொண்டானா? பட்டதாரி இளைஞர்கள் பிழைப்புக்கு என்ன செய்தார்கள் என்பதே படத்தின் கதை. சிவாவாக அபிசரவணன் நடித்துள்ளார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே!’ என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். ஊரோடு ஒத்துவாழ்வது போல், தற்போதைய ட்ரெண்டின் படி வேலை வெட்டியில்லாதவராக நடித்துள்ளார். அவரது நண்பர்கள் அனைவரும் பெண்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருக்க, அபிசரவணன் மட்டும் விதிவிலக்காய் இருக்கிறார். எந்தப் பெண்ணாவது கை கொடுத்தால் கூட, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவார். ‘வாவ்..’ என நாயகனின் இந்தக் குணம் கண்டு காதலில் விழுகிறார் நாயாகி அதிதி. இலக்கியா எனும் அவர் ஏற்றிர...
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காலமும் மரணமும் மனித இனத்தின் மீதான அவமானம் எனக் கருதுகிறான் கெசிலீயஸ். அந்த அவமானத்தைக் களைய வேறொரு பரிமாணத்தில் இருக்கும் டொர்மாமுவைப் பூமிக்கு அழைக்கிறான். அண்டத்தைக் கைப்பற்றும் இச்சையுடைய டொர்மாமுவிடமிருந்து பூமியை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்பவர் ஓர் அமெரிக்க நியூரோ சர்ஜன். மேற்கின் மேட்டிமையில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு திமிர் பிடித்த திறமைசாலி விஞ்ஞானி இவர். விதிகளை மீறுவது பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல், காரியத்தை முடிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட லட்சியவாதியும் கூட! அவருக்கு மிக மோசமான ஒரு விபத்து நிகழ்கிறது. கை விரல்கள், பலத்த சேதத்திற்கு உள்ளாகி எந்தப் பொருளையும் நடுக்கமின்றிப் பிடிக்கும் பலமற்றுப் போய் விடுகிறது. நவீன மருத்துவம் கைவிட்ட நிலையில், கமார்-தாஜ் எனும் இடத்தைத் தேடி காத்மாண்டுக்குப் பயணிக்கிறார். ...
கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

திரை விமர்சனம்
காலங்காலமாய் முடிவே இல்லாமல் நிகழும் விவாதத்திற்கு விடை கண்டுள்ளார் இயக்குநர் ராஜேஷ். கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஆத்திகர்களும் நாத்திகர்களும் தங்களுக்குள் சண்டை போடாத நாளே இல்லை. ஆனால் ராஜேஷ், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மிகச் சுலபமாய் இந்தப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறார். த்ரிஷா அல்லது நயன்தாரா, இருவரில் ஒருவரோடு குமாருக்கு திருமணம் நிச்சயமாகி விட்டால் கடவுள் உள்ளார் எனப் பொருள். இத்தகைய உயரிய தத்துவ விசாரணையை உடையதுதான் படத்தின் கதை. த்ரிஷா, நயன்தாரா என்ற பெயர்களைச் சம்பந்தப்பட்ட நடிகைகளோடு பொருத்தி நேரடி பொருள் கொள்ளக் கூடாது. அது ஓர் அழகான குறியீடு. எந்தப் பொழப்பும் இல்லாத விர்ஜின் பையனுக்கு, காதலிக்க எந்தப் பெண் கிடைத்தாலும் தேவதைதான். தேவதையை நேரில் பார்த்திராத யதார்த்தவாதியான நாயகன், நடிகைகளின் பெயரைக் கொண்டு தான் பார்க்கும் பெண்ணை ஒப்பீடு செய்து கொள்கிறான். அப்படி குமாருக்...
அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கல்லூரி முடிச்சுட்டு வேலைக்குப் போகாதவனாகவும், தங்கையின் தோழியைக் காதலிப்பவனாகவுமே உங்க படத்தின் ஹீரோக்கள் இருக்காங்களே! உங்க டெம்ப்ளட் மாத்த மாட்டீங்களா?' என்ற கேள்விக்கு, "இதான் எனக்குத் தெரியும். அது நல்லாவும் வருது. சோ, நான் இதையே பண்றேன்" எனப் பதிலளித்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். மேலும், "ஒருத்தன் நல்லா தண்ணியடிச்சுட்டு, என்ன படம்னே தெரியாம தியேட்டர்க்குப் போயிட்டு, படம் ஆரம்பிச்ச 2 ஃப்ரேம்ல, முழுப் போதையில் இது கெளதம் படம்னு கண்டுபிடிக்கணும்" என்றும் தன் விருப்பத்தை வலியுறுத்தினார். எஸ்.டி.ஆர். மஞ்சிமா மோகனைக் காதலிக்கிறார். மஞ்சிமாவின் குடும்பத்தை ஒரு பெரும் பிரச்சனை சூழ்கிறது. காதலுக்காகவும், காதலிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை. "முதல் பாதி ரொமான்ட்டிக்காக இருக்கும்; இரண்டாம் பாதியில் மாஸ் விஷயம்னு சொல்வாங்க...
ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி. 43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான ஜாக் க்வான்ட்டா என்பதில் நிச்சயமற்று இருக்கிறார் ப்ரிட்ஜெட்.  மூன்று படங்களுமே ப்ரிட்ஜெட்க்கு ஏற்படும் உறவுச் சிக்கல்கள் பற்றியதே! 1995இல் எழுத்தாளர் ஹெலன் ஃபீல்டிங் எழுதிய நாவலான “ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் டைரி”யை அடிப்படையாகக் கொண்டு, 2001 இல் முதல் பாகம் வந்தது. 1999இல் எழுதப்பட்ட 'ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்: எட்ஜ் ஆஃப் ரீசன...
காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் 'துளசி தளம்' எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்). சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்த்ரீலோலன் ராஜ்நாயக் சாபத்தினால் பைசாசமாய் ஒரு மாளிகையில் அடைப்பட்டுள்ளான். அந்த மாளிகைக்கு வரவழைக்கப்படுகிறான் பிறவிப் பேயோட்டியான காஷ்மோரா. யார் யாரை ஓட்டுகின்றனர் என்பதே படத்தின் கதை. படத்தின் ஓப்பனிங் காட்சி படு பிரமாதமாய் உள்ளது. ஒரு சீரியஸான படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஒரு பாடல் வருகிறது. அங்குத் தொடங்...
கொடி விமர்சனம்

கொடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது காதல் வருகிறது. எதிரெதிர் கட்சிகளில் இருக்கும் தனுஷ் - த்ரிஷா காதல் என்னானது என்றும், தம்பி தனுஷ் ஏன் அரசியலுக்குள் வருகிறார் என்பதும்தான் கதை. தனுஷின் ஒல்லியான உருவம் பேராசிரியர் கதாபாத்திரத்திற்கும் அந்நியமாக இருக்கிறது; அரசியல்வாதி பாத்திரத்தோடும் ஒட்டவில...
திரைக்கு வராத கதை விமர்சனம்

திரைக்கு வராத கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் இல்லாப் படங்கள் கூட அரிதினும் அரிதாய் வரும். முழுக்க முழுக்க பெண் நடிகர்கள் மட்டுமே நடித்துள்ள படமிது. திரையில் எந்தவொரு ஆணின் நிழலும் தப்பித் தவறியும் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இருந்துள்ளார் மலையாள இயக்குநரான துளசிதாஸ். இதுவரை திரையில் வந்தேயிராத கதையினுடைய குறும்படம் ஒன்றினை எடுக்க நினைக்கும் திரைப்படக் கல்லூரி மாணவியான இனியாவிற்குள் ஓர் ஆவி புகுந்து கொள்கிறது. யாரந்த ஆவி என்பதும், அதன் மரணப்பசிக்குக் காரணம் ஏன் என்பதும், அதன் பசி அடங்கியதா என்பதும் தான் படத்தின் கதை. நகைச்சுவை என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளால் படத்தின் முதல் பாதி ரொம்பவே கடுப்பேற்றுகிறது. பாய் ஃப்ரெண்டுடன் உரையாடுவது போல் நாயுடன் பேசுகிறார் கோவை சரளா; 'என் பட்டக்சில் உதைச்சது யார்?' எனக் கேட்கிறார் ஆர்த்தி; 'எனக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ்' என காதுக்கு ஒரு ஃபோனெனச் சல்லாபிக்கிறார் கோவை சரளா; பீர் கு...
தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மிக நிறைவானதொரு ஆக்‌ஷன் த்ரில்லர். க்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். "க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்" என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். "இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு சவால்" என்பார் அந்நிறுவனத்தின் தலைவர். அதற்கு க்றிஸ்டியனின் அம்மா, "மற்ற குழந்தைகளுக்கு அப்படி நேரும்போது, அது சவால். உங்க குழந்தைகளுக்கு அப்படியாகும் போது அது பிரச்சனை" என்பார் மன அழுத்தத்தில். அவருக்கு க்றிஸ்டியனை அங்கேயே விட்டுவிட வேண்டுமென எண்ணம். இராணுவ அதிகாரியான க்றிஸ்டியனின்...
காகித கப்பல் விமர்சனம்

காகித கப்பல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘காகித கப்பல்’ எனும் தலைப்பு வாழ்க்கையின் நிலையாமையைக் குறிக்கிறது. குப்பை பொறுக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரராகி விடும் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நேரும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. தலைப்பைக் கொண்டே முழுக் கதையையும் யூகித்து விடலாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு, ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. அப்புக்குட்டி படிக்காதவர் என்றாலும் நல்ல உழைப்பாளி. ‘பாப்பாம்மாள் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ மூலம் நன்றாகச் சம்பாதிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சுங்க இலாகா விசாரணையின் பொழுது அவமானப்படும் காட்சியில் அவரது அனுபவம் தெரிகிறது. தான் விசாரணைக்குப் போயிட்டு வந்தது குறித்து தன்னிடம் வேலை செய்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கும் பொழுது மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார். அவரது கணக...
இன்ஃபர்நோ விமர்சனம்

இன்ஃபர்நோ விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'டாவின்சி கோட்' நாவல் மூலம் பெரும் புகழ் ஈட்டியவர் எழுத்தாளர் டான் ப்ரெளன். அதைப் படமாக இயக்குநர் ரோன் ஹாவர்ட் எடுத்த பொழுது, அப்படத்தை இந்தியாவில் வெளியிட கிறிஸ்துவ அமைப்புகள் 2006இல் தடை கோரியது. படத்தின் மீதான இந்தியர்களின் எதிர்பார்ப்பை அது ஒன்றே எகிறச் செய்து, தடை நீக்கப்பட்டதும் 'அப்படி என்னத்தான் படத்தில் இருக்கு?' எனத் திரையரங்கை நோக்கித் தள்ளியது. அந்த எதிர்பார்ப்பின் நீட்சி, படமாக்கப்பட்டுள்ள எழுத்தாளரின் மூன்றாவது நாவலான இன்ஃபர்நோ வரையிலுமே தொடர்வது குறிப்பிடத்தக்கது. குறியீட்டியலில் (Symbology) பேராசிரியரான ராபர்ட் லேங்டன் புதிரை விடுவிப்பதோடு, இம்முறை உலகையே காக்கும் பெரும் பொறுப்போடு களமிறங்கியுள்ளார். எத்தகைய குறியீட்டையும் கட்டுடைக்கக் கூடிய லேங்டன், 'ப்ரெளனா இருக்குமே! அதில் ஹார்ட்டின் போட்டுத் தருவாங்களே! காலையில் எழுந்ததும் மக்கள் எல்லாம் குடிப்பாங்களே!' என காஃபி என்ற ...
எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

எம் எஸ் ஜி – தி வாரியர்: லயன் ஹார்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
எம் எஸ் ஜி (MSG) – ‘மெஸெஞ்சர் ஆஃப் காட்’ சீரிஸின் மூன்றாவது படமிது. இத்தொடர் படங்களின் நாயகன், தனக்கென ஒரு கூட்டத்தைக் கொண்டுள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த துறவியான குர்மீத் ராம் ரஹீம் சிங் ஆவார். டி.ராஜேந்திரின் திறமையும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பையும் ஒருங்கே கொண்ட பவர் ஸ்டார் இவர் என்றே சொல்லலாம். மாயாஜாலப் படமான ‘லயன் ஹார்ட்’ அதகளக் காமெடியாய் உள்ளது. ஓர் உதாரணம்: போர்க்களத்தில் குதிக்கும் நாயகன் குர்மீத், யானையை (ஆம், யானையே தான்!) அநாயாசமாகத் தூக்கி எறிகிறார். வேற்றுக் கிரகவாசிகளுக்குப் பூமியை ஆக்கிரமிக்க வேண்டுமெனத் துக்கிரித்தனமான எண்ணம். நடக்குமா? முடியுமா? ராஜஸ்தான் சிங்கம் ‘ஷேர் தில்’ இருக்கும் பொழுது? பொதுவாக, இத்தொடர் படங்களுக்கு இரண்டு இயக்குநர் இருப்பார்கள். முதல் இரண்டு படங்களை ஜீத்து ஆரோராவுடன் இணைந்து இயக்கிய குர்மீத் ராம் ரஹீம் சிங், இப்படத்தைத் தன் மூத்த மகள் ஹ...
அம்மணி விமர்சனம்

அம்மணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாத்தனங்கள் அற்ற மீண்டும் ஓர் ஆரோகணத்தைத் தந்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். 'ஜீ தமிழ்' சேனலில் தொகுத்தளித்த 'சொல்வதெல்லாம் உண்மை' எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையால் கவரப்பட்டு, இப்படத்தை இயக்கியுள்ளார் லட்சுமி. கைக்குக் கை மாறும் 'மணி (money)' இருக்கே, அம்மணி மீதே படத்தின் கதாபாத்திரங்களுக்கு கண். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் உடைய ஒவ்வொரு குடும்பமும் காலங்காலமாக எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசுகிறது அம்மணி படம். அரசு மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளியாக இருக்கும் சாலம்மாவிற்குக் கணவரில்லை. அவரது மூத்த மகனுக்கு 10 வயது இருக்கும் பொழுதே அவரது கணவர் இறந்து விடுகிறார். மகளோ ஒரு ரெளடி எனப் பெயரெடுத்த அடாவடியான ஆளுடன் ஓடி விடுகிறாள்; மூத்த மகனோ குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்; இளைய மகனோ மனைவியின் பேச்சிற்கு ஆடும் ஆட்டோ...