Shadow

Tag: தனுஷ்

“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

“இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி” – வெற்றிமாறன் | தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
கனெக்ட் மீடியா, PK ப்ரைம் ப்ரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினைத் துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு. கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு. ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன், “இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி. அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்...
ஒன்பது நாடுகளில் டிரெண்டிங்  ஆகும் “கேப்டன் மில்லர்”

ஒன்பது நாடுகளில் டிரெண்டிங் ஆகும் “கேப்டன் மில்லர்”

சினிமா, திரைச் செய்தி
அமேசான் ப்ரைம் தளத்தில், பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களைக் கடந்தும், உலகளவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்" ஆகும். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் ...
கேப்டன் மில்லர் விமர்சனம் :

கேப்டன் மில்லர் விமர்சனம் :

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
’முன்னாடி நம்ம நாட்டுக்காரனுக்கு கீழ அடிமையா இருந்தோம்… இப்ப வெளிநாட்டுக்காரன் கீழ அடிமையா இருக்கோம்… யார் கீழ இருந்தா என்ன…? எல்லாம் அடிமைதான… இவன் என்னை செருப்பு போடாதங்குறான்… கோயிலுக்குள்ள வராதங்குறான்… அவன் என் காலுக்கு பூட்ஸ் குடுக்குறான்.. மருவாதியான வாழ்க்கை வாழணும்னு ஆசப்படுறேன்… நான் பட்டாளத்துக்கு போறேன்…” என்று ஆங்கிலேயரின் சிப்பாயாக பணிக்குச் சேரும் அனலீசன் என்கின்ர ஈசா, மில்லர் என்கின்ற பெயர் மாற்றத்துடன் துப்பாக்கி ஏந்த அவனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது. அதை செய்ய முடியாதவனாக மனம் மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நோக்கி பிடிக்க வேண்டிய துப்பாக்கியை வெள்ளையனின் ராணுவ வீரர்களை நோக்கியும் தளபதியையும் நோக்கியும் திருப்பினால்” என்ன நடக்கும் என்பதை கற்பனையாக பேசி இருக்கும் திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”.இயக்குநர் அருண் மாதேஸ்வர...
வாத்தி விமர்சனம்

வாத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சோழவரம் அரசுப்பள்ளிக்கு ஒப்புக்குச் சப்பாணியாக அனுப்பி வைக்கப்படுகிறார் கணித ஆசிரியர் பாலமுருகன். ப்ரோமஷனுக்காக ஆசைப்படும் பாலமுருகன், மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தனது சாமர்த்தியத்தால் மாணவர்களை வர வைக்கிறார். பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எப்படி 45 மாணவர்களையும் பள்ளிப் படிப்பை முடிக்க வைக்கிறார் வாத்தி பாலமுருகன் என்பதே படத்தின் கதை. ஷா ராவும், ஹைப்பர் ஆதியும் நகைச்சுவைக்குச் சொற்பமாகவே உதவியுள்ளனர். அவர்களைப் பாதியிலேயே துண்டித்து அனுப்பி விட்டு தனுஷை மட்டுமே முழுமையாக நம்பிக் களமிறங்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் அட்லூரி. தன்னிகெல்லா பரணி, சாய்குமார் முதலிய நடிகர்களும் சாட்சிகளாக வந்து செல்கின்றனரே தவிர்த்து கதைக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத பாத்திரங்களிலேயே நடித்துள்ளனர். ஆசிரியை மீனாக்‌ஷியாக சம்யுக்தா நடித்துள்ளார். பண பலம் பொருந்திய கல்வித்தந்தையான வில்லனை எதிர்க்...
கலாட்டா கல்யாணம் விமர்சனம்

கலாட்டா கல்யாணம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனுஷ் நடித்த ஹிந்தி டப்பிங் படம். பீஹார் செல்லும் மருத்துவர் விஸ்வநாத் ஐயருக்கு, ரின்கு எனும் பெண்ணுடன் கலாட்டா ஏதுமின்றிக் கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர் ரின்குவின் உறவினர்கள். அதன் பின் ரின்கு செய்யும் கலாட்டாவால், விஸ்வநாதினுடைய கல்யாணம் நிற்கிறது. விஸ்வநாதிற்கு ரின்கு மீது காதல் ஏற்பட, ரின்குவோ சஜ்ஜத் அலி கான் என்பவரைக் காதலிக்கிறாள். தன் மனைவி மீதான விஸ்வநாதின் காதல் வென்றதா, சஜ்ஜத் அலி கானுடனான ரின்குவின் கலாட்டா காதல் வென்றதா என்பதே படத்தின் கதை. மிகவும் கலர்ஃபுல்லான படம். எதையுமே சீரியஸாக அணுகாமல் ஓர் இளமைத் துள்ளலுடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. ரின்குவாக நடித்துள்ள சாரா அலி கான், படத்தின் இந்தத் துள்ளலான ஓட்டத்திற்கு உதவியுள்ளார். மணிரத்னம் பட நாயகிகளை ஞாபகப்படுத்துகிறார். மருத்துவர் விஸ்வநாத் ஐயராக தனுஷும், சர்க்கஸில் மேஜிக் செய்யும் சஜ்ஜத...
கர்ணன் விமர்சனம்

கர்ணன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"என்னத்துக்கு பழங்கதைகள் எல்லாம் பேசிக் கொண்டு? முன்பு இப்படியான சாதியக் கொடுமைகள் நடந்திருக்கும். இப்போ அப்படியில்லை தானே? அதைச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன?" என்ற கேள்வியைக் கடக்காமல், இந்தப் படத்தைப் பார்க்கச் சுற்றம் சூழத் திரையரங்கிற்குச் செல்பவர்கள் பாக்கியசாலிகள். ஏன் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்? நாம் ஆங்கிலேயரிடம் அடிமைகளாக இருந்தோம் என்பதை நினைவுப்படுத்தி நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளவா? இல்லை. எதேச்சதிகாரம், காலனிய ஆட்சியின் அடக்குமுறை, சுதந்திரத் தாகம், சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களின் எழுச்சி, அவர்களின் வீரம் என சுதந்திர தினம் அடுத்த தலைமுறைக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. முன்னோர் பெருமையைப் பழங்கதையாகப் புறக்கணிக்காமல், வாட்ஸ்-அப்பில் ஃபார்வேர்ட் செய்து மகிழ்ச்சியடையும் ஒரு சமூகத்திற்கு, முன்னோர்கள் அனுஷ்டித்த சமூக அநீதியைப் பற்றித் தெரிந்த...
ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்

சினிமா
'அசுரன்', 'சூரரைப் போற்று' என்று தொடரும் ஜீ.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றைத் தயாரித்துள்ளார். உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாகப் பதிப்பார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடல் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜீ.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு உறுதுணையாக ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்து 17 ஆம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜீ.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சி...
அசுரன் விமர்சனம்

அசுரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாக்கப் எனும் நாவல் விசாரணை ஆனதை விட, பல மடங்கு வீரியத்துடன், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாக மாற்றியுள்ளார் வெற்றிமாறன். எழுத்தாளர் பூமணியின் மூலக்கதையை மிஞ்சும் அளவு, மிகச் சிரத்தையுடன் திரைக்கதை அமைத்து அசக்தியுள்ளனர் மணிமாறனும் வெற்றிமாறனும். ஒரு நாவல் திரைப்படமான முயற்சியில், இயக்குநர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்' பெற்ற இடத்திற்கு நிகராக வைக்கக் கூடிய கலைப்படைப்பாக வந்துள்ளது அசுரன். நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் தகராறும், அது தொடர்பான கொலையும் பழிவாங்குதலும் தான் படத்தின் கதை என்றாலும் கூட, சமூகத்தில் நிலவி வரும் சாதிய அடக்குமுறைகளும், ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுமே படத்தின் அடிநாதம். ஹிந்திப்படமான ஆர்ட்டிகிள் 15 போல் எதையும் உடைத்துப் பேசாவிட்டாலும், இன்னது தான் பேசுகிறோம் என தனது திரைமொழியால் புரிய வைத்துவிடுகிறார் வெற்றிமாறன். அவரது படைப்புகள் தன...
பக்கிரி விமர்சனம்

பக்கிரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஃப்ரென்ச் எழுத்தாளர் ரொமைன் எழுதிய முதல் நாவலான, 'தி எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹூ காட் ட்ராப்ட் இன் ஆன் இகியா வார்ட்ரோப் (The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe)' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். போன வருடம் ஃபிரான்ஸில் வெளியான இப்படம், 21 ஜூன் 2019 அன்று இந்தியா, யு.எஸ்.ஏ., கனடா, யு.கே., மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியாகிறது. 'பக்கிரி' என தமிழில் டப் செய்யப்பட்டு இப்படத்தை Y NOTX வெளியிடுகிறது. ஒரு ஹாலிவுட் படத்தில், அதுவும் பிரபலமான ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைக்கதையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர் ஒருவர் நடித்திருப்பது, மிக முக்கியமான ஒரு மைல்கல் பாய்ச்சலாகவே கருதவேண்டும். ஃபகிர் என்ற சொல், உலக சுகங்களைத் துறந்து இறைஞ்சுண்டு வாழும் சூஃபி முஸ்லீம் பெரியவர்களைக் குறிப்பதாகும். காலப்போக்கில் இந்த...
வடசென்னை விமர்சனம்

வடசென்னை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துரோகம், வளர்த்து விட்டவருக்கு அவரது பிள்ளைகள் செய்யும் துரோகம், நட்பெனும் போர்வையில் நம்பியவர்களுக்குச் செய்யப்படும் நம்பிக்கைத் துரோகம், பழிவாங்க உறவாடிக் கெடுக்கும் துரோகம் என துரோகத்தின் அத்தனை வடிவங்களையும் கொண்டுள்ளது வடசென்னை. இப்படம், மெட்ராஸ் போலவும், காலா போலவும், 'நிலம் எங்கள் உரிமை' என்பதையே பேசுகிறது. வளர்ச்சியெனும் பேரில் மீனவக் குப்பங்களும், அதன் மனிதர்களும் எப்படி அந்நியப்படுத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள் என அமீர் பேசும் அரசியலைச் சேலம் எட்டு வழி பாதை திட்டத்தோடு பொருத்திப் பார்த்தால் படத்தில் இழையோடும் அரசியலின் வீரியம் புரியும். அமீரின் பாத்திரம் தெறி! வெற்றிமாறன், மேக்கிங்கிலும் கதைசொல்லும் பாணியிலும் மிகுந்த சிரத்தை எடுத்து அசத்தியுள்ளார். ஒரு நேர்க்கோட்டுக் கதையை, பல அத்தியாயங்களாகப் பிரித்து, மூன்று கதாபாத்திரங்களுக்குள் உள்ள தொடர்பா...
“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

“அன்பைப் பரப்புங்கள்” – வி.ஐ.பி. தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’. எதிர்பார்த்தது போல் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்க புஷ்பத்தின் கணவராகப் படத்தில் நடித்திருக்கும் மைண்ட்-வாய்ஸ் விவேக், "தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. வளர்ந்து வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்குக் கிடைத்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில், ‘சிங்கத்தின் பாலாக இருந்தால் அதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்துக் கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பார். அதே போல் தனுஷ் - சிங்கத்தின் பால்; தாணு ஒரு தங்கக் கிண்ணம். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும...
வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'இன்ஜினியர் ஆஃப் தி இயர்' பட்டம் வாங்கும் ரகுவரன் மீண்டும் வேலையில்லாப் பட்டதாரி ஆகி விடுகிறார். வி.ஐ.பி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எனும் சொந்த நிறுவனம் தொடங்குகிறார். அதுவும் கை விட்டுப் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. வசுந்தரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி. வசுந்தராவாக கஜோல். அனைத்திலும் பெஸ்ட், எப்பவும் ஃபர்ஸ்ட் என்பதுதான் அவரது கொள்கை. எப்பவும் வெந்நீரில் காலை நனைத்துக் கொண்டது போல் ஓர் அவசரத்துடனும், முழு மேக்கப்புடனுமே திரையில் வலிய வருகிறார் கஜோல். அவரால் ஒரு நிமிடத்தைக் கூட வேஸ்ட் செய்ய முடியாத அளவு பிஸியான கதாபாத்திரமாம். ஆனாலும், நம்பர் 1 இன்ஜினியர் ஆன ரகுவரனைக் கார்னர் செய்ய தன் பொன்னான நேரத்தையும், கோடிக்கணக்கில் பணமும் செலவழிப்பார் என்பது முரணாக உள்ளது. மனைவி என்றாலே கத்திக் கொண்டே இருப்பார் என்பதைப் படத்தின் முதல் பாதியில் தேவைக்கு அதிகமாகவே பதிகிறார். சிகரெட் பி...
கொடி விமர்சனம்

கொடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது காதல் வருகிறது. எதிரெதிர் கட்சிகளில் இருக்கும் தனுஷ் - த்ரிஷா காதல் என்னானது என்றும், தம்பி தனுஷ் ஏன் அரசியலுக்குள் வருகிறார் என்பதும்தான் கதை. தனுஷின் ஒல்லியான உருவம் பேராசிரியர் கதாபாத்திரத்திற்கும் அந்நியமாக இருக்கிறது; அரசியல்வாதி பாத்திரத்தோடும் ஒட்டவ...
கொடி இசை – ஒரு பார்வை

கொடி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
பொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய R.S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், அனிருத் உடனான கூட்டணியை முறித்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்தின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள். எழுதியவர்கள் விவேக்கும், அருண்ராஜா காமராஜூம் ஆவர். 1. பாடல் - ஏய் சுழலி பாடியவர்கள்: விஜய்நரைன் ரங்கராஜன் விவேக் வரிகளில் ஒரு நகைச்சுவை கலந்த ரொமான்டிக் நாட்டுப்பாடல் இது. ஒரு அழகான நாட்டுப்பாடலுடன் ஜாஸை கலந்து ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார் சந்தோஷ். விஜய் நரைன் குரலில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. 2. பாடல் - சிறுக்கி வாசம் பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன் சந்தோஷ் நாராயணன் இசையில் இன...