பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்
சேரனனின் சீக்ரெட் ரூம்
எவிக்ஷனுக்குப் பிறகு தெளிவும் நிம்மதியும் அவர் முகத்தில் இருந்தது. 'எங்கிட்ட நிறைய மாற்றம் வந்துருக்கு' எனச் சொன்னார். அது கண் கூடாகத் தெரிந்தது. உள்ளே வரும்போதும், பிறகு வாராவாரமும், மைக் கிடைத்த பொழுதெல்லாம் நிறைய பேசின சேரனைப் பார்க்க முடியவில்லை. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. 'என்னோட கோபத்தைத் தூக்கி எறிஞ்சுட்டேன்' என இந்த கேமையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தின ஒரு பெருமிதம் அவரிடம் தெரிந்தது. ஒரு குறும்படம் போடத் தயாரான போது, சேரன் சீக்ரெட் ரூம் செல்கிறார் என பிக் பாஸ் குரல் வந்தது. சேரனும் மகிழ்ச்சியாகக் கிளம்பினார்.
கவினும் காலர் ஆஃப் தி வீக்கும்
'அண்ணா, 75 நாளா பிக் பாஸ் வீட்டுல இருக்கீங்க. ஒரு தடவை கூட பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்டுக்கோ, கேப்டன் ஆகுறதுக்கோ உங்க பெயரை யாரும் சொல்லவே இல்ல?' என்பது கேள்வி. 'சாரி நண்பா என்னிடம் பதிலில்லை' என்ற கவினிடம், 'மழுப்பாம, புர...