Shadow

Tag: விவேக் பிரசன்னா

லால் சலாம் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே பிரச்சனையைத் தூண்டிவிடப் பார்க்கும் அரசியல்வாதிகள். இது தெரியாமல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எழும் போட்டியில் அடித்துக் கொள்ளும் இந்து, இஸ்லாம் விளையாட்டு வீரர்கள், இதற்கு மத்தியில் ஊரில் தடைபட்டுப் போன கோவில் திருவிழா, முறைத்துக் கொண்டு திரியும் இரு வேறு சமயத்தைச் சேர்ந்த நாயகர்களின் அப்பாக்கள் இருவரும் உயிர் தோழர்கள் இப்படியிருக்கும் ஒவ்வொரு ஒன்லைன் –களுக்கும் சினிமாத்தனமான முடிவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எழுதத் தெரியும் என்றால் அதுதான் ஒட்டு மொத்த லால் சலாம் திரைப்படம்.தன் தந்தை மீது சங்கி என்னும் முத்திரை விழுவதை அவமானமாகக் கருதும் மகள் கிடைப்பது ஒரு கொடுப்பினை தான்.  அந்த முத்திரை அவமானகரமானது, என் தந்தை அப்படி இல்லை என்று சொல்லத் துடித்து இப்படி ஒரு திரைப்படத்தை மகள் ஐஸ்வர...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக் ” 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட “ஆலன் பட ஃபர்ஸ்ட்லுக் ” 

சினிமா, திரைச் செய்தி
3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகிவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் மற்றும் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ள...
தண்டட்டி விமர்சனம்

தண்டட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி. 57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தி...
தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

தண்டட்டி – அப்பாத்தாக்களுக்குப் பேத்தியின் அன்பு முத்தம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைச் செய்தி
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி'. ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்தப் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்த...
பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா, “இந்தப் படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன். இப்போது அது நிறைவேறியுள்ளது. படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த படம் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது” என்றார். நாயகி காயத்ரி, “எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இ...
உடன்பால் விமர்சனம்

உடன்பால் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஹா தமிழில், டிசம்பர் 30 அன்று வெளியாகிறது இத்திரைப்படம்.பரமனுக்குக் கடன் அதிகமாகிவிட, வீட்டை விற்று அதிலிருந்து மீளலாமெனத் திட்டமிடுகிறான். அதற்காகத் தங்கை கண்மணியை வீட்டிற்கு வரவைத்து, அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளன்று அப்பாவிடம் பேச நினைக்கிறார். வீட்டை விற்க ஒத்துக் கொள்ளாத விநாயகம், வள்ளலார் காம்ப்ளக்ஸ்க்குச் சென்றுவிடுகிறார். அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழ, அரசாங்கம் அந்த காம்ப்ளக்ஸ் விபத்தில் இறந்தவர்களுக்குத் தலா 20 லட்சம் ரூபாயை நிவாரணமாக அறிவிக்கிறது. தேவை, பணம், குடும்பம், சகோதர - சகோதரி பந்தம், குயுக்தி, கடன் சிக்கல் என மனித மனங்களை ஆக்கிரமிக்கும் உணர்வுகளைக் கலகலப்பாகத் தொட்டுச் செல்கிறது படம்.இந்தப் படத்தின் கதையை, விநாயகத்தின் குடும்பக்கதை என இரண்டு வார்த்தையில் சொல்லலாம். விநாயகமாக சார்லி நடித்துள்ளார். அவரது அனுபவத்திற்கு அசால்ட்டாய் ஸ்கோர் செய்யக்கூடிய பாத்திர...
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, திரை விமர்சனம்
சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் - காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி'. வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது யாரென விவேக் எப்படிக் கண்டுபிடித்தார் என்பதுதான் தொடரின் கதை. த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் மெதுவாக நகருகிறது. இது த்ரில்லர் படம் என்பதை விட, வெலோனியின் அகத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும் துணை ஆய்வாளர் விவேக்கின் அகப்பயணம் என்றே சொல்லவேண்டும். எழுத்தாளர் நாசர், ஒரு நாவலே எழுதி விடுகிறார். விவேக்கோ...
‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

Event Photos, OTT, கேலரி
ப்ரைம் வீடியோவும், வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து, 'வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' சீரிஸின் சிறப்புத் திரையிடலைத் திரைப்பிரபலங்களுக்காக ஒருங்கிணைத்தது. தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் அரங்கேறியது. தொடரில் நடித்த நடிகர்களும் படைப்பாளிகளும், திரையிடலுக்கு வந்தவர்களை வாஞ்சையுடன் வரவேற்றனர். 'வதந்தி' வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் இணைந்து அனைவரையும் வரவேற்றனர். 'சுழல்' வெப் சீரிஸ் இயக்குநர்கள் பிரம்மா ஜி, அனுசரண் முருகையன் மற்றும் நடிகர் கதிர் சிறப்புத் திரையிடலுக்கு வந்திருந்தனர். நடிகை ஆல்யா மானஸாவும், தமிழ் காமெடி நடிகர் புகழும் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்தனர். இவர்களுடன் 'மான்ஸ்டர்' இய...
கண்ட நாள் முதல் பிரியாவின் ‘அனந்தம்’

கண்ட நாள் முதல் பிரியாவின் ‘அனந்தம்’

திரைத் துளி
ஜீ5 ஒரிஜினல் சீரீஸான “அனந்தம்” வரும் ஏப்ரல் 22 அன்று ஜீ5 தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகிறது. 'கண்ட நாள் முதல்', 'கண்ணாமூச்சி ஏனடா' முதலிய வெற்றிப் படங்களை இயக்கிய பிரியா V இயக்கத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட ZEE5 ஒரிஜினல் சீரீஸாக உருவாகியுள்ளது “அனந்தம்." இந்தத் தொடரில் பிரகாஷ்ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், மற்றும் ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனந்தம் ZEE5 ஒரிஜினல் சீரீஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரியா V, "வனவாசம் முடித்து மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன். முரளி சார், கௌசிக் இருவருக்கும் நன்றி. 'கண்ட நாள் முதல்' படத்தில் இருந்தது போல் ஒரு சிறு நம்பிக்கையில் தான் ...
சூரரைப் போற்று விமர்சனம்

சூரரைப் போற்று விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள். விமானத்தில் செல்வதென்பதே எட்டாக்கனியாக இருக்கும் ஒருவன், ஏர்லைன்ஸ் ஆரம்பித்துக் காட்டுகிறேன் என்ற கனவு கண்டு, அதை நனவாக்கிய அசாத்திய சாகசம்தான் 'சூரரைப் போற்று' படத்தின் கதை. Simply fly! (தமிழில்: வானமே எல்லை) என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தழுவி, ஒரு சுவாரசியமான புனைவாக்கத்தைக் கொடுத்துள்ளார் சுதா கொங்கரா. திரையரங்கில் பார்க்க வேண்டிய படமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது படம். திரையரங்கில் வெளியிட்டாலும், ரசிகர்கள் செல்லத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், நேர்த்தியான விஷூவலும், ஜி.வி.பிரகாஷின் அற்புதமான இசையுமே! திரையரங்கில் பார்க்க வேண்டிய கொண்டாட்டத்தைப் படம் கொண்டுள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும், கொண்டாட்டத்திற்கான மேஜிக்கைச் செய்கிறது 'மண்ணுருண்ட', 'வெய்யோன் சில்லி', '...
ஆடை விமர்சனம்

ஆடை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்திற்கு, நேரடியாக 'நங்கேலி' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அல்லது அவரது முதற்படம் போல் கவித்துவமாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். ஆனால், நேரடியாக உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆசையிலும், விளம்பரத்திற்காகவும் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் போல் இயக்குநர் ரத்னகுமார். ஆனால், இந்தத் தலைப்பே அவர் மறைக்கப் பார்க்கும் இஸத்தை (கொண்டையை) வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவரது முதல் படமான மேயாத மான்-இல் ஒரு வசனம் வரும். 'வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, ஏன் கேன்டீனுக்குக் கூடப் போக மாட்டா. வீட்ல பார்த்த பையன் கூடவே என்கேஜ்மென்ட் பண்ணிக்கிறா-ன்னா அவ எவ்ளோ நல்லவ?’ என நாயகன் நாயகியைச் சிலாகிப்பான். நல்ல பெண் என்பதற்கு இயக்குநர், நாயகன் வாயிலாக முன் வைக்கும் இலக்கணம் அது. ஆடை படத்து அமலா பாலோ, இதற்கு முரணான பெண். நடுரோட்டில் ஒருவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப...
கொரில்லா விமர்சனம்

கொரில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விவசாயியான சாதீக், போலி மருத்துவரான ஜீவா, ஐ.டி. வேலையை இழந்த சதீஷ், நடிகராகும் கனவில் இருக்கும் வெங்கட் ஆகியோர் இணைந்து ஒரு வங்கியைக் கொரில்லா முகமூடி போட்டுக் கொள்ளையடிக்கின்றனர். அமெச்சூர் திருடர்களான அவர்களின் கொள்ளையடிக்கும் முயற்சி எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவின் பெயர் போடும் பொழுது, காங் எனும் சிம்பென்சியைச் சுற்றுலாக்குச் செல்லும் ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகிய மூவரும் எப்படி மீட்கின்றனர் எனத் திரையில் காட்டப்படும் கதை நன்றாக உள்ளது. ஜீவா பேருந்துகளில் செய்யும் திருடு, போலி டாக்டராக அவர் வரும் காட்சிகள், இது அப்படியே நாயகியுடனான காதலாக மலரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. குரங்கு பொம்மை போட்டு அவர்கள் திருடச் செல்லும் காட்சிகள் கூடப் பெரிதும் பரபரப்பில்லாமல் நகர்கிறது. கொரில்லா பொம்மை மாஸ்க்கை ஜீவா கழட்டும் இடத்...
சிந்துபாத் விமர்சனம்

சிந்துபாத் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1001 இரவு அரேபியக் கதைகளில், ஏழு கடற்பயணயங்கள் மேற்கொண்ட சிந்துபாத்தின் கதை தனித்துவமானது. அதனால் தான் இதுநாள் வரை தினத்தந்தியின் கன்னித்தீவில் அவர் வாசம் செய்து வருகிறார். மனைவி வெண்பாவைக் காப்பாற்ற, சிந்துபாத் எனப் பெயரிடப்பட்ட போலி பாஸ்போர்ட்டில் தாய்லாந்து பறக்கிறான் திரு. மனைவியை எப்படிக் காப்பாற்றினான் என்பதுதான் படத்தின் கதை. கேட்கும் திறன் சற்றே குறைந்த பலே திருடன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். பர்ஸ், மோதிரம், பிரேஸ்லட், செயின் என விஜய் சேதுபதி அனைவரிடமும் திருடினாலும், கழுத்தில் காயத்தை ஏற்படுத்துவது மாதிரி செயின் பறிப்பில் எல்லாம்  ஈடுபடாத நல்லவர். சத்தமாய்ப் பேசும் அஞ்சலியின் உரத்த குரலைக் கேட்டதும் காதலில் விழுகிறார். காதல் கனிந்ததும் திருட்டுத் தொழிலை விடுகிறார். அஞ்சலி மலேசியா திரும்பும் நாள் அன்று, விமான நிலையத்தில், அஞ்சலியைக் குனியச் சொல்லி, சட்டெ...
சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓர் இக்கட்டில் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து தப்பிக்க ஹாலிவுட் சார்லி சாப்ளின் மிகச் சீரியசாக முயலும் அனைத்தும் பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். அதன் அடிப்படையில், 2002இல் வெளிவந்த வெற்றிப்படமான சார்லி சாப்ளினின் மைய இழை அமைந்திருக்கும். 17 வருடங்களுக்குப் பின், சார்லி சாப்ளின் 2 வருகிறது. ஆனால், இது முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. ஓர் இக்கட்டில் சிக்கி, அதிலிருந்து மீளப் பார்ப்பதுதான் இப்படத்தின் கருவும். முதல் பாகத்தில் அமர்க்களம் புரிந்த பிரபு, பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் மட்டுமே இரண்டு படத்திற்குமான இணைக்கும் கண்ணி. முதற்பாகத்தைப் போலவே பிரபு பாத்திரத்தின் பெயர் ராமகிருஷ்ணன், பிரபுதேவா பாத்திரத்தின் பெயர் பிரபு. இப்படத்தில் என்ன மாறுதலென்றால், 2002இல் இரண்டு நாயகர்களில் ஒருவரான பிரபு இப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக ப்ரோமோட் ஆகியுள்ளார். பிரபுதேவா இன்னும் அத...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்...