Shadow

Tag: Pentagan Public Relations

இன்றைய நியூரோசயின்ஸ்

இன்றைய நியூரோசயின்ஸ்

மருத்துவம்
ஜனவரி 28 அன்று, பேராசிரியர் B.ராமமூர்த்தி மூன்றாவது சொற்பொழிவினை, அட்வான்ஸ்ட் நியூரோசயின்ஸ் ஃபெளண்டேஷன் ட்ரஸ்ட், MGM ஹெல்த்கேருடன் இணைந்து நிகழ்த்தியது. இதில் 200 நரம்பியல் வல்லுநர்கள் பங்கு கொண்டனர். “Preservation and reconstruction of facial nerve in neurosurgery” என்ற தலைப்பில் மருத்துவர் மத்ஜித் சமீ (Madjid Samii) பேசினார். 1950 இல், அரசு பொது மருத்துவமனையில், நரம்பியல்துறைக்கெனத் தனிப் பிரிவை உருவாக்கியவர் பேராசிரியர் B.ராமமூர்த்தி. 1967 இல், Head injury ward என தலைக்காயங்களுக்காகத் தனிப் பிரிவைத் தொடங்கினார். ‘குரு சமர்ப்பனம்’ என்ற பெயரில் அவரது வாழ்வும் பணியும் பற்றி, மருத்துவர் K.ஸ்ரீதரால் தயாரிக்கப்பட்ட சிறப்புக் குறும்படமொன்று நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது. “நவீன கருவிகளால் மூளை அறுவைச்சிகிச்சை எளிமையாகி விட்டது என்றாலும், நான்கைந்து அடிப்படையான கருவிகளும், அறுவைச்சிகிச்சை செய்வதி...
நியூரோ அப்டேட் 2019

நியூரோ அப்டேட் 2019

மருத்துவம்
சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். கல்வி நிறுவனங்கள் நவீன கருவிகள் உதவுகிறது நியூரோ ட்ரஸ்ட். கால்கை (காக்காய்) வலிப்பு உடையவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வொர்க்-ஷாப் நடத்தியுள்ளனர். வலிப்பு மற்றும் அடைப்பு குறித்து, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறைய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி மாதத்திலும், 300 – 400 நரம்பியல் நிபுணர்கள் ஒன்றாய்க் குழுமி, தேசிய அளவில...
புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்

மருத்துவம்
புத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். ஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன. சமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் குழந்தைகளின் கற்றல், மற்றவருடன் தொடர்பு கொள்ளல் போன்ற குறைபாடுகளைக் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர். அரசாங்கம் குழந்தை நலனில் அக்கறை காட்டி வந்தாலும், சமூக நலனில் அக்கறை கொண்டு இத்துறை வல்லுநர்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் குழந்தைகள் பிரச்சனையைக் கலைவதைக் கையிலெடுத்திருப்பது வரவேற்...
புற்றுநோயியல் 2018

புற்றுநோயியல் 2018

மருத்துவம்
மனித இனத்தை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். அந்த நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வில், வருடந்தோறும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது மருத்துவ உலகம். ‘2018 இல், அன்காலஜியில் புதிதாய் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கினை ஒருங்கிணைத்தார் மருத்துவர் அனிதா ரமேஷ். டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னையிலுள்ள ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் இந்தக் கருத்தரங்கம் நிகழ்ந்தது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரதிநிதிகள் பங்கு கொண்டு, இந்தியப் பார்வையில், புற்றுநோயை எப்படி அணுகி சிகிச்சை அளிக்கின்றனர் என்பது பற்றிக் கலந்துரைத்தனர். >> உடல் திசு ஆய்வின் மூலம், புற்று நோயைக் கண்டறியும் பழைய வழிக்குப் பதிலாக, ‘லிக்விட் பயாப்ஸி (Liquid Biopsy)’ எனும் முறையி...
மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்

மார்டல் இன்ஜின்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இருக்கும் இடத்தில் இருந்தே உலகின் பெரும்பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்து. அத்தகைய சூரியன் அஸ்தமிக்காத தேசம் என்ற கர்வம் கொண்ட இங்கிலாந்து அரசின் தலைநகரமான லண்டன் ஒருவேளை நகரத் தொடங்கினால்? ஆம், முழு நகரமே பெரிய வாகனம் போல் சக்கரங்களில் நகரத் தொடங்கிவிட்ட காலத்தில், லண்டன் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கும் என்பதுதான் படத்தின் கதை. பிலீப் ரீவ், 2001 இல் எழுதிய 'மார்டல் இன்ஜின்ஸ்' என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. கதிர்வீச்சின் பாதிப்பில் நிலமும் நீரும் பாழாகி விட, மக்கள் ராட்சஷ வாகனங்களில் அடைக்கலம் புகுகின்றனர். அதற்கும், 'அழியக்கூடிய இயந்திரங்கள்' எனப் பொருள்படும்படி தலைப்பு வைத்துள்ளனர். எல்லாமும் அழியும், இங்கிலாந்து பேரரசிலும் சூரியன் அஸ்தமிக்கும் என்பதே படத்தின் உட்கரு. ஒரு பெரும் நகரமே சக்கரங்களில் பயணிக்கிறது என்ற மிகு கற்பனையை மிக அற்புதமாகத் திரையில் கொண்டு ...
KickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்

KickO – சென்னைக் குழந்தைகளின் மகிழ்ச்சித் தருணம்

Others, காணொளிகள்
சோனி YAY! எனும் குழந்தைகளுக்கான சேனலை, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தமிழிலும் ஒளிபரப்பி வருகிறது. அந்தச் சேனலின் புகழ்பெற்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கிக்’ஓ (KickO) என்ற கதாப்பாத்திரம், குழந்தைகளைக் காண முதல் முறையாகச் சென்னைக்கு வந்திருந்தது. கிக்’ஓ எனும் அந்தக் கதாப்பாத்திரம், தனது கிக்களுக்காகவும் (Kicks), அழகான நடன அசைவுகளுக்காகவும் பேர் பெற்றது. நவம்பர் 11, ஞாயிறு அன்று, பெசன்ட் நகரில், சென்னைக் குழந்தைகளுக்குத் தனது நடன அசைவுகளைச் சொல்லிக் கொடுத்து, குழந்தைகளுடன் விளையாடி அவர்களை மகிழ்வித்தது கிக்’ஓ. குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களும் குழந்தைகளாகி, கிக்’ஓ-வுடன் கை குலக்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது....
மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்

மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். ‘மார்டல் இன்ஜின்ஸ்’ எனும் படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது. ‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற பெயரில் பிலிப் ரீவ் எழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம். ‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், ‘தி ஹாபிட்’ தொடர் படங்கள் போன்ற மகத்தான படைப்புகளைப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கித் திரையில் உலா விட்ட பீட்டர் ஜாக்சன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறி பல மாறுதல்களை ஆரத் தழுவிக் கொண்ட ஒரு காலகட்டம். ஒருவரையொ...
ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்

ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
மில்லினியம் சீரிஸ் என்பது, ஸ்வீடன் எழுத்தாளர் ஸ்டீக் லார்ஸனால் தொடங்கப்பட்ட 10 பாகங்களுடைய க்ரைம் நாவல் தொடர். ஆனால், அவரது எதிர்பாராத மரணத்தால், இது மூன்று பாகங்களோடு நின்றது. அந்த மூன்று பாகங்களுமே கூட அவரது மரணத்திற்குப் பின்பே வெளியானது. மில்லினியம் என்பது ஒரு பத்திரிகையின் பெயர். அதன் புலனாய்வு பத்திரிகையாளர் மிகேல் பிளான்க்விஸ்ட், மற்றும் லிஸ்பெத் சலாண்டர் ஆகிய இருவரும் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். இந்த சீரிஸின், நான்காவது பாகத்தை டேவிட் லாகர்கிரான்ட்ஸ் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த சீரிஸின் முதல் பாகமான, ‘தி கேர்ள் வித் தி ட்ராகன் டேட்டூ’ என்ற பெயரில் 2011 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் டேனியல் க்ரெய்க் தான் அப்படத்தின் நாயகன். தற்போது, மில்லினியம் சீரிஸின் நான்காவது நாவலான ‘தி கேர்ள் இன் தி ஸ்பைடர்’ஸ் வெப்’, திரைப்படமாக வெளிவரவுள்லது. டேனியல் க...
சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்

சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்

சமூகம்
குழந்தைகளுக்குப் பிடித்த சேனலான சோனி YAY!, விழா காலத் திருவிழாவை கொண்டாடட்டத்தை மேலும் சிறப்பாக்க முடிவு செய்துள்ளது. அதன் படி, ‘YAY! Party 75 on Wheels’ என்னும் வாகனம் (Van), இந்தியாவின் அனைத்து நகரங்களில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் குழந்தைகளைச் சந்திக்க வருகின்றது. புத்தாண்டு வரை 75 நாட்களுக்கு, சேனலில் இந்தச் சிறப்பு அத்தியாயம் வெளியாகும். பல்வேறு ஆச்சரியங்களைத் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குக் கொண்டு வருகிறது இந்தப் ‘பார்ட்டி 75’. சென்னையில் தொடங்கிய YAY!-வின் பயணம், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் நீள்கிறது. சோனி YAY!-இன் இந்தப் பார்ட்டி 75, குழந்தைகளின் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருமென்பது திண்ணம். வாகனத்தில் என்னென்ன சிறப்பு? குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வண்ணம், போட்டிகள், புதிர் விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் எனக் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் ...
கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்

கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை. சானியும் சாமும், பொக்கிஷம் எனக் கருதி ஒரு பெட்டியைத் திறக்க, ஒரு புத்தகம் கிடைக்கிறது. அதைத் திறந்ததும் ஸ்லாப்பி எனும் டம்மி பொம்மை திடீரென அவர் முன் தோன்றுகிறது. அதன் பாக்கெட்டில் உள்ள சிறு பேப்பரை எடுத்து, அதிலுள்ள மந்திரத்தை உச்சரித்து, தெரியாத்தனமாக ஸ்லாப்பிக்கு உயிர் கொடுத்துவிடுகின்றனர். உயிர் கிடைத்ததால் ஹேப்பியாகும் ஸ்லாப்பி, சானியிடமும், அவள் சகோதரி சாராவிடமும், தான் அவர்களது சகோதரன் என்றும், நாமெல்லாம் ஒரு குடும்பம் என்றும், அது தன் வீடு என்றும் சொல்கிறது. ஸ்லாப்பியின் மந்திர சக்தியும், அதை அது பயன்படுத்தும் விதத்தாலும் பயப்படும் சாரா, அந்த உயிருள்ள டம்மி பொம்மையை வீட்டில் இருந்து அகற்ற நினைக்கிறது. ஸ்லாப்பியோ மீண்டும் தோன்றி, தனக்கு ஓர்...
ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின் 11வது பாகம் இது. இந்தப் பாகத்தின் விசேஷம் என்னவென்றால், 1978இல் வந்த முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இடையில் வந்த மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 1978 இல் வந்த ஹாலோவீன் படத்தில், மைக்கேல் மையர்ஸ் என்பவன், ஹாலோவீன் இரவு அன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களைக் கொல்கிறான். அவனிடம் இருந்து தப்பிய லாரீ ஸ்ட்ரோடை, 40 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்ல வருகிறான் மைக்கேல் மையர்ஸ். ஆனால், இம்முறை லாரீ அம்முகமூடி கொலைக்காரனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளாள். 105 நிமிடங்கள் கால அளவு கொண்ட படத்தின் முடிவில், மைக்கேல் மையர்ஸிடம் இருந்து லாரீ ஸ்ட்ரோட் தப்பினாளா என்பதற்கான விடையுடன் படடம் நிறைவுறுகிறது. ஒன்பது வருடங்களுக்குப் பின் இத்தொடரின் அடுத்த படம் வருவதாலும், முதல் பாகத்தின...
ஆரா சினிமாஸ் – பெங்களூரு

ஆரா சினிமாஸ் – பெங்களூரு

சினிமா
பெங்களூருவின் வொயிட்ஃபீல்டில் உள்ள பார்க் ஸ்கொயர் மாலில் எஸ்பிஐ (SPI) சினிமாஸ், இதுவரை அனுபவித்திராத புத்தம் புதிய திரையரங்க அனுபவத்தை அளிக்கும் வகையில் நான்கு அட்டகாசமான திரைகள் கொண்ட அரங்கத்தைத் திறந்துள்ளது. மொத்தம் 696 இருக்கைகள் கொண்ட அத்திரையரங்கம், மாலினுடைய மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் உள்ளன. இந்தியாவிலேயே, SLS ரிப்பன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பம் உடைய இரண்டாவது திரையரங்கம், ஆரா சினிமாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 4K ரெசலூஷன், 3டி டெக்னாலஜி, டால்பி அட்மாஸ் என ரசிகர்களின் படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு ஆரா சினிமாஸ் நகர்த்தியுள்ளது. எஸ்பிஐ-இன் அடையாளங்களில் ஒன்றான பாப்கார்னுடன், மிஷேலின் நட்சத்திர செஃப்பான மைக்கேள் பெஸ்ஸியின் சுவையான கோல்ட் காஃபியும், நாவில் கரையும் டோனட்டும் ஆரா சினிமாஸின் மெனுவில் பிரதான இடம் பிடித்துள்ளன. வரிசையில் நின்று டிக்கெட...
கூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து

கூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
2015 இல், வெளியான கூஸ்பம்ப்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு தொடர் சங்கிலியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது! தி ப்ராஸ் பாட்டில் (The Brass Bottle, 1964; தமிழில், பட்டணத்தில் பூதம், 1967), ப்ளாக் பியர்ட்ஸ் கோஸ்ட் (Black Beard’s Ghost, 1968), கூஸ்பம்ப்ஸ் (Goosebumps, 2015) போன்ற படங்களில் முறையே ஜாடியிலிருந்தோ, மாயாஜால கதைகளை அலசும் புத்தகங்களிலிருந்தோ முறையே ஒரு பூதமோ, விசேடக் குணாதிசயங்களும் விசித்திரமான வடிவமைப்புகள் கொண்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் உயிர்த்தெழுந்து உலா வரும் அதி அற்புத காட்சிகளைப் பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம்! புத்தம்புதியதாகப் புதுப்பொலிவுடன் பவனி உலா வருகிறது, கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன். வார்டன்க்ளிஃப் என்கிற ஒரு சிறிய ஊரில், சானி க்வின் (ஜெரமி ரே டெய்லர்) மற்றும் சாம் கார்டர் ஆகிய இருவர், ஆர்.எல்.ஸ்டைன் (ஜ...