32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 9 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 9)
புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா மருத்துவம்

புத்தி க்ளினிக் – 10 ஆம் ஆண்டு விழா

நவம்பர் 30, புத்தி க்ளினிக்கின் 10 ஆண்டு விழாவைச் சிறப்பிக்க, சிறப்புப் பேச்சாளர்கள் திரு. அனுராக் சர்மா, லோக்சபா M.P. மற்றும் இயக்குநர் – Baidhyanath குழுமம்; ப்ரொஃபசர் பர்மீந்தர் சச்தேவ், நியூரோ சைக்காட்ரி இன்ஸ்டிட்யூட், சிட்னி, ஆஸ்திரேலியா; வேணு ஸ்ரீநிவாசன், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். உலக அரங்கில், இறப்போர் எண்ணிக்கையில் இறப்பிற்கான காரணங்களில், மாரடைப்பிற்கு அடுத்தபடியாக 9 மில்லியனில் அணிவகுத்து நிற்பது நியூரோலாஜிகல் உபாதைகளே! நியூரோலாஜிகல் மற்றும் […]

15/12/2019 Dinesh R
ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம் அயல் சினிமா

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் […]

15/12/2019 Dinesh R
சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம் அயல் சினிமா

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

கெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவை திருடப்படுகின்றன. அது தீயவர்களின் கையில் சிக்காமல் தடுக்கின்றனர் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். தொலைக்காட்சித் தொடராகத் தொடங்கப்பட்ட பொழுது, கவர்ச்சியில் தாராளமாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2000 இலும், 2003 இலும், இத்தொடர் படமாக எடுக்கப்பட்ட பொழுது கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியோ ஆகியோரையும் கூடக் கவர்ச்சிக்கென சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தனர். ‘இப்படத்தில் அத்தகைய குறைகள் இருக்காது’ என இயக்குநர் எலிசபெத் பேங்க்ஸ் […]

17/11/2019 Dinesh R
சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019 அயல் சினிமா

சார்லீஸ் ஏஞ்சல்ஸ் 2019

இவான் கோஃப் மற்றும் பென் ராபர்ட்ஸ் இணைந்து 1976-இல் உருவாக்கிய ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற தொலைக்காட்சித் தொடர் மிகவும் பிரபலமானது. அதன் அடிப்படையில் 2000-இல் அதே பெயரில், ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ என்கிற திரைப்படத் தொடர் துவங்கியது. ஆக்ஷனும் நகைச்சுவையும் கலந்த அத்திரைப்படத்தின் திரைக்கதையமைப்பு, தொலைக்காட்சித் தொடரின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டிருந்தது. சார்லஸ் டவுன்சீட் என்கிற முகம் தெரியாத ஒரு நபர், தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்யும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் பிரதானமாகப் பணிபுரிபவர்கள், தேவதைகள் போன்ற […]

14/11/2019 Dinesh R
ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம் அயல் சினிமா

ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்

பழி வாங்கும் வெறியில், இறுதி ரத்தத்தைத் தாராளமாகச் சிந்த விட்டுள்ளார் ரேம்போ. அதீத வன்முறைக் காட்சிகள் உள்ளதால், A சான்றிததழ் அளித்துள்ளனர். ரேம்போவின் தோழி மரியாவின் பேத்தியான கேப்ரியல், பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மெக்சிகோ கடத்தல் குழுவினரிடம் சிக்கிக் கொள்கிறார். கேப்ரியலைக் காப்பாற்ற மெக்சிகோ செல்கிறார் ரேம்போ. அந்தக் குழுவிடம் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு வருகையில், ஓவர்-டோஸாக போதை மருந்து செலுத்தப்பட்டதால் வழியிலேயே கேப்ரியல் இறந்துவிடுகிறார். பழி வாங்கும் வெறியில் சிவக்கும் ரேம்போ, மெக்சிகோ […]

21/09/2019 Dinesh R
ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’ அயல் சினிமா

ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’

1972 ஆம் ஆண்டு ஜான் மோரெல் என்பவர் எழுதிய நாவலான ஃபர்ஸ்ட் பிளட் (First Blood)-ஐத் தழுவி 1982 ஆம் ஆண்டு, அதே பெயரில் ஃபர்ஸ்ட் பிளட் படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்கு கொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் ஜான் ரேம்போ என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு. வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற […]

03/09/2019 Dinesh R
தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம் அயல் சினிமா

தி ஆங்ரி பேர்டஸ் மூவி 2 விமர்சனம்

எதிரிகளான பறவைகளும் பன்றிகளும் தங்கள் வேற்றுமைகளை மறந்து, பறவைத் தீவையும், பன்றித் தீவையும் அழிக்க நினைக்கும் கழுகுத் தீவின் ஜெட்டாவிடமிருந்து எப்படித் தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி முதற்பாகத்தையும் விட அதிக கலகலப்புக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் துரோப் வேன் ஆர்மன். படம் கதையிலும், கலகலப்பிலும் மட்டும் கவனம் செலுத்தாமல், கதாபாத்திரங்களின் குண இயல்பையும் கணக்கில் கொண்டுள்ளதுதான் முதற்பாகத்தை விடவும் ஈர்க்கக் காரணம். ‘பறவைத் தீவைக் காக்கும் சூப்பர் ஹீரோ’வாக தான் […]

24/08/2019 Dinesh R
1+ இன் ஓராண்டு கொண்டாட்டம் வர்த்தகம்

1+ இன் ஓராண்டு கொண்டாட்டம்

ஒன் பிளஸ் மொபைல் நிறுவனம், ஆகஸ்ட் 18 அன்று சென்னையில் ஸ்டோர் தொடங்கி தனது முதலாம் ஆண்டினைக் கோலாகலமாகக் கொண்டாடியது. அக்கொண்டாட்டத்திற்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணமாக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு, அவரது இசையிலிருந்து சில பாடல்களக்ப் பாடி, கொண்டாட்டத்தை மறக்கவியலாத நிகழ்வாக மாற்றினார். சமீபத்தில் வெளியான ஒன் பிளஸ் 7 ப்ரோ (OnePlus 7 Pro) மொபைல் ஒன்றினையும் பார்வையாளர்களுக்குத் திறந்து காட்டினார். ஒன் பிளஸ் சமூகத்தின் அதிர்ஷ்டன் வாயெத ரசிகர்களுக்குக் கையெழுத்திட்டு, அவர்களை மகிழ்வித்தார். […]

19/08/2019 Dinesh R
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம் அயல் சினிமா

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

லியானார்டோ டி காப்ரியோ, பிராட் பிட் என ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம். அதை விட ஈர்ப்பான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ என்பதேயாகும். ஹாலிவுட்டில் 1969 இல் நடக்கின்ற பீரியட் ஃபிலிம். டைட்டானிக் நாயகன் லியானார்டோ சொன்னது போல், ’இப்படம், 60 களின் ஹாலிவுட்க்கு டாரன்டினோ எழுதிய காதல் கடிதம்’ என்பதே சரி. செம கிளாஸான படம். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ரிக் டால்டன் தனது […]

18/08/2019 Dinesh R
தி புத்தி – மூளையின் மூப்பு மருத்துவம்

தி புத்தி – மூளையின் மூப்பு

பால்டிமோர் நேஷ்னல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏஜிங்-இல் ஆராய்ச்சி நிபுணராக உள்ள மருத்துவர் மாதவ் தம்பிசெட்டியும், சென்னையின் தி புத்தி க்ளினிக்கின் நிறுவனருமான மருத்துவர் எண்ணப்பாடம் S. கிருஷ்ணமூர்த்தி, மூளை மற்றும் மனதின் மூப்பு பற்றிய சுவாரசியமான மிக நீண்ட உரையாடலை முன்னெடுத்தனர். அவற்றிலிருந்து சில. 65 வயதிற்கு மேல், புறணி (Cortex), மூளையின் க்ரே மேட்டர், கார்டிசால் (Cortisol) ஆகியவை 5 எம்.எல். அளவுக்குத் தேய்கிறது. அதனால் அறிவாற்றல் (Cognitive ability), புலன் உணர்ச்சி (Sensory perception), […]

12/08/2019 Dinesh R
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம் அயல் சினிமா

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க […]

08/08/2019 Dinesh R
உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா அயல் சினிமா

உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் தொடர் படங்களின் மொத்த வசூல் 500 கோடி அமெரிக்க டாலர்கள். அதிக வசூல் செய்த தொடர் படங்களின் வரிசையில் 9 ஆம் இடத்தில் உள்ளது. 2015 இல், பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்துக்குத் தமிழகத் திரையரங்களில், அவரது அறிமுக காட்சிக்குக் கிடைத்த ஆரவார ட்ரிப்யூட்டே இத்தொடரின் புகழுக்குச் சான்று. வயது வரம்பின்றி எல்லா வயதினரும் பாரபட்சமின்றிக் கண்டு ரசிக்கத்தக்க ஆக்ஷன் காட்சிகள்தான் இத்தொடர்படங்களின் சிறப்பம்சம். […]

15/07/2019 Dinesh R
ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும் அயல் சினிமா

ஸ்பைடர் மேனும், மிஸ்டிரியோவும்

2017 இல், புத்தம் புது ஸ்பைடர் மேனுக்கான விதையை ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் படத்தில் போட்டிருப்பார்கள். அதிகமாய் வசூல் செய்த ஸ்பைடர் மேன் படங்களில் இரண்டாவது என்ற புகழையும், அவ்வருடம் வசூல் சாதனை புரிந்த படங்களில் ஆறாவது இடத்தைப் பெற்ற சிறப்பும் அப்படத்திற்கு உண்டு. அதன் தொடர்ச்சியே ஜூலை 5 வரவிருக்கும் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம். நியூ யார்கின் விண்ணை முட்டும் கட்டங்களின் ஊடே மட்டும் பறந்து பறந்து, நியூ-யார்க்கைக் காப்பாற்றி வந்த ஸ்பைடர் மேன், […]

23/06/2019 Dinesh R
தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம் அயல் சினிமா

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் 2 விமர்சனம்

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்ற முதல் பாகத்தின் கதைதான், கலகலப்பான இரண்டாம் பாகத்தின் கதையும். மேக்ஸ், ட்யூக், கிட்ஜெட், ஸ்னோ பால் என தி சேக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் படத்தில் வந்த பிரதான கதாபாத்திரங்கள் அப்படியே வருகின்றன. மேக்ஸையும், ட்யூக்கையும் வளர்க்கும் கேட்டிக்குக் கல்யாணமாகி, லியாம் எனும் குழந்தையும் பிறக்கிறது. கைக்குழந்தையான லியாமிடம் மேக்ஸ் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை. பின், லியாம் கொஞ்சம் […]

13/06/2019 Dinesh R