32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 121)
விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் சினிமா

விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர்

அடங்கமறு வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ திரைப்படம் மூலம் தயாரிப்பில் தடம் பதிக்கிறார். நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள் தலைமை இணை இயக்குநர், நிர்வாக தயாரிப்பாளர் என பல […]

06/09/2019 Dinesh R
சென்னையில் தொடரும் வால்டர் சினிமா

சென்னையில் தொடரும் வால்டர்

சிபிராஜ் நடிப்பில் உருவாகும் ‘வால்டர்’ திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிற்காகச் சென்னையில் கலந்து கொள்ளவுள்ளனர். 11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக்கும், சுருதி திலக்கும் தயாரித்து வருகிறார். “இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இப்படத்தின் வேலைகள் சரியாகச் சென்று கொண்டிருப்பதில் நான் […]

06/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்‌ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இரவு சந்திப்பு 1 – சேரன், ஷெரின், வனிதா சாக்‌ஷி. சாக்‌ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்‌ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், ‘என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க’ எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். பின்னாடியே போன சாக்‌ஷி […]

05/09/2019 Dinesh R
மகாமுனி விமர்சனம் சினிமா

மகாமுனி விமர்சனம்

மகாமுனி என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் கெளதம புத்தர். இந்தியப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் தேடினால் சில பெயர்கள் கிடைக்கலாம். ஆனால், மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை, மகாமுனி என்றால் புத்தர்தான். சத்திரியனாக இருந்து துறவு மேற்கொண்டு முனியானவர் என்பதைப் படத்தோடு பொருத்திக் கொள்ளலாம். சகோதரர்களான முனிராஜும் மகாதேவனும் சிறு வயதிலேயே பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரின் வாழ்வும் ஒரு புள்ளியில் இணைந்து மகாமுனியாய் பரிமாணம் பெறுவதுதான் படத்தின் கதை. இயக்குநர் சாந்தகுமார், படம் தொடங்கியதுமே […]

05/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்

நேற்றைய நாள் தொடர்ந்தது. ‘ஏற்கெனவே வெற்றியைப் பார்த்தவர்கள் வெல்லக்கூடாதுன்னா எதுக்கு எங்களைக் கூட்டிட்டு வந்தீங்க’ எனக் கேட்ட வனிதா, ‘இதுக்கு விளக்கம் கொடுத்தா தான் நான் இனிமே விளையாடுவேன்’ எனச் சொல்லிவிட்டு மைக்கைக் கழட்டி வைத்துவிட்டார். சேரனும் ஷெரினும் வனிதாவோடு தான் இருந்தனர். ‘வெல்ல தகுதியான ஆள் நான் எனச் சொல்லி என்னையே நாமினேட் செய்யறதை என்னால புரிஞ்சுக்க முடில’ என ஷெரினும் சொன்னார். கொதிநிலைலேயே இருந்த வனிதா இறங்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பாய்ஸ் அணி […]

04/09/2019 Dinesh R
சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்! அயல் சினிமா

சாஹோ – 4 நாட்களில் 330 கோடி வசூல்!

இந்திய சினிமாவின் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து 330 கோடியை 4 நாட்களில் குவித்து புது சாதனை படைத்திருக்கிறது பிரபாஸின் சாஹோ. தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால், வசூலில் இங்கே சற்றே சுணக்கம் நிலவுகிறது. ஆனால், இந்திய அளவில் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்தியாவிற்கே ஒரு வழி என்றால், தமிழகத்திற்கு மட்டும் தனி வழி என்பதைப் பாராளுமன்றத் தேர்தலில் நிரூபித்தது போல், சாஹோ பட வசூலிலும் நிரூபித்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே 100 […]

03/09/2019 Dinesh R
சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை சினிமா

சிபிராஜின் ரேஞ்சர் – ஆவ்னி புலியின் உண்மைக் கதை

‘ஆவ்னி’ எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்துச் சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் தான் ரேஞ்சர். பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி போன்ற கவனித்தக்க படங்களை உருவாக்கிய இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரா சினிமாஸ் […]

03/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா

ஞாயிறு தொடர்ந்தது. ஷெரின் பாத்திரம் தேய்க்க, சாண்டியும் கவினும் லந்து பண்ணிக் கொண்டிருந்தனர். லானில் படுத்துக் கொண்டு, ‘வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்’ எனப் பாடிக் கொண்டிருந்த லாஸிடம், “சாப்பிடலியா?” எனக் கேட்டு, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார் சேரன். ‘பசியில்லை’ எனச் சொன்ன லாஸ், ‘இங்க வாங்க உங்க கூட கதைக்கணும்’ எனச் சொல்ல சேரனும் வருகிறார். ஒரே வீட்டுல இருந்து கொண்டு வாரம் ஒரு தடவை தான் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு முன்னாடி கவினுக்கும் […]

03/09/2019 Dinesh R
“வாழ்க விவசாயி: மக்களை விவாசயம் பக்கம் திருப்பும் படம்” – அப்புக்குட்டி சினிமா

“வாழ்க விவசாயி: மக்களை விவாசயம் பக்கம் திருப்பும் படம்” – அப்புக்குட்டி

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘வாழ்க விவசாயி’. விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது .மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி. “எனக்கு ‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் […]

03/09/2019 Dinesh R
ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’ அயல் சினிமா

ரேம்போ சில்வஸ்டர் ஸ்டலோனின் ‘லாஸ்ட் பிளட்’

1972 ஆம் ஆண்டு ஜான் மோரெல் என்பவர் எழுதிய நாவலான ஃபர்ஸ்ட் பிளட் (First Blood)-ஐத் தழுவி 1982 ஆம் ஆண்டு, அதே பெயரில் ஃபர்ஸ்ட் பிளட் படம் வெளிவந்தது. கடுமையான வியட்நாம் போரில் பங்கு கொண்டு உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்ட நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தனது வாழ்வினை நடத்தி வரும் ஜான் ரேம்போ என்கிற ஒரு தனிமனிதனின் தனியானதொரு போராட்டமே அப்படத்தின் அடிப்படை கதைக்கரு. வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற […]

03/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள்

காலர் ஆஃப் தி வீக்: “லாஸ்லியா – நீங்க சேரனை அப்பானு கூப்பிடுறீங்க, அவரும் உங்க மேல பாசமா இருக்காரு. ஆனா கவின் அதை ட்ராமான்னு சொல்லும் போது உங்களுக்கு ஏன் கோவமே வரல?” இந்தக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலைச் சொன்னார் லாஸ். ‘நாங்க இங்க 24 மணி நேரம் இருக்கோம். நீங்க ஒரு மணி நேரம் தான் பார்க்கிறீங்க. எனக்காகச் சாப்பிட வெயிட் பண்றதா சொல்றாரு, ஆனா நேத்து சாப்பாடு வந்த உடனே […]

02/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்

நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடி வரவேற்க மேடைக்கு வந்தார் கமல். கலைகளைப் பற்யும், கலாச்சாரத்தை பற்றியும் ஒரு பிரசங்கம் நடந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பழகவேண்டும். அதில் கமலை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தக் கலைஞர்கள் வந்ததையும் தன் அரசியல் மைலேஜ்க்கு உபயோகப்படுத்திக் கொண்டார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். யுவன் பிறந்த நாளுக்கு, ‘மேல ஏறி வாரோம்’ பாட்டைப் போட, சேரன் வரைக்கும் எல்லோரும் ஆடினார்கள். நேற்று ஷெரின் கூடுதல் உற்சாகத்தோடு இருந்தார். […]

01/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

எப்பவும் போல் பாட்டும் நடனமும் முடிந்த உடனே கவின் – லாஸ் அத்தியாயம் தான். தன்னோட ரிலேஷன்ஷிப் பற்றிச் சொன்னதுக்கு அப்புறம், ‘லாஸ் என்ன நினைக்கறாங்க?’ என கவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கும் தெரில. அதனால் லாஸோட சின்ன சின்னச் சின்ன செய்கைகளுக்கும் அவராக ஓர் அர்த்தம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். கவினின் பழைய ரிலேஷன்ஷிப்பைப் பற்றி லாஸ் எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. லாஸ் அடிக்கடி சொல்கின்ற மாதிரி, கொஞ்சம் நேரமெடுத்து மண்டைக்குள் […]

31/08/2019 Dinesh R
சாஹோ விமர்சனம் அயல் சினிமா

சாஹோ விமர்சனம்

சாஹோ என்றால் ‘வெற்றி உனதே!’ எனப் பொருள்படும் என பிரபாஸ் பேட்டியில் கூறியுள்ளார். எந்த மொழியில் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் சித்தாந்த் நந்தன் சாஹோ என்பதே படத்தின் தலைப்பிற்கான காரணம் என முடிவுக்கு வந்துவிடலாம். இந்திய அரசாங்கத்தின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டுக்கூடிய ராய் எனும் மிகப் பெரும் தொழிலதிபர் கொல்லப்படுகிறார். அவரை யார் கொன்றார்கள், ராய் வகித்த பதவிக்கு எவரெல்லாம் ஆசைப்படுகிறார்கள், ராயிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னானது என்பதுதான் […]

31/08/2019 Dinesh R
பிக் பாஸ்: 3 நாள் 67 – அதே! அதே! எல்லாம் அதே! அதே! பிக் பாஸ்

பிக் பாஸ்: 3 நாள் 67 – அதே! அதே! எல்லாம் அதே! அதே!

காலையில பாட்டு, டான்ஸ் முடிந்தவுடனே கவின்-லாஸ் பஞ்சாயத்து தான் முதலில். அதாவது தொடக்கமே அவர்களிடமிருந்துதான். அதுவும் எந்த இடத்தில் தெரியுமா? ஆம், அதே தான், கக்கூஸே தான். அதே கவின், அதே லாஸ், அதே நீட்டி முழக்கல், அதே வெட்கச் சிரிப்பு, அதே நீங்க, அதே நான், அதே ரிவியூ. முடியலைங்கய்யா! நேற்று வரைக்கும் எதுவா இருந்தாலும் வெளியே போய் பேசிக் கொள்ளலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்றோ, ‘நான் முடிவு பண்ணிட்டேன்/ வெளிய போய் பேசறதுக்கு […]

30/08/2019 Dinesh R