பிக் பாஸ்பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்
முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இரவு சந்திப்பு 1 – சேரன், ஷெரின், வனிதா சாக்ஷி. சாக்ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், ‘என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க’ எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். பின்னாடியே போன சாக்ஷி […]













