Shadow

திரை விமர்சனம்

ரிப்பப்பரி விமர்சனம்

ரிப்பப்பரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
RIP Up Bury எனும் ஆங்கிலச் சொற்களைத் தலைப்பாக்கியுள்ளனர். சமையல் சேனல் வைத்திருக்கும் யூட்யூபர் சத்யராஜிற்கு, நண்பர்கள் இருவருடன் ஊர் சுற்றி வருவதைப் பிரதானமாகக் கொண்டுள்ளார். அவரது வீடியோவில் கமென்ட் போடும் கோல்டன் ஃபிஷ் எனும் பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறார் சத்யராஜ். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து காதலில் வெற்றி பெறலாம் எனப் பார்த்தால், மாற்று ஜாதியில் காதலிக்கும் ஆண்களின் கழுத்தை அறுக்கும் சாதிவெறி பிடித்த பேய் ஒன்று அச்சுறுத்தலாக முளைக்கிறது. சத்யராஜ், அந்த சாதிவெறி பிடித்த சைக்கோ பேயை மீறிக் காதலில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் கதை. படத்தின் தொடக்கமே மிரட்டலாக உள்ளது. ஊரை விட்டுக் காதலியுடன் ஓடத் துடிக்கும் காதலனின் தலையைக் கொய்து போஸ்ட் பாக்ஸில் போடுகிறது பேய். பால் கேனுக்குள், டூ-வீலர் பெட்ரோல் டேன்க்கில் எனக் கொல்பவர்களின் தலையைச் சாத்தியமே இல்லாத இடத்தில் எல்லாம் வைத்துவிட்...
சொப்பன சுந்தரி விமர்சனம்

சொப்பன சுந்தரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளுக்கு ஆசைப்பட்டால் துன்பம் வந்து சேரும் என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. அதை டார்க் காமெடியாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். சிவப்பு நிறக் கார் என்றால் சொப்பன சுந்தரியும், சொப்பன சுந்தரி என்றால் சிவப்பு நிறக் காரும் ஞாபகத்திற்கு வருமளவு, கரகாட்டக்காரனில் வரும் அந்த நகைச்சுவைக் காட்சி அவ்வளவு பிரபலம். இப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிறக் கார் வருவதால், படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ எனப் பெயரிட்டுள்ளார் இயக்குநர் SG சார்லஸ். இவர், இயக்குநர் மோகன் ராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முதற்படமான ‘லாக்கப்’பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகைமையில் இப்படத்தை எடுத்துள்ளார். வறுமையில் தவிக்கும் அகல்யாவிற்கு ஒரு சிவப்பு நிறக் கார் ஒன...
Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும். இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை மீட்பதற்காகத் தேவைப்படும் ஒரு மந்திரப்பதக்கத்தைத் திருட முற்படுகிறான் எட்கின் டார்விஸ். தோழி ஹோல்கா கில்கோர், இளம் மந்திரவாதி சைமன் ஒளமர், ஃபோர்ஜ் எனும் ஏமாற்றுக்காரக் கலைஞர், சிவப்புச் சூனியக்காரி சோஃபினா ஆகியோருடன் குழுவாகச் சென்று, மந்திரப்பதக்கத்தைத் திருடிவிட்டாலும்...
ஜான் விக் 4 விமர்சனம்

ஜான் விக் 4 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ரஷ்யத் தொன்மவியலின்படி, பாபா யாகா என்பவர் யாராலும் கொல்லப்பட முடியாத மிகவும் ஆபத்தான மனிதர். அவரது பூர்வீகமும் எவருக்கும் தெரியாது, அவரைப் புதைத்தாலும் அவர் மீண்டும் வருவார் என்பது தொன்மவியலின் நம்பிக்கை. அத்தகைய புதிரான குணாதிசயங்களை ஜான் விக்கும் பெற்றிருப்பதால், பாபா யாகா என குற்றவியல் உலகால் அச்சத்துடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட அதி பயங்கரமான ஜான் விக்கின் தலைக்கு, 20 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 40 மில்லியன் டாலர் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. முதல் பாகத்தில், ஜான் விக்கின் தலைக்கு விலை 2 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இப்படத்தில், அவரது உயிருக்கான விலைமதிப்பு 200 மடங்காகக் கூடுகிறது. அந்தப் பணத்திற்கு ஆசைப்பட்டு, உலகின் மூலை முடுக்கிலுள்ள வெகுமதி வேட்டையர்கள் பெரும்பாலானோர், ஜான் விக்கைக் கொல்ல சாரை சாரையாகக் கிளம்புகிறார்கள். ஜான் விக் எப்படி இந்தச் சிக்...
ஷுட் த குருவி விமர்சனம்

ஷுட் த குருவி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மார்ச் 18 ஆம் தேதி அன்று ஷார்ட்ஃப்ளிக்ஸ் எனும் செயலியில் வெளியாகியுள்ளது இக்குறும்படம். குருவிராஜன் எனும் பிரசித்த பெற்ற கொலைகாரனை விளையாட்டாக அறைந்து விடுகிறார் ஷெரிப். குருவி ராஜன் யார், ஷெரிப் யார், குருவி ராஜனிடம் ஷெரிப் சிக்கினானா இல்லையா என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் மதிவாணன். கேஜிஎஃப் பாணியில், கதையை ப்ரொஃபசர் மித்ரன் சொல்வதாகத் தொடங்குகிறது. மித்ரனாக, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, மிரள் முதலிய படங்களில் நடித்திருந்த ராஜ்குமார்.G நடித்துள்ளார். சஸ்பென்ஸைக் கூட்ட அவர் அடிக்குரலில் பேசும் சில வசன்ங்களைக் கவனிக்கச் சிரம்மாம இருந்தாலும், 2டி அனிமேஷனில் விரியும் குருவிராஜனின் கதை நல்லதொரு அடித்தளத்தைப் படத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. குருவிராஜனாக அர்ஜெய் நடித்துள்ளார். ‘நான் கேங்ஸ்டர் இல்லை கில்லர்’ என அவர் சொன்னாலும், அவரது பின் கதையும், அவரது தோற்றமு...
Shazam! Fury of the Gods விமர்சனம்

Shazam! Fury of the Gods விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
டிசி காமிக்ஸின் ஷசாம் எனும் படம், 2019 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பில்லி பேட்ஸன் எனும் பதின்ம வயது சிறுவனுக்கு எதிர்பாராதவிதமாக, சூப்பர் ஹீரோவாகும் மந்திர சக்தி கிடைக்கிறது. பதின்ம வயது மனத்துடன் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தைக் காப்பாற்றினால் எப்படி இருக்கும் என்பதே படத்தின் மையக்கரு. முதற்பாகத்தில், தத்தெடுக்கப்படும் புதிய குடும்பத்தில் தன்னை ஓர் அங்கமகாக இணைத்துக் கொள்ளாமல், தன் பெற்றோரைத் தேடியவண்ணமே இருப்பான் பில்லி. இப்படத்தில், ‘குடும்பம்தான் எல்லாம்’ என தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மீது அதீத பாசத்தோடு இருக்கிறான் பில்லி. விரைவில் பதினெட்டு வயது எட்டப் போகும் தன்னைக் குடும்பத்தை விட்டு அனுப்பிவிடுவார்களோ, மீண்டும் குடும்பத்தைப் பிரியவேண்டுமோ என கவலையிலே உள்ளான் பில்லி. ஷசாம் படத்தின் அழகே, சிறுவன் பில்லி தனக்குக் கிடைக்கும் சக்திகளைத் தன் சகோதர சகோதரிகளுக்குப் பகிர்...
65 விமர்சனம்

65 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆறரை கோடி வருடங்களுக்கு முன், சோமாரிஸ் எனும் கிரகத்தில் இருந்து, ஒரு விண்கப்பல் கிளம்புகிறது. பயணத்தின் போது சிறுகோளின் (Asteroid) துகள் மோதி, மனித இனம் தோன்றியிராத பூமியில் வந்து விழுகிறது அக்கப்பல். கப்பலைச் செலுத்தி வந்த மில்ஸும், கடுங்குளிரியல் உறக்கத்தில் (Cryogenics sleep) இருக்கும் கோவா எனும் சிறுமி மட்டும் உயிர் பிழைக்கின்றனர். கடுங்குளிரியல் உறக்கத்தில் இருக்கும் மற்ற பயணிகள் அனைவரும் இறந்து விடுகின்றனர். மில்ஸும் கோவாவும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள். அவர்கள் இருவரும் அந்தக் கோர விபத்தில் இருந்து மீண்டு எப்படி டைனோசர் போன்ற கொடிய மிருகங்களிடம் இருந்து உயிர்பிழைத்துத் தப்பிக்கின்றனர் என்பதே படத்தின் கதை. ஹாலிவுட் படங்களில் ஒரு டெம்ப்ளேட்டைப் பயன்படுத்துவார்கள். இயற்கைப் பேரழிவு என்றாலும், உயிர்பிழைக்கும் சர்வைவல் த்ரில்லர் என்றாலும் சரி, பிரதான பாத்திரங்களுக்கிடையேயான பாசத்தைம் பிண...
இரும்பன் விமர்சனம்

இரும்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஆஃபீஸுக்கு, சமண மதத்தைச் சேர்ந்த மஹிமா மீது காதல் வந்துவிடுகிறது. அவர்கள் காதலைச் சேர்க்க பரதர் (மீனவ) இனத்தைச் சேர்ந்த பீட்டர், பிளேடுடனும் ஆஸ்பித்திரியுடனும் இணைந்து மஹிமாவைக் கடத்தி விடுகின்றனர். ஆஃபீஸின் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. அலுவலகத்தில் பிறந்ததால் ஆஃபீஸ் என்றும், மருத்துவமனையில் பிறந்ததால் ஆஸ்பித்திரி என்றும் பெயர் வைத்துவிடுகின்றனர். ஆஃபீஸாக ஜூனியர் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். எம்ஜியார் - ஜானகியின் வளர்ப்பு மகள் சுதாவின் மகனாவார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார். குறவர்களை அசூயையாகப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில், மஹிமா ஆஃபீஸை அன்புடன் பார்த்தவுடன், நாயகனுக்குக் காதல் வந்துவிடுகிறது. சமணத் துறவியாக மடத்தில் சேரும் மஹிமாவைக் கடத்திக் கடலுக்குக் கொண்ட...
மெமரீஸ் விமர்சனம்

மெமரீஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என மெமரீஸ் படத்தைப் பற்றி படக்குழு விளம்பரப்படுத்தினர். அதற்கு ஏற்றாற்போலே அமைந்துள்ளது திரைக்கதை. பார்வையாளர்களின் அதீத கவனத்தைக் கோரும் ஒரு படம். பிரதான கதாபாத்திரத்தின் கோணத்திலேயே படம் பார்க்கப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு, இப்படம் சவாலானதாக இருக்கும். கதை மூன்றாக விரிகிறது, பிரதான கதாபாத்திரமான வெற்றி, ஒவ்வொரு உப கதையிலும் ஒவ்வொரு ரோலில் வருகிறார். முதல் கதையில், மருத்துவர் பெருமாளின் குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த நான்கு கொலைகளையும் செய்தது உதவி இயக்குநர் வெங்கி எனத் தெரிய வருகிறது. வெங்கிக்கோ, விபத்தில் ‘மெமரி லாஸ்’ ஏற்பட்டுவிட, மருத்துவர் அபிநவ் ராமானுஜத்தின் உதவியோடு, வெங்கியின் நினைவைத் தட்டியெழுப்பி, அவன் புரிந்த கொலைகளைப் பற்றி அவனையே வாக்குமூலம் செய்ய வைக்கின்றார். இரண்டாவது கதை, நான்கு கொலைகளையும் செய்தது வெங்கி அல்ல என எட்டு வருடங்...
அயோத்தி விமர்சனம்

அயோத்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்குப் புறப்படுகிறது ஒரு வட இந்திய குடும்பம். ராமேஸ்வரம் செல்லும் வழியில் விபத்துக்கு உள்ளாகி, அக்குடும்பத்தின் தலைவி ஜான்கி இறந்துவிடுகிறார். விடுமுறை தினமான தீபாவளியன்று மொழி புரியாத தேசத்தில் ஜான்கியின் கணவனும், மகளும், மகனும் அல்லாடுகின்றனர். ஜான்கியின் உடலினை வைத்துக் கொண்டு, அக்குடும்பம் எப்படி அல்லாடுகிறது என்பதுதான் படத்தின் கதை. மத அரசியல் பற்றிய படமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது படத்தின் தலைப்பு. ஆனால், படத்தின் கரு இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளது. ஒன்று, ஆணாதிக்கத்தையும், மத ரீதியான சடங்குகளில் அதீத பிடிப்புமுள்ள ஒரு மனிதரின் வறட்டுத்தனமான வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகிறது. இரண்டாவதாக, சாமானியனை அச்சுறுத்தும் அரசாங்க விதிகள். நெருங்கிய நபரின் மரணத்தின் பொழுது, கடைசிக் காரியங்களுக்கு உதவ ஆளில்லாமல் தனித்து விடப்படும் வேதனை மிகப் பெரியது...
இன் கார் விமர்சனம்

இன் கார் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தினைச் சொல்கிறார் இயக்குநர் ஹர்ஷ் வர்தன். அதில் பல கடத்தல்கள் வெளியில் வருவதே இல்லை. அரை அடி தூரத்தில், பெண் போலீஸ் அமர்ந்திருக்கும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் சாக்ஷி குலாட்டி எனும் இளம்பெண்ணைக் கடத்தி விடுகின்றனர். பகலில் நடக்கும் ஒரு கடத்தலையே கூட, அது கடத்தல்தான் என மூளை உள்வாங்கிச் செயற்படும் முன் கார் சிட்டாய்ப் பறந்து விடுகிறது. சாலையில் வரும் ஒரு காரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி, காரைக் கடத்துகின்றனர் 3 கடத்தல்காரர்கள். அந்தக் கடத்தப்பட்ட காரிலே தான் சாக்ஷி குலாட்டி கடத்தப்படுகிறாள். பின் இருக்கையில், சாக்ஷி குலாட்டியின் இரு பக்கமும் கடத்தல்கார இளம்வயது சகோதரர்கள் இருவர், முன் இருக்கையில் அவரது மாமாவும் அமர்ந்துள்ளனர். படம், அதன் பின் காருக்குள்ளேயே நிகழ்க...
அரியவன் விமர்சனம்

அரியவன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘திருச்சிற்றம்பலம்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய மித்ரன் R. ஜவஹரின் படம். இப்படம், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நினைவுகூரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. காதல் எனும் போர்வையில், பெண்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்கள் சொல்லும் நபருடன் அப்பெண்கள் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும் என மிரட்டுகிறது ஐந்து இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று. மிரட்டப்பட்டும் அடிப்பணியாத பெண்களைக் கொலை செய்யவும் துணிகிறது அக்குழு. ஜெஸ்ஸி எனும் இளம்பெண், அக்குழுவால் பாதிக்கப்படும் பொழுது நாயகன் ஜீவா காப்பாற்றிவிடுகிறான். இதனால் கோபமுறும் வில்லன் துரைபாண்டி, ஜீவாவையும், அவன் காப்பாற்றும் பெண்களையும் பழிவாங்கத் துணிகிறான். அதிலிருந்து நாயகனும், பாதிக்கப்பட்ட பெண்களும் எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. நாயகியாக பிரணாளி கோக்ரே நடித்துள்ளார். பாடலுக்கும், நாயகனை வியக்கவும் மட்டுமே பய...
தக்ஸ் விமர்சனம்

தக்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஸ்வாதந்த்ரியம் அர்த்தராத்திரியில்’ எனும் மலையாளப் பட்த்தைத் தழுவி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிருந்தா. இரண்டாவது படத்திலேயே, சிறையிலிருந்து தப்பித்துச் செல்லும் ப்ரிஸன் ப்ரேக் (Prison Break) வகைமை படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்துள்ளார் பிருந்தா. ‘ஹே சினாமிகா’ எனும் அவரது முதற்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். பணத்தைத் திருடிய குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்படுகிறான் சேது. தனது காதலியோடு ஆஸ்திரிலேயா செல்லத் திட்டமிட்டு மாட்டிக் கொள்கிறான். சிறையில் இருந்து தப்பித்து மீண்டும் காதலியோடு நாட்டை விட்டுச் செல்வதற்காகச் சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றான். அதற்காகத் தனது சக அறைவாசிகளைச் சம்மதிக்க வைத்துத் தனது தப்பிக்கும் திட்டத்தை அரங்கேற்ற நினைக்கிறான். சிறை கண்கணிப்பாளர் ஆரோக்கியதாஸாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். சிறைக்கைதிகளைத் தனது கட்டு...
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஷங்கர் எனும் முரட்டு சிங்கிளிற்கும், சிம்ரன் எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் செயலிக்குமான ரிலேஷன்ஷிப்பைப் பற்றிப் பேசுகிறது படம். அத்தகைய பந்தம் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை. எந்திரன் படத்தில், சிட்டி ரோபாவிற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வரும், இங்கே மிர்ச்சி ஷிவா மீது உருவமற்ற செயலியான சிம்ரனிற்குக் காதல் வருகிறது. சிம்ரன் என்பது மொபைலில் இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒரு செயலியின் (App) பெயர். ஷங்கர் என்பவன் உணவினை டெலிவரி செய்யும் ஸ்னிக்கியில் வேலை பார்ப்பவன். எதிர்பாராதவிதமாக சோதனை ஓட்டத்திலுள்ள மொபைல் ஒன்று ஷங்கருக்குக் கிடைக்கிறது. தன் மொபைல் ஓனரைக் காதலிப்பதுதான் அந்தச் செயலியின் வேலை. சிம்ரன், ஷங்கருக்கு யோசனைகள் சொல்லி அவனைக் கோடீஸ்வரனாக்குகிறாள். ஷங்கருக்கோ, துளசி மீது காதல் வருவதால், சிம்ரனிடம், ‘நீ வெறும் மொபைல்’ எனச் சொல்லிவிடுகிறான். சிம்ரன், அழிக்கும் நிலைக்குச் ...
வாத்தி விமர்சனம்

வாத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சோழவரம் அரசுப்பள்ளிக்கு ஒப்புக்குச் சப்பாணியாக அனுப்பி வைக்கப்படுகிறார் கணித ஆசிரியர் பாலமுருகன். ப்ரோமஷனுக்காக ஆசைப்படும் பாலமுருகன், மாணவர்கள் இல்லாத பள்ளிக்கூடத்திற்குத் தனது சாமர்த்தியத்தால் மாணவர்களை வர வைக்கிறார். பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எப்படி 45 மாணவர்களையும் பள்ளிப் படிப்பை முடிக்க வைக்கிறார் வாத்தி பாலமுருகன் என்பதே படத்தின் கதை. ஷா ராவும், ஹைப்பர் ஆதியும் நகைச்சுவைக்குச் சொற்பமாகவே உதவியுள்ளனர். அவர்களைப் பாதியிலேயே துண்டித்து அனுப்பி விட்டு தனுஷை மட்டுமே முழுமையாக நம்பிக் களமிறங்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் அட்லூரி. தன்னிகெல்லா பரணி, சாய்குமார் முதலிய நடிகர்களும் சாட்சிகளாக வந்து செல்கின்றனரே தவிர்த்து கதைக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத பாத்திரங்களிலேயே நடித்துள்ளனர். ஆசிரியை மீனாக்‌ஷியாக சம்யுக்தா நடித்துள்ளார். பண பலம் பொருந்திய கல்வித்தந்தையான வில்லனை எதிர்க்கு...