Shadow

திரை விமர்சனம்

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

காத்துவாக்குல ரெண்டு காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறு வயதிலேயே ராசி கெட்டவர் என்ற பிம்பத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்ட விஜய்சேதுபதிக்கு இரு காதல் ஒரே நேரத்தில் மலர்கிறது. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாவம் என இருவரையுமே காதலிக்கிறார். இவர், இரண்டு ட்ராக்கிலும் ட்ரெயின் ஓட்டுவது காதலிகளுக்குத் தெரிய வர, அடுத்தடுத்து என்னாகிறது என்பதைக் கலகலப்பாகச் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். காத்துவாக்குல ரெண்டு காதலையும் சமாளிக்கும் இடங்களில் விஜய்சேதுபதி காதல் சேதுபதியாகக் கோலேச்சுகிறார். அவர் நடனமாடச் சிரமப்படும் போதும் அவர் மேல் நமக்கே பரிதாபம் வருகிறது. சமந்தாவிற்கும் நயனுக்கும் வராதா என்ன? நயன்தாரா சென்டிமென்ட் காட்சிகளில் கவனம் ஈர்த்தாலும் அவருக்கான வெளி படத்தில் நிறைய இருந்தாலும் இளைஞர்களின் கிளாப்ஸை அள்ளுவதென்னவோ சமந்தா தான். சின்னச் சின்ன மேனரிசங்களில் அசத்தி விடுகிறார். ஒரு கதாபாத்திரத்தின் மனம் என்ன நினை...
பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

பயணிகள் கவனிக்கவும் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
விக்ருதி எனும் மலையாளப் படத்தைத் தமிழில், 'பயணிகள் கவனிக்கவும்' என மீள் உருவாக்கம் செய்துள்ளனர். விக்ருதி என்ற மலையாளச் சொல்லிற்கு சில்மிஷம் எனப் பொருள் கொள்ளலாம். சோர்வில் தன்னை மறந்து தூங்கும் எழிலனைக் குடிக்காரர் எனக் கருதும் ஆண்டனி, தூங்கிக் கொண்டிருக்கும் நபரைப் புகைப்படமெடுத்து, போதையில் கிடக்கிறாரென மீம்ஸ் உருவாக்கி சமூக ஊடகத்தில் உலாவ விடுகிறார். ஆண்டனியின் சில்மிஷம், வாய் பேசவும் காது கேட்கவும் இயலாத எழிலனையும், அவனது குடும்பத்தையும் எப்படிப் பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. எழிலனான விதார்த் அசத்தியுள்ளார். கலங்க வைக்கும் விதார்த், க்ளைமேக்ஸில் விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சியை அளிக்கிறார். மலையாளப் படங்களுக்கே உரிய மென்மையான கவிதையோட்டமாகப் படம் நகர்கிறது. யாரோ ஒருவன் போகிற போக்கில் செய்த ஒரு விஷயம், எழிலனை நிலைகுலைய வைக்கிறது. போராட்டமான வாழ்க்கையிலுள்ள ஆறுதலே அவனது குடும்பம்...
ஓ மை டாக் விமர்சனம்

ஓ மை டாக் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அருண் விஜயின் மகன், மாஸ்டர் அர்னவ் விஜய் நாயகனாக அறிமுகமாகும் குழந்தைகளுக்கான படம். கண் தெரியா நாய்க்கும், சிறுவன் ஒருவனுக்குமான பந்தத்தை மையமாகக் கொண்டது படத்தின் கதைக்களம். சாதிக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை படம் உணர்த்தினாலும், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறளினை அழுத்தம் திருத்தமாகப் படத்தின் இறுதியில் சிறுவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் முடித்துள்ளனர். வீட்டிலுள்ள சுட்டீஸ் குட்டீஸோடு பார்க்க வேண்டிய 'டிஸ்னி' பாணி கதை. வினயை டெம்ப்ளேட் வில்லனாக உபயோகிக்கத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. ஒரு நாயின் வரவு, எமோஷ்னலாக ஒரு குடும்பத்தை எப்படிப் பிணைக்கிறது என்றில்லாமல், சிறுவனுக்கும் நாயுக்குமான பந்தத்திலேயே நிலைகொண்டுள்ளது படம். அந்த பந்தம், ஹார்ஸ் ட்ரெயினரான அருண் விஜயின் சாமர்த்தியங்களையும் விஞ்சுவதாக உள்ளது. இயல்பு வாழ்க்கையில் சாத்தியமே இல்லாத பல விஷயங்கள் ஜ...
மன்மத லீலை விமர்சனம்

மன்மத லீலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு வீடு, ஒரு வாசல் என 2020 இல் மனைவி மகளோடு வாழ்ந்து வரும் அசோக் செல்வனுக்கு, மனைவி மகள் ஊருக்குப் போகும் கேப்பில் ஒரு அழகு பதுமை மூலமாக ஒரு ‘வாய்ப்பு’ வருகிறது. அதை அவர் பயன்படுத்தினாரா? பயன்பட்டாரா? அடுத்து என்ன நடந்தது? இதுவொரு லைவ் கதை. வருடம் 2010! முரட்டு சிங்கிளாக இருக்கும் அசோக் செல்வன் முகநூல் மெஸெஞ்சர் மூலமாக ஒரு பெண்ணுக்கு நூல் விட்டு அப்பெண்ணின் வீட்டிற்கே சம்பவம் நடத்தக் கிளம்பிச் செல்கிறார். சம்பவம் என்னானது என்பது ஒருகதை. இந்த இரண்டு கதைகளையும் சரியாக முடித்துப் போட்டுப் படத்தை முடித்ததில் தான் வெங்கட்பிரபு வெற்றி பெறுகிறார். அசோக் செல்வன் அலட்டிக் கொள்ளாமல் அசால்டாக நடித்துள்ளார். 90’ஸ் கிட்ஸ் அனைவரும் பொறாமைப்படும் நடிப்பும் லீலையும். ஸ்ரும்தி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியாஸ்யுமன் ஆகிய மூவரும் கொடுத்த வேலைக்குக் குறை வைக்கவில்லை. ரியாஸ்வுமன் மட்டும் கொடுத்த வேலையை விட,...
செல்ஃபி விமர்சனம்

செல்ஃபி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கற்றோர்க்குச் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு என்பர். ஆனால் இன்று ஒரு எளிய பின்னணி உடையவர்கள் கல்வியில் கரை சேர்வதற்குள் திக்கித் திணற வேண்டியுள்ளது. கல்விச் சேவை, கடமை என்ற நிலையில் இருந்து விலகி வியாபாரம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் எளியவர்கள் திண்டாடுகிறார்கள். மேலும் தனியார் கல்லூரிகளில் மருத்துவச் சீட்டுப் பெறுவதற்கு எத்தனை லட்சங்களைக் கொட்ட வேண்டியுள்ளது. அந்த லட்சங்களைப் பெறுவதற்கு கல்லூரி நிறுவனம் என்னென்ன கூத்துகளை எல்லாம் அரங்கேற்றுகிறது என்பதை ஃப்ளாஷ் அடித்துக் காட்டியுள்ளது செல்ஃபி படம். படத்தின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், அவரின் நண்பராக வரும் நசீர் பாத்திரம் இருவரும் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் அடிக்கிறார்கள். இதையே பெரும் தொழிலாகச் செய்து வருகிறார் கெளதம் வாசுதேவ் மேனன். கெளதம் வேலையை ஜீ.வி. செய்ய, அதனால் ஜீ.வி.க்கு சில இழப்புகள் வர, மேலும் சில ஆடுபுலி ஆட்டம் அர...
பூசாண்டி வரான் விமர்சனம்

பூசாண்டி வரான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பூச்சாண்டி எனும் தலைப்பு கிடைக்காததால், ஆனாலும் அத்தலைப்புத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், பூசாண்டியில் சமரசமாகியுள்ளது படக்குழு. மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம். கதாபாத்திரங்கள் அனைவருமே பரிச்சயம் அற்ற முகங்கள் என்றாலும், பூச்சுகளற்ற இயல்பான மனிதர்களாய்த் திரையில் நடித்துள்ளதால், மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் நேசத்துடன் பேசிக் கொள்வதும், அவர்களது விருப்பங்களும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதும் என நம்மில் ஒருவராக மாறி விடுகின்றனர். நாயகி ஹம்சினி பெருமாள் முதல் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், கதையை முன்னகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் ஷங்கர் கதாபாத்திரத்தில் வரும் தினேஷ் சாரதி கிருஷ்ணன் பிரமாதப்படுத்தியுள்ளார். க்ளைமேக்ஸில் அவரெடுக்கும் முக்கியமான முடிவொன்று, அவரை எதிர்நாயகனாக்கினாலும், படத்தின் நாயகன் என்று குறிப்பிடும்படி சிறப்பாகத் தன் பங...
RRR விமர்சனம்

RRR விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் - ரணம் - ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார். 186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை. The StoRy - The FiRe - The WateR என...
கடைசி விவசாயி விமர்சனம்

கடைசி விவசாயி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேச்சிலும் எழுத்திலும் முதல் இடத்தில் வைக்கப்படும் விவசாயிகள், அவர்களுக்கான தேவைகளின் போது கடைசி இடத்திலே வைக்கப்படுகிறார்கள். "உழவன் தான் உலகின் வேர்" என்று கவித்துவமாகச் சொன்னாலும் அவர்களின் பாடுகள் அப்படி இல்லை. கடைசி விவசாயி படத்தில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருந்தும், அதை மிக நுணுக்கமாகத் தவிர்த்து ஒரு 83 வயது விவசாயினுடைய வாழ்வைக் கண்முன்னே நிறுத்தி அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். உசிலம்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குளிக்கவும் கணக்குப் பார்த்து செலவு செய்யும் கஞ்சர்கள் போல் தான் தண்ணீர் வருகிறது. வயல்கள் வறண்டு கிடக்கின்றன. 15 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு அந்தப் பணத்தில் ஒரு யானையை வாங்கி அதை வைத்து ஜீவனம் நடத்துகிறது ஒரு குடும்பம். பலரும் நிலங்களை விற்றுவிட்டு குளத்து வேலைக்குச் சென்று கஞ்சி குடிக்கிறார்கள். இப்படியான ஊரில் ஒற்றை ஆளான...
மகான் விமர்சனம்

மகான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காந்தியக் கொள்கைகளின்பால் பிடிப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், நாயகனுக்கு ‘காந்தி மகான்’ எனப் பெயர் வைக்கப்படுகிறது. அச்சிறுவனின் முதுகு தோள் உரிக்கப்பட்டு காந்தியக் கொள்கைகள் திணிக்கப்படுகிறது. உள்ளூற உணர்ந்து, விருப்பத்துடன் இல்லாமல் கடமைக்கெனக் காந்தியத்தைக் கடைபிடிக்கப்படுவதால் ஏற்படும் அழுத்தம், ஒருநாள் நீர்க்குமிழி போல் வெடிக்கிறது. அதன் பின் காந்தி மகான் வாழ்க்கை எதிர்பாராத திசையில் காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடுகிறது. அவ்வெள்ளத்தைத் தடுக்கும் அணையாக, மகானின் மைந்தன் ‘தாதா’பாய் நெளரோஜி வந்து சேருகிறான். காந்தியக் கொள்கைகளைத் தூக்கி அவன் முதுகிலும் வைத்து வளர்த்து விடுகிறார்கள். காந்தியத்தைச் சுமக்க முடியாமல் தவிக்கும் தாதா, வன்முறையில் அதற்கான வடிகாலைக் காணுகிறான். பெருங்கோபத்தோடு வரும் தாதாவை, மகான் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தில், காந்தியத்தை மிக...
Bro Daddy விமர்சனம்

Bro Daddy விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடக்கப் புள்ளியில் இருந்து ஒரு புன்முறுவல், அவ்வப்போது வெடிச்சிரிப்பு என்று ஒரு இதமான அனுபவம் கிடைக்க வேண்டில் இந்தப் படத்துக்காக ஒதுக்குங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த பொச்சடிப்பை நாக்குத் தருவது போல Bro Daddy பார்த்து முடித்ததும் இதே நினைப்பில் என்னைப் போல நீங்களும் சுற்றக் கூடும். மகனின் தோளில் கை போட்டுக் கலாய்த்துப் பேசும் நண்பனின் தந்தையைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த ரம்மியமான நினைவுகளையும் கிளப்பியது. லூசிபர் படைப்பு எப்படி பிருதிவிராஜ் சுகுமாரனை ஒரு அற்புதமான படைப்பாளியாக அடையாளப்படுத்தியதோ, அதற்கு நேர் மாறான கும்மாளம் கொட்டும் இன்னொரு பிரிவிலும் கூடத் தன்னால் சாதிக்க முடியும் என்று இங்கே நிரூபித்திருக்கிறார். அண்மையில் "சாய் வித் சித்ரா" பேட்டியில் இயக்குநர் ராதாமோகன் பிருதிவிராஜ் தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு வலுவான சினிமா ந...
அகண்டா விமர்சனம்

அகண்டா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அகண்டம் என்றால் முழுமை, பரம்பொருள், கடவுள் எனப் பொருள்படும். படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு இரண்டு வேடங்கள். அகண்டா ருத்ர சிக்கந்தர் அகோரி, மற்றும் ஊருக்கு நல்லது செய்யும் பணக்காரர் முரளி கிருஷ்ணா. பாலய்யா படத்தில் ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை மட்டும் தந்தால் போதுமென்ற அதி தெளிவுடன் படத்தை இயக்கியுள்ளார் பொய்யபதி ஸ்ரீனு (Boyapati Srinu). அகண்டா அறிமுகமாகும் பொழுது 40 பேரைக் கொல்கிறார். க்ளைமேக்ஸில் 150 பேரைக் கொல்கிறார். பாலய்யா என்றாலே அதிநாயகன் (சூப்பர் ஹீரோ) தானே! தொடையைத் தட்டி ட்ரெயினைப் பின்னுக்கு அனுப்பும் விசேஷ சக்தி பல்லண்டத்திலேயே (Multiverse) இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிவன் கையிலுள்ள திரிசூலத்தில் கூட மூன்று பிளேடு (blade) தான் இருக்கும். அகண்டா கையிலிருப்பதோ ஐந்து பிளேடுகளுடன் ஐஞ்சூலமாய் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டத்திற்கு மிக முக்கிய காரணம், A.S.பிரகாஷின் கலை இயக...
புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம்

புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் லாக்-டவுனை அடிப்படையாகக் கொண்டு, 'புத்தம்புது காலை' எனும் ஐந்து குறும்படங்கள் கொண்ட ஆன்தாலஜி திரைப்படம் வெளியானது. தற்போது, பொங்கல் 2022 இன் சிறப்பு வெளியீடாக, 'நியூ நார்மல்' ஆகிவிட்ட இரண்டாவது லாக்-டவுனை மையமாக வைத்து, 'புத்தம்புது காலை விடியாதா..' எனும் ஆன்தாலஜி திரைப்படம் வெளியாகியுள்ளது. காதல், சுற்றி இறுக்கும் தனிமை, உற்றாரின் இழப்புகள், அவர்களது நினைவுகள் தரும் தாக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் படம். லாக்-டவுனையும் 'மாரி'த்தனமாக விளையாட்டாக அணுகியுள்ளார் இயக்குநர் பாலாஜி மோகன். அவரது முககவச முத்தம் என்ற குறும்படம், லாக்டவுன் இல்லா நாட்களுக்கும் பொருந்தும். அதாவது, பசுமாட்டைத் (காதல் கதை) தென்னை மரத்தில் (லாக்-டவுன்) கட்டிவிட்டார். இயக்குநர் ஹலிதா ஷமீமின் 'லோனர்ஸ்' படத்தில், பிரேக்-அப் ஆன ட்ராமாவில் இருந்து மீளாத நல்லதங்காளும், தன் வலியை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாமல்...
நாய்சேகர் விமர்சனம்

நாய்சேகர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கொண்டாடும் வகையிலான படங்கள் பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் வெளியாவது மக்களின் மனதிற்கும் ஆரோக்கியம். சினிமாவிற்கும் ஆரோக்கியம். அந்த வகையில் இந்தப் பொங்கலுக்கு ஒரு ஆரோக்கிய வரவு நாய்சேகர். மனிதனிடம் மிருகங்களின் குணம் உண்டு என்பார்கள். ஒருவேளை முழுக்க முழுக்க ஒரு மனிதனுக்குள் ஒரு மிருகத்தின் நடவடிக்கைகள் கலந்து விட்டால் என்னவாகும்? இப்படியான ஆர்வம் எழும் ஒரு கருவைக் கதையாகப் பிடித்து அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். ஹீரோ சதீஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர். அவருக்கு சிறு வயது முதலே நாய் என்றால் அலர்ஜி. அவரது வீட்டருகே ஒரு விஞ்ஞானி நாயின் டி.என்.ஏவை மனிதனுக்குள் கடத்தும் பரிசோதனை செய்துவருகிறார். அதற்காகவே ஒரு நாயை அடைத்துப் போட்டு அவர் வளர்த்து வருகிறார். ஒருநாள் அந்த நாய் வெளியில் வந்து சதீஷைக் கடித்து விடுகிறது. நாய் கடி...
புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஓரு தெலுங்கு சினிமாவை விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வதா என்ற தயக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு. பார்வையாளர்களின் சிந்தனையை முடக்கிப் போடும் தெலுங்குத் திரையுலகின் ஹைப்பர் சினிமாத்தனமும், லாஜிக்கல் அத்து மீறல்களும் உலகமே அறிந்த ஒன்று. இதற்கு புஷ்பா மட்டும் விதி விலக்கா என்ன? இல்லை. இது அச்சு அசல் ஒரு தெலுங்கு சினிமாதான். அதே லட்சணங்களோடுதான் இந்தப் படமும் இருக்கிறது. ஆனாலும் என்னைக் கவர்ந்த சில அம்சங்கள் இதில் இடம் பெற்று இருப்பதை நான் குறிப்பிட்டு ஆக வேண்டும். அவை, பாத்திர வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வட்டார மொழிப் பயன்பாடு, உடல்மொழி, இலக்கு மாறாமை ஆகியனவாகும். சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ என்ற படத்தின் வெற்றி குறித்து விதந்தோதிக் கொண்டிருந்தோம். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ‘சீரியசான’ முக பாவத்தோடு நடித்து இருந்ததற்கு வெகுவான பாராட்டினைப் பெற்றிருந்தார். சீரியசான ஒர...
அன்பறிவு விமர்சனம்

அன்பறிவு விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம். அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். அன்பழகனும் அறிவழகனும் இரட்டையர்கள். மனைவியிடம் அன்பை விட்டுவிட்டு, தன்னுடன் அறிவை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார் இரட்டையர்களின் தந்தை. பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. இரட்டையர்கள் ஒருநாள் சந்தித்துக் கொண்டு படம் சுபமாக முடியும் என்பது வி.எஸ்.ராகவன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கும் சினிமா ஃபார்முலா. ஆக, எப்படி ஒன்று சேருகிறார்கள் என்பதில் மட்டுமே சுவாரசியம் காட்ட இயலும். ஆனால் சுவாரசியம் ஒரு பொருட்டே இல்லை என்ற ரீதியில் திரைக்கதை பயணிக்கிறது. படம் தொடங்கியதும் வில்லன் விதார்த் மைண்ட் வாய்ஸில், குடும்பம் எப்படிப் பிரிகிறது, ஊர் ஒன்றுபடாமல் ஏன் இருக்கிறது என சுருக்கமாக ஃப்ளாஷ்-பேக்கை முடித்து விடுகிறார்கள். பிறகு கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சுமார் ஒ...