Shadow

திரை விமர்சனம்

Calcutta, I’m sorry விமர்சனம்

Calcutta, I’m sorry விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் இளகுவோரின் அகப்பயணம் எவ்வாறாக இருக்கும் என்பதே இந்த ஆங்கிலப் படத்தின் மையக்கரு.  குன்னூரில் இசை ஆசிரியராகப் பணி புரிபவர் அமாண்டா ரைட். கணவரையும் மகளையும் பிரிந்து இசையே வாழ்க்கையென வாழும் ஆங்கிலோ இந்தியரான அமாண்டாவிற்கு தண்டுவட மரப்பு நோய் (Multiple Sclerosis) கண்டறியப்படுகிறது. வாழ்வின் நிலையாமையையும், விர...
மாமனிதன் விமர்சனம்

மாமனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இயக்குநர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் இணைந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான ராதாகிருஷ்ணன், குடும்பத்தைக் கைகழுவி, வீட்டை விட்டு ஓடித் தலைமறைவாகிறார். ஏன் ஓடினார், எங்கே ஓடினார், மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா இல்லையா என்பதுதான் குடும்பத்தின் கதை. ராதாகிருஷ்ணனாக விஜய்சேதுபதியும், அவரது மனைவியாக காயத்ரியும் நடித்துள்ளனர். படத்தின் தொடக்கம், விஜய் சேதுபதி – காயத்ரி இணையின் அழகான கூட்டினைக் காட்டி, அவர்கள் இருவரும் எப்படிக் காதலித்து மணம் புரிந்தார்கள் என்ற அத்தியாயமே! விஜய்சேதுபதியின் மகளாக நடித்துள்ள மானஷ்வி வரும் ஃப்ரேம்கள் அனைத்துமே கவிதை. மிக யதார்த்தமாக, மனதைக் கொள்ளை கொள்ளும் அந்த அத்தியாயத்திற்குப் பிறகு, ரியல் எஸ்டேட் முதலாளியுடன் விஜய் சேதுபதி பார்ட்னர்ஷிப் போடுவதில் இருந்து, படம் ஒரு சீர...
மாயோன் விமர்சனம்

மாயோன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாயோன் மார்பினன் மணிகள் வைத்தபொற் பெட்டியோ வானோர் உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளே யாதென உரைப்பாம். - நகரப்படலம், பாலகாண்டம், கம்ப ராமாயணம் மாயோன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. அவர், முல்லை நிலக்கடவுள் என பண்டைய தமிழர்களால் இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், மாயோன் மலையிலுள்ள பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோயிலின் தொன்மத்தைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. பாவைக் கூத்தாகவும், அனிமேஷன் உதவியாலும், அக்கோயில் வரலாறு பற்றிய ஐதீகத்தையும் நம்பிக்கையையும் அழகாகக் கதையின் களமாக அமைத்துள்ளனர். இவையே தனிக்கதையாக ரசிக்கத்தக்கும் அளவு, இளையாராஜாவின் இசையோடு கை கோர்த்து ஓர் அடர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. தொன்மத்திலுள்ள அழகியல், மையக் கதையான ரகசிய அறை பொக்கிஷம், களவாட நினைக்கும் இத்தாலிய வில்லன் என்பதையெல்லாம் இரண்டாம் பட்சமாக்கிவிடுகிறது. தொன்மத்தைத் திரையில் கடத்த தோல...
O2 விமர்சனம்

O2 விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
கோவையில் இருந்து கொச்சிக்குச் செல்லும் பேருந்து நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து விடுகிறது. பேருந்தில் சிக்கியவர்கள் ஆக்சிஜனுக்காகப் போராடும் சர்வைவல் த்ரில்லர்தான் படத்தின் கதை. சர்வைவல் த்ரில்லர் என வகைமைப்படுத்தினாலும், தன் மகனுக்காகப் போராடும் ஒரு வீரத்தாயின் கதை என்ற சிறப்பும் உண்டு இப்படத்திற்கு. தன் மகனுக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவரது செல்ல அழகு மகனாக யூ-ட்யூப் புகழ் ரித்விக் நடித்துள்ளான். அவனது திறமைக்குத் தீனி போடுமளவிற்கான வாய்ப்பு இல்லையெனினும், கிடைத்த ரோலில் ஆழமாகத் தன் முத்திரையைப் பதிந்துள்ளான் சுட்டிப் பையன். படத்தின் ஆரம்பமே, இயற்கையைப் பற்றிய ஓர் 2டி அனிமேஷனில் இருந்து தொடங்குகிறது. அதை அழகாகக் க்ளைமேக்ஸில் கொண்டு வந்து முடித்திருப்பது சாதுரியமான முடிச்சு. இயக்குநர் G.S.விக்னேஷ் எடுத்துக் கொண்ட மாறுபட்ட களம் ஈர்...
விக்ரம் விமர்சனம்

விக்ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைதியின் தொடர்ச்சியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படமாக வந்துள்ளது விக்ரம். மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்குவது போல் ஒரு மேல்தோற்றம் தெரிந்தாலும், போதை வஸ்துகளற்ற சமூகத்திற்கான போராடும் வேட்டையாளராக விக்ரம் காட்டும் ஆக்ரோஷம் தான் படத்தின் கதை. மல்டிஸ்டார் படத்தை எப்படி ஹேண்டில் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகப் படம் திகழ்கிறது. ஒற்றை நாயகனின் சூப்பர் ஹீரோயிச பாணியில் சிக்குண்ட தமிழ்த் திரையுலகின் நார்சிஸ சூழலில் இருந்து வெளிவந்து, படத்தின் முதற்பாதி நாயகனாகப் பஹத் பாசிலை மிளிர விட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். படத்தின் வில்லன் யார், நாயகன் யார் என பஹத் பாசிலின் இன்வெஸ்டிகேஷனில் முதற்பாதி பரபரவென ஓடுகிறது. இந்த யுக்தி, சந்தனமாக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திற்கும், பின்பாதியில் விக்ரமாகக் கர்ஜிக்கும் கமல் ஹாசனிற்கும் ஆழமான அடித்தளம் அமைத்துள்ளார். அதே போல் படம...
வாய்தா விமர்சனம்

வாய்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மொபைலில் பேசிக் கொண்டே பைக் ஓட்டிக் கொண்டு வரும் ஒவரைத் தவிர்க்க, எதிரே பைக் ஓட்டி வரும் இளைஞன், சாலையில் அமர்ந்திருக்கும் முதியவர் அப்புசாமி மீது ஒரு அவ்விளைஞன் பைக்கால் மோதி விடுகிறான். அவரது வலது கையில் தீக்காயத்துடன் எலும்பு முறிவு ஏற்படுகிறது. நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு செல்கிறது. பாதிக்கப்பட்ட அப்பாசாமி, தனக்கு காப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்க, நீதிமன்றமோ ஒரு வினோதமான தீர்ப்பை அளிக்கிறது. சாதிய ஏற்றதாழ்வு, சாதியப் பெருமிதம், ஓர் ஜாதிக்குள் நடக்கும் போட்டி பொறாமை சண்டைகள், அதை மறந்து அவர்கள் இணையும் புள்ளிகள் என படம் பேசும் அரசியல் நுண்ணியமாய் உள்ளது. நீதி இயங்கும் லட்சணம் அடிவயிற்றில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. முதியவர் அப்புசாமியாக மு.ராமசாமி நடித்துள்ளார். கதையோடு இயல்பாய்ப் பொருந்தும் பாத்திரமாக வருகிறார். ஊரில் ஆதிக்க சாதியினருக்குப் பயந்து அடிபணிவதாகட்டும், தனக்க...
சேத்துமான் விமர்சனம்

சேத்துமான் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
பெருமாள் முருகனின் 'வறுகறி' எனும் சிறுகதையை மிக நேர்த்தியாக சேத்துமான் எனும் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். பன்னியைக் கொங்கு வட்டாரத்தில் சேத்துமான் என்றழைப்பார்கள். கதை நடக்கும் களமாக மேற்கு கொடைக்கானலைத் தெரிவு செய்துள்ளனர். பெயர் போடும் போது ஒரு கதையை ஓவியத்தில் சொல்லி முடித்ததும், டைட்டில் க்ரெடிட் முடிந்த பின் படத்தின் கதைக்குள் செல்கின்றனர். மகனையும் மருமகளையும் இழந்த பூச்சியப்பன் தனது பேரனுடன் ஊரை விட்டு வெளியேறி, பண்ணாடி வெள்ளையனிடம் வேலைக்குச் சேருகிறார். உடல் சூட்டினைத் தணிக்க, பன்னியின் வறுத்த கறியைத் திண்பதில் ஆர்வம் காட்டுபவர் வெள்ளையன். ஆனால், ஊர் உலகமோ, பன்னிக்கறியை உண்பதை மிக ஏளனமாகப் பார்க்கிறது. குறிப்பாக வெள்ளையனின் மனைவியே, 'பீ திண்ணும் பன்னியைச் சாப்பிடுறது பீ திண்பதற்கு சமம்' என வெள்ளையனை அநியாயத்திற்கு அசிங்கப்படுத்துகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்...
விஷமக்காரன் விமர்சனம்

விஷமக்காரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குச் சாதகமான விஷயத்தை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால் உளவியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி மற்றவர்களைத் தனக்கான விஷயங்களைச் செய்ய வைப்பது நிச்சயமாக ஆச்சரியமான சங்கதிதான். அப்படியான ஆச்சரியம் ஒன்றை லைஃப் கோச்சராக இருக்கும் நாயகன் வி செய்கிறார். அந்தச் செய்கையின் விளைவு என்ன என்பதை விஷமக்காரனில் காணலாம். மனரீதியாக மற்றவர்களுக்கு தைரியம் கொடுக்கும் நாயகன் வி, தன் மனைவியும், தன் காதலியும் ஒருசேர தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் ஏற்படும் தரமான சம்பவங்களை சுவராசியமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். இயக்குநர் வி தான் படத்தின் நாயகனும். சிற்சில இடங்களில் மட்டுமே பாஸ்மார்க் வாங்குகிறார். நாயகிகளில் அனிகா விக்ரமன் நிறைய இடங்களில் கவனிக்க வைக்கிறார். மற்றொரு நாயகியான சைதன்யா ரெட்டி நடிப்பு ஓகே ரகம். படத்தில் இந்த மூவர் மட்டுமே பிரதான பாத்திரங்கள். ...
நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

நெஞ்சுக்கு நீதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆர்டிகள் 15 எனும் ஹிந்திப் படத்தைத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு, மிக நேர்த்தியாக மூலத்தின் சாரம் குறையாமல் கொடுத்துள்ளார் இயக்குநர் அருண்ராஜா காமராஜா. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் என்றில்லாமல், சில காட்சிகளைத் தவிர்த்தும், உதயநிதி ஸ்டாலினின் அரசியலுக்கு பலம் சேர்க்கும் காட்சிகளைச் சேர்த்தும், நெஞ்சுக்கு நீதியைத் தூக்கி நிலைநிறுத்தியுள்ளனர். விஜயராகவன் ஐ.பி.எஸ்., பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கிராமப்பகுதிக்கு மாற்றலாகி வருகிறார். இரண்டு தலித் சிறுமிகளைக் கொன்று மரத்தில் தூக்கில் போட்டுத் தொங்க விட, அந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார் விஜயராகவன். அரசியல் செல்வாக்குள்ள மனிதர்களின் குறுக்கீடுகளைத் தாண்டி, எப்படிக் குரலற்றவர்களுக்கு விஜயராகவன் நீதி வாங்கித் தருகிறார் என்பதே படத்தின் கதை. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஐயராக சுரேஷ் சக்கரவர்த்தி கலக்கியுள்ளார். அவரது போலியான பணிவும், அச்சுறுத்தும் நயவஞ்சகம...
டேக் டைவர்ஷன் விமர்சனம்

டேக் டைவர்ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு 90’ஸ் கிட் தன் திருமணத்திற்காக பாண்டிச்சேரி செல்கிறார். செல்லும் வழியில் தன் அலுவலக மேலதிகாரி சொல்லும் ஒரு பணியை முடிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு வருகிறது. அந்தப் பணியில் ஒரு பெரும் பிரச்சனை இருக்க, எப்படி பிரச்சனைகளை ஹீரோ டீல் செய்தார் என்பதை, பல டேக் டைவர்ஷன் போட்டுச் சொல்லியிருக்கிறது இப்படம்.. ஹீரோ அடர்ந்த தாடி, மெலிதான பாடி என பாவப்பட்ட 90’ஸ் கிட்ஸ் கதாபாத்திரத்திற்குப் பக்காவாகப் பொருந்துகிறார். இரு நாயகிகளும் ஒரு சில இடங்களைத் தவிர ஈர்க்கவே செய்கிறார்கள். ஒரு 2K கிட்ஸின் அட்ராசிட்டி படத்தை ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது. டெக்னிக்கல்லி மிகவும் அயர்ச்சி ஏற்படுத்துகிறது படம். ஜோஸ் ப்ராங்க்ளின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டிற்கும் பெரிதாக மெனக்கெடவில்லை. ஒளிப்பதிவில் பெரிய நேர்த்தியில்லை. டப்பிங்கில் துளியும் கவனம் எடுக்கவில்லை போல. லிப்சிங்கில் அவ்வளவு பிரச்சனைகள். படமெங்கும் ஆர்வம...
ஐங்கரன் விமர்சனம்

ஐங்கரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாடு நலம்பெற எதையாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது ஐங்கரன் திரைப்படம். 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தற்போது படம் திரைகாணுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் என்ஜினியரீங் மாணவரான ஜீ.வி.பிரகாஷ், மக்களுக்குத் தேவையானதை விஞ்ஞான ரீதியாக பயன்படும் வகையில் சின்ன சின்னதாகச் சாதனங்களைச் செய்கிறார். அதற்கான அங்கீகாரத்திற்கு அலையோ அலை என அலைகிறார். ஆனால் அவமதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் சோர்வான ஜீவிக்கு மிக முக்கியமான வாய்ப்பு ஓர் உணர்ச்சிகரமான சம்பவம் மூலமாக வருகிறது. அதைத் தக்கவைத்துக் கொண்டாரா என்ற கேள்விக்கான பதிலைச் சுவாரசியமாக திரையில் காணலாம். இந்த விஞ்ஞான என்ஜினியர் நாயகனையும், வடநாட்டுக் கொள்ளை லீடராக வரும் சித்தார்த் சங்கரையும், அவரது குழுவையும் ஒரு பிரச்சனையோடு இணைத்த விதம் சிறப்...
Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

Doctor Strange in the Multiverse of Madness விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மார்வெல் படங்கள் வெளியாகும் நாட்கள் உலகெங்கும் திருவிழா கோலம் பூண ஆரம்பித்துவிட்டது. ஒரே படத்திலேயே, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மக்கள் மனதைக் கவர்ந்துவிட்டார். பெனிடிக்ட் கம்பர்பேட்சின் நடிப்பும் அதற்கொரு பிரதானமான காரணம். பல்லண்டத்திற்கிடையே பயணிக்கும் திறனுள்ள அமெரிக்கா சாவேஸ் எனும் இளம்பெண்ணை, ஒரு ஆக்டோபஸ் மிருகம் துரத்தி வருகிறது. வேற பிரபஞ்சத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்துவிடுகிறார். அமெரிக்கா எனும் அந்தப் பெண், நாம் வாழும் பிரபஞ்சத்திற்கான (Earth 616) பாதையைத் திறந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். இந்தப் பிரபஞ்சத்தின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், அம்மிருகத்தைக் கொன்று அமெரிக்கா சாவேஸைக் காப்பாற்றுகிறார். மந்திரங்களில் பரீச்சயமான வாண்டா மேக்ஸிமாஃப் –இடம் உதவி கோருகிறார் டாக்டர். ஆனால், ஆக்டோபஸ் மிருகத்தை அனுப்பியதே ஸ்கார்லட் விட்ச் ஆக மாறிவிடும் வாண்...
சாணிக்காயிதம் விமர்சனம்

சாணிக்காயிதம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
க்வென்டின் டரான்டினோ படங்களின் பாதிப்பில், ரத்தமும் சதையும் தெறிக்கும் ஒரு பழிவாங்கும் படம் தமிழில் வந்தால் எப்படியிருக்கும்? சாதிப் பெருமிதம் எனும் கயமையால் நிகழ்த்தப்படும் கொடூரத்தைப் பொறுக்கமாட்டாமல், பாதிக்கப்பட்ட பொன்னி எனும் ஒரு பெண் பழிவாங்கப் புறப்படுவதே சாணிக்காயிதத்தின் கதை. தன் கணவனையும் மகளையும் உயிரோடு எரித்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சாரார் முனையும் போது, சட்டமாவது மயிராவது என தனது கைகளாலேயே அனைவரையும் உயிரோடு எரித்துக் கொல்லும் வன்மத்துடன் தன் அண்ணன் சங்கையாவுடன் இணைந்து கொலை தாண்டவமாடுகிறார் பொன்னி. நகைமுரண் என்னவென்றால், புதுப்பேட்டையில் தனுஷைக் கொண்டு செல்வராகவன் காட்சிப்படுத்திய தனி மனிதனுள் தன்னிச்சையாக எழும் கொலைவெறியை, செல்வராகவனைக் கொண்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அப்படத்தில் தனுஷுக்கான நியாயங்களை விட, இப்படத்தில் செல்வ...
விசித்திரன் விமர்சனம்

விசித்திரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜோசஃப் எனும் மலையாளப் படத்தைத் தமிழில், ‘விசித்திரன்’ என மீள் உருவாக்கம் செய்துள்ளனர். விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட காவல்துறை அதிகாரியான மாயன், தன் முன்னாள் மனைவி ஸ்டெல்லாவின் மரணம், விபத்தால் ஏற்பட்டதன்று, அது ஒரு கொலை என்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரது மகள் டயானா மரணத்திற்கும், முன்னாள் மனைவி ஸ்டெல்லா மரணத்திற்கும் உள்ள ஒற்றுமையை ஆராய்ந்து, ஒரு பெரும் மருத்துவ மோசடியைக் கண்டுபிடிக்கிறார். அதைச் சட்டத்தின் முன் எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் அபாரமான முடிவு. தன் கேரியரில் மிக முக்கியமான படம் என்ற அதீத பிரக்ஞையுடன் மாயனெனும் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். அனைத்தையும் இழந்த மாயன், பீடியிலும் குடியிலும் தன் நாட்களைக் கழிக்கிறார். படத்தின் முன் தயாரிப்பாக, ஜோசஃப் பட எழுத்தாளரான ஷஹி கபீரைச் சந்தித்துள்ளார். அவரது உடற்மொழியை உள்ளவாறு திரையில் கொண்டு வர, இரண்டரை லிட்டர...
கூகுள் குட்டப்பா விமர்சனம்

கூகுள் குட்டப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ எனும் மலையாளப் படத்தினைத் தமிழில் மீள் உருவாக்கம் செய்து இயக்கியுள்ளனர் இயக்குநர்களான சபரியும் சரவணனும். பிக்பாஸ் புகழ் தர்ஷனும் லாஸ்லியாவும் அறிமுகமாகியுள்ளனர். தெனாலிக்குப் பிறகு, கே.எஸ்.ரவிகுமாரின் RK செல்லூலாய்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளிவரும் இரண்டாவது படமிது. படம் தொடங்குவதற்கு முன் முறையாக அனைவருக்கும் நன்றி சொல்லியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார். மகனை வெளியூருக்கு அனுப்ப விரும்பாத தந்தை சுப்ரமணிக்கும், வெளிநாட்டில் பணி புரிய விரும்பும் மகன் ஆதிக்கும் நடக்கும் பாசப்போராட்டத்தில் படம் தொடங்குகிறது. தன் லட்சியத்தில் உறுதியாக இருந்து வெளிநாடு செல்லும் ஆதி, தந்தைக்கு உதவியாக ஒரு ரோபாவை ஹோம் நர்ஸாகப் பயன்படுத்திக் கொள்ள தருகிறான். முதலில் ரோபோவை வெறுக்கும் சுப்ரமணி, போகப் போக ரோபோவைத் தன் மகனாகப் பாவிக்கத் தொடங்கி விடுகிறார். ரோபோவின் சோதனை ஓட்ட காலம் ம...