Shadow

திரை விமர்சனம்

மதுரம் – அன்பும், அன்பு தரும் நம்பிக்கையும்

மதுரம் – அன்பும், அன்பு தரும் நம்பிக்கையும்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வலி மிகுந்த வாழ்க்கை யாருக்குத்தான் இல்லை? ஆனாலும் வலிகளை இல்லாமல் ஆகச் செய்யும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள்தான் அந்த நம்பிக்கையை உணராமல் தங்களையும் தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் . ஆனால் எல்லா வலிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாக அன்பு இருக்கிறது என்று நம்புகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளைச் சந்திக்கின்ற போதும் அவற்றை நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து போய்விடவே விரும்புகிறார்கள் எத்தனை வலிகள் இருந்தபோதும் அன்பிலும் அது தரும் நம்பிக்கையிலுமே வாழ்க்கையின் மதுரம் இருக்கிறது என்பதுதான் மதுரம் திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை. மிகச் சாதாரணமான இந்தக் கதையை தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் மூலமாக அன்றாடம் நாம் சந்திக்கின்ற எளிய மனிதர்களின் சின்னச் சின்ன உணர்வுகளைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக ஓர் அபாரமான அனுபவத்திற்குத் தயார்படுத்தி இருக்கிற...
மதுரம் விமர்சனம்

மதுரம் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது. கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், எப்படி மருத்துவமனை ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று விவரிப்பார். மருத்துவமனையின் பரபரப்பு மெல்ல அடங்கி, ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் க்யூட்டான ஷாட்களில், மருத்துவமனையின் அழகு மிளிரத் தொடங்குகிறது. மலையாளப் படங்களுக்கே உரிய பிரத்தியேக அழகுகளில் ஒன்று, உணவினையும், அது சமைக்கப்படும் நேர்த்தியையும் மிக அற்புதமான ஷாட்களில் ...
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே'. தணிக்கை கெடுபிடிகளுக்காக, தலைப்பில், பெண் என்பது 'பென்'னாக மாறியுள்ளது. ப்ளே பாயாக சுற்றித் திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பணம் பார்ப்பான். இல்லையெனில், எடுத்தவற்றை விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பர். அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவ்வழக்கினைப் போலீசார் துப்புத் துலக்கத் தொடங்குகிறார்கள். அரவிந்த், அடுத்து நந்தினி எனும் பெண்ணைக் காதலிக்க, இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள்...
Antim: The Final Truth விமர்சனம்

Antim: The Final Truth விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அன்திம் என்றால் இறுதி எனப் பொருள். கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால் மரணம் என்பது ஆதி உண்மை. படத்தின் கதையும் இந்த இறுதி உண்மையை மையப்படுத்தியே! விவசாய நிலத்தை விற்றுவிட்டு, புனே மார்க்கெட்டில் கூலி வேலைக்குச் செல்கின்றனர் ராகுல்யாவும், அவன் தந்தையும். குறைவான கூலி தரப்படுவதைக் கேள்வி கேட்டு, அது தகராறாகி சிறைக்குச் செல்கிறான் ராகுல்யா. அங்கிருந்து வளர்ந்து, 300 ஏக்கர்க்குச் சொந்தக்காரனாகி, புனேவின் ‘டான்’ ஆகிவிடுகிறான். எதனால் பாதிக்கப்பட்டானோ, அதையே மற்றவர்களுக்குச் செய்து தனியனாகிறான் ராகுல்யா. இன்ஸ்பெக்டர் ராஜ்வீர் சிங்காக நடித்திருக்கும் சல்மான் கானுக்கு, மாஸான சண்டைக்காட்சி அறிமுகம் இருந்தாலும், அவர் இப்படத்தில் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவே வருகிறார். படத்தின் நாயகன், ராகுல்யாவாக நடித்திருக்கும் ஆயுஷ் ஷர்மாதான். ராகுல்யாவின் தந்தையாக நடித்திருக்கும் ச்ச்சின் ஹெடேக்கர் வழக்கம் போல் மிகச் ச...
மின்னல் முரளி விமர்சனம்

மின்னல் முரளி விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்கு சூப்பர் ஹீரோ தேவையா? எழுநூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிற முக்கோண கிரக அமைப்பில் ஏற்படும் மின்னல் தாக்கி, குறுக்கன்மூலா எனும் கிராமத்தில் இருக்கும் ஜெய்ஸன் வர்கீஸ், ஷிபு ஆகிய இருவருக்கு சில அதிசய சக்திகள் கிடைக்கின்றன. குறுக்கன்மூலா கிராமத்திற்கு அதனால் என்ன பாதிப்புகள் நேருகின்றன என்பதே பட்த்தின் கதை. எதார்த்த படங்களுக்குப் பெயர் போனது மல்லுவுட். அங்கிருந்து ஒரு சூப்பர் ஹீரோ படமென்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களது பாணியில் இருந்து பெரிதும் விளங்காமல் சூப்பர் ஹீரோ படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவைப் போல் உலகையே அழிக்கத் துடிக்கும் வில்லன்கள் இல்லாத கிராமத்தில் யார் வில்லன்? சக்தி கிடைத்த இருவரில் ஒருவர் வில்லன், மற்றொருவர் ஹீரோ என்று சேஃப் ஜோன்க்குள் கதையைக் கட்டமைத்துள்ளனர். மனித மனம் மிகவும் சிக்கலானது. கிராமத்தையே அழிக்க நினைக்கும் ஷிபுவிற்...
கலாட்டா கல்யாணம் விமர்சனம்

கலாட்டா கல்யாணம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள தனுஷ் நடித்த ஹிந்தி டப்பிங் படம். பீஹார் செல்லும் மருத்துவர் விஸ்வநாத் ஐயருக்கு, ரின்கு எனும் பெண்ணுடன் கலாட்டா ஏதுமின்றிக் கட்டாய கல்யாணம் செய்து வைத்து விடுகின்றனர் ரின்குவின் உறவினர்கள். அதன் பின் ரின்கு செய்யும் கலாட்டாவால், விஸ்வநாதினுடைய கல்யாணம் நிற்கிறது. விஸ்வநாதிற்கு ரின்கு மீது காதல் ஏற்பட, ரின்குவோ சஜ்ஜத் அலி கான் என்பவரைக் காதலிக்கிறாள். தன் மனைவி மீதான விஸ்வநாதின் காதல் வென்றதா, சஜ்ஜத் அலி கானுடனான ரின்குவின் கலாட்டா காதல் வென்றதா என்பதே படத்தின் கதை. மிகவும் கலர்ஃபுல்லான படம். எதையுமே சீரியஸாக அணுகாமல் ஓர் இளமைத் துள்ளலுடன் ஓடிக் கொண்டே இருக்கிறது. ரின்குவாக நடித்துள்ள சாரா அலி கான், படத்தின் இந்தத் துள்ளலான ஓட்டத்திற்கு உதவியுள்ளார். மணிரத்னம் பட நாயகிகளை ஞாபகப்படுத்துகிறார். மருத்துவர் விஸ்வநாத் ஐயராக தனுஷும், சர்க்கஸில் மேஜிக் செய்யும் சஜ்ஜத் ...
ரைட்டர் விமர்சனம்

ரைட்டர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காவல்துறையின் அசல் முகங்களை அப்படியே அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளது ரைட்டர். தன் சர்வீஸில் யாரையும் அடித்திராத நேர்மையான காவல்துறை எழுத்தர் சமுத்திரக்கனி. அவருக்கு இரு மனைவிகள். அவருடைய ஒரே லட்சியம் போலீஸ் யூனியன் அமைக்க வேண்டுமென்பதே. அதற்காகவே அவர் வெவ்வேறு ஸ்டேஷனுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். அப்படி அவர் மாற்றலாகிச் செல்லும் ஒரு காவல்நிலையத்தில் அப்பாவி இளைஞன் ஹரிக்கு ஓர் அநீதி இழைக்கப்படுகிறது. அதற்கு சமுத்திரக்கனியும் ஒரு காரணமாகி விட, அதை அவர் எப்படி சரி செய்தார் என்பதே ரைட்டரின் பயணம். தேவைக்கேற்ற தொந்தி, குற்றவுணர்வில் தடுமாறும் வார்த்தைகள் என சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். அதிகம் பேசாமல் இவர் நடித்திருக்கும் படம் என்பது கூடுதல் சிறப்பு. போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் அடிமட்ட இளைஞனாக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஹரி. ஓரிரு காட்சி என்றாலும் சுப்பிரமணிய சிவா அசத்தலாக ...
The Platform விமர்சனம்

The Platform விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்த படங்களிலேயே, என்னை மிகவும் பாதித்த, யோசிக்க வைத்த மிக முக்கியமான திரைப்படம் இது. இந்த ஸ்பானிய மொழி திரைப்படம், நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது. ஸ்பான்டேனியஸ் சாலிடாரிட்டி, அதாவது, பிரச்சனையின் போது மக்கள் இயல்பாகவே ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து போராடுகிறார்களா அல்லது விட்டுக் கொடுக்கிறார்களா இல்லையா என்பதை அறிவதற்காக நடத்தப்படும் மிக அபாயகரமான சோதனை தான் இப்படத்தின் களம். இது தவிர, இந்தப் படம், மக்களாட்சித் தன்மையில் அதிகாரத்தில் இருப்பவருக்கும், அவருக்குக் கீழே அவனை நம்பி பிழைப்பு நடத்தும் எளிய மனிதனுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் யோசிக்க வைக்கிறது. முந்நூறு அறைகளைக் கொண்ட செங்குத்து அபார்ட்மென்ட்டில், ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் இருப்பார்கள். அந்த அறைக்கு நடுவில், மேலே முதல் அறையில் இருந்து கீழிருக்கும் 300க்கும் மேற்பட்ட அறைகளுக்குச் செல்லும் ம...
தூநேரி விமர்சனம்

தூநேரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அமானுஷ்ய கதைகள் என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அப்படியான கொண்டாட்டங்களை ஏற்படுத்தவே தூநேரி படம் முயற்சி செய்திருக்கிறது. ஊர்க்காலவனாக இருக்கும் கருப்பசாமி என்கிற ஜான் விஜய் ஒரு கட்டத்தில் ஊரார்களாலே கொல்லப்படுகிறார். பின் கொன்றவர்களைப் பேயாக மாறி பழி வாங்குகிறார். இப்படியான சம்பவம் நடக்கும் ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவின் கார்த்தி நடக்கும் கொலைகளை எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு. கருவிலேயே நடிக்கத் தெரியும் என்பது போல படத்தில் வெள்ளக்கனியாக வரும் சிறுவன் அபிஜித் அபாரமாக நடித்திருக்கிறான். ஜான் விஜய், கருப்பசாமி கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இன்ஸ்பெக்டர் இன்னும் கூட முனைப்போடு நடித்திருக்கலாம். ஒரு பேய் படத்திற்கான கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் அதற்கான விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்குவதில் கூடுதல் சிரத்தையைச் செலுத்தியிருக்கலாம் அறி...
MUDDY திரை விமர்சனம்

MUDDY திரை விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சகதியும் சேறும் நிரம்பிய கரடுமுரடான பாதையில், விறுவிறுப்பான கார் சேஸிங் (chasing) காட்சிகளை ரசிப்பவர்களுக்கான ஆக்ஷன் திரைப்படம். மட்டி ரேஸை (mud race) மையமாகக் கொண்டு, இந்திய சினிமாவில் வந்துள்ள முதல் படமிது. பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் மலையாளப் படமான இது, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அண்ணன் தம்பி இருவர், ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன், 'உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார்!' என சபதம் எடுக்கிறார். இந்த நிலையில் தம்பியைக் காக்க அண்ணன் வருகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து வில்லனை மட்டி ரேசில் ஜெயித்து எப்...
ஜெயில் விமர்சனம்

ஜெயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் 25 சிறந்த படங்களைத் தேர்வு செய்தால் அதில் வசந்தபாலனின் படம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அப்படியொரு படைப்பாளி வசந்தபாலன். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஜெயில் மீது எல்லாருக்கும் இயல்பாய் ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் தனது இப்படம் ‘நில உரிமை’யைப் பற்றிப் பேசுகிறது என மிகவும் அழுத்தமாகப் பதிந்த வண்ணம் இருந்தார். ஆனால் படம் அதை நோக்கிப் பயணிக்கிறதா என்பது கேள்விக்குறியே! வடசென்னை காவேரி நகரில் திருட்டு வேலைகள் செய்கிறார் நாயகன் ஜீவி. அவரது நண்பர் ராமு போதைப்பொருள் விற்கிறார். இவ்விருவர்களின் எந்தச் செயல்களையும் ரசிக்காத எதிர் அணி ஒன்று இவர்களிடம் உரசிக் கொண்டே இருக்கிறது. இரு டீமையும் தனக்குள் வைத்து தன் பாக்கெட்டையும் வேலையையும் காப்பாற்றிக் கொள்கிறார் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் ரவிமரியா. ஒரு கட்டத்தில் ராமுவைக் கொலை செய்கிற...
ஆன்டி இண்டியன் விமர்சனம்

ஆன்டி இண்டியன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்துத்துவர்களைத் தவிர்த்து ஏனையோர் தேசவிரோதிகள் எனப் பொருள்பட ஹெச்.ராஜா மொழிந்த 'ஆன்டி இண்டியன்' என்ற கோபச் சொல்லையே தலைப்பாக்கி அசத்தியுள்ளார் ப்ளூசட்டை மாறன். அது கவன ஈர்ப்பிற்காக மட்டுமல்லாமல் கதையோடு ஒன்றி வருவது மேலும் சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் ஆகப்பெரும் பலம் என்று மார் தட்டிச் சொல்லும் அரசியல் வாதிகள், வேற்றுமைகளை வளர்த்தெடுப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதையும், மதம் மனிதனைப் பண்படுத்தும் வேலையைத் தான் செய்யச் சொல்கின்றன, ஆனால் மதத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் தான் அதை வைத்து மனிதர்களைப் புண்படுத்துகிறார்கள் என்பதையும் ஆன்டி இண்டியன் சமரசமின்றி எடுத்துரைக்கிறது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மயிலாப்பூர் தொதியில் சுவர் ஆர்டிஸ்ட் பாட்ஷா என்பவர் கொலையுண்டு இறந்துவிடுகிறார். அவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்றாலும் அவரது அம்மா இந்து. அதே சமயம் சுனாமி ந...
மாநாடு விமர்சனம்

மாநாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா என்பது படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. எந்தவொரு கணத்திலும் அவனுடைய கவனத்தை வேறுபக்கம் சிதறவிடாமல் தொடர்ந்து அவனைத் தன் வசம் வைத்திருப்பது. இப்போது இன்றைக்கு இந்தக் கவனத்தில் உங்கள் கவனம் சிதறாமல் உங்களால் ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடிக்க முடியுமா சொல்லுங்கள்? சொல்வீர்கள் என்றால் உங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிட முடியும். கடந்த பத்தாண்டுகளில் ஒரு திரைப்படம் சார்ந்த நமது பார்வை வெகுவாக மாறி இருக்கிறது. ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையும் மாறி இருக்கிறது. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சினிமா பார்க்கும் பார்வையாளனின் மனநிலை தறிகெட்டுப் போயிருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்காகப் பார்க்கப்பட்ட நிலை கடந்து, சினிமா பார்க்கும்போது பொழுதுபோகவில்லை என மொபைல் போனை நோண்டப் பழகிய காலகட்டத்தில்...
ஜெய் பீம் விமர்சனம்

ஜெய் பீம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
'ஆர்ட்டிகிள் 15' போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன. காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னமாக்குகிறார்கள் எனும் குரூரமான உண்மையைத் தொட்டு படம் தொடங்குகிறது. அப்படி கைது செய்யப்படும் ராசாகண்ணு எனும் இருளர் இளைஞனைப் போலீஸ் அடித்து நையப்புடைக்கிறது. அவரது மனைவி செங்கேணி, வக்கீல் சந்துருவின் உதவியை நாடுகிறார். மனித உரிமை வழக்குகளுக்காகா ஆஜாராகும் வக்கீல் சந்துரு, காவல்...
Afterlife of the party விமர்சனம்

Afterlife of the party விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடப் பார்ட்டிக்குச் செல்லும் கேஸி, பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். இறந்த கேஸி, சொர்க்கத்திற்கும் செல்லாமல், நரகத்திற்கும் செல்லாமல் இடைப்பட்ட ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். ஐந்து நாளில், அவளது மரணத்தில் பாதிக்கப்பட்ட அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்க்கையில் கார்டியன் ஏஞ்சலாக இருந்து உதவினால், மேலே சொர்க்கத்திற்குச் செல்லலாம். இல்லையேல் கீழே நரகத்திற்குச் செல்ல வேண்டி வருமென்று கேஸிக்குச் சொல்லப்படுகிறது. கேஸியால், எவ்விதச் சக்திகளுமற்ற கார்டியன் ஏஞ்சலாக இருந்து தன் தோழிக்கும், அம்மாவுக்கும், அப்பாவுக்கும் உதவ முடிந்ததா என்பதே படத்தின் கதை. இயக்குநர் ஸ்டீஃபன் ஹெரெக், தத்துவார்த்தமாகவும் இறங்காமல், முழுநீள நகைச்சுவையாகவும் இல்லாமல், சென்ட்டிமென்ட்டையும் கூட்டாமல், அனைத்துக்கும் பொதுவானதொரு இடைவெளியில் படத்தைக்...