Shadow

திரை விமர்சனம்

பக்ரீத் விமர்சனம்

பக்ரீத் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பக்ரீத் கொண்டாட்டத்திற்காக ஒட்டகம் ஒன்றை வாங்குகிறார் மீஞ்சூர் பாய். அந்த தாய் ஒட்டகத்தோடு, குட்டி ஒட்டகமும் ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது. குட்டியை என்ன செய்ய என பாய் யோசிக்கும் பொழுது, ரத்தினம் அதை தான் வளர்ப்பதாகச் சொல்லி வாங்கிக் கொள்கிறான். அந்த ராஜஸ்தான் ஒட்டகத்திற்கும், அதை அன்பாக வளர்க்கும் விவாசய பின்புலம் கொண்ட தமிழ்க் குடும்பத்திற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், அதைப் பிரிய நேரும் பொழுதும் எழும் துயரும் தான் படத்தின் மையக் கரு. பெட்டிக் கடைகளுக்கு மிக்சர், முறுக்கு, வற்றல் முதலிய நொறுக்குத் தீனிகளை சப்ளை செய்பவராக தினேஷ் பிரபாகர் நடித்துள்ளார். மலையாள நெடியுடன் பேசும் அவர், நாயகனின் உற்ற நண்பராக நடித்துள்ளார். சின்னச் சின்ன உடல் அசைவுகளிலும், முக பாவனைகளிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மிகச் சிறந்த குணசித்திர நடிகராகப் பரிணமிக்கக் கூடிய அனைத்து லட்சணங்களும் பெற்...
முனிரத்னா குருஷேத்திரம் விமர்சனம்

முனிரத்னா குருஷேத்திரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரண்ணா எனும் கன்னடக் கவியின் ‘கதாயுதா’ எனும் கவிதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு J.K.பைரவி எழுதிய திரைக்கதையை இயக்கியுள்ளார் நாகண்ணா. இது துரியோதனனைப் பாட்டுடை நாயகனாகக் கொண்ட கவிதை நூலாகும். 1964 இலேயே, கர்ணன் போன்ற காவியத்தைப் படைத்துவிட்டது தமிழகத் திரையுலகம். 1988 இல் தூர்தர்ஷனில் தொடராகவும், 2013 இல் ஸ்டார் குழுமத்திலும் பிரம்மாண்டமான முறையில் தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டு, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2019 இல், குருஷேத்திரம் 3டி-இல் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. கன்னட நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்கள் அறிந்த முகமாக, கர்ணனாய் நடிக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுனும், அர்ஜுனனாய் நடிக்கும் சோனு சூட்டும் தான். துரியோதனனாக நடித்துள்ள தர்ஷன், அப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. அவர...
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
லியானார்டோ டி காப்ரியோ, பிராட் பிட் என ஹாலிவுட்டின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம். அதை விட ஈர்ப்பான விஷயம், இந்தப் படத்தின் இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ என்பதேயாகும். ஹாலிவுட்டில் 1969 இல் நடக்கின்ற பீரியட் ஃபிலிம். டைட்டானிக் நாயகன் லியானார்டோ சொன்னது போல், ’இப்படம், 60 களின் ஹாலிவுட்க்கு டாரன்டினோ எழுதிய காதல் கடிதம்’ என்பதே சரி. செம கிளாஸான படம். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ரிக் டால்டன் தனது இறங்குமுகத்தில் உள்ளார். அவரது உற்ற நண்பரான க்ளிஃப் பூத், ரிக்கிற்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறவர். ரிக் டால்டனின் பக்கத்து வீட்டுக்காரராக ரோமன் பொலான்ஸ்கியும், அவரது மனைவி ஷரோன் டேட்டும் வசிக்கின்றனர். இவ்விடத்தில் ஒரு செய்தி: உலகை உலுக்கிய கொடூரமான மரணங்கள் பட்டியலில், ஹிப்பிகளால் கொலையுண்ட மிக அழகான நாயகியான ஷரோன் டேட்டின் வழக்கும் ஒன்று....
கோமாளி விமர்சனம்

கோமாளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு. ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, 'என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?' என இந்த உலகத்தைப் பார்த்து கோமாளி போல் கேள்வி எழுப்புகிறான். கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி ஜால...
கொலையுதிர் காலம் விமர்சனம்

கொலையுதிர் காலம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒருவழியாக எண்ணற்ற இடைஞ்சல்களைக் கடந்து படம் வெளியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாக எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டதோ அதே அளவு சிக்கல்கள் படத்தின் மேக்கிங்கிலும் உள்ளது. ஒரு ஹாலிவுட் படம் போல் ரம்மியமாக ஓப்பன் ஆகிறது. அரண்மனைக்கு நிகரான அழகான பெரிய மாளிகை, மிக அற்புதமான புல்வெளியும் உயரமான மதில் சுவர்கள், வெள்ளைக்கார வேலைக்காரப் பெண்மணி, ரசனையான ஒளிப்பதிவு என மிக அட்டகாசமாகப் படம் தொடங்குகிறது. பின் வாய்ஸ்-ஒவரில், நயன்தாரா யார், அவர் ஏன் இங்கிலாந்து வருகிறார் என வாய்ஸ்-ஓவரில் கதை சொல்கின்றனர். பின் அதே கதையை, விஷுவலாகவும் கூறியது கூறலாகச் சொல்லத் தொடங்குகிறார்கள். அதையும் கொட்டாவி வர வைக்குமளவு அசமந்தமான காட்சிகளால் காட்டுகின்றனர். சுஜாதாவின் நாவலான கொலையுதிர் காலத்திலிருந்து, இரண்டு சம்பவங்கள் மெலிதாக ஒத்துப் போகிறது. மரத்தின் பின்னால் தெரியும் ஓர் உருவமும், ஒரு பெண்ணின் பெயரில் சொத்து எழுதி...
ரீல் விமர்சனம்

ரீல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மற்றவரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கும் நாயகனுக்கும், குடும்பச் சூழல் காரணமாய் சோரம் போகும் நாயகிக்கும் காதல் மலர்கிறது. கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள். நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை. அரத பழசான கதை. அதனினும் தொன்மையான திரைக்கதை பாணி. மாறி வரும் கதை சொல்லல் முறையையோ, திரைப்பட வடிவத்தையோ, கொஞ்சம் கூடக் கணக்கில் எடுக்கவில்லை எழுத்தாளர் TN சூரஜ். கதையின் ஊடே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல், அறிமுகப் படமெனத் தனியாக நீள்கிறது. அதுவும் 80 களின் சினிமா எப்படித் தொடங்குமோ அப்படி! பெண்களை அடைய நினைக்கும் வயதான பணக்கார வில்லன். அவருக்கு வேற எந்த ஷேடும் இல்லை. அறிமுகமாகும் நொடியில் இருந்து பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும், நாயகியை அடையவேண்டும் என தன் விருப்பத்தை அருவருப்பான முறையில் வெளிப்படுத்துவதுமான அவரது கதாபாத்திரம். கிரீஷ் எனும் அந்தப் பாத்திரத்...
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும் களத்தில் குதித்து ஆக்ஷன் அதகளம் செய்கின்றனர். முக்கியமாக, க்ளைமேக்ஸில் சாமோ (Samoa) தீவுகளில் நடக்கும் சண்டை செம ஜாலியாகவும், சீட் நுனியில் அமரச் செய்யும் அற்புதமான ஆக்ஷனாகவும் உள்ளது. ஹெலிகாப்டரைப் பறக்க விடாமல், சங்கிலியால் பிணைத்து, ஒற்றுமையாகச் செயற்பட்டு வில்லனைக் கதி கலங்க வைக்கும் காட்சி அட...
நேர்கொண்ட பார்வை விமர்சனம்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! - புதுமைப் பெண், பாரதியார் மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பின் மூலம், இந்த இழிநிலையை மீண்டும் பொதுத்தளத்தில் ஓர் அழுத்தமான விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத். ‘அர்ஜுன் ரெட்டி’ போன்று ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாகப் பேசும் படத்தினை ரீமேக் செய்யும் சம காலத்தில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ, “பின்க் (Pink)” எனும் அற்புதமான ஹிந்திப் படத்...
சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆரஞ்சு மிட்டாய் படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி வசனமெழுத, பிஜு விஸ்வந்தாத் இயக்கியுள்ள படம் 'சென்னை பழனி மார்ஸ்'. நாயகனின் தந்தை ஒரு விஞ்ஞானி. மார்ஸ்க்குப் போகவேண்டும் என்பது அவரது ஆசை. அவரால் முடியாததைச் சாதிக்க நினைக்கிறார் போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவரது மகனான. நாயகன் மார்ஸ் போனாரா இல்லையா என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை, மார்ஸ் (செவ்வாய் கோள்) பூமிக்கு அருகில் வருமாம். அப்பொழுது ஏதோ ஒரு மலையில் போய் நின்றால், செவ்வாய்க் கிரகத்துக்கு உறிஞ்சப்படுவார்கள் என ஆஸ்ட்ரோ-பிசிக்ஸ் விஞ்ஞானியான நாயகனின் தந்தை நம்புகிறார். புதிரான ஒரு கணக்கிற்கு விடை கண்டுபிடித்து, அது "பழனி மலை" எனக் கண்டுபிடிக்கிறான் நாயகன். ஒரு பிரமிட் போல் சின்ன கருவி + ஸ்பேஸ் சூட் (space suit) தான் தேவை. மலையின் மீது நின்றால் நேராக செவ்வாய் கிரகம் தான். படத்தோடு கொஞ்சம் கூட ஒட்டவே முடி...
தொரட்டி விமர்சனம்

தொரட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம். ‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும். கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது. மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஷமன் மித்ரு. பெற்றோர் பேச்சோ, மனைவி பேச்சோ கேட்காமல், குடிக்காரக் கள்ளர்களோடுநட்பைப் பேணுகிறார் நாயகன். அதற்காக நாயகன் கொடுக்கும் விலை மிகப் பெரியது. அலட்டலில்லாத நடிப்பில் கதையின் போக்கிற்கு நியாயம் செய்துள்ளார். எளிமையான கதைக்களத்தைத் தன் ஒளிப்பதிவால் மிகச் சிறந்த பதிவாக மனதில் ஊடுருவ விட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் குமார் ...
டியர் காம்ரேட் விமர்சனம்

டியர் காம்ரேட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காம்ரேட் என்றால் தோழர். முக்கியமாக கம்யூனிசத்தை அரவணைத்துக் கொண்டவர்கள், தங்கள் சங்கத்தின் சக உறுப்பினர்களைத் தோழர் என்றோ, காம்ரேட் என்றோ அழைப்பார்கள். 'நீ நினைப்பதைச் சாத்தியமாக்க சக காம்ரேடாக உன் வாழ்நாள் முழுவதும் துணையிருப்பேன்' என நாயகன் நாயகியிடம் கூறுகிறார். ஒரு காம்ரேடாக தான் சொன்னதை நாயகன் எப்படிச் செய்து காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை. சமீபமாக, தமிழ்ப் படங்களின் கால அளவு இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவோ, அல்லது அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாவது இருக்கிறது. ஆனால், தமிழில் டப் செய்யப்பட்டுள்ள தெலுங்குப் படமான இதன் கால அளவு 169 நிமிடங்கள். எனினும் படம் பார்க்கும் பொழுது இந்த நீளம் பெரிய குறையாகத் தெரியாதளவு சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர் பரத் கம்மா. இடைவேளை வரையிலான படமே ஒரு முழுமையான காதல் கதையைப் பார்த்த உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாதியில், பெண்களுக்கு எதிரான பாலி...
A1 விமர்சனம்

A1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் - திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; முதல் முறை பார்த்ததுமே காதலைச் சொல்லி, அதை உறுதிபடுத்த உதட்டில் முத்தமே கொடுத்துவிடுவதால் நாயகனுக்கும் காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. நாயகனின் தந்தை லோகுவாக எம்.எஸ்.பாஸ்கர் செமயாக நடித்துள்ளார். கதாபாத்திரங்களின் டைமிங் டயலாக்கால், காமெடியில் ஸ்கோர் செய்யும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிப்பையும், உடற்மொழ...
கொளஞ்சி விமர்சனம்

கொளஞ்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரியாரியவாதியான அப்பாசாமி, அவரது மூத்த மகன் கொளஞ்சி தவறு செய்யும்பொழுதெல்லாம் அடி வெளுத்து விடுகிறார். அதனால் கொளஞ்சி அவரது அப்பா மீது கடும்கோபத்தில் இருக்கிறான். அவர்களுக்கிடையில் பெரிதாய் ஏற்படும் விரிசல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. கொளஞ்சியாக நடித்துள்ள பதின் பருவத்துச் சிறுவன் கிருபாகரன் தான் படத்தின் நாயகன். அரிவாளை அடமானம் வைத்து ஐஸ் வாங்குவது, சக மாணவர்களுடன் சண்டையிடுவது, ஆசிரியையிடம் ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்தாரெனத் தருவது என எண்ணற்ற சேட்டைகள் செய்கிறான் கொளஞ்சி. அதை அவரது தந்தை கண்டித்தால், அவருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை எனப் பிணக்கு கொள்கிறான். ராஜாஜ், நைனா சர்வாரின் காதல் அத்தியாயம் படத்தின் சுவாரசியத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை. தந்தை - மகன் உரசல் என்ற கருவில் பெரிதும் கவனம் செலுத்தாமல், ஆனால் அதைப் படத்தின் மையமாக வைத்துத் தைரியமாகப் படமெடுத்துள்ளார் இயக்குநர்...
ஆடை விமர்சனம்

ஆடை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தப் படத்திற்கு, நேரடியாக 'நங்கேலி' என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அல்லது அவரது முதற்படம் போல் கவித்துவமாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். ஆனால், நேரடியாக உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆசையிலும், விளம்பரத்திற்காகவும் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் போல் இயக்குநர் ரத்னகுமார். ஆனால், இந்தத் தலைப்பே அவர் மறைக்கப் பார்க்கும் இஸத்தை (கொண்டையை) வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவரது முதல் படமான மேயாத மான்-இல் ஒரு வசனம் வரும். 'வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, ஏன் கேன்டீனுக்குக் கூடப் போக மாட்டா. வீட்ல பார்த்த பையன் கூடவே என்கேஜ்மென்ட் பண்ணிக்கிறா-ன்னா அவ எவ்ளோ நல்லவ?’ என நாயகன் நாயகியைச் சிலாகிப்பான். நல்ல பெண் என்பதற்கு இயக்குநர், நாயகன் வாயிலாக முன் வைக்கும் இலக்கணம் அது. ஆடை படத்து அமலா பாலோ, இதற்கு முரணான பெண். நடுரோட்டில் ஒருவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்ப...
கடாரம் கொண்டான் விமர்சனம்

கடாரம் கொண்டான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர் கடாரம் ஆகும். அந்த மாநிலத்தில், பரவலாக ஒரு கலவரத்தினை உருவாக்கும் அளவு செல்வாக்கு கொண்டவன் நாயகன் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். 2010 இல் வெளிவந்த 'ஆ பூ போர்தான்த் (À bout portant)' என்ற ஃப்ரென்ச் படத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் தூங்கா வனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் ம செல்வா. 'ஆ பூ போர்தான்த்' என்றால் "மிக அருகில்" எனப் பொருள். இதே ஃப்ரெஞ்சு படத்தைத் தழுவி, நெட்ஃப்ளிக்ஸால் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படத்திற்கு 'பாயின்ட் பிளான்க்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டுள்ளது என அதற்குப் பொருள். தமிழிலோ, நாயகன் துதி பாடும் தலைப்பாய் மாற்றப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறைக்குச் சென்று, வெளியில் வந்து அமைதியாக வாழும் கே.கே.வை ஒரு கொலைவழக்கில் சிக்க வைத்துக் கொல்லப் பார்க்கிறான் வின்சென்ட். கே.கே. ...