Shadow

திரை விமர்சனம்

பாம்புசட்டை விமர்சனம்

பாம்புசட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், 'அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா?' என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோமசு...
லைஃப் விமர்சனம்

லைஃப் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பூமிக்கு வெளியில் வாழும் உயிரினம் ஒன்றைச் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். ஓர் அணு உயிரியான அதைக் கண்டுபிடித்ததன் மூலம் மகத்தானதொரு பெருமிதத்தில் உள்ளது ஆறு பேர் கொண்ட அக்குழு. அவ்வுயிரி அசைந்து தன் இருப்பைக் காட்டியவுடன் தான் படத்தின் பெயரே போடுகிறார்கள். ஒளி புகும்தன்மையோடு மிக அழகாய் இருந்த அந்த ஓர் அணு உயிரி, தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு பல்லணு உயிரியாக வளர்கிறது. அதிபுத்திசாலியாய்ப் பரிணமிக்கும் அந்த உயிரால் என்னென்ன விளைவுகள் நேர்கிறது என்பதுதான் படத்தின் கதை. கதை இப்படித் தான் செல்லும் என்ற பார்வையாளர்களின் யூகத்தை மெய்ப்பிக்காதபடிக்கு மெனக்கெட்டிருக்கலாம் திரைக்கதை எழுதியுள்ள ரெட் ரீஸும், பால் வெர்னிக்கும். எனினும் படத்தைச் சுவாரசியப்படுத்துவது கலை இயக்குநர் ஸ்டீவன் லாரென்ஸும், இசையமைப்பாளர் எக்ஸ்த்ராந்த்தும், ஒளிப்பதிவாளர் ஷேம...
தாயம் விமர்சனம்

தாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எட்டுப் பேர் நேர்முகத் தேர்விற்காக ஓர் அறையில் கூடுகின்றனர். ஒரு மணி நேரம் நடக்கும் அத்தேர்வின் முடிவில், ஒருவர் தான் உயிருடன் வெளியேற முடியும். அந்த ஒருவர் யார் என்பதே தாயம் படத்தின் கதை. பகடை உருட்டும் பொழுது, தாயம் விழ ஓர் அதிர்ஷ்டம் தேவை. எட்டுப் பேரில் யாருக்கு அந்த அதிர்ஷ்டம் என்பதே படத்தின் தலைப்புக்குப் பொருள். சஸ்பென்ஸ் த்ரில்லரில் யார், ஏன் என்ற கேள்வியைக் கடைசி வரை தக்க வைப்பது ஒரு கலை. ஆனால், ட்விட்டர் காலத்தில் அது காலாவதியாகி விட்ட பாணி. சஸ்பென்ஸை இன்றளவும் சுவாரசியப்படுத்துவது 'எப்படி' என்ற கேள்விக்கான விடை தான். யார், ஏன் என்ற கேள்விகளுக்கான விடையை, முதல் ஷோ பார்ப்பவர்களிடமிருந்து சகலருக்கும் தொழில்நுட்பம் கடத்தி விடுகிறது. எப்படி திரைக்கதை அமைத்துள்ளனர் என்பதுதான் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். வெற்றி, என்பது இங்கே ரசிகர்கள் மனதில் படம் ஏற்படுத்தும் அழகிய மங்கா நினைவ...
புரூஸ் லீ விமர்சனம்

புரூஸ் லீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் பெயர் ஜெமினி கணேசன். பயங்கரமான பயந்தாங்கொள்ளி. திரையில் ஒரிஜினல் புரூஸ் லீ நடித்த படம் பார்த்தால் மட்டும் சிறுவன் ஜெமினி கணேசனுக்கு லேசாகத் தைரியம் வர மாதிரி இருக்கே 'அடடே..!' என அவனது அம்மா புரூஸ் லீ எனப் பெயர் அழைக்கிறார். ஆனாலும் நாயகனுக்கு தைரியம் மட்டும் வந்தபாடில்லை. புரூஸ் லீக்கு தைரியம் வராவிட்டால் என்ன? சரோஜா தேவி மீது காதல் வந்து விடுகிறது. முகத்திற்கு பெளடர் போட்டுக் கொண்டு பாடல்களுக்கு நடனமாடும் சரோஜா இல்லை, பயந்து நடுங்கும் நாயகனை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்லும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . படம் தொடங்கும் பொழுது வரும் டிஸ்க்ளெயிமர் சுவாரசியத்தைக் கூட்டுவதாக உள்ளது. 'சில படங்களில் இருந்து திருடியும் உள்ளோம்' என்பதே அது. அந்தச் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் விதமாக முனீஷ்காந்த் படத்தில் வில்லனாக வருகிறார். இது சீரியசான ஸ்பூஃப் மூவியா அல்லது முழு நீ...
கட்டப்பாவ காணோம் விமர்சனம்

கட்டப்பாவ காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'ஏழு கலர்' மீஞ்சூர் வஞ்சரம் என்ற தாதாவிடமிருந்து, அதிர்ஷ்டத்தைத் தரும் கட்டப்பா எனும் வாஸ்து மீன் தொலைந்து விடுகிறது. பிறந்தது முதலே அதிர்ஷ்டம் கெட்டவராகக் கருதப்படும் 'பேட் லக் (bad luck) சிபி சத்யராஜின் வீட்டுக்கு அம்மீன் வந்து சேர்கிறது. பின் சிபி சத்யராஜின் வாழ்வில் என்ன மாதிரியான மாறுதல்கள் ஏற்படுகிறது என்பதே படத்தின் கதை. மீஞ்சூர் வஞ்சரமாக மைம் கோபி நடித்துள்ளார். திரைக்கதை தான் படத்திற்கு வில்லன் எனினும் இவரை வில்லன் எனக் கருதிக் கொள்ளலாம். தனது அனைத்து அதிர்ஷ்டத்துக்கும் கட்டப்பா தான் காரணமென நம்பும் பாத்திரம் இவருக்கு. மீன் காணாமல் போனவுடன், அவர் அடையும் பதற்றத்தைக் கச்சிதமாக பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். படத்தில் முழுமையாக வார்க்கப்பட்டுள்ள மிகச் சொற்ப கதாபாத்திரங்களில் இவருடையதும் ஒன்று. இரண்டே இரண்டு காட்சியில் வந்தாலும், 'பெயின்டர்' நண்டாக வரும் யோகிபாபு வழக்கம் போ...
காங்: ஸ்கல் ஐலேண்ட் விமர்சனம்

காங்: ஸ்கல் ஐலேண்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளுடன் பார்த்து மகிழ நல்லதொரு படம். மோனார்க் எனும் நிறுவனம், மனிதன் காலடிப்படாத 'ஸ்கல் ஐலேண்ட்' எனும் தீவை ஆராய அமெரிக்க அரசின் உதவியை நாடுகிறது. "நாம போகலைன்னா அந்தத் தீவுக்கு ரஷ்யா முதலில் போயிடும்" எனும் யோசிக்கும் அமெரிக்க அரசைச் சம்மதிக்க வைக்கிறது. ரொம்ப காக்க வைக்காமல், அதிர்வுகளை ஆராய நாலைந்து வெடிகுண்டுகளைத் தீவுக்குள் போட்டதுமே நாயகன் காங் தோன்றி அதகளம் செய்து விடுகிறார். வேரோடு மரத்தைப் பிடுங்கி அசுரர்கள் மேல் எறிந்தனர் வானரப்படை வீரர்கள் என இதிகாசமான ராமாயணத்தில் வர்ணனைகள் வரும். அது போல், மிஸைல் (missile) வேகத்தில் பறந்து வரும் ஒரு மரம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரைக் குறி பிசகாமல் தாக்கும். காங், அந்தத் தீவின் கடவுள். பாதாள லோகத்தில் இருந்து வரும் 'ஸ்கல் க்ராலர்ஸ் (Skull Crawlers)' எனும் ராட்சஷ பல்லிகளிடம் இருந்து தீவைப் பாதுகாக்கிறது காங். நிலப்பரப்பு சார்ந்த சாகசப்பட...
நிசப்தம் விமர்சனம்

நிசப்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எவருக்குமே நடந்துவிடக் கூடாத கொடுமை, ஓர் எட்டு வயது சிறுமிக்கு நிகழ்கிறது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை நிசப்தத்தில் தள்ளி விடுகிறார் இயக்குநர் மைக்கேல் அருண். படத்தின் முதல் பாதி முழுவதுமே அவஸ்தையுடனே அமர வேண்டியுள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான தன் எட்டு வயது மகளின் ரத்தம் தோய்ந்த கால்களைக் காண நேரிடும் தாயின் மனநிலையை கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியவில்லை. அச்சிறுமியும், அவளின் பெற்றோரும் அக்கொடிய அதிர்ச்சியில் (mental trauma) இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் இரண்டாம் பாதி. வாழ்வின் மீதான நம்பிக்கையை முதற்பாதி குலைக்கிறது என்றால், சிறுமியின் புன்னகையை மீட்டு இரண்டாம் பாதி படம் நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது. சில ரணங்கள் வாழ்நாள் முழுவதும் ஆறாதெனினும், முடங்கி விடாமல் அதிலிருந்து மீண்டு வருவது சாத்தியமே என சுபமாய் படம் முடிகிறது. "எல்லா ஆம்பிளைங்களு...
லோகன் விமர்சனம்

லோகன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
17 வருடங்களாக 9 படங்களில் வுல்வெரினாக மக்கள் மனதில் பதிந்த ஹ்யூ ஜாக்மேன், லோகன் படத்தோடு அப்பாத்திரத்தில் நடிப்பதற்கு குட் பை சொல்கிறார் ஹ்யூ ஜாக்மேன். அதற்கு ஏற்றாற்போல், ஹ்யூ ஜாக்மேனிற்கு மிகக் கச்சிதமானதொரு ட்ரிப்யூட் செய்துள்ளார் இயக்குநர் மேங்கோல்ட். மரணத்திற்காகக் காத்திருக்கும் லோகன், தன் நண்பர்களுக்காக ஒரு படகு வாங்கப் பணத்தைச் சேமிக்கிறார். ஆனால், லாரா எனும் மியூடன்ட் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் விருப்பமில்லாமல் சிக்கிக் கொள்கிறார் லோகன். யாரந்த சிறுமி? பலஹீனமான லோகன் எடுத்துக் கொண்ட கடமையை வலிமையான எதிரிகளை மீறி நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை. மனிதர்களைத் துன்புறுத்தி விடவே கூடாதெனக் கவனமாக இருக்கிறார் லோகன். ஆனால், படத்தின் தொடக்கமே வுல்வெரினின் உலோக நகங்கள் ரத்தத்தில் நனைகிறது. படம் நெடுகேவும் அதே கதைதான். வுல்வெரினின் நகங்கள் மனிதர்களின் முகங்களை, மேலிருந்த...
குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயைந்...
ஸ்பிலிட் விமர்சனம்

ஸ்பிலிட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஸ்பிலிட் என்றால் ஆளுமைப் பிளவு எனப் பொருள் கொள்ளலாம். கெவின் என்பவருக்குள் மொத்தம் 23 ஆளுமைகள் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவரான டென்னிஸ், மூன்று இளம்பெண்களைக் கடத்தி விடுகிறார். அவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதுதான் படத்தின் கதை. முகத்தில் அறையும் ரத்தம் தெறிக்கும் வன்முறைகள் இல்லையெனினும், படம் பார்வையாளர்களை ஒரு சங்கடமான மனநிலையிலேயே வைக்கிறது. மைக் ஜியாலாகிஸின் (Mike Gioulakis) ஒளிப்பதிவு மனதோடு விளையாடுகிறது. பெண்கள் அடைக்கப்பட்ட மூடிய அறை, கம்மியான வெளிச்சம், பிரதான கதாபாத்திரமான ஜேம்ஸ் மேக்-அவாயின் (James McAvoy) உடை நிறம், வெஸ்ட்டைலன் தார்ட்சன்னின் பின்னணி இசையென, படம் கலவையாக ஒரு பதற்றமான ஆர்வத்தை உண்டு செய்கிறது. சுவாரசியமான கதையாக இல்லாவிட்டாலும், ப்ளாஷ்-பேக் யுக்திகளால் திரைக்கதையைச் சுவாரசியப்படுத்தியுள்ளார் மனோஜ் நைட் ஷ்யாமளன். கேஸியின் சிறு பிராயத்து அத்தியாயங்களும் மனதி...
ரம் விமர்சனம்

ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அநிருத் இசையமைத்த 13வது படமான ‘ரம்’, ஒரு பேய்ப்படம் என்பது ஒரு சுவாரசியமான ஒற்றுமை. பேய்ப்படங்கள் பார்ப்பதையே தவிர்க்க விரும்பும் அநிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட ஒரு குடும்பம், பேய்களாக மாறிக் கொன்றவர்களைப் பழி தீர்க்கிறது. வேலை இல்லா பட்டதாரி படத்தில், தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் (H சைலன்ட் என்பதால் ரிஷிகேஷ் என்றே திரையில் பெயர் வருகிறது) தான் இப்படத்தின் நாயகன். அநிருதின் கஸினும் கூட. படத்தின் நாயகன் என்றாலும், பேய்ப்படத்தில் ‘சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ பேய் தானே! ஆகையால், அவர்க்கு அழுத்தமான அறிமுகமாக இப்படம் அமையவில்லை என்றே தோன்றுகிறது. பேயிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அவரும் ஒருவர் என்ற அளவில் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறார். ‘இவன் முகத்தில ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்டான். இவன் கோபப்படுறானா வருத்தப்படுறானான்னே தெரில’ என விவேக...
சிIII விமர்சனம்

சிIII விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி "சி3" ஆகிவிட்டது. ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் பார்வையாளர்கள் கொலைவெறி ஆகவேண்டும். ஆனால், நின்று நிதானித்து மூச்சு விட சூரியே உதவுகிறார். இரண்டாம் பாதிக்கு பின் தான் விட்டல் எனும் வில்லனைச் சேர்ந்தாற்போல் திரையில் 30 நொடிகளுக்கு மேல் பார்க்க முடிகிறது. முதல் பாதியில், எக்சர்சைஸ் செய்கிறார்; தனி விமானம் சள்ளெனத் ...
போகன் விமர்சனம்

போகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனி ஒருவன் வெற்றி ஜோடியான அரவிந்த் சாமி – ஜெயம் ரவி மீண்டும் இணைகிறார் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்குப் பிரதான காரணம். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். ‘போகன்’ என்றால் புலன்களால் பெறும் இன்பத்தை அனுபவிப்பவன் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, வாழ்விலுள்ள ராஜ சுகம் அனைத்தையும் அனுபவிக்கும் பெரும் இச்சையுடைய போகனாக அரவிந்த் சாமி கலக்கியுள்ளார். தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ள, ஆய கலைகளில் 52வது கலையான ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சக்தியை அரவிந்த் சாமி பிரயோகிப்பதாகக் காட்டியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். ஆனால், கூடு விட்டு கூடு பாய்தல் என்பது இறந்த உடலில் ஒருவர் தன் உயிரினைப் புகுத்திக் கொள்வதாகும். படத்தில் காட்டப்படுவது ‘கூடு மாறுதல் (Body Swapping)’ எனும் கலை. இந்த அழகான ஹாலிவுட் கற்பனைக்கும், சித்தர் போகர் அருளியதாகப் படத்தில் காட்டப்படும் பரகாயப் பிரவ...
எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக 'அடிமைகள்' என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுதிய...
அதே கண்கள் விமர்சனம்

அதே கண்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் "அதே கண்கள்". அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை. ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. நெடுஞ்சாலை, ஜீரோ ஆகிய படங்களிலேயே தன் நடிப்பை நிரூபித்து விட்டவர் ஷிவதா. எனினும் இந்தப் படத்தின் மூலம் தான் பரவலாகக் கவனிக்கப்படுவார் என்பது திண்ணம். தீபா எனும் பாத்திரத்தில் பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறார். அறிமுக காட்சியிலேயே அசத்திவிடுகிறார். அவரது குணாம்சமும் கடைசி ஃப்ரேம் வரை ஈர்க்கி...