Shadow

திரை விமர்சனம்

பலம் விமர்சனம்

பலம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் 'திறமையுள்ள' அல்லது 'சாதித்து முடிக்கக் கூடிய' எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், 'பலம்' என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. உறுத்தாத டப்பிங் மிகப் பெரிய ஆறுதல். சில இடங்களில் கைதட்டலும் பெறுகிறது. ரோஹன் தன் மனைவி சுப்ரியாவிடம் ரஜினி குரலில் பேசும் காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். படத்தின் நாயகனான ரோஹனும் டப்பிங் ஆர்டிஸ்ட் தான்; அதுதான் அவன் பலமும். ஒட்டுமொத்த படமும் ஒரு மென்கவிதை போல் ...
பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம். தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை. வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம். விஜய் அழகாக, அசத்தலாக, இளமையாகத் துள்ளலோடு படம் நெடுகே வருகிறார். நாயகனின் அறிமுகம் தான் மாஸ் ஹீரோ படத்தின் டோனை செட் செய்ய உதவுவது. மிகப் பரிதாபகரமாக அதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் பரதன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குத் தகுந்தபடி 'மாஸ்' எனும் விஷயம் முழுப் படத்திலுமேயே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சோபிக்கவில்லை. மர...
அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்

அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
அசாசின்ஸ் க்ரீட் – ஓர் அறிமுகம் க்ரீட் என்றால் நம்பிக்கை. அசாசின்ஸ்க்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விருப்பம் போல் வாழுபவர்கள். சுதந்திர உணர்வோடு திரிபவர்கள். ஆனால், டெம்ப்ளர்ஸ்களோ அதீத ஒழுக்கக் கோட்பாடுகள் உடையவர்கள். மக்களின் சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, உலகையே ஒழுக்கமாக மாற்றத் துடிப்பவர்கள். அப்பேராசை சாத்தியமாக அவர்களுக்கு அசாசின்களிடமுள்ள ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’ எனும் விதை தேவைப்படுகிறது. அதிலிருந்து தான் மனிதனின் முதல் ஒழுங்கீனச் செயல் பிறந்ததாகக் கருதுகிறார்கள். அவ்விதையை மட்டும் டெம்ப்ளர்ஸ்கள் அடைந்து விட்டால், அதைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஒழுக்கமான உலகைக் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கின்றனர். ஆறு நூற்றாண்டுகளாக ‘ஆப்பிள் ஆஃப் ஈடன்’-ஐத் தேடி வருகிறார்கள் டெம்ப்ளர்ஸ். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, அக்கொய்லர் (Aquilar de Nerha) என்பவர் அதை மறைத்து விடுகிறார். இந்த நூ...
சிங் விமர்சனம்

சிங் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பிக்சார் அனிமேஷன் படங்களில், கதை சொல்லும் முறையில் ஒரு மேஜிக் இருக்கும். பொம்மையோ, காரோ, ரோபோவோ, எலியோ, மீனோ என இப்படி எதுவாக இருந்தாலும், அதை உயிருள்ள கதாபாத்திரங்களாக நம்மை உணரச் செய்து விடுவார்கள். இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட், தனதுமினியன்ஸ் எனும் கதாபாத்திர உருவாக்கத்தால், வயது வித்தியாசமின்றி அத்தனை ரசிகர்களையும் தன் பால்கவர்ந்தவர்கள். அவர்கள் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹிட்டான மினியன்ஸ் படத்திலேயே கூட, பிக்சார் ஏற்படுத்தும் மேஜிக் இல்லாமல் இருந்தது. ஆனால், "சிங் (SING) படத்தில் மாயம் செய்துள்ளனர் இல்லூமினேஷன் என்டர்டெய்ன்மென்ட். பஸ்டர் மூன் எனும் கோலா கரடிக்கு, தன் தியேட்டரில் பிரம்மாண்டமான இசைப் போட்டி நடத்த ஆசை. கையிருப்போ தொள்ளாயத்து சில்லறை மட்டுமே இருக்கிறது. தனது அசிஸ்டென்ட்டான பச்சை ஓனானிடம் 1000 டாலர்கள் பரிசுத் தொகை என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், மூதாட்டியான பச்சை ஓனானின...
துருவங்கள் பதினாறு விமர்சனம்

துருவங்கள் பதினாறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'நைட் நாஸ்டால்ஜியா (Knight Nostalgia)' என்பது கார்த்திக் நரேனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். இப்பெயர், படத்தின் கதையோடு மிக நெருக்கமாகப் பொருந்துகிறது. விபத்து நடந்த இரவை நாஸ்டாலஜியா போல் தான் மனக்கண்ணில் கொண்டு வந்து அலசுகிறார் ரஹ்மான். ரஹ்மான் தான் இந்தப் படத்தில் வரும் knight எனக் கொள்ளலாம். கதை சொல்லும் பாணியும், தொழில்நுட்பத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ள விதமும் மிகவும் ஃப்ரெஷாக உள்ளது. 21 வயது இயக்குநர் கார்த்திக் நரேன் பார்வையாளரை முழுவதும் தன் வயப்படுத்தி உள்ளார். பூங்காவின் அருகே ஒரு வாலிபர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்; அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார். இவ்விரு வழக்கையும் கவனிக்கும் இன்ஸ்பெக்டர் ரஹ்மானின் ஒரு பகலிரவு விசாரணை தான் படத்தின் கதை. மிக மிகச் சாதாரணமான ஒரு கதை. கதையைக் கோர்வையாக்கி நேர்க்கோட்டில் பார்த்தால், எந்த முடிச்சுகளு...
கத்தி சண்டை விமர்சனம்

கத்தி சண்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொஞ்சமே கொஞ்சம் கூட யதார்த்தம் வந்து விடக் கூடாதென மிகவும் கவனமுடன் படத்தை எடுத்துள்ளனர். நாயகன் யாரென்பது சஸ்பென்ஸ். முக்கால் வாசி படத்திற்குப் பின் தான் ஓப்பன் செய்கிறார்கள். அந்த சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கும்தான். நாயகன் யாரென விசாரிக்காமல் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டு உதவி செய்கிறார் சூரி; தமன்னாவோ காதலிக்கவே செய்கிறார். 'எல்லா லவ்விலும் ஒரு பொய் இருக்கும்; உன் பொய்ல லவ்விருக்கு' என காரணமும் கண்டுபிடிக்கிறார். டெபுடி கமிஷ்னராக வருகிறார் ஜெகபதி பாபு. மிக சீரியசான முகத்தோடு படத்தில் காமெடி செய்கிறார். நாயகன் யார், என்ன செய்கிறான் என விசாரிக்கிறேன் என்று சொல்லி பெரிய ரவுடிகளை வைத்துக் கடத்தி அடிக்கிறார். 'பணம் தருகிறோம். ஓடிடு' என போலீஸ் மிரட்டுகிறது. அதற்கு மசியாத நாயகனை நல்லவனென அங்கீகரித்து, மாப்பிள்ளையாக ஏற்கிறார் ஜெகபதி பாபு. விஷால் யார், ...
“பலே” வெள்ளையத் தேவா விமர்சனம்

“பலே” வெள்ளையத் தேவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில், சிவாஜி தன் தளபதி ஜெமினியைப் பார்த்துச் சொல்லும் பிரபலமான வசனத்தைப் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். வெற்றியை நோக்கிப் போகும் பொழுது, கூட இருந்து உற்சாகம் தரச் சொல்லப்படுவது "பலே". இப்படத்தின் நாயகனது செயல், அப்படி பலே சொல்லிப் பாராட்டும்படி (!?) இருக்கும் என்பதை வலியுறுத்தும் காரணப் பெயராகத் தலைப்பை வைத்துள்ளனர். வயலூருக்கு ட்ரான்ஸ்ஃபராகி வருகிறார்கள் ஃபோஸ்ட் மாஸ்டர் ரோகினியும் அவர் மகன் சசிகுமாரும். அவருக்கு தான்யா மீது கண்டதும் காதல் மலர்வதோடு உள்ளூர் கேபிள்காரருடன் தகராறாகி விடுகிறது. காதலும் தகராறும் என்னானது என்பதே படத்தின் கதை. தணக்கனாக சங்கிலி முருகன் நடித்துள்ளார். கோவை சரளாவை நடிக்க விட்டு விட்டு, அசால்ட்டாக ஸ்கோர் செய்குறார். மிக வலுவான கேரக்டர் ரோல்களை இயக்குநர்கள் அவருக்குத் தரலாம். 'செல்ஃபி' காத்தாயியாக கோவை சரளா. படம் இவரை நம்பித்தான் எடுக்...
வீரசிவாஜி விமர்சனம்

வீரசிவாஜி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கால் டாக்சி ஓட்டுநர் சிவாஜியிடம் இருந்து 5 லட்சத்தை மோசடி செய்து அபகரித்து விடுகிறார் ஜான் விஜய். வீரம் கொண்டு வெகுண்டெழும் சிவாஜி தன் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லி நாயகியாக அறிமுகமாகி உள்ளார். 'தீவிர விஜய் விசிறி'யாக வருகிறார். இது மட்டுந்தான் படத்திலுள்ள அதிகபட்ச சுவாரசியமே! 'தாறுமாறு தக்காளி சோறு' பாடலில் இடுப்பை வெட்டி வெட்டி நடக்கிறார். ஏழைக் குழந்தைகளுக்கு நாயகன் புத்தகங்கள் வாங்கித் தந்ததும் காதல் மலர்ந்து விடுகிறது. இப்படியாக இயக்குநர் கணேஷ் விநாயக்கின் கற்பனையின்மை ஃப்ரேம்க்கு ஃப்ரேம் பூதகரமாய் உறுத்துகிறது. அநாதை நாயகன்; அவன் அக்காவாக நினைக்கும் வினோதினியின் மகளுக்கு மூளையில் கட்டி; நாயகியின் மேல் முதல் பார்வையிலேயே காதல்; ஆப்ரேஷனுக்காக நாயகன் புரட்டும் பணத்தை வில்லன் ஏமாத்தி விடுகிறான்; நாயகனுக்கு தலையில் அடிபட்டு கடைசி 6 மாதங்...
செண்பககோட்டை விமர்சனம்

செண்பககோட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகுந்த வேதனை அனுபவித்து இறந்த சிறுமி ஒருத்தியின் ஆவி, பழி வாங்குவதற்காக ஜெயராமின் மகள் மீது புகுந்து கொள்கிறது. அவ்வேதனையில் இருந்து அக்குடும்பம் எவ்வாறு மீள்கிறது என்பதுதான் படத்தின் கதை. ‘ஆடுபுலியாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் இது. கதை தொடங்குவதற்கு முன்பே கவரும் விஷயமாக கேமிரா கோணங்கள் உள்ளது. வனத்தின் வசிகரீக்கும் கலர் டோனும் தொடக்க காட்சிகளை ரசிக்க வைக்கிறது. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். பேயாகிக் கணவனைக் காக்கும் வனராணியும், அந்த செண்பகக்கோட்டையின் ஃப்ளாஷ்-பேக் எபிசோட்டும் நல்லதொரு தொடக்கம். தினேஷ் பல்லத்தின் கதையில், வலிமையான கதாபாத்திரங்கள் இருந்தும் திரைக்கதை அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மனதில் படிந்து விட்டதொரு குற்றவுணர்ச்சி கோடீஸ்வரரான ஜெயராமைத் தூங்க விடாமல் அலைக்கழிக்கிறது; பசியால் துடித்து இறந்து போன தன் மகளின் மரணத்திற்குப்...
மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை கொள்கிறேன்' என சுசீந்திரன் கூறியுள்ளார். அது உண்மை தான். கபாலியில் ரஞ்சித் சாதிக்காததை இயக்குநர் சுசீந்திரன் இந்தப் படத்தில் சாதித்துக் காட்டியுள்ளார். கல்வியால் மட்டுமே மாற்றம் சாத்தியமென மெட்ராஸ் படத்தில் சொல்லியிருப்பார் ரஞ்சித். அதை அலட்சியத்தோடு, 'யார் படிக்க வேண்டாம்?' எனக் கேட்ட எகத்தாள பேர்வழிகளுக்கு, அக்கேள்வியின் அபத்தத்தை 'மாவீரன் கிட்டு' எனும் அழுத்தமான அரசியல் படம் புரிய வைக்கும். அரசியல் படம் மட்டுமன்று சாதீயத்தைப் பேசும் சாதிப்படமும்! அப்படி வரையறுப்பதும் கூடப் பிசகாகிவிடும். இது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் சமூகப்படம். கீழக்குடி மக்கள் இறந்தால் அவர்களின் பிணம் உயர்குடி மக்களின் தெரு வழியே கொண்டு செல்லக்கூடாதென தடை உள்ள புதூர் கிராமம் அது. நீதிமன்றம் வரை சென்று பிணத்தைக் கொண்டு செல்ல அனுமதி வாங்கியும் ஆதிக்கச் சாதியினரை மீறி க...
சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பது தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கை உள்ளவர் விஜய் ஆண்டனி. அதிலும், சுஜாதாவின் “ஆ” நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மேலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அதிலும் எண்ணெய் ஊற்றுவது போல், 10 நிமிட படத்தையும் யூ-ட்யூபில் போட்டு மாஸ் காட்டினார் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு காதில் குரல்கள் கேட்கின்றன. தற்கொலை செய்து கொள்ளும்படியும், ஜெயலட்சுமியைக் கொல்லும்படியாகவும் கட்டளை இடுகிறது அக்குரல். இருந்தாற்போல் திடீரென அக்குரல்கள் கேட்கக் காரணம் என்னவென்றும், அது அவரது பூர்வஜென்மத்தைக் கிளறி எப்படி அலைக்கழிக்கிறது என்பதும்தான் படத்தின் கதை. குரல்கள் கேட்பதை ‘ஆ’ நாவலிலிருந்தும், அதற்கான காரணத்தை ‘லூசி’ படத்திலிருந்தும் தழுவி சைத்தானை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சுஜாதாவின் ‘ஆ’ நாவலினின்று, மிகக் கச்சிதமான முதல் பாதியைத் தந்துள்ளா...
அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்

அழகென்ற சொல்லுக்கு அமுதா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி கதாபாத்திரத்தின் பெயர் அமுதா என்பதை எந்தச் சிரமமுமின்றி யூகிக்கலாம். வியாசர்பாடியைச் சேர்ந்த நாயகன், நாயகியின் பிறந்தநாளுக்கு ஒரு கவிதை எழுதுகிறான். அதன் முதல் வரி தான் படத்தின் தலைப்பு. நாயகன் ரிஜன் சுரேஷ் நாயகி ஆர்ஷிதாவைக் காதலிக்கிறான். நாயகிக்கு அவனைச் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை. ஆனால், நாயகியைச் சுற்றுவதையே முழு நேர வேலையாகச் செய்கிறான். நாயகி கோபமாகத் தன்னை விட்டுவிடுமாறு கேட்கிறாள். நாயகன் ரொம்ப ஃபீலாவதால், டாஸ்மாக்கில் இருந்து அவனது நண்பர்களை அவனை அழைத்துக் கொண்டு துரைப்பாக்கம் மேம்பாலத்துக்கு வந்துவிடுகிறார்கள் ஒரு பாட்டுடன். வியாசர்பாடி அண்ணன் கேடி வந்தா லேடி தந்தா தாடி … என நாயகனின் சோகத்தைப் பாட்டாகப் படிக்கிறார்கள். நாயகி பொறுத்துக் கொள்ள முடியாமல் காவல் நிலையத்தில் புகார் தருகிறாள். “அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க இல்ல? ஏன்டா பின்னாடியே போய் டார்ச்சர் செய்ற?”...
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள். 50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி தன் படத்தில் நடிக்க வைத்து, நாயகி அருந்ததி நாயருக்குத் தெரியாமல் கேண்டிடாக ஷாட்கள் எடுத்துப் படத்தை முடித்து விடுகிறார். நாயகியோ விருமாண்டியின் மகள். பிரச்சனை பெரிதாகி நாயகனின் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. பிறகு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. புதுமுகம் சஞ்சய் நன்றாக நடனம் ஆடுகிறார்; நடிக்கவும் செய்கிறார். அதிகம்...
இளமி விமர்சனம்

இளமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையான மனிதர்களின் காதல், தியாகம், வீரம் ஆகியவற்றை மதித்துப் போற்றும் வகையில் அவர்களை சிறு தெய்வங்களாக்கி வழிபடுவது நம் மண்ணின் மரபு. அப்படி 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மாங்குளத்தைச் சேர்ந்த வேட்டைக்காரனான கருப்புக்கும், கிளியூரைச் சேர்ந்த இளமிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால், இளமியின் தந்தையான வீரைய்யனோ, தனது வடம் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குபவர்களுக்கே தன் மகளென ஊர்ப் பிரச்சனையொன்றின் பொழுது வாக்கு கொடுத்துவிடுகிறார். இளமி - கருப்பு இணையின் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஜல்லிக்கட்டின் மேன்மையைப் பற்றிப் பேசும் காட்சிகளோடு படம் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களுக்கு விளையாட்டல்ல, அது வீரம்; தமிழர்கள் தன் மானத்தை மாடுகளின் மீது இறக்கி வைத்தனர்; மாடு அணைபவனுக்கே பெண் என வசனங்கள் உள்ளன. மேலும், ஜல்லிக்கட்டின் வகைகளைப்...