Shadow

திரை விமர்சனம்

இரும்பு(க்) குதிரை விமர்சனம்

இரும்பு(க்) குதிரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பைக், பைக் ரேஸ் என ஆர்வத்தைக் கிளறிய படம். ஆனால் தமிழ் சினிமாவின் எல்லைகளுக்குள் நின்று, ஊறுகாயாகத்தான் மேற்படி விஷயத்தை உபயோகித்துள்ளார்கள். தாய் இறந்ததும் நாயகனை நாயகி தேற்றுகிறார். அது ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’. அப்படத்தில் நாயகியை யாரோ கடத்தி விட்டதாக கற்பனையாக நினைத்துக் கொள்வார் அதர்வா. இந்தப் படத்தில், கண் முன்னேயே தந்தை இறந்துவிடுவதால் மனமுடைந்து போகிறார். நாயகி ப்ரியா ஆனந்தைக் கண்டதும் காதலாகி, மனதை சுயமாகத் தேற்றிக் கொள்கிறார். ஆனால் இந்தப் படத்தில், நிஜமாகவே நாயகியைக் கடத்தி விடுகின்றனர். யார் எதற்கு ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் கதை. பரதேசிக்குப் பின் சிக்ஸ்-பேக்குடன் வந்துள்ளார் அதர்வா. தேமோவென இருக்கும் அவரை படம் முழுவதும் இயக்குவது பெண்கள்தான். அம்மா தேவதர்ஷினி, பாட்டி சச்சு, பால்ய காலத்தோழி ராய் லட்சுமி, ஒரு தலை காதலி ப்ரியா ஆனந்த் ஆகியோரே! ப்ரியா ஆனந்தை விட ...
எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம்

எக்ஸ்பேண்டபிள்ஸ் 3 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நட்சத்திரப் பட்டாளங்களை ஒன்றிணைத்து படமெடுப்பது என்பது சாதாரண விஷயமன்று! வெற்றிகரமாக மூன்றாவது முறையாக இச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் சில்வஸ்டர் ஸ்டலோன். நான்காம் முறையும் செய்வார் என்று நம்புவோமாக! அந்நாளைய வ்ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகன், கவர்ச்சிகர ஜேம்ஸ் பாண்ட்டான பியர்ஸ் பிராஸ்னன் போன்றோரும் அடுத்த பார்ட்டில் இணைவதாகத் தெரிகிறது. படத்தின் தொடக்கமே மிக அதிரடியாகத் தொடங்குகிறது. ஒரு ட்ரெயினையே சிறைச்சாலையாகக் கொண்டு, டாக்டர் டெத் எனும் கைதியை சிறைச்சாலைக்குக் கொண்டு போகின்றனர். ஹெலிகாப்டரில் வரும் சில்வஸ்டர் ஸ்டலோன் குழுவினர் டாக்டர் டெத்தை மீட்கின்றனர். ஆனால், டெத் தப்பிப்பதைவிட்டு ட்ரெயினையே ஆயுதமாக்கி ராணுவ சிறைச்சாலை மீது ஏவி நிர்மூலமாக்குகிறார். பிளேட் ஹீரோ வெஸ்லீ ஸ்னைப்சுக்கும், படத்துக்கும் இதைவிட அதிரடியானதொரு அறிமுகம் தர இயலாதென்றே தோன்றுகிறது. டாக்டர் டெத், எ...
அஞ்சான் விமர்சனம்

அஞ்சான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொன்மத்தை நவீனப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்வது கலையினொரு அம்சம். தளபதி படம் இதிகாசத்தின் ஒரு சின்னஞ்சிறு பகுதியின் நவீன மீட்டுருவாக்கமே! அவ்வகைமையைச் சார்ந்த படம்தான் லிங்குசாமியின் ‘அஞ்சான்’. பிருத்விராஜ் செளகான் என்னும் மன்னரைதான் சூர்யா நடிக்கும் ராஜூ பாய் பாத்திரமாக மீட்டுருவாக்கம் செய்துள்ளார் லிங்குசாமி. முதல் தாரைன் போரில் முகமது கோரியைப் பிழைத்துப் போ என பிருத்விராஜ் செளஹான் அனுப்புவது போல், வில்லன் மனோஜ் பாயை முதல் முறை எச்சரித்து அனுப்பி விடுகிறார் சூர்யா. பிருத்விராஜ் செளஹான் சுயம்வரத்தில் சம்யுக்தாவைத் தூக்கிச் சென்றதுபோல், சூர்யா மணப்பெண் கோலத்தில் இருக்கும் கமிஷ்ணர் பெண்ணான சமந்தாவைக் கடத்தி விடுகிறார். ஆக, இப்படத்தை மற்றுமொரு பழிவாங்கும் கதை என புறந்தள்ளிவிட முடியாது. பொதுவாக அதி நாயகத்துவமுள்ள படத்திற்கு தலைப்பு நாயகன் பெயரையோ அல்லது அவரைப் புகழும் சிறப்புப் பெயரையோ வைப...
சிநேகாவின் காதலர்கள் விமர்சனம்

சிநேகாவின் காதலர்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் முத்துராமலிங்கனின் சூட்டியிருக்கும் படத்தலைப்பே கதை சொல்கிறது. நாயகியைப் பிரதானமாக வைத்து எடுக்கப்படும் அரிய படங்கள் வரிசையில் 'சிநேகாவின் காதலர்கள்' சேர்ந்து கொள்கிறது. தன்னை பெண் பார்க்க வருபவரிடம், தனது காதல் கதைகளை விவரிக்கிறாள் சிநேகா. இந்த ஒரு வரிகதையைக் கேட்டால் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படம்தான் ஞாபகம் வரும். ஆனால் இந்தப் படத்தினை அந்தப் படத்துடன் ஒப்பிடவே முடியாது. சிநேகா, செந்தில்குமார் (சேரன்) போல் தெளிவற்றவள் கிடையாது. காதலில் தோல்வி அது இது என தத்துபித்து என உளறும் சராசரி தமிழ்ப்பட நாயகன்/நாயகி போலின்றி மிகத் தெளிவானவள்; மிகத் தைரியமானவள். சேரன் கணக்கு இரண்டு காதல்தான். ஆனால் சிநேகாவிற்கோ மூன்று (நால்வரில் கிட்டார் வைத்திருக்கும் அதிஃப்பிற்கு சிநேகா மீது ஒருதலை காதல்). சிநேகாவின் முதல் காதல் கல்லூரியில்தான் தொடங்குகிறது. இதற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்ட...
இன் டு தி ஸ்டோர்ம் (Into the Storm) விமர்சனம்

இன் டு தி ஸ்டோர்ம் (Into the Storm) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
எங்கே நாம் இயற்கையின் வல்லமையை மறந்துவிடுமோ என இயற்கை தனது சக்தியை அடிக்கடி நினைவுப்படுத்தும். 2004 சுனாமியையோ, 2008 தானே புயலையோ நன் நினைவில் இருந்து என்றும் நீங்காது. அப்படி இயற்கையின் வல்லமையை கண் முன் கொண்டு வந்திருக்கும் 3-டி படம்தான் 'இன் டு தி ஸ்டோர்ம்'. இயற்கைச் சீற்றத்தில் மாட்டிக் கொள்ளும் தனது குடும்ப உறுப்பினரை நாயகன் காப்பாற்றும் வழக்கமான ஹாலிவுட் கதைதான். ஆனால், நாமும் படத்தின் கதாபாத்திரங்களோடு புயலில் சிக்கிக் கொள்ளும் உணர்வினை படம் தருகிறது. நம்மை அதிக நேரம் காக்க வைக்காமல், படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சூறாவளி வந்துவிடுகிறது. டோன்னியைத் தேடி அவனது தந்தை மோரிஸ், பாழடைந்த ஃபேக்டரி நோக்கிப் புறப்படுகிறார். ஆலிசன் ஸ்டோன் எனும் சூறாவளி ஆராய்ச்சியாளரை இரண்டாம் முறை ஏற்படும் சுழல் இழுப்பிலிருந்து காப்பாற்றுகிறார் மோரிஸ். மோரிஸும், ஆலிசனும் டோன்னியைத் தேடிப் போகின்றனர். அ...
ஜிகர்தண்டா விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. ...
சரபம் விமர்சனம்

சரபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சரபம் - சிங்க முகம் கொண்ட பறவை. ஒருவனின் ஆசையைத் தூண்டி, அவனை பகடையாக்கி விளையாடுகின்றனர் கோடீஸ்வர தந்தை ஒருவரும் அவரது மகளும். அந்த விளையாட்டின் முடிவுதான் படம். இது முழுக்க முழுக்க கதாநாயகி சப்ஜெக்ட். சிங்க முகத்தினைக் கொண்ட பறவை என படத்தின் தலைப்பான சரபமும் நாயகியின் அகத்தைத்தான் குறிக்கிறது போல! ஆனால் இந்தப் படத்திலுமேயே அசத்தலாக நடித்துள்ளார் நாயகன் நவீன் சந்திரா. சின்ன சின்ன முகபாவங்களில்கூட கவர்கிறார். பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்கான கோபங்கள் அவருக்குள் எழுந்தாலும், முடிவில் ஒரு சராசரியாகவே இருப்பது ஆறுதல். நாயகியாக சலோனி லுத்ரா. அறிமுகக் காட்சி முதலே படத்தின் ஓட்டத்திற்கு எண்ணெய் ஊற்றுபவராக உள்ளார். அந்நியமான முகம் என்றாலும் மனதில் சுலபமாகப் பதிகிறது. நடை, உடை, பாவனை என அனைத்திலும் ஒரு அசால்ட்டான தெனாவெட்டை வெளிபடுத்துகிறார். இயக்குநர் அருண்மோகன் நடிகர் அனுமோகனின் (படையப்பரே! பாம்பு ...
திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் அனீஸ் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாமென யோசிக்கும் பொழுது, வீட்டிலிருந்த ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற பத்திரிக்கையைப் பார்த்துள்ளார். அதை உல்டா செய்து, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என தலைப்பு வைத்துள்ளார். அபு பக்கர் என்ற பெயரில் விஜய ராகவாச்சாரியும், ஆயிஷா என்ற பெயரில் விஷ்ணு பிரியாவும் ட்ரெயினில் பயணிக்கின்றனர். ஒருவரை ஒருவர் முஸ்லிம் என நினைத்துக் கொண்டு, தங்களை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டே காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவருமே ஐயங்கார் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்ற உண்மை தெரியவந்ததும் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. விஜய ராகவாச்சாரியாக ஜெய் நடித்துள்ளார். இப்படத்திலும், உளறலாகக் காதலை வெளிப்படுத்தும் வழக்கமான பாத்திரம்தான். அபு பக்கராக தன்னை நாயகியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதால், இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அம்மதத்தின் சடங்குகள் பற்றியும் தெரிந்து கொள்ள விருப்பம் காட்...
ராமானுஜன் விமர்சனம்

ராமானுஜன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என மகாகவி பாரதிக்கே கணிதம் என்றால் அவ்வளவு கசப்பு. சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்? அவர்கள் மத்தியில் கணித மேதை ஒருவர் வாழ்ந்தால் அவர் கதியென்னாகும்? அதோ கதிதான். ராமானுஜரை ஒரு ஜீனியஸாக வாழவிடாமல் அவருக்கு கஷ்டங்கள் கொடுத்து அவரை சராசரி மனிதனாக்கத் துடிக்கிறது அவரது சுற்றமும் சமூகமும். இதையெல்லாம் எதிர்கொண்டு, அவரெப்படி உலகம் புகழும் மேதையாக வெற்றி கண்டார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாகவும் உள்ளது. கோயிலில் தரும் சுண்டல் அளவின் பற்றாக்குறையைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்வது; பள்ளிக்கு அட்டவணை தயார் செய்வதென சிறுவன் ராமானுஜனின் கணித அறிவினை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது அருமை. சிறுவன் ராமானுஜனாக நடித்திருக்கும் அன்மோல் கவர்கிறார். வளர்ந்த பின் டி.டி.ஆரிடம் ராமானுஜன் சொல்லும் Partition Number...
சைவம் விமர்சனம்

சைவம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சைவம் என்ற தலைப்பு மதத்தைக் குறித்ததல்ல. புலால் மறுப்பைப் பேசுகிறது. ஒரு குடும்பம் எப்படி ஏன் சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறது என்பதுதான் கதை. இக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குச் சொன்னது அவர் தாயார் என்பதை படம் முடிவில் குறிப்பிடுகிறார். தமிழ்ச்செல்வி தனது செல்லப் பிராணியான பாப்பா எனும் சேவல் பலி கொடுக்கப்படக் கூடாதென அதனை மறைத்து வைக்கிறாள். வீட்டிலிருப்பவர்கள் அச்சேவலை கண்டுபிடித்து பலி கொடுக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. சைவம் ஒரு அழகான ஃபேமிலி டிராமா. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படம் நகர்கிறது. சேவலை விடவும், படத்தின் முக்கிய பங்கு வகித்திருப்பது நாசர் குடும்பம் வசிக்கும் அந்தச் செட்டிநாடு வீடுதான். அவ்வீட்டின் தொழுவம், மாடி, பரண் என அனைத்துமே கதைக்கு உதவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத முகங்களாகப் பார்த்து, கதாபாத்திரங்களுக்குப் பொருந்த...
கோச்சடையான் விமர்சனம்

கோச்சடையான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் முழு நீள மோஷன்-கேப்ச்சர் படம், அதற்கே உரிய மழலை நடையோடு திரையில் அழகாய்த் தத்தித் தாவிப் பிரேவசித்துள்ளது. ராணா எனும் கோச்சடையான் ரணதீரன், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதோடு அவரது மரணத்திற்கும் பழிவாங்குதுதான் படத்தின் கதை. கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதுவும் ராஜா காலத்துக் கதை என்பதால், அவரது வழக்கமான பாணியில் அப்பா ரஜினி, அண்ணன் ரஜினி, தம்பி ரஜினி என ரஜினிகளை வரிசையாகக் கதையில் இறக்கியுள்ளார். திருப்பங்கள் பல நிறைந்த மிகச் சுவாரசியமான திரைக்கதை. ஆனால் அதை உள் வாங்கிக் கொள்ள முடியாமல், புது விதமான காட்சி அனுபவம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ரஜினி, நாகேஷ், ஜாக்கி ஷெராஃப், நாசர், ஷோபனா, ஆதி தவிர வேறு எவரையும் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. படத்தில் வரும் வீரர்கள், ஊர் மக்கள் என இதர கதாபாத்திரங்கள் அனைவரின் முகமும் மெழுகு பூசினாற்போலவே உள்ளது. ரா...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சந்தானம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். மேலும் தெலுங்கிலும், ஹிந்திலும் பெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொள்கிறான் சக்தி. அவ்வீட்டு வாசற்படியைத் தாண்டினால், அவரை வெட்டி கூறு போட அரிவாள்களுடன் பல ஆட்கள் தயாராகக் காத்திருக்கின்றனர். சக்தி எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சக்தியாக சந்தானம். ‘டக்கரு.. டக்கரு..’ என ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றுகிறார். அவர் அறவங்காடு எனும் கிராமத்திற்குப் போகும் வரை சந்தானத்தின் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. அதுவும் அதிக கலகலப்பில்லாமல்.. சொல்லப் போனால், சகித்துக் கொள்ள பொறுமையும் கோருகிறது. முக்கியமாக சோலர் ஸ்டார் இராஜகுமாரன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வரும் காட்சிகள் எல்லாம் கடியின் உச்சம். அறவங்காடு எனும் கிராமத்திற்கு சந்தானம் சென்றவு...
யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை. கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. மேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்...
நீ எங்கே என் அன்பே விமர்சனம்

நீ எங்கே என் அன்பே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரிதினும் அரிதாக வரும் நாயகிக்கு முக்கியத்துவுமுள்ள படமிது. வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ எனும் ஹிந்திப் படத்தினைத் தழுவி, இயக்குநர் சேகர் கம்முலா தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை எடுத்துள்ளார். ஒரு ப்ராஜெக்ட்டிற்காக, அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வரும் அனாமிகாவின் கணவர் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடி, அனாமிகா ஹைதராபாத் வருகிறார். அனாமிகாவின் கணவருக்கு என்னானது? அவர் கிடைத்தாரா? என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. இயக்குநர் நயன்தாராவை தமிழ்ப் பெண்ணாக்கி ஹைதராபாத்தில் சாமர்த்தியமாக நடமாடவிட்டுவிடுவதால், படத்தின் தெலுங்கு நெடி ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. அனாமிகா தங்கியிருக்கும் விடுதியின் ஒரு பக்கம் மசூதி, மறு பக்கம் பெரிய காளி சிலை வைத்துக் கொண்டாடப்படுகிறது. ‘அனாமிகா’ தைரியமானவர்; சக்தி மிகுந்தவர் என்பதன் உருவகமாக காளி சிலை உபயோகிப்படுத்தப்படுவதோ...
என்னமோ நடக்குது விமர்சனம்

என்னமோ நடக்குது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து லட்ச ரூபாய் அவசரத் தேவைக்கு, பர்மாவிடம் வேலைக்குச் சேருகிறான் விஜய். வேலைக்குச் சேர்ந்த நாலாம் நாளில், விஜய்யிடமிருந்து யாரோ சுமார் 15 கோடிக்கு மேல் திருடி விடுகின்றனர். பணத்தை தவறவிட்ட விஜய்யின் கதியென்ன? அவனுக்கு ஏன் ஐந்து லட்சம் தேவைப்படுகிறது? அந்தப் பணம் விஜய்யுக்குக் கிடைத்ததா? பர்மாவின் பணத்தைக் கொள்ளையடித்தது யார்? ஏன்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை விறுவிறுப்பான கதையில் அமைத்துள்ளார் இயக்குநர் ராஜபாண்டி. நாயகனாக விஜய் வசந்த். போஸ்டர் ஒட்டும் வேலை செய்பவர். அவரும், அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும் சென்னைத் தமிழ் பேசுபவராக நடித்துள்ளனர். பாச மிகுதியில் சரண்யா பொன்வண்ணனை காலால் எட்டி உதைக்கும் பாசக்காரர் விஜய் வசந்த். இப்படத்திலும், ‘என் மொவனுக்கு லட்டு மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு!’ என கண்களைப் பெரிதாக்கி மகிழும் பாத்திரமே! ஆனால் அதையும் மீறி, அவர...