Shadow

கட்டுரை

“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

“பேச மறுக்கப்படும் தலைப்புகளை விவாதிப்போம்” – ஸ்ருதிஹாசன்

சமூகம்
தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை வரும் ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடவுள்ளார். தனது பிறந்தநாளன்று, சமூகம் மற்றும் சுற்றுப்புறம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். இதனையொட்டி மனநலம், திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பெண்கள், ஃபேஷன் துறையின் நிலைத்தன்மை போன்ற தலைப்புகளில், சமூக வலைதளப் பக்கத்தில் ஜனவரி 27 முதல் அவர் தொடர்ச்சியான நேரலை நிகழ்வுகளை நடத்தவுள்ளார். இந்த நேரலை நிகழ்வுகள் மூலம், ஸ்ருதிஹாசன், பொதுவாகச் சமுகத்தில் விவாதிக்க மறுக்கப்படும், பல தலைப்புகளில் விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விசயங்களின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறார். இந்த நேரலை அமர்வுகளில் ஸ்ருதிஹாசன் பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்களுடன் இணைந்து, இந்தத் தலைப்புகளைப் பற்றி விரிவாக விவாத...
ஜெய் பீம் – பாராட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

ஜெய் பீம் – பாராட்டிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு

அரசியல், சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர். முன்னதாக படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்த நல்லகண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என்.எப்.டி.சி.-இல் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார். படத்தைப் பார்த்துவிட்டு நல்லகண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லகண்ணு பதிவு செய்தார். தமிழகத்தில் 1990களில் நடந்த ப...
பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

பார்வதி நாயர் இஸ் எ டோஸ்ட்மாஸ்டர்

சமூகம்
உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான டோஸ்ட்மாஸ்டர், 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கும் இந்த 'டோஸ்ட்மாஸ்டர்' தன்னார்வ தொண்டு நிறுவனம், கல்வியியல் துறையில் ஆக்கபூர்வமாக செயல்படும் தலைவர்களையும், தலைமைப் பண்புடன் கூடிய பேச்சாளர்களையும், மனதின் மாசுகளை அகற்றி, வலிமையான உளவியல் உத்திகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான பாணியை எளிதாக விளக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. இவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அல்லது பேச்சாளர்களாகவும் அழைக்கப்படுவர். உதாரணமாக்க...
கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

கர்ணன் – ஆப்பதனை அசைத்த திமுக அனுதாபிகளும், அதிலமர்ந்த உதயநிதி ஸ்டாலினும்

சமூகம், சினிமா, மற்றவை
கொடியன்குளம் கலவரம் தான் கர்ணன் படத்தின் கரு என நம்பத் தொடங்கிய இணைய திமுகவினர், தொடர்ந்து அதைப் பற்றிச் சமூக ஊடகத்தில் தங்கள் கோபத்தினைப் பதிந்து வந்தனர். இறுதியாக, திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, இணைய திமுகவினரைக் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி (!?) வைத்துள்ளார். ஒரு புனைவைப் புனைவாகப் பார்க்கச் சொல்லி உடன்பிறப்புகளிடம் நயமாகச் சொல்லிக் கடக்காமல், வரலாறு சரி செய்யப்படவேண்டும் என நல்லெண்ணத்தில் உதயநிதி ஸ்டாலினும் கர்ணன் திரைப்படக் குழுவிடம் பேசி தேதிகளை மாற்றும்படி கேட்டுள்ளார். ஆக, இதன் மூலம் உதயநிதி ஸ்டாலினும், இப்படம் ஆஃபிஷியலாக 'கொடியன்குளம் கலவரம்' பற்றிய வரலாற்றுப்படம் தானென்று பொதுவெளியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியில், கொடியன்குளத்தின் மீது, சசிகலாவினுடைய நேரடி கட்டளைக்கிணங்க நிகழ்ந்த அரச பயங்கரவாதத் தாக்குதலை, காவல்து...
கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

கர்ணன் – வரலாற்றுத் துல்லியமும், சமூக நீதியும்

சமூகம், சினிமா
சினிமா என்பது வரலாற்றை உள்ளவாறே பதிவதல்ல. அது ஒரு கலை வடிவம். கலையென்பது புனைவு. ஆவணப்படுத்துதல் அதன் நோக்கம் இல்லை. தனக்கு உகந்தவாறு நிகழ்வுகளை வளைத்துக் கொள்ளும் சுதந்திரமும் உரிமையும் படைப்பாளிக்கு உண்டு. Inglourious Basterds எனும் படம் ஓர் உதாரணம். ஹிட்லரைக் கொல்வதாக டொரன்டினோ காட்சிப்படுத்தியிருப்பார். அது speculative fiction எனும் ஜானரைச் சேர்ந்தது. 97இல், வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கம் என்பவரது பெயரில் பேருந்துகளை அரசு இயக்கியது. அவரது "பெயர்" கொண்ட பேருந்தில் ஏறமாட்டோம் என மாற்று சாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரம் கட்டுக்கு அடங்காததாலும், பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு எட்டாததாலும், பல்லவன், கட்டபொம்மன் முதலிய போக்குவரத்துக் கழங்கள் அனைத்துக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் என பொதுப்பெயர் இடப்பட்ட்து. படத்தின் கதை நிகழும் காலம் இதுவே! கண்ணபிரானாக வ...
பிரச்சார கூட்டத்தில் திடீரென அமைச்சரை கட்டிப்பிடித்த பெண்.. கண்கலங்கிய அமைச்சர்!!

பிரச்சார கூட்டத்தில் திடீரென அமைச்சரை கட்டிப்பிடித்த பெண்.. கண்கலங்கிய அமைச்சர்!!

அரசியல்
ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவள் கையை பிடித்து, "எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார். அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து உறைந்து போனார்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளாத அந்தப் ...
தமிழகமும் தாமரையும்

தமிழகமும் தாமரையும்

சமூகம்
தற்போது நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாகக் கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் திரு.செல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராமலிங்கம், திரு.கு.க. செல்வம், திரு.ஆர்.கே. சுரேஷ், திருமதி. கலா மகேஷ், திருமதி. கண்மனி, திரு. பிரமீட் நடராஜன், திருமதி. டெய்சி சரண் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்...
கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

அரசியல்
திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது அமைச்சர் ஜெயக்குமார் தன் ராயபுரம் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வீடுதோறும் அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் இதோ!என்னுடலின் உயிர்மூச்சாய் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ராயபுரம் தொகுதி சொந்தங்களே!1991 முதல் இதே தொகுதியில் உங்கள் பெருவாரியான ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக இப்போது வரை இருந்து கொண்டிருக்கிறேன். இதோ இந்த முறை ஏழாவது தடவையாக புரட்சித்தலைவர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் நல்லாசியுடன் உங்கள் வேட்பாளராக உங்களை தேடி வருகிறேன்.நினைவிருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எத்தனை தேர்தல் வந்தபோதும் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க நான் வருகிறேன். யோசித்துப் பாருங்கள்,...
ராயபுரம் மக்களிடம் அதிகமான செல்வாக்கோடு அமைச்சர் ஜெயக்குமார்.. இந்த முறையும் அவர் தான்!!

ராயபுரம் மக்களிடம் அதிகமான செல்வாக்கோடு அமைச்சர் ஜெயக்குமார்.. இந்த முறையும் அவர் தான்!!

அரசியல்
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ராயபுரம் தொகுதியின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றோம் . கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்தும், தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் வலம் வந்தும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஏழாவது முறையாக ஒரே தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். கடந்த 6 முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது ஏழாவது முறையாக அவரே போட்டியிடுகிறார் எப்படி சாத்தியம் என்பது குறித்து பொதுமக்களிடம் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர்கள் சொன்ன பதில் இதோ உங்கள் பார்வைக்கு… 68 வயதான தங்கம் என்ற பெண்மணியிடம் ஏன் ஜெயக்குமாருக்கு ஓட்டு போடுறீங்க வேற யார...
ஒரே தொகுதியில் ஏழு முறை களம் காணும் மனிதர்!!

ஒரே தொகுதியில் ஏழு முறை களம் காணும் மனிதர்!!

அரசியல்
அரசியல் வரலாற்றில் பலரும் தொடர்ந்து, பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால் எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் அவர்களும் கூட அவ்வப்போது தொகுதிகளை மாற்றிக் கொண்ட வரலாற்றை நாம் அறிந்திருப்போம்.ஆனால் தான் பிறந்த மண்ணில் தொடர்ந்து ஏழுமுறை தொகுதி மாறாமல் களம் காணும் ஒரே மனிதர் யார் என்றால் அவர்தான் அமைச்சர் ஜெயக்குமார்.1991 முதல் 2021 வரை ஏழு முறை ராயபுரம் தொகுதியின் ஒரே வேட்பாளர் யார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் அதிமுக தலைமை இவரைத்தான் வெற்றி வேட்பாளராக களம் இறங்குகிறது. காரணம் தொகுதி மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான் என்பது அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஆறு தேர்தல்களில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது 7-வது முறையாக சந்திக்கும் இவர் ராயபுரம் மக்களின் குறைதீர்க்கும் மனுநீதிச்சோழனாய் வலம் வந்து கொண்டிருக்கிறா...
“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

“தமிழ்நாட்டை ஹிந்திக்காரன் ஆக்கிரமிக்கிறான்” – ஜாக்குவார் தங்கம்

சமூகம், சினிமா, திரைச் செய்தி
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் சங்கத் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "இந்தப் படத்தில் கவர்ச்சிகரமான காட்சிகளைப் பாடலில் பார்த்தோம். கவலைப்பட வேண்டாம் இது மாதிரி எடுத்தால் இன்று நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் படம் ஓடிவிடும். ஏன் என்றால் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் நன்றாக ஓடியது. அது மாதிரி சில படங்களும் ஓடின. அப்படி ஒரு படத்தைப் பார்த்த நான் பயந்தேன். மகளிர் சங்கம் போராட்டம் செய்வார்களே என்று. அதே போல போராட்டம் நடத்தினார்கள். எனது அலுவலகம் முன்பு கூடப் போராட்டம் நடத்தினார்கள். படம் பெரிய வெற்றிபெற்றுவிட்டது. அதே போல் இந்தப் படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கின்றன. நிறைய காட்சிகள் எடுத்து சிலவற்றைத்தான் இதில் வைத்த...
சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி

சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி

சமூகம்
எழும்பூரில் உள்ள பழைய கமிஷ்ணர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பில் மாணவர் பயிற்சி நடத்தப்படுகிறது. கிளப்பில் முன்பதிவு அடிப்படையில் மாணவ உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிளப் அதன் தலைவர் காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தலைமையிலும், துணைத் தலைவர் திரு. அமல்ராஜ் ஐபிஎஸ் அவர்களின் மேற்பார்வையிலும் இயங்குகிறது. கௌரவ செயலர் ராஜசேகர் பாண்டியன் கூறும்போது, "துப்பாக்கிச் சுடுதலை கற்றுக் கொண்டு அதில் சிறந்து விளங்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. இந்த மாணவர் பயிற்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே, துப்பாக்கிச் சுடுதல் என்பது ஒரு எட்டாக்கனி என்ற கருத்தை மாற்றத்தான். இந்த விளையாட்டை அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியமான ஒன்றாக ஆக்குவதே இந்தப...
TNWAA – சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

TNWAA – சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்

சமூகம்
TNWAA – Tamil Nadu Women Achievers Awards . பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழ்நாட்டுப் பெண்களுக்கு, ‘தி பிராண்ட் ரீபப்ளிக்’ எனும் நிறுவனம் விருதுகள் வழங்கிக் கெளரவித்தன. இந்நிகழ்வு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து’டன் தொடங்கியது. TNWAA வின் குறிக்கோள் என்பது, ‘வாழ்த்து, ஊக்கமளி, வல்லமை கொள்ளச் செய்’ என்பதேயாகும். சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பினைத் தங்கள் துறைகளில் செய்திடும் பெண்களை அடையாளம் கண்டு கெளரவிப்பதன் மூலம், அதனால் மேலும் பல பெண்கள் ஊக்கம் பெற்று, தத்தம் துறைகளில் வல்லமையோடு முன்னேறுவார்கள். இந்தியாவின் மூலைமுடுக்குகளில் உள்ள பெண்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் டிஜிட்டல் செயற்பாட்டுத்தளமாக TNWAA விளங்குமென ‘தி பிராண்ட் ரீப்ப்ளிக்’கின் இயக்குநர் ஆதித்யா அறிவித்தார். வெவ்வேறு துறையினைச் சேர்ந்த 15 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 1. Woman in Social Services - Dr. Renuka Ramakri...
ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான் – அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான் – அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

அரசியல்
அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய மகளிர் தின வாழ்த்து மடல்.. அன்னையாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகள்களாய் வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் நமக்கு உற்ற துணையாய் உயிர் துடிப்பாய் உடன் பயணிப்பது பெண்கள் தாம். கருவறை தொடங்கி, கல்லறை வரையிலும் ஆணினத்தின் அணுவாய் அடையாளமாய் இருப்பது பெண்கள். எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ணமடா என்றான் பாரதி. ஆம் திரும்பிய திசையெங்கும் பெண்கள் இல்லையேல் ஆண்கள் யார் என்பதே இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். அந்த வகையில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாடிய பாரதியின் வரிகளை வாழ்நாளில் வாழ்க்கையாய் மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவி இதய தெய்வம் நம் அம்மா. சமூகநீதி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு அரசியல், அதிகாரம், ஆட்சி பீடம் என அடித்தட்டு முதல் அத்தனை பெண்களையும் தோல்வி பள்ளத்தாக்கில் இருந்து கைத்தூக்கி, வெற்றி சமவெளிய...
‘பெண்’ – குறும்படப் பாடல்

‘பெண்’ – குறும்படப் பாடல்

சமூகம், சினிமா
பெண்கள் தினத்தை முன்னிட்டு "பெண்" என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது. வெங்கட் பிரபுவிடம் உதவியாளராகப் பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி 2, திமிரு புடிச்சவன், கொலைகாரன், களவாணி 2, கபடதாரி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.  தனது நடிப்பு அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அருண்பாரதி, "பாடலுக்குப் பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாகப் பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன். தொடர்ந்து சமூகத்திற்குப் பயன்படும் நல்ல படைப்புகளைக் கொடுப்பது என் கடமை" என்று கூறினார். இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க, P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர். ...