Shadow

Tag: ஜெகன் சேட்

குடும்பஸ்தன் விமர்சனம்

குடும்பஸ்தன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'குடும்பஸ்தனா வெற்றிகரமான வாழ்க்கை வாழணும்ன்னா வளைஞ்சி நெளிஞ்சி தான் ஆகணும்' என்றும், 'அப்படிலாம் வளைஞ்சி நெளியணும்ன்னு தேவையில்ல' என்றும் இரு தரப்பு மல்லுக்கட்டுகிறது. அந்தக் குடும்ப மல்லுக்கட்டு ஈகோவில் எந்தக் கொள்கை முந்துகிறது என்பதே குடும்பஸ்தன் கதையாகும். கதையின் சின்ன லைனாக இதை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அழகான லேயர்ஸை வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. மணிகண்டன் காதலித்து வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். காதல் மனைவி சான்வே மேகனாவிற்கு கலெக்டராக வேண்டும் என்பது இலக்கு. அப்பா ஆர்.சுந்தர்ராஜனுக்குத் தனது பழைய வீட்டைச் சீர் செய்ய வேண்டும் என்பது இலக்கு. அம்மாவிற்கோ 50 ஆயிரம் ரூபாய் பேக்கேஜில் ஆன்மிக டூர் போக வேண்டும் என்பது இலக்கு. இத்தனை பேர்களின் இலக்குகளுக்கும் நமது ஹீரோ மணிகண்டனே பொறுப்பு. தனது அக்கா கணவர் குரு சோமசுந்தரத்தின் ஈகோ முன் தடுமாறிடக்கூடாது ...
முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

முஃபாஸா: தி லயன் கிங் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நிலம் சார்ந்த போராட்டத்தை மையப்படுத்திய படமாக முஃபாசா அமைந்துள்ளது. பெரு வெள்ளத்தில் தன் தாய் தந்தையரைப் பிரிந்த, முஃபாசா என்ற குட்டிச் சிங்கம், இன்னொரு நிலம் வந்தடைகிறது. ஆறு, மலை கடந்து தான் வாழ ஒரு நிலமும், அங்கு தன் இனமும் இருப்பதாக முஃபாசாவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நிலம் மாறி வந்த முஃபாசாவிற்கு டேக்கா எனும் குட்டிச் சிங்கம் தன் தாய் தந்தையிடம் பேசி, தங்கள் நிலத்தில் தங்குவதற்கு அனுமதி வாங்குகிறது. இரு சிங்கங்களும் நண்பர்களாக வளர்கின்றனர். இவர்கள் வாழும் நிலத்தை அபகரிக்க வெண்சிங்கப்படை ஒன்று வருகிறது. அந்தப் படையை எதிர்கொள்ள இயலாமல் டேக்கா, முஃபாசா இருவரும் வெளியேறுகிறார்கள். வெளியேறும் போது நடக்கும் சண்டை ஒன்றில், வெண்சிங்கப் படையின் இளவரச சிங்கத்தை, முஃபாசா கொன்றுவிடுகிறது. இதனால் வெண்சிங்க ராஜா முஃபாசாவை பலி வாங்கத் துரத்துகிறது. துரத்தலை ஒரு கட்டத்தில் நேர்கொள்ளும் முஃபாசா எ...
ஜமா விமர்சனம்

ஜமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கூத்துக்கலை என்பது மனிதர்கள் சில பல ஒப்பனை உபகரணங்களுடன் நடத்தும் நிகழ்த்துக்கலை. மஹாபாரதக் கூத்து, வள்ளித்திருமண கூத்து, அரிச்சந்திர கூத்து என நமது புராண இதிகாசங்களை ஒட்டி இக்கலைகள் நடத்தப்படுவதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்படியான கூத்துக்களுக்கு மவுசு அதிகம். தற்போதைய சூழலில் கூத்துக்கலை வழக்கொழிந்து வந்தாலும், இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூத்துக்கலை பெரும் சிரமத்துடன் இயங்கி தான் வருகிறது. ஜமா படம் அப்படியான கூத்துக்கலையில் ஊடோடியுள்ள அக்கலைஞர்களின் வாழ்வையும், அதில் ஒருவனின் லட்சியத்தையும் காதலையும் பேசுகிறது. நாயகன் பாரி இளவழகன் சேத்தன் நடத்தும் கூத்து ஜமாவில் குந்தி அல்லது திரளெபதி வேடமிட்டு ஆடும் கலைஞன். அவருக்கு ஒரு தீரா ஆசை உள்ளது. அது என்னவென்றால் ஒருநாளாவது அர்ஜுனன் வேசம் போடவேண்டும் என்பதே. ஆனால் அதற்கு ஜமாவின் தலை ஆன சேத்தன் ஒத்துழைக்க மறுக்கிறார். பாரி இளவழகனின் அ...
கலைச்செல்வி – தடை அதை உடை | எட்டாங்கிளாஸ் டூ Ph.D

கலைச்செல்வி – தடை அதை உடை | எட்டாங்கிளாஸ் டூ Ph.D

இது புதிது, சமூகம்
"உயரம் தொட்டவங்க பலரும் பள்ளத்துல இருந்து வந்தவங்களாத்தான் இருக்காங்க" என்பதற்கு மற்றொரு உதாரணமா இருக்குறா எங்கள் காஞ்சிப்பள்ளத்துப் பதியின் நிர்வாகி பார்வதியம்மாவின் மகள்வழி பேத்தி கலைச்செல்வி. "பெயர்லே கல்விக்கடவுள் இருக்குறதால அவளுக்குக் கல்வி கடல் மாதி வரும்"னு சொன்னாங்க. அப்படி வந்த கல்வி ஒன்னும் ஈசியா வந்திடல. கலைச்செல்வியை எனக்கு அவ எட்டாங்கிளாஸ் படிக்கறப்பவே தெரியும். கலகல பேச்சுக்குச் சொந்தக்காரி. 12ஆம் வகுப்பு வரைக்கும் சின்ன காஞ்சிபுரத்துல இருக்குற BMS லேடிஸ் ஸ்கூல்ல தான் படிச்சா. அப்பா இரும்புக்கடைல லோடு சுமப்பார். அம்மா வீட்ல பீடி சுத்துவாங்க. ஒரு அக்கா, ஒரு தம்பி. இதான் கலைச்செல்வி குடும்பம். வயிற்றுக்கும் வாய்க்கும் இடைப்பட்ட கேப்ல அவளோட படிப்புச் செலவும் நடக்கும். +12 முடிச்சதும் சொந்தத்துலே கல்யாணம் முடிக்க சூழல் வந்துச்சு. "கல்யாணத்துக்குப் பிறகும் என்னைப் படிக்க வைக்கண...
மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

மூதின் முல்லை – நாவல் விமர்சனம் | மு. ஜெகன் கவிராஜ்

இது புதிது, கட்டுரை, புத்தகம்
அண்ணன் டேனியல் அவர்களின் தலைப்பிள்ளை இந்த நாவல். தலைப்பிலே நம்மை மிரள வைத்துவிட்டார். மூத்தக்குடி என்பதன் பொருளாக இத்தலைப்பை நாவலுக்குச் சூட்டியுள்ளார். மூத்தக்குடிகளின் பாட்டுடைத் தலைவிகளாக இந்நாவலில் பெண்களே வியாபித்திருக்கிறார்கள். நாவல் பற்றிப் பேசும் முன் அண்ணன் டேனியல் பற்றிப் பார்ப்போம். எப்பொழுதுமே தேடலிலே திரியும் மனிதர். அவர் உடலின் வெயிட்டுக்கும், வாழ்வில் அவர் சந்தித்த கனத்திற்கும் சம்பந்தமே இருக்காது. "இந்த உடம்பாடா இதெல்லாம் தாங்கியது" என்றே தோன்றும். அடியேனுக்கு அவரது அகவாழ்வு சேஷ்டைகளும் புரியும். புற வாழ்வு கஷ்டங்களும் தெரியும் என்பதால் நான் அவரிடம் இருந்து வேறோர் நாவலை எதிர்பார்த்தேன். வாழ்வு போலவே அவரின் நாவலும் சற்றும் எதிர்பாராத அனுபவத்தைத் தந்தது. அவரின் நாவல் படைப்புக்கு இதயமாக இருந்தவர் நண்பர் தினேஷ் ராம். முருகன் மந்திரம் சார் இதயத்தைத் தனது மதிமகிழ் பதிப்பகம் சார...
எழுதப்படாத முகங்கள் |  மு.ஜெகன் கவிராஜ்

எழுதப்படாத முகங்கள் | மு.ஜெகன் கவிராஜ்

இது புதிது, புத்தகம்
நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ முகங்களைக் கடந்து வந்திருப்போம். அதில் பெரும்பாலான முகங்கள் நம் நினைவில் இருந்து அகன்றிருக்கும். வெகு சில முகங்கள் மட்டுமே நம் நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கும். அப்படி நிலைத்திருக்கிற ஒவ்வொரு முகங்களின் பின்னாலும் ஏதோவொரு சுவையுடன் கூடிய வாழ்க்கை இருக்கும். அதுமட்டுமின்றி அந்த முகங்களில் சில நம் வாழ்க்கையின் மீளாப் பக்கங்களை தீராத் துயரத்துடன் எழுதி இருக்கக்கூடும். துவண்டு கிடந்த நம்மைத் தூக்கி நிறுத்தியிருக்கக் கூடும், வாய்ப்பற்று வறண்டு கிடந்த நம் வாழ்வை வளமாக்கியிருக்கக் கூடும்,  தோழமையுடன் நம் தோள் தொட்டிருக்கக் கூடும், நம்மைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கக் கூடும்.  இப்படி ஏதோவொரு சிறு துரும்பையாவது நம் வாழ்வில் நிகழ்த்தியிருந்தால் மட்டுமே அந்த முகங்கள் நம் நினைவில் இருக்கும். ஆனால் 'எழுதப்படாத முகங்கள்' புத்தகத்தின் ஆசிரியர் மு.ஜெகன் ...
அஸ்வின்ஸ் விமர்சனம்

அஸ்வின்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த உலகில் வரக்கூடிய ஒரு பிரச்சனையை வேறு ஒரு உலகில் சென்று தீர்க்க வேண்டும். அதற்கு இந்த உலகில் உயிர்விடவேண்டும். அப்போது தான் அந்த உலகில் உயிர்பெற முடியும். இப்படியான ஒரு சூழல் நாயகன் வசந்த் ரவிக்கு வருகிறது. இது படத்தின் பின்பாதியில் வரக்கூடிய கதை. அப்போ முன்பாதி கதை? லண்டனில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அப்பால் ஒரு பாழடைந்த மேன்சன் இருக்கிறது. அந்த மேன்சனுக்குள் பல அமானுஷ்யங்களும் கண்டுபிடிக்கப் படாத பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்த மேன்சனுக்குள் செல்கிறார்கள் வசந்த் ரவி டீம். காரணம்? ஒரு பிரபலமான யூட்யூப் தளத்திற்காக. சென்றவர்களுக்கு என்னானது என்பதே முன்பாதி கதை. முதலில் சொன்ன அந்த மறு உலகக் கதையே இவர்களின் மேன்சன் பிரவேசத்தால் தான் நிகழ்கிறது. ஒரு ஸ்கிரீன...
பொம்மை விமர்சனம்

பொம்மை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, பொம்மையைத் தன்னோடு வைத்துக் கொள்ள எஸ்.ஜே. சூர்யா போராட, எப்படியான முடிவு அமைந்தது என்பதே படத்தின் கதை. எஸ்.ஜே. சூர்யா நல்ல நடிகர் என்பதைப் பல படங்களில் நிறுவியிருக்கிறார். அதே போல் கொஞ்சம் ஓவராக நடிப்பார் என்பதையும் சில படங்களில் நிறுவியிருக்கிறார். அந்தச் சில படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்தது ரசிகனின் துரதிர்...
போர் தொழில் விமர்சனம்

போர் தொழில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை. காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணி என்ன, கொலைகளை நிகழ்த்திய கர்த்தா யார் என சரத் - அசோக் செல்வன் கூட்டணி நூல் பிடித்துக் கண்டுபிடிப்பதே படத்தின் முழுக்கதையும். நாடி நரம்பெல்லாம் க்ரைம் டிப்பார்ட்மென்ட் காவல் அதிகாரி மேனரிசம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடிப்பில் அசரடிக்க முடியும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சரத்குமார்....
தீராக்காதல் விமர்சனம்

தீராக்காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரிந்த காதல் என்பது ஒருவழிப்பாதை. அதில் திரும்ப முடியாது. அப்படியே முடிந்தாலும், ‘திரும்பக் கூடாது’ என்பதைப் பேசுகிறது தீராக்காதல் திரைப்படம். கொஞ்சம் விட்டுவிட்டு என்றாலும், இன்ப நிழலாடும் வீட்டிற்குள் திடீரென புயல் அடித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புயலைச் சந்திக்கிறார் நாயகன் ஜெய். மனைவி ஷிவதா, மகள் ஆர்த்தி, நல்ல மரியாதையும் சம்பளமும் உள்ள வேலை என நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜெய். அலுவலக வேலையாக ஒருமுறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மண வாழ்வுப் பிரச்சனைகளை ஜெய்யிடம் சொல்கிறார். அதன் பிறகு அவர்களின் உறவு எந்த அளவிற்கு வளர்கிறது, அதன் பின் இருவர் வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன எனப் பயணிக்கிறது படம். கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியாக ரசிகனுக்குக் கதையை உணர்த்த வேண்டிய பொறுப்...
யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'உலகிலுள்ள எல்லா ஊரும் நமது ஊரே; வையத்திலுள்ள அனைத்து மக்களும் நம் உறவினரே!' என்ற ஒப்பற்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பிய கணியன் பூங்குன்றனாரின் மிகப் பிரபலமான புறநானூற்றுச் செய்யுளின் முதல் வரியைத் தலைப்பாக்கி, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர் படக்குழு.  இலங்கையில் இருந்தால் சில்லுகளின் (குண்டுகள்) வெடிப்பால் எந்நேரமும் இறக்கலாம் என அஞ்சி நடிகர் ராஜேஷ் சிறுவனாக இருக்கும் விஜய்சேதுபதியை லண்டன் அனுப்புகிறார். செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அகப்படுகிறான் சிறுவன். அந்தச் சிறுவன், விஜய் சேதுபதியாக வளர்ந்து கொடைக்கானலில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்கிறார். தனது அடையாளத்தை மறைக்கிறார். இன்னொரு புறம் மகிழ் திருமேனி விஜய்சேதுபதியைக் கொல்ல வேண்டும் என அலைகிறார். இப்படி அலைபாயும் கதையின் இலக்கு என்ன என்பதை...
குட் நைட் விமர்சனம்

குட் நைட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாம் அன்றாடம் வாழ்வில் கடக்கும் தருணங்களை சிறந்த கலைப்படைப்பாக மாற்றும் சினிமாக்கள் மலையாளத்தில் தான் அடிக்கடி வரும் என்ற பிம்பத்தைத் தமிழ் சினிமா நொறுக்கத் துவங்கியுள்ளது. அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது குட்நைட் படம். படத்தின் கதைப்படி ஹீரோ மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. அவரை அறியாமல் அவர் விடும் குறட்டைச் சத்தம் தன் வீட்டையும் தாண்டிக் கேட்கும் அளவிற்கு வலிமையுடையது. அந்தக் குறட்டைச் சத்தத்தால் அவரது அக/புற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்தான் படத்தின் திரைக்கதை. எல்லா மனிதர்களோடும் நிச்சயமாக கனெக்ட் ஆகக் கூடிய கதை என்பதால் கதை மாந்தர்கள் அனைவருமே நமக்கு நெருக்கமாகி விடுகிறார்கள். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’ படத்தின் விஜய்சேதுபதியை சில இடங்களில் நினைவூட்டினாலும், அளவுக்கு அதிகமாகவே ரசிக்க வைக்கிறார் ஹீரோ மணிகண்டன். அவரது மச்சானாக வரும் ரமேஷ் தி...
குலசாமி விமர்சனம்

குலசாமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பிரபலங்களுக்கு ஆசை நாயகியாக மாற்ற முனைந்த பேராசியரியைப் பற்றிய வழக்கு. அந்த வழக்கை கதையின் முக்கிய மையச்சரடாகக் கொண்டு விமலுக்கு ஒரு தங்கச்சி எமோஷ்னலைப் புகுத்தி, ஓர் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் ஷரவண சக்தி. மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவிகள் சிலருக்குப் பாலியல் ரீதியிலான அழுத்தம் வருகிறது. மேலும் பெண்களைக் கொடூரமாகக் கற்பழிக்கும் நபர்கள், மிகக் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். விமல் மேற்படியுள்ள சம்பவங்களில் எப்படி லிங்க் ஆகிறார் என்பதாக விரிகிறது குலசாமியின் திரைக்கதை. விமல் அழுகை, சோகம், கோபம் என அவருக்கே உரித்தான அரிதாரங்களை களைத்துப் போட்டு இப்படியான சோக அவதாரத்தில் ஆடியிருக்கிறார். விளைவு? தேக்கமான அவரது ஸ்கிரீன் ப்ரசெனஸ் படத்திற்குள் ந...
காலேஜ் ரோடு விமர்சனம்

காலேஜ் ரோடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கல்வியென்பது நமது தேவையன்று; அது ஒவ்வொருவரின் உரிமை என்பதை கமர்ஷியலுடன் சொல்லியுள்ளது காலேஜ் ரோடு திரைப்படம். சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக சேர்கிறார் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றைக் கண்டுபிடித்துள்ள லிங்கேஷ், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சி செய்கிறார். அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. நாயகன் லிங்கேஷ், வங்கிக் கொள்ளைச் சம்பவங்களுடன் எப்படி தொடர்புப்படப்படுகிறார் என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணமென்ன என்பதையும், கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும், பல அதிரடி திருப்பங்களோடு விரிவாகப் பேசுகிறது படத்தின் திரைக்கதை. முதன்மை நாயகனாக லிங்கேஷ், இந்தப் படத்தில் மிக முதிர்ச்சியான நடிப்பை நன்றாக வழங்கியுள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர...
காரி விமர்சனம்

காரி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரியூர் என்ற கிராம மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த ஒரு கதையைக் கையில் எடுத்துள்ளார் இயக்குநர் ஹேமந்த். ரியலிஸ்டிக்கான மேக்கிங்கால் படத்தையும் நெருக்கமாக உணர முடிகிறது. குதிரை ஜாக்கியான சசிகுமார் சென்னையில் தன் தந்தை ஆடுகளம் நரேனோடு வசிக்கிறார். ஆடுகளம் நரேன் சிறு உயிர்களையும் தன் உயிரென நேசிக்கக் கூடியவர். சசிகுமார் வாழ்வையும் சமூகத்தையும் ஏனோதானோ என ஏற்பவர். சசிகுமாரின் சொந்தக் கிராமமான காரியூரில் கருப்பசாமியின் திருவிழாவை நடத்த வேண்டிய ஒரு சூழல் வருகிறது. அதை நடத்த சசிகுமாரின் வருகை தேவையாக இருப்பதால் ஊர் சசிகுமாரை நாடுகிறது. சசிகுமாருக்கும் ஊருக்குச் செல்வதற்கான ஒரு எமோஷ்னல் காரணம் அமைய, சசிகுமார் ஊருக்குச் சென்று தன் ஊரின் வேரை எப்படிக் காக்கிறார் என்பது காரியின் திரைக்கதை. மிகையில்லாத நடிப்பு தான் சசிகுமாரின் பலம். சரியான ஜாக்கி இல்லையென்றால் குதிரை தறி...