Shadow

Tag: யுவராஜ்

அஷ்டகாளி திருவிழா | சூழல் – தி வோர்டெக்ஸ் 2

அஷ்டகாளி திருவிழா | சூழல் – தி வோர்டெக்ஸ் 2

OTT, Web Series
சுழல் - தி வோர்டெக்ஸ் முதல் சீசனில் மயானக் கொள்ளை திருவிழாவின் பின்னணியில் அமைந்திருந்தது. இரண்டாவது சீசன் மேலும் ஒரு படி முன்னேறி, அஷ்டகாளி திருவிழாவைக் களமாகக் கொண்டு கதையைச் சொல்லுகிறது. இந்தத் திருவிழா தெய்வீகமான பெண்மையின் ஆற்றலைப் போற்றும் ஒரு திருவிழா. இதில் பக்தர்கள் எட்டு தேவியர்களை வழிபடும் தெய்வீக நிகழ்வுகள், வழிபாடுகள் மற்றும் பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. திருவிழாவுக்குப் பின்னணியில் உள்ள எட்டு தேவிகளின் விசித்திரமான அம்சங்களைச் சின்னமாகக் காட்டும் எட்டு சிறுமிகள் இவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த சிறுமிகள் ஒவ்வொரு தேவியின் ஆற்றலையும் குணாதிசயங்களையும் ஆழமாகவும் சிறப்பாகவும் பிரதிபலிக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு தேவியின் தெய்வீக சக்திகளைக் கதையில் உயிர்ப்பிக்கின்றனர். தமிழின் முக்கிய படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி எழுத்தில் இந்தப் படைப்பு உருவாகியுள்ளது. தமிழ்த...
தி பாரடைஸ் | The Paradise Glimpse: Raw Statement | நானி

தி பாரடைஸ் | The Paradise Glimpse: Raw Statement | நானி

Teaser, அயல் சினிமா, காணொளிகள்
'நேச்சுரல் ஸ்டார்' நானி, ஸ்ரீகாந்த் ஒடெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' எனும் திரைப்படத்திலிருந்து ரா (Raw) ஸ்டேட்மென்ட் எனும் பெயரில் பிரத்தியேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.அசைவொளியில் வரும் பின்னணி குரல், ''வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள், தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல, ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழுச் சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்தக் காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கத...
“முழுமையான ரொமான்ட்டிக் திரைப்படம்” – ரியோ ராஜ் | ஸ்வீட் ஹார்ட்

“முழுமையான ரொமான்ட்டிக் திரைப்படம்” – ரியோ ராஜ் | ஸ்வீட் ஹார்ட்

சினிமா, திரைச் செய்தி
YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார், “'ஜோ' படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 'ஜோ' படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த ‘ஸ்வீட்ஹார்ட்' படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 ஆவது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர...
கிங்ஸ்டன் – நம்ம ஊரு பாட்டி சொன்ன கதை

கிங்ஸ்டன் – நம்ம ஊரு பாட்டி சொன்ன கதை

சினிமா, திரைச் செய்தி
ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் வெற்றிமாறன், ''ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாகப் பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம். எந்த இயக்குநர், எந்தத் தருணத்தில் அவரைச் சந்திக்க வேண்டும் என்று அவரைத் தொடர்பு கொண்டாலும், உடனடியாகத் தொடர்பு கொண்டு சரியான பதிலைச் சொல்வார். அவர் பணி...
கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன?

கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன?

சினிமா, திரைச் செய்தி
ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ''இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்குப் பிறகு பின்னணி இசையில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. 'அசுரன்' படத்தினைத் தயாரித்தேன். அந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திரு...
சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்

சுழல் – தி வோர்டெக்ஸ் 2 விமர்சனம்

OTT, Web Series, இது புதிது
முதல் சீசனின் தொடர்ச்சியாக, கதிரும், ஐஸ்வர்யா ராஜேஷும் இத்தொடரில் இடம்பெறுகின்றனர். சக்கரவர்த்தியாக வரும் கதிரும், கொலை குற்றவாளி நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷும், நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவ்விருவர் சார்பாகவும், மக்கள் நல வழக்குகளை எடுத்து சமூக நீதிக்காகப் போராடும் வக்கீல் செல்லப்பா வாதாடுகிறார். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவரது பண்ணை வீட்டில் கொல்லப்படுகிறார் செல்லப்பா. அவரது வளர்ப்பு மகனான சக்கரை எனும் சக்கரவர்த்தி, அக்கொலையைப் புலனாய்வு செய்ய நியமிக்கப்படுகிறார். சிறைக்குள் இருந்தவாறே, சக்கரைக்கு உதவுகிறாள் நந்தினி. முதல் சுழலில் எப்படி மயான கொள்ளை பின்னணியில் கதை நகர்ந்ததோ, இத்தொடரில், அஷ்ட காளி திருவிழா பின்னணியில் கதையின் ஓட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கொடியேற்றம் முதல் சூரசம்ஹாரம் வரை, திருவிழாவை (குலசை தசரா) ஒட்டித் தொடரின் முக்கியமான நிகழ்வுகளை சித்தரித்துள்ளனர்...
சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை

சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை

இது புதிது, சமூகம்
ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகள் இனி சென்னையிலும் கிடைக்கும். அதற்காக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் 'சட்டி கறி' உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வினும் காயத்ரியும், ''உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு! எங்களுடைய சட்டி  கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும் வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டைப் போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு. எங்களுடைய உணவகத்தில் தென்னிந்தியப் பாணியில் நாட்டுக்கோழி மற்றும் கடல் சார்ந்த உணவுகளைத் தயாரித்து வழங்குகிறோம். எங்கள...
“பாரதிராஜாவும் வடிவுக்கரசியும்” – நடிகர் நட்டி | நிறம் மாறும் உலகில்

“பாரதிராஜாவும் வடிவுக்கரசியும்” – நடிகர் நட்டி | நிறம் மாறும் உலகில்

சினிமா, திரைச் செய்தி
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் சாண்டி மாஸ்டர், ''இங்கு வருகை தந்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் நடிப்பில் ஜாம்பவான்கள். நான் மட்டும்தான் நடிப்பைப் பொறுத்தவரை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கலைஞர். கொரோனா காலகட்டத்தின் போது தான் நடிகர் மைம் கோபி எனக்கு நடிப்புப் பயிற்சியை வழங்கினார். அவர் வழங்கிய சின்ன சின்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன வ...
நிறம் மாறும் உலகில் – பாரதிராஜாவின் ஆசிர்வாதம் | இயக்குநர் பிரிட்டோ

நிறம் மாறும் உலகில் – பாரதிராஜாவின் ஆசிர்வாதம் | இயக்குநர் பிரிட்டோ

சினிமா, திரைச் செய்தி
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பிரிட்டோ, ''இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்தக் கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவைப் பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமா...
நிறம் மாறும் உலகில் | சொல்லமுடியாத ஒரு ரணத்தைச் சொல்லும் படம்

நிறம் மாறும் உலகில் | சொல்லமுடியாத ஒரு ரணத்தைச் சொல்லும் படம்

சினிமா, திரைச் செய்தி
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் பாலா சீதாராமன், ''திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்பக் கலைஞராக அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற்று வாய்ப்பு தேடிய போதும் 'கலை தாய்' எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்தத் தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து ...
பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ இல் இணையும் நடிகர் ஆதி

பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ இல் இணையும் நடிகர் ஆதி

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 ‘அகாண்டா 2: தாண்டவம்’ படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், ஆக்‌ஷன் அதிரடியில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக, ஆன்மீகமும் கலந்த பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் சார்பில், ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை, எம...
அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா

அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா

சமூகம்
அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைத் துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கன்வாடி பணிகள் முக்கியமான முதல் 1000 நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் பூஜ்ஜியமாக உறுதிப...
தண்டேல் விமர்சனம்

தண்டேல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தண்டேல் என்றால் தலைவர் எனப் பொருள். ஆந்திராவின் மச்சதேசம் எனும் மீனவக் கிராமத்தில் இருந்து 22 பேர் குஜராத் சென்று மீன் பிடிக்கின்றனர். எல்லையைத் தாண்டிவிட்டார்கள் என பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து விடுகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான காதல் கதையைத் தந்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி. அமரன் படத்தில் ஒரு இராணுவ வீரிரன் காதல் மனைவியாக நடித்து, அந்தப் பாத்திரதிற்கு உயிர் கொடுத்தாரோ, அப்படி தண்டேல் படத்தில், ஒரு மீனவக் கிராமப் பெண்ணாக நடித்து தண்டேல்க்கு உயிர் கொடுத்துள்ளார். தன் பேச்சைக் கேட்காமல், நாயகன் மீன் பிடிக்கச் சென்று விடுகிறான் என்ற சாய் பல்லவியின் ஏமாற்றத்தில் இருந்து படம் தொடங்குகிறது. பத்தின் முதற்பாதி, சாய் பல்லவியின் கோணத்தில் இருந்தே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், பாகிஸ்டான் சிறையில் நடக்கும் சம்பவங்களால் அமைந்துள்ளது. பான்-இந்தியா...
“தண்டேல் படத்தின் நாயகர்கள்: ஸ்ரீகாகுளம் மீனவர்கள்தான்” – நாக சைதன்யா

“தண்டேல் படத்தின் நாயகர்கள்: ஸ்ரீகாகுளம் மீனவர்கள்தான்” – நாக சைதன்யா

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தண்டேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, நாக சைதன்யா, சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் - வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'தண்டேல்' திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரில...
“50 வருடங்களாக எப்படி அல்லு அரவிந்த்காரு?” – கார்த்தி | தண்டேல்

“50 வருடங்களாக எப்படி அல்லு அரவிந்த்காரு?” – கார்த்தி | தண்டேல்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரைத் துளி
நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தண்டேல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, நாக சைதன்யா, சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் - வெங்கட் பிரபு, நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் 'தண்டேல்' திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலா...