Shadow

Tag: Mahadevan CM

பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

பிக் பாஸ்
சேரனனின் சீக்ரெட் ரூம் எவிக்ஷனுக்குப் பிறகு தெளிவும் நிம்மதியும் அவர் முகத்தில் இருந்தது. 'எங்கிட்ட நிறைய மாற்றம் வந்துருக்கு' எனச் சொன்னார். அது கண் கூடாகத் தெரிந்தது. உள்ளே வரும்போதும், பிறகு வாராவாரமும், மைக் கிடைத்த பொழுதெல்லாம் நிறைய பேசின சேரனைப் பார்க்க முடியவில்லை. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. 'என்னோட கோபத்தைத் தூக்கி எறிஞ்சுட்டேன்' என இந்த கேமையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தின ஒரு பெருமிதம் அவரிடம் தெரிந்தது. ஒரு குறும்படம் போடத் தயாரான போது, சேரன் சீக்ரெட் ரூம் செல்கிறார் என பிக் பாஸ் குரல் வந்தது. சேரனும் மகிழ்ச்சியாகக் கிளம்பினார். கவினும் காலர் ஆஃப் தி வீக்கும் 'அண்ணா, 75 நாளா பிக் பாஸ் வீட்டுல இருக்கீங்க. ஒரு தடவை கூட பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்டுக்கோ, கேப்டன் ஆகுறதுக்கோ உங்க பெயரை யாரும் சொல்லவே இல்ல?' என்பது கேள்வி. 'சாரி நண்பா என்னிடம் பதிலில்லை' என்ற கவினிடம், 'மழுப்பாம, புர...
பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ்
வனிதா தன்னைப் பற்றி சர்ச்சைகள் இருப்பதால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, அல்லது தன்னிடம் மக்கள் இதை தான் நம்மிடம் எதிர்பர்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, சர்ச்சைகளை உருவாக்குகிறாரா என்று தான் தெரியவில்லை. சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி அதன் மூலம் தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் வெளியே வந்து பார்த்துவிட்டு வேற போயிருக்கார். "வனிதாக்காடா" என முஷ்டி மடக்கி சிம்பல் போட்டதை அவர் உண்மை என நினைத்துவிட்டார் போல. அது சர்காஸம் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், போன தடவை இருந்ததை விட இன்னும் வீரியமாகச் சண்டை போடுகிறார். வனிதா பேசுவதை ஸ்பீச் வகையறாவில் தான் சேர்க்கவேண்டும். அது ஒரு உரையாடலாக எப்பவும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் ஒதுங்கிப் போகின்றனர...
பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி

பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி

பிக் பாஸ்
பாய்ஸ் அணி உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கவின், மீசை, தாடி எல்லாம் ட்ரிம் பண்ணி சின்ன பையன் மாதிரி இருந்ததை அவரே கிண்டல் பண்ணிக் கொண்டார். சாண்டி ஸ்கூல் டாஸ்கிக் பேசின மாதிரி பேசினார். இந்த வீட்டில் சாரி கூடாது, சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கவின் சொல்ல, 'மொத்தத்துல மனுசனாவே இருக்கக்கூடாது' என சாண்டி முடித்தது அல்டிமேட். ஷெரின் இப்பவும் அழுது கொண்டே இருக்க, தர்ஷன் சமாதானபடுத்த பேசினார். 'யாரோ சொல்றதை நீ ஏன் சீரிஸா எடுத்துக்கிற?' எனக் கேட்ட போது, 'அது யாரோ இல்ல, என் ப்ரெண்ட். நீ பேசினா எப்படி ஹர்ட் ஆவேனோ, அப்படித்தான் வனிதாவும்' எனச் சொன்னபோது, 'இவ்வளவு அழுகையிலேயும் எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்' என ஆச்சரியமாக இருந்தது. ஒரு நண்பர் நம்மைத் தப்பாக பேசிட்டார் எனத் தெரிந்தால், 'அவன்லாம் ஒரு மனுசனா?' என அந்த நொடியிலேயே தூக்கிப் போடும் உலகத்தில், இம்புட்டு நல்ல மனசு ஷெரினுக்கு ஆகாது...
பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

பிக் பாஸ்
முந்தைய நாள் - ஷெரினும் தர்ஷனும் பேசிக் கொண்டிருந்தனர். தர்ஷன் கூட இணைத்து தன்னைப் பற்றி வனிதா பேசிக் கொண்டே இருப்பது ஷெரினுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைப் பற்றி தர்ஷனிடம் நேராகப் பேசி க்ளியர் பண்ணிக்க நினைக்கிறார் ஷெரின். சில வாரங்களுக்கு முன்னாடி சாண்டியும் கவினும், ஷெரின் பெயரைச் சொல்லி தர்ஷனை கிண்டல் பண்ணினது ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். அதில் இருந்து தர்ஷனும் கொஞ்சம் விலகி தான் இருக்கார். இது ஷெரினுக்கும் தெரிந்திருக்கு, தர்ஷனும் அதைத் தான் சொல்கிறார். ஒரு மெச்சூர்ட் கான்வர்சேஷன், ரொம்பவும் ஆர்டிபிஃஷியலா இல்லாமல் இயல்பாக இருந்தது. பார்க்கவே நன்றாக இருந்தது. தர்ஷனால் தன்னைக் கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேச முடியவில்லை எனத் தெரிந்து கொண்ட ஷெரின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை இருந்துகொண்டே இருந்தது. 'எனக்கும் உனக்கும் நடுவுல ஒன்னும் இல்லை; ஒரு நல்ல ப்ரெண்ட்ஷிப் நமக்கு நடுவுல...
பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ்
முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்‌ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இரவு சந்திப்பு 1 - சேரன், ஷெரின், வனிதா சாக்‌ஷி. சாக்‌ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்‌ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், 'என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க' எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். பின்னாடியே போன சாக்‌ஷி ஷெரினைச் சமாதானப்படுத்தினார். இன்ஃப்ளூயன்ஸ் செய்வது என்றால் என்ன? அதற்கு மற்றவர்கள் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்கிறதுக்கு இந்த உரையாடல் ஒரு நல்ல உதாரணம். வனிதாவும் ஷெரினும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தான். 'நான் உன்னோட நன்மைக்கு தான் சொல்றேன்' என வனிதா நிறைய சொல்கிறார். ஆனால் தேவையானதை மட்டும் தான் ஷெரின் எடுத்துக் கொள்கிறார். முந்தின நாள...
பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்

பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்

பிக் பாஸ்
நேற்றைய நாள் தொடர்ந்தது. 'ஏற்கெனவே வெற்றியைப் பார்த்தவர்கள் வெல்லக்கூடாதுன்னா எதுக்கு எங்களைக் கூட்டிட்டு வந்தீங்க' எனக் கேட்ட வனிதா, 'இதுக்கு விளக்கம் கொடுத்தா தான் நான் இனிமே விளையாடுவேன்' எனச் சொல்லிவிட்டு மைக்கைக் கழட்டி வைத்துவிட்டார். சேரனும் ஷெரினும் வனிதாவோடு தான் இருந்தனர். 'வெல்ல தகுதியான ஆள் நான் எனச் சொல்லி என்னையே நாமினேட் செய்யறதை என்னால புரிஞ்சுக்க முடில' என ஷெரினும் சொன்னார். கொதிநிலைலேயே இருந்த வனிதா இறங்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பாய்ஸ் அணி வெளியே வந்ததுக்கு அப்புறம் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார் கவின். தர்ஷன் கஷ்டபட்ருக்கான் யாரும் இல்லையென மறுக்கவில்லை. ஆனால் அது ஒரு தகுதி கிடையாது. இதே தர்ஷன் ஒரு தடகள விளையாட்டு வீரராக இருக்காரென வைத்துக் கொள்வோம். அப்பொழுது 100 மீட்டர் ரேஸ் ஓடும் போது, இவர் கஷ்டபட்டிருக்கார் என கிரேஸ் டைம் கொடுப்பாங்களா? இல்ல கூட ஓ...
பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா

பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா

பிக் பாஸ்
ஞாயிறு தொடர்ந்தது. ஷெரின் பாத்திரம் தேய்க்க, சாண்டியும் கவினும் லந்து பண்ணிக் கொண்டிருந்தனர். லானில் படுத்துக் கொண்டு, 'வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்' எனப் பாடிக் கொண்டிருந்த லாஸிடம், "சாப்பிடலியா?" எனக் கேட்டு, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார் சேரன். 'பசியில்லை' எனச் சொன்ன லாஸ், 'இங்க வாங்க உங்க கூட கதைக்கணும்' எனச் சொல்ல சேரனும் வருகிறார். ஒரே வீட்டுல இருந்து கொண்டு வாரம் ஒரு தடவை தான் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு முன்னாடி கவினுக்கும் லாஸ்க்கும் அட்வைஸ் கொடுக்கும் போது பேசினார். அதற்கு முன்னாடி கமல் எபிசோட் முடிந்து இரண்டு பேரும் அழுதனர். 'ஒரு அரை மணி நேரம் எங்கூட பேச உனக்குத் தோனலியா? நான் பேசறது, பழகறது பொய்ன்னு உனக்குத் தோனிச்சுன்னா, எங்கிட்ட வந்து கேட்ருக்கலாமே? நீ பேச வேண்டாம்ன்னோ, பழக வேண்டாம்ன்னோ நான் சொல்லவே இல்லையே! உனக்கான சுதந்திரம் உங்கிட்ட தான் இருக்கு. நீ...
பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள்

பிக் பாஸ் 3: நாள் 70 | பார்வையாளர்களின் கேள்விகள்

பிக் பாஸ்
காலர் ஆஃப் தி வீக்: “லாஸ்லியா - நீங்க சேரனை அப்பானு கூப்பிடுறீங்க, அவரும் உங்க மேல பாசமா இருக்காரு. ஆனா கவின் அதை ட்ராமான்னு சொல்லும் போது உங்களுக்கு ஏன் கோவமே வரல?” இந்தக் கேள்விக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பதிலைச் சொன்னார் லாஸ். ‘நாங்க இங்க 24 மணி நேரம் இருக்கோம். நீங்க ஒரு மணி நேரம் தான் பார்க்கிறீங்க. எனக்காகச் சாப்பிட வெயிட் பண்றதா சொல்றாரு, ஆனா நேத்து சாப்பாடு வந்த உடனே சாப்பிட போய்ட்டாரு. டாஸ்க்ல என் மேல புகார் சொல்றாரு. அதனால இதெலாம் உண்மையான்னு எனக்குத் தெரில, நான் ஒரு கன்ஃப்யூசன்ல இருக்கேன். இதிலிருந்து நான் வெளிய வரணும். நான் நானா தான் இருக்கேன். இது தான் பதில்’ என கண்ணைக் கசக்கினார். ‘அதுக்கு இது பதில் இல்லையே!’ என்று தோன்றினாலும், கவினோடு தொடர்ந்து பேசிப் பேசி, அவரோட வாத திறமையும், நீட்டி முழக்கி விளக்கம் சொல்லும் கலையும், லாஸுக்கும் வந்துவிட்டது. அப்பா - மகள் உறவு கொண்டாடுவதி...
பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்

பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்

பிக் பாஸ்
நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடி வரவேற்க மேடைக்கு வந்தார் கமல். கலைகளைப் பற்யும், கலாச்சாரத்தை பற்றியும் ஒரு பிரசங்கம் நடந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பழகவேண்டும். அதில் கமலை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தக் கலைஞர்கள் வந்ததையும் தன் அரசியல் மைலேஜ்க்கு உபயோகப்படுத்திக் கொண்டார். வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். யுவன் பிறந்த நாளுக்கு, 'மேல ஏறி வாரோம்' பாட்டைப் போட, சேரன் வரைக்கும் எல்லோரும் ஆடினார்கள். நேற்று ஷெரின் கூடுதல் உற்சாகத்தோடு இருந்தார். பாத்ரூம் ஏரியாவில் ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தவர், கவினோடு சேர்ந்து, 'நான் வீட்டுக்குப் போறேன்' என அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தார். 'சாக்‌ஷி வந்து என்னைக் கூட்டிட்டுப் போவாளா?' எனக்னு கேட்டுக் கொண்டிருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட பஜ்ஜியைக் கவினுக்குக் கொடுத்து பாதியை வாங்கிச் சாப்பிட, அங்கே அமர்ந்திருந...
பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

பிக் பாஸ்
எப்பவும் போல் பாட்டும் நடனமும் முடிந்த உடனே கவின் - லாஸ் அத்தியாயம் தான். தன்னோட ரிலேஷன்ஷிப் பற்றிச் சொன்னதுக்கு அப்புறம், 'லாஸ் என்ன நினைக்கறாங்க?' என கவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கும் தெரில. அதனால் லாஸோட சின்ன சின்னச் சின்ன செய்கைகளுக்கும் அவராக ஓர் அர்த்தம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். கவினின் பழைய ரிலேஷன்ஷிப்பைப் பற்றி லாஸ் எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. லாஸ் அடிக்கடி சொல்கின்ற மாதிரி, கொஞ்சம் நேரமெடுத்து மண்டைக்குள் போட்டு ப்ராசஸ் பண்ணி ஏதாவது சொல்லுவாங்க என நினைக்கின்றேன். லாஸ் கொஞ்சம் டேஞ்சரான பெண் தான். நார்மலாகவே பெண்கள் உடனக்குடனே ரியாக்ஷன் காட்டிவிடுவார்கள். ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி, எதுவுமே தன்னைப் பாதிக்காத மாதிரி நடந்துக் கொள்கிற லாஸ் உண்மையிலேயே கல்லுளிமங்கி தான். கவின் - லாஸ் பேசிக் கொண்டிருக்கிறதை சாண்டி, சேரன், தர்ஷன் கிண்டல் பண்ணிக் க...
பிக் பாஸ்: 3 நாள் 67 – அதே! அதே! எல்லாம் அதே! அதே!

பிக் பாஸ்: 3 நாள் 67 – அதே! அதே! எல்லாம் அதே! அதே!

பிக் பாஸ்
காலையில பாட்டு, டான்ஸ் முடிந்தவுடனே கவின்-லாஸ் பஞ்சாயத்து தான் முதலில். அதாவது தொடக்கமே அவர்களிடமிருந்துதான். அதுவும் எந்த இடத்தில் தெரியுமா? ஆம், அதே தான், கக்கூஸே தான். அதே கவின், அதே லாஸ், அதே நீட்டி முழக்கல், அதே வெட்கச் சிரிப்பு, அதே நீங்க, அதே நான், அதே ரிவியூ. முடியலைங்கய்யா! நேற்று வரைக்கும் எதுவா இருந்தாலும் வெளியே போய் பேசிக் கொள்ளலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்றோ, 'நான் முடிவு பண்ணிட்டேன்/ வெளிய போய் பேசறதுக்கு ஒன்னும் இல்லை' எனச் சொல்லத் தொடங்கிட்டார். இப்பொழுது லாஸ் அந்த வாக்கியத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாட்டுப்புறக் கலைகள் வாரத்தில், இன்னிக்கு வில்லுப்பாட்டு. பயிற்சி கொடுத்து, அதை சரியாகச் செய்யறாங்களா எனப் பார்த்து, அதற்கப்புறம் இரண்டு அணியும் கான்செப்ட் பிடித்து, வில்லுப்பாட்டு நடத்திக் காட்டி, அதில் பெஸ்ட் யார் எனத் தேர்ந்தெடுத்து, உஸ்ஸ்ஸ்.... யப்பா.... தி...
பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

பிக் பாஸ் 3: நாள் 66 | பிக் பாஸ் – சர்வம் நாடகமயம்

பிக் பாஸ்
காக்கிச்சட்டை பாடலுடன் தொடங்கியது நாள். கிராமத்து எஃபெக்ட்டாம். என்னவோ ஆடிக் கொண்டிருந்தனர். காலையிலேயே கவின் தன் வேலையை ஆரம்பித்திருந்தான். லாஸிடம், ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, தனக்கு இன்னொரு ரிலேஷன் ஷிப் இருந்தது, அது ப்ரேக் ஆகிவிட்டது எனச் சொன்னதை கேட்டு லாஸ் முகத்தில் ஈயாடவில்லை. அது ரொம்ப சீரியஸ் & காம்ப்ளிகேட்டட் என சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். அதே சீரியஸ் முகத்தோடு கேட்டுக் கொண்டார் லாஸ். ‘எதுவாக இருந்தாலும் வெளியே போய் பேசிக்கலாம்’ என லாஸ் சொல்ல, கவின் முகத்தில் 1000 வாட்ஸ் பிரகாசம். சரி இப்ப எதற்கு இதைச் சொல்லவேண்டும்? ஒருவேளை இப்பத்தான் ஞாபகம் வந்திருக்குமோ? சாக்ஷியிடம் கல்யாணம் வரைக்கும் பேசிய பொழுதும் இதைச் சொல்லவில்லை. லாஸிடம் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தே கிட்டத்தட்ட 3 வாரம் ஆகிவிட்டது. இப்ப வந்து, அதுவும் ஒரு டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் போது, ...
பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா

பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா

பிக் பாஸ்
முந்தைய நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நாள். நான் ஏன் இந்த வெற்றிக்குத் தகுதியானவன்? டாஸ்கில் லாஸ் தன் வாதத்தை எடுத்து வைத்தார். லாஸ்லியாவுக்கு ஆர்மி இருப்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அதுவே அவருக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கவின் சொன்ன மாதிரி, தான் இரண்டு தடவை நாமினேட் ஆகியும் வெளியே போகவில்லை. 'சோ அப்ப நான் சரியாத்தான் இருக்கேன்' என விவாதம் செய்தார். சாக்‌ஷி எலிமினேட் ஆன நேரத்தில், லாஸ் - கவின் இரண்டு பேரும் நாமினேஷனில் இருந்தார்கள். மூன்று பேரில் சாக்‌ஷியை மக்கள் வெளியே அனுப்பினதால், அவங்க பக்கம் தப்பில்லை என முடிவுக்கு வந்து விட்டார். இதை லாஸ் யோசிக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக கவினோட பேசித்தான் இது லாஸுக்குத் தெரிந்திருக்கும். அதனால் தான் கமல் சொல்லியும், ஹவுஸ்மேட்ஸ் சொல்லியும் எதையும் கேட்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு பேரும் அவர்கள் விருப்பத்திற்கு நடந்து ...
பிக் பாஸ் 3: நாள் 64 | கமல் பற்ற வைத்த நெருப்பு ஒன்று

பிக் பாஸ் 3: நாள் 64 | கமல் பற்ற வைத்த நெருப்பு ஒன்று

பிக் பாஸ்
'ஜிகுரு ஜிகரு' பாடலுடன் தொடங்கியது நாள். லாஸ் முகின் மட்டும் ஆடினார்கள். தர்ஷனின் மூட் அவுட்டுக்குக் காரணம் கேட்டுக் கொண்டிருந்தார் ஷெரின். வனிதா தன்னைத் தொடர்ச்சியாக டார்கெட் செய்வது தர்ஷனை மிகவும் பாதித்திருக்கிறது. யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டது பிக்பாஸ் தான். அதற்கு பதில் சொன்னவர்கள் ஒவ்வொரு காரணம் சொல்லியுள்ளார்கள். எல்லோரும் சொன்ன காரணம் எல்லா டாஸ்க்கையும், எல்லா வேலையையும் ரொம்ப சீரியஸாக எடுத்துப் பண்றது தர்ஷன் தான். கூடவே அவனோட கண்ணீர்ப் பக்கங்களை பற்றியும் சொல்லிருந்தனர். ஆனால் வனிதா முதல் பாயின்ட்டை விட்டுவிட்டு ரெண்டாவது பாயின்ட்டை மட்டும் வைத்து தர்ஷனைத் தொடர்ச்சியாகக் தாக்கிக் கொண்டிருந்தார். 'தர்சன் ஜெயிக்க ஆசைப்படறோம்' எனச் சொன்னது தர்ஷனுக்குக்காக விட்டுக் கொடுப்போம் எனத் திரிந்து, இப்போ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் வனிதா. இங்கே யாரும் விட்டு...
பிக் பாஸ் 3: நாள் 63 | ‘நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்’ – கமல்

பிக் பாஸ் 3: நாள் 63 | ‘நான் பொதுவாகத்தான் சொல்கிறேன்’ – கமல்

பிக் பாஸ்
இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோவிற்கு எதற்கு கமல்? கமலுக்கு இது தேவையில்லாத வேலை. அவரோட தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார் என ஃபீல் செய்பவர்கள், நேற்றைய அத்தியாயத்தை ஒரு தடவை பார்க்கவேண்டும். 100 நாள் பூட்டின வீட்டிற்குள் இருக்கப் போற கன்டெஸ்டன்ட்ஸ், பாதி கிணற்றைத் தாண்டி ஒரு வழியாக அவர்களே தன்னை ஒரு மாதிரியாக செட்டில் பண்ணி வைத்துள்ளனர். ஒரு நல்ல க்ரூப் ஃபார்ம் ஆகியிருக்கு, ஒரு பாச உறவு, ஒரு காதல், இன்னதென்று சொல்லமுடியாத ஒரு ஈர்ப்பு இப்படி எல்லாமே இருக்கு. சரி இதை இப்படியே விட்டால் என்னாகும்? ஒவ்வொரு தடவையும் கூடிக் கூடிப் பேசி, 'இந்த வாட்டி கேப்டன் பொறுப்பை நீ எடுத்துக்கோடா. இந்த டாஸ்க்ல வின்னரா உன் பேரைச் சொல்லிக்கலாம். அடுத்த டாஸ்க்ல நீ என் பேரைச் சொல்லிடு' என வந்து நிற்கும். இதை உணர்ந்து கொண்ட பிக் பாஸ் டீம், ஒவ்வொரு கன்டஸ்டென்ட்டுக்கும் அவர்கள் எப்படி இருந்தார்கள், இப்பொழுது எந்த இடத்த...