Shadow

Tag: Mahadevan CM

பிக் பாஸ் 3 – நாள் 25

பிக் பாஸ் 3 – நாள் 25

பிக் பாஸ்
முந்தின நாள் கவின் - சாக்‌ஷி - லியா பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. சாக்‌ஷியிடம் பேச வேண்டுமெனக் கவின் பாத்ரூம் ஏரியாவில் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார். சாக்‌ஷி உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கார். ஷெரின் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு போகிறார். அப்பவும் கவின் அங்கேயே இருக்கிறார். 'நீ எனக்காக வெயிட் பண்ணாத. போய் சாப்புடு' எனச் சொல்லிவிட்டுப் போனார் சக்‌ஷி. கோவமாக இருந்தாலும் பாசமாக இருக்காங்களாம். அடுத்து 9 மணிக்கு மேலே சாக்‌ஷி பாத்ரூம் ஏரியா வர அங்கே வைத்துப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் அதே ப்ளா ப்ளா, ஆனால், 'ஒரு தடவை ட்யூப்ல இருந்து வெளியே வந்த பேஸ்ட் மறுபடியும் உள்ள போகாது கவின்' எனச் சொல்லிவிட்டுச் சென்றார் சாக்‌ஷி. அதே நேரத்தில், அந்த பக்கம் லியா பாட்டு பாடி ஜாலி பண்ணிக் கொண்டிருந்தார். வெளியே சோகமாக வந்த கவின் நேரா லியா அருகே போய் அமர்ந்தார். 'மறுபடியும் முதல்லேர்ந்தா?'...
பிக் பாஸ் 3 – நாள் 24

பிக் பாஸ் 3 – நாள் 24

பிக் பாஸ்
'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்' என்ற பழைய பாட்டோடு ஆரம்பித்தது நாள். 'இதுக்கு என்னத்த ஆடறது?' என நினைத்த பாதி பேர் வேடிக்கை பார்க்க, சாண்டியும் சாக்‌ஷியும் மட்டும் கடைசி வரை ஆடினர். நேற்றைய பஞ்சாயத்துக்களின் மிச்சங்கள் இன்னிக்கும் பேசப்பட்டது. 'கவின்-மீரா பிரச்சினையில என் ஃபுல் சப்போர்ட்டும் உனக்கு தான் பேபி' என சாக்‌ஷிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார் மோகன். இந்த ரேஷ்மா நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என்றுதான் தெரியவில்லை. அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போய்விட்டு வரும்போதெல்லாம், காற்று வாக்கில் காதில் விழும் மேட்டரையெல்லாம் கேட்டு விட்டு, அதைப் பக்காவாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லி விடுகிறார். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டிச் சொல்லாமல், நடந்ததை அப்படியே சொல்வதுதான். அப்படிச் சொல்லிவிட்டு, அதற்கு என்ன செய்யலாம் என்கிற தீர்வும் கொடுக்கறார். பல சமயங...
பிக் பாஸ் 3 – நாள் 23

பிக் பாஸ் 3 – நாள் 23

பிக் பாஸ்
'ஜிங்குனமணி' பாடலுடன் விடிந்தது பொழுது. பஞ்சாயத்து 1 மோகன் தன் வரவழைக்கப்பட்ட ட்ரேட்மார்க் சோகத்தோட சாக்‌ஷியிடம் பேசிக் கொண்டிருந்தார். நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அதாவது பாத்ரூம் க்ளீனிங் டீம்ல இருக்கின்ற மோகனுக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை. 'ஏதோ அலர்ஜியாக இருக்கு. அதனால் என்னை குக்கிங் டீம்ல போட்ருங்க' என சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கேப்டன் சாக்‌ஷி, 'நான் பார்த்துக்கறேன்' எனச் சொல்லி, அவரை வெசல் வாஷிங் டீம்ல போடுகிறார். சரவணன் ஏற்கனவே குக்கிங் டீமில் இருக்கிறார். அங்க மோகன் போனால் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு. அதனால வெசல் வாஷிங்ல இருக்கட்டுமெனச் சொல்லி அதற்கு நியாயமான காரணமும் சொன்னார். ஆயிற்றா, இந்த விஷயம் ரேஷ்மாக்குத் தெரிய வருகின்றது. 'ஏம்பா, ஏற்கனவே ஒரு தடவை இந்த டீம்ல இருக்கும் போது, இனிமே என்னை இந்த டீம்ல மட்டும் போடாதீங்க எனச் சொன்னார், இப்ப மறுபடியும் இங்க...
பிக் பாஸ் 3 – நாள் 22

பிக் பாஸ் 3 – நாள் 22

பிக் பாஸ்
'உரசாதே' பாடலுடன் தொடங்கியது நாள். கூடுதல் உற்சாகத்துடன் ஆடினார் லியா. வர வர இந்த சாண்டி டான்ஸ் ஆட வருவதே இல்லை. பாடல் முடியும் தருவாயில் ஷெரின் அருகில் நின்ற சாண்டி, தமிழ் சினிமாவில் வருவது போல் குடையால் அவர்களை மறைத்துக் கொண்டு குடையை மட்டும் ஆட்டிக் கண்பித்தார். அதை சரியாக கேட்ச் செய்த கேமரா, எடிட்டிங் டீமுக்கு வாழ்த்துகள். காபி போட லேட்டானதால், கிச்சன் ஏரியாவில் காபி, காபி என்று கெரொ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது சரவணனும், மோகனும் சைகையில் பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த காட்சியில் மோகன் சரவணன் பற்றிப் புகார் சொல்ல ஆரம்பித்தார். சாக்‌ஷி, ரேஷ்மா அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். தன்னைத் தொடர்ந்து அவமதிப்பதாகவும், தன்னால் தாங்க முடியவில்லை எனவும் சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் மோகன். இல்ல தெரியாமல்தான் கேக்கறேன். இப்படி யாராவது நம்மளை அவமானபடுத்தினால் முதலில் நமக்குக் கோவம...
பிக் பாஸ் 3 – நாள் 21

பிக் பாஸ் 3 – நாள் 21

பிக் பாஸ்
அட்டகாசமான உடையில் கமல் என்ட்ரி கொடுத்தார். நேராகவே நிகழ்ச்சிக்குள் போய் விட்டார். தர்ஷன், மீரா இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றிக் கேட்ட போது தான், பார்வையாளர்களுக்கே சில விஷயம் தெரிய வந்தது. அதாகப்பட்டது மீரா தர்ஷன் அழகுல மயங்கி, 'எங்க அம்மாட்ட வந்து பேசு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ' எனச் சொல்ல, 'இந்தாம்மா எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. இத்தோட இந்தப் பேச்சை விட்டுடு' என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிருக்கார் தர்ஷன். மீரா அந்தப் பேச்சை விடவில்லை. 'வீட்டில இருப்பவரிடம் எல்லாம் வேற சொல்லிக் கொண்டிருக்கிறாங்க' என தர்ஷன் கம்ப்ளையிண்ட் பண்ணினார். 'அன்னிக்கு காலையில 6 மணி இருக்கும்' எனப் பேச ஆரம்பித்து, மீரா முடித்த போது, கமல் உட்பட பார்த்தவர் அனைவருமே ரவிமரியா நிலைமையில் தான் இருந்தனர். அப்படி ஒரு நான்-ஸ்டாப் பேச்சு. இந்த விஷயம் அரசல் புரசலா தான் நமக்குக் காட்டப்பட்டது. ஆனா மீரா பேசும் போது அதி...
பிக் பாஸ் 3 – நாள் 14

பிக் பாஸ் 3 – நாள் 14

பிக் பாஸ்
முதலில் ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். அது கமலின் உற்சாகம். கலக்கலான ட்ரெஸ்ஸொட செம்ம எனர்ஜியோடு இருந்தார். நேரடியாக நேற்றைய நிகழ்வுகளோட தொடர்ச்சி நடந்தது. அபிராமி மாற்றி ஓட்டு போட்டது தான் ஹாட் டாபிக். வெளியே சாக்‌ஷியோட பேசிக் கொண்டிருந்த அபி, 'இது என்னோட சொந்த முடிவு, அந்த டைம்ல எனக்கு அந்த முடிவு சரியா இருந்தது. மீரா கூட தான் எனக்கு பிரச்சினை' எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வனிதா அங்கே வந்தார். அப்பொழுது ஆரம்பித்து அடுத்த 15 நிமிஷத்துக்கு அபிராமியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார் எப்பவும் போல். 'நான் என்ன சொல்ல வர்றேன்' என அபி ஆரம்பித்தால், அடுத்த 5 நிமிஷத்துக்கு வனிதா தான் பேசுகிறார். அபியால் ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியவில்லை. வெளியே பேசிக் கொண்டிருந்த போது, 'உன் உரிமைடா' எனப் பேசிக் கொண்டிருந்த சாக்‌ஷி, உள்ளே போனவுடனே வனிதாவுக்கு ஜால்ரா போடுகிறார். கூடவே ஷெரின் வேற. 'நீ ச...
பிக் பாஸ் 3 – நாள் 13

பிக் பாஸ் 3 – நாள் 13

பிக் பாஸ்
ஒரு புதிய நாள், சாண்டியோட பிறந்த நாள் வாழ்த்துக்களோட ஆரம்பித்தது. முதல் டாஸ்க் அபிராமி மத்த ஹவுஸ்மேட்ஸுக்கு நவரசங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அபிராமி என்ன சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியவில்லை. ஆனால், சாண்டி + பாத்திமா ஜோடி அப்ளாஸ் அள்ளிவிட்டது. கிச்சனில் வனிதா கிட்ட மதுவைப் பற்றி கம்ப்ளெயின்ட் பண்ணிக் கொண்டிருந்தார் மீரா. புடவை கட்டிவிட வந்ததாகவும், ஆனா கடைசி நேரத்தில் மாட்டேன் எனச் சொல்லி பாத்திமா தான் ஹெல்ப் பண்ண வந்ததாகவும் மீரா சொல்ல, வனிதா மண்டைக்குள்ள உடனே பல்பு எறிந்திருக்கும் போல. சினிமாவில் எதிரெதிராக இருக்கிற இரண்டு கேங்ஸ்டர்கள் ஒன்று சேரும் போது, எதிரி கூட்டத்தில் இருந்து தனக்கு உளவு பார்த்த அடியாள் ஒருத்தனைப் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரி, 'பாத்திமா உன்னைப் பார்த்து நேரோ மைண்டட்னு சொன்னா' என மீராவிடம் போட்டுக் கொடுத்தார் வனிதா. மீராவும் உடனடியாக தன் ம...
பிக் பாஸ் 3 – நாள் 12

பிக் பாஸ் 3 – நாள் 12

பிக் பாஸ்
குலேபகாவலி பாடலுடன் பொழுது ஆரம்பித்தது. முதல் டாஸ்க் சரவணன் ஹவுஸ்மேட்ஸுக்கு கோழி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர் காண்பித்த டெமோவே நல்லா இருந்தது. பிறகு அபிராமி கோழி பிடித்துக் காட்டினார். இந்தப் புள்ள மட்டும் அந்த குரூப்பை விட்டு வெளியே வந்தார் என்றால், 'சார் அபிராமி சார், கோழி பிடிக்கிறாங்க சார்' எனச் சொல்லி ஒரு கவிதை எழுதிருக்கலாம். அடுத்து, டைனிங் டேபிள்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த மது, 'எனக்கு ஓட்ஸ் பிடிக்காது, போனவாரம் பழைய சாப்பாடு நைட்டே எடுத்து வச்சிருப்பாங்க. அப்படி எதுவும் இல்லையா?' எனக் கேட்டு அடுத்த ஏழரைக்குத் தயாரானார். அதே விஷயத்தை கேப்டன் கிட்டேயும் சொல்லி, 'பழைய சாப்பாடு இருந்தா போதும், அதுக்கு ஏற்பாடு செய்ங்க' எனச் சொன்னாங்க மது. இதை மோகன் போய் ரேஷ்மா கிட்ட சொல்ல, 'ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சமைக்க முடியாது, வேணும்னா அவங்களையே செஞ்சுக்க சொல்லுங்க, நல்லாருக்குனு ...
பிக் பாஸ் 3 – நாள் 11

பிக் பாஸ் 3 – நாள் 11

பிக் பாஸ்
பத்தாம் நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது. நேற்று மோகனிடம் ஏதாவது வேலை என்றால் கேப்டன் எனும் முறையில நீங்க வந்து சொல்லுங்க எனச் சொன்னதையே இன்று வனிதாவிடம் சொல்லி, வனிதாவோட பேட்புக் லிஸ்ட்ல நேரடியாக இடம் பிடித்தார் சேரன். அதை அவ்வளவு ஈசியா எடுத்துக் கொள்ளாத வனிதா, 'எனக்கும் சேரனுக்கும் இனிமே பேச்சுவார்த்தை இல்லை. அன்னம் தண்ணி புழங்க மாட்டேன்' என இன்ஸ்டன்டாகத் தீர்ப்பு கொடுத்தார். 'நான் தான் கேப்டன், என் வயசுக்கு மரியாதை கொடுக்கனும், என் பேச்சை கேக்கனும், என் கிட்ட வந்து என்னை மதிச்சு உங்க பிரச்சினையைச் சொன்னா, உங்களுக்காகப் பேசுவேன்' என இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என ஒரு போர்ட் வைத்தார். அப்ப ஒருத்தன் கொட்டாவி விட்டுட்டு இருந்தது தான் இந்த சீனுக்கான குறியீடு. சாண்டி நேத்து நடந்த பிரச்சினையில, மீராவையும், மதுவையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். வலை போட்டதென்னவோ மீராவுக்குத் தான், ...
பிக் பாஸ் 3 – நாள் 10

பிக் பாஸ் 3 – நாள் 10

பிக் பாஸ்
நேற்று விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த எபிசோட். மீரா, மது, முகின், லொஸ்லியா இவங்க பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்த சாக்‌ஷி, நேராக வனிதாவிடம் போய், அபிராமிகிட்ட பேசாதே என முகினுக்கு அட்வைஸ் பண்றதா சொல்றாங்க. அந்த விஷயத்துக்கு வனிதா ரியாக்ட் பண்ணினதை நேற்றே பார்த்தோம். இன்னிக்கு எபிசோட்ல வனிதா நேரடியாக முகின் கிட்ட மீரா கிட்ட பேசினதை பத்தி விசாரிக்கறாங்க. முகினும் வரிசையா எல்லாம்ம் சொல்லிக் கொண்டே வருகிறாரு. 'நீ அபிராமி கிட்ட பேசக்கூடாது என மீரா சொன்னாளா?' என நேரடியாகக் கேட்க, அப்படியெல்லாம் பேசவே இல்லை என முகின் சொல்றார். அதை கேட்ட வனிதா உடனே சாக்‌ஷியைக் கூப்பிட்டு விசாரிக்க, 'நீ நீயா இரு, உன்னைச் சுத்தி எதுவும் சரியில்லன்னு மீரா சோன்னாளே!' எனக் கேட்க, முகின் ஆமாவெனச் சொல்ல, 'அதான், அதை தான் நானும் சொல்றேன்' என கண நேரத்துல ப்ளேட்டை மாற்றினார் சாக்‌ஷி. 'புரியலையா உனக்கு? உன்கிட்ட இன்...
பிக்பாஸ் 3 – நாள் 9

பிக்பாஸ் 3 – நாள் 9

பிக் பாஸ்
ஓ மை டார்லிங் பாடலுடன் ஆராவாரமாக ஆரம்பித்தது நாள். நடனம் ஆடுவதில் யாருக்கும் ஆர்வம் இல்லையெனச் சொன்னது யாருக்குக் கேட்டதோ இல்லையோ பிக்பாஸுக்குக் கேட்டுவிட்டது. நேற்று டோஸ் கொடுத்துருப்பாரு போல். இன்று சரவணன் வரைக்கும் எல்லாரும் ஆடிக் கொண்டிருந்தார்கள். காலை முதல் டாஸ்க் லெட்டர் வந்தது. மது மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு மோட்டிவேசன் ஸ்பீச் கொடுக்கனும். 'லொஸ்லியா நல்லா பாடுவார்; அவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்' என வந்தது. அதே மாதிரி தான் மற்றவர்களுக்கும். ஆனா பிரச்சினை வரவேண்டும் என்றே மதுவுக்கு இதைக் கொடுத்த மாதிரி இருக்கு. ஆரம்பத்துலேயே, 'என்னை விடப் பெரியவங்க இருக்கிறாங்க. அதனால் எனக்குத் தெரிந்ததை சொல்றேன்' என டிஸ்கியோட ஆரம்பித்தார்கள். எதிர்பார்த்த மாதிரி எதை எதையோ பேசிட்டு இருந்தாங்க. ஒரே விஷயம் தான். மதுவுக்குக் கொடுத்த தலைப்பில் என்ன பேசனும் என்று சுத்தமாகத் தெரியவில்லை. வழக்கம் ப...
பிக்பாஸ் 3 – நாள் 8

பிக்பாஸ் 3 – நாள் 8

பிக் பாஸ்
வழக்கமான பாடலுடன் ஆரம்பித்தது. லாஸ்லியா, மது இரண்டு பேரைத் தவிர பெரிதாக யாரும் ஆர்வத்தோடு ஆடுவதில்லை. மீரா தியானம் மாதிரி ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. சாண்டி பக்கத்தில் அமர்ந்து, "என்ன கருமம்டா இது" என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார். நேத்து பிரச்சினையின் போது, 'நீ தமிழ்பொண்ணு தானே? ஏன் புடவை கட்டாம மாடர்ன் ட்ரெஸ் போட்ருக்க?' என சாக்‌ஷி கேட்டதாலா அல்லது இல்ல தற்செயலா எனத் தெரியவில்லை; மது புடவையில் இருந்தாங்க. அதில்லாமல் மெளன விரதம் வேறு. இந்த மெளன விரதத்தை நேத்து இருந்திருக்கலாம் என சாண்டி கலாய்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பக்கம் சாக்‌ஷிக்கு தற்காப்புக்கலை சொல்லி கொடுக்கவேண்டும் என்று டாஸ்க். ஜாலியா இருந்தது. அப்படியே எல்லாரும் ரிலாக்சா உட்கார்ந்து கொண்டு இருக்கும் போதே பிக்பாஸ் கிட்ட இருந்து அறிவிப்பு வந்தது. இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சு. எல்லாரும...