Shadow

Tag: Mahadevan CM

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ்
முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும் இருந்தார். ‘என்னடா இது? நேத்து தானே வெளிய போனாரு?” எனா யோசித்துக் கொண்டே தான் பார்க்க வேண்டியிருந்தது. காலையிலேயே மதுவும், அபியும் சண்டைக்குத் தயாராக நின்றனர். கேப்டன் முகின், ‘அங்க என்னம்மா சத்தம்?’ எனக் கேட்கவும், ‘சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்’ எனச் சொன்னாலும், அது சண்டைக்கு முந்தின லெவலில் இருந்தது தான் உண்மை. அபி முகத்தைக் காண்பித்து விட்டுப் போக, முகின் பின்னாடியே சமாதானப்படுத்தப் போனார். இந்த கவினைப் பார்த்து அவரை மாதிரியே எல்லா ஆண்களும் இருப்பாங்க என நினைத்து விட்டார் போல அபி. மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தால், "இல்ல மச்சா" என உட்கார்ந்து, இரண்டு மணி நேரம் பேசணும் என எதிர்பார்க்கிறார். ஆனா முகின்ல் அப்படி இல்லை. ‘கோச்சுக்கறியா, சரி கோச்சுக்கோ. நான் போய் ஃப்ரூட்டி குடிச்சுட்டு வரேன்” எனப் போய் விடுகிறார். அதே சமயம் தேவையில்லாத...
பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ்
ஞாயிறு தொடர்ச்சியாக ஆரம்பித்தது. ரேஷ்மாவின் எவிக்சனுக்கு தான் ஒரு காரணமாகிவிட்டோம் என முகின் இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். கூட சாக்‌ஷி, ஷெரின், அபி உக்காந்திருக்கும் போது, "நான் முகின் கிட்ட பேசறது உனக்குப் புடிக்கலையா?" எனக் கேட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு அடி போட்டார். இப்பொழுது இதைப் பேச வேண்டுமா? முகின் இன்னும் அழுது கொண்டிருருக்கிறார். "அப்புறம் பேசலாம்" என அபி சொல்ல, "என்கிட்ட மூஞ்சியை காட்டாத" எனச் சாக்‌ஷி சொல்ல, "உனக்கு எப்பவும் உன் பிரச்சினை தான் பெருசு" எனச் சொல்லிக் கொண்டே அபி அந்த இடத்தை விட்டு எழுந்து போனார். உள்ளே போனவர் லாஸ் கிட்ட இதையே சொல்லி அழுகிறார். கூடவே, "நான் அழுதுட்டே வரேன். ஆனா முகின் அங்கேயே உக்காந்துட்டு இருக்கான். அவனுக்கு அவங்க தான் முக்கியம்" எனச் சொல்லி அழ, சமாதானப்படுத்த ஷெரின் வர, அபி அழுது கொண்டே இருக்கிறார். பெட்ரூமில் இருக்கும் போதும் அழுகை தொடர, முகி...
பிக் பாஸ் 3: நாள் 42 – “மகனே கமல்!”

பிக் பாஸ் 3: நாள் 42 – “மகனே கமல்!”

பிக் பாஸ்
சம்பிரதாயத்துக்கு வீட்டுக்குள்ளே இரண்டு ஷாட் காண்பித்தனர். கோட் சூட்டில் ஆண்டவர் வருகைத் தந்தார். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எனச் சொல்லி வகுப்பெடுத்தார். நமக்கு வர பிரச்சினைக்கு நம்முடைய செயல்கள் தான் காரணமென வீட்டுக்குள் இருக்கிறவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசினார். இந்த வார டாஸ்கில் எல்லோரும் நடிகர் / நடிகை வேஷம் போட்டனர் இல்லையா? அதே கேரக்டரில் கமலிடம் கேள்வி கேட்கனுமென ஒரு விளையாட்டு. நன்றாகவே இருந்தது. சரவணனே ஆரம்பித்தார். 'நடிகர் சங்கத்தில் நீங்க பொறுப்பெடுத்துக்கலாமே! ஏன் செய்யலை?' என விஜயகாந்த் கேரக்டரில் கேள்வி கேட்டார். "நான் பின்னாடி இருந்து ஆக்‌ஷன், கட்லாம் சொல்லிட்டுத்தான் இருக்கேன். நடிகர் சங்கமா இருந்தாலும் அங்க நான் தான் டைரக்டர்" எனச் சொன்னார். இதுக்கு சினிமா உலகம் என்ன சொல்லப்போகுதென வெயிட் பண்ணிப் பார்க்கவேண்டும். சிம்பு கேள்விக்குப் பங்கமாகக் கலாய்த்து, பதில் சொன...
பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

பிக் பாஸ்
மீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக வந்து நின்றார். இரண்டு பட வேலைகள், அரசியல் கட்சி என எவ்வளவு பிரஷர் இருக்கும். ஆனால் ஏற்றுக் கொண்ட வேலையை ரசித்துச் செய்தோம் என்றால் எப்படி ரிசல்ட் இருக்கும் என்பதற்கு கமல் ஒரு உதாரணம். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் ஒரு காமெடி சீன் இருக்கும். ‘அறிந்தது, அறியாதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் எமனுக்குத் தெரியும்’ என கமல் டயலாக் பேசவேண்டும். சரியாகச் சொல்லாமல் இயக்குநரிடம் திட்டு வாங்குவார். அப்பொழுது காரணம் சொல்லுவார் – ‘கழுத்துல பாம்பு ஊறுது, கைல இருக்க பம்புல இருந்து தண்ணி வரணும், மாடு வேற மிரளாம பார்த்துக்கணும், டயலாக்கும் சொல்லணும்னா எப்படி சார்?’ ஒரே நேரத்துல பல வேலைகள் செய்யும் போது அந்த வேலையின் தரத்தில் நாம் சமரசம் பண்ணிக் கொள்வோம். கேட்டாலும், “ஒரே நேரத்தில் இத்தனை வேலை செய்து பார்த்தால் தெரியும் உனக்கு” என வியாக்கானம் பேசுவோம்....
பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

பிக் பாஸ்
மாரி பாடலுடன் தொடங்கிய நாளில் எப்போதும் இல்லாத வகையில் ஆண்கள் எல்லோரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் ஆரம்பமே இந்த வார டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தேர்ந்தெடுப்பதற்கான வேலை ஆரம்பித்தது. எப்பவும் போல் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமர் என வரும்போது சாண்டி, மது இரண்டு பேரும் போட்டியே இல்லாமல் செலக்ட் ஆகினர். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கு முகின் பேரைச் சொன்ன உடனே யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமர் யாரென வரும் போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. எடுத்த உடனே சாண்டி, ‘சேரன் ரஜினி கேரக்டரில் இன்னும் கொஞ்சம் நல்லா பண்பிருக்கலாம்’ எனச் சொன்ன உடனே ஜெர்க் ஆனார் சேரன். இந்த இடத்தில் சிலதைப் பார்க்கலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நிகழ்வு நடக்கும் போதெல்லாம், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் கருத்து சொல்லுவதில்லை. யாராவது ஒருத்தர் ஒரு பேரைச் சொன்னால், அதைக் கூட ஆதரித்த...
பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

பிக் பாஸ்
முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்‌ஷி ஒரு பக்கம் அழ, கவின் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, லோஸ்லியா இன்னொரு பக்கம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அபிராமியும் அந்தப் பக்கம் ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார். ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்‌ஷிக்கு ஷெரினும் ரேஷ்மாவும் சொன்னது பெஸ்ட். 'இதை இத்தோட விட்டுத் தொலைச்சிரு. இன்னையோட இதை முடிச்சிரு, நாளைக்குப் புது நாள்' எனச் சொல்ல, அப்படியே கட் பண்ணினால்.. நாள் 39 "இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்" பாட்டைப் போட்டு எழுப்பி விட்டனர். குசும்புக்காகவே இந்தப் பாட்டைப் போட்ருக்கின்றனர். அதுவும் "இரு மணம் கொண்ட" வரி வரும் போது கவினையும், சாக்‌ஷியையும் கட் பண்ணி காட்டியவர்கள், "இடையினில் நீ ஏன்?" வரி வரும் போது லோஸ்லியாவைக் காண்பித்ததெல்லாம் வேற லெவல். எவனோ ஒருத்தர் எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து கற்றுக் கொண்ட மொத்த ...
பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

பிக் பாஸ்
கிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால் போதும், ‘அக்காவ், என் மாமன் செய்யற வேலையைப் பார்த்தியா?’ என ஒரு பாட்டம் மூக்கைச் சிந்தி அழுது வைக்கும். அதற்கப்புறம் சகஜமாகி காப்பி தண்ணி குடித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தான் கிளம்பும். அடுத்த தெருவிற்குப் போனால், ‘அயித்த என் மாமியா என்ன பண்றா தெரியுமா?’ என மறுபடியும் அழுவதற்குத் தயாராகிவிடும். நிறைய சினிமாவில் கூட அந்த மாதிரி கேரக்டர் வரும். அந்த கேரக்டரோட டவுசர் போட்ட அப்டேட்டட் மாடர்ன் வெர்ஷன் தான் சாக்ஷி. நேத்து முதல் ஷாட்டே சாக்ஷி அழுது கொண்டிருப்பது தான். கேமராவைப் பார்த்து, ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என அழுது கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட அறிவாளியும் காதல் உணர்வு வரும் போது எப்படி அடி முட்டாளாக மாறிடுவாங்க என்பதற்கு, சாக்ஷி ஒரு சிறந்த உதாரணம். அண்ணா யுனிவர்சிட்டியில் கோல்டு மெடல் வாங்கிய பெண் அவர். நன்றாகப் படிப்பவர் எல்லா...
பிக் பாஸ் 3 : நாள் 37 – ஏன் பிக் பாஸ்? ஏன் இப்படி?

பிக் பாஸ் 3 : நாள் 37 – ஏன் பிக் பாஸ்? ஏன் இப்படி?

பிக் பாஸ்
காலையில் ராப் பாடல் பாடுவது எப்படி என முகின் சொல்லித் தருவது தான் டாஸ்க். ஆனா அவர் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே அபியும் ரேஷ்மாவும் பிஸ்து காட்டினர். ஹேட்ஸ் ஆஃப். இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பித்தது. ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் ஒவ்வொரு கேரக்டர், ஒவ்வொரு பாட்டு. அந்தப் பாட்டு ப்ளே ஆகும் போது லிவிங் ஏரியாவில் போடப்பட்ட மேடையில் வந்து ஆடவேண்டும். சேரன், சரவணன், கவின், லோஸ்லியா, சாண்டி, மதுமிதா எல்லோரும் நேற்று ஆடினார்கள். கேரக்டராகவே மாறி ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்தனர். லோஸ்லியா மட்டும் நான் எந்த கேரக்டர் கொடுத்தாலும், ‘நான் இப்படித்தான் இருப்பேன், நான் ஒரு பொம்பளை விஜய்சேதுபதிடா’ என ஆடிக் கொண்டிருந்தார். டான்ஸ் ஆடும் போது ஆடுகிறவர்களைக் காட்டாமல், மற்றவரின் முகங்களைக் காட்டிய எடிட்டிங் டீமுக்கு, மூக்கு மேல் ஒரு பஞ்ச் வைக்கவேண்டும். எபிசோடைப் பார்க்கவே மிக எரிச்சலாக இருந்தது. அதற்கு...
பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு”

பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு”

பிக் பாஸ்
‘நாடோடி, போக வேண்டும் ஓடோடி’ என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் ஆரம்பித்தது நாள். சாண்டி மட்டும் விழுந்து விழுந்து ஆடிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் மாதிரி ஆக்ஷன் கொடுத்து ஆடியதைப் பார்த்து பிக் பாஸ் டீமுக்கு பல்பு எறிந்திருக்கும். பாத்ரூமில் இருக்கும் போதே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த வீடே இரண்டாகப் போகுதென சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடந்தது. முதல் ஆளாக சாக்ஷி தான் கவின் பேரைச் சொல்லி ஆரம்பித்து வைத்தார். கவின், சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, மதுமிதா தான் இந்த வார எலிமினேஷனில் இருக்கிறார்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம். சிலர் சொன்னதைக் கேட்டால், ‘இதெல்லாம் ஒரு காரணமய்யா?’ எனத் தோன்றியது. தன்னை நாமினேட் பண்ணினார் என்பதற்காகத் திருப்பி சாக்ஷியை நாமினேட் செய்தார் சரவணன். முடிந்த உடனே எல்லோரும் ஹக் பண்ணி, ‘எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க!’ எனச் சொல்லிவிட்டுப் போனாலும...
பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

பிக் பாஸ்
சாண்டி மீராவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மீரா, மீரா மாதிரியே பேசிக் கொண்டிருந்தார். அப்படியே கட் பண்ணினால் கமல் சார் என்ட்ரி. இந்த சீசனில் கமலின் காஸ்ட்யூம் டிசைன் பட்டாசாக இருக்கு. உண்மை வெளிவருமென மீரா சொன்னதை சமகால நிகழ்வுகளோடு கனெக்ட் பண்ணிப் பேசி, அதற்கு கைதட்டல் கிடைத்த உடனே, ‘அய்யய்யோ நான் இங்க வீட்டுக்குள்ள நடக்கறதை சொன்னேங்க’ என ஆக்டிங் கொடுத்தார். ரகசிய அறையைப் பற்றிச் சொல்லி, ‘வேணுமா?’ எனக் கேட்டு, ‘உங்களை எல்லாம் திருத்தவே முடியாது’ என நேராக அகத்திற்குள் போனார். போன வேகத்தில் எலிமினேஷன் பற்றித்தான் பேசத் தொடங்கினார். கமலைப் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்குப் படு உற்சாகமாக இருக்கார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரையும் பாகுபாடு இல்லாமல் கலாய்க்கிறார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததடுத்த டாபிக் போகும் போதும், முன்ன பேசினதுக்கும், அடுத்து பேசப்போறதுக்கும் ஒ...
பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

பிக் பாஸ்
நேரடியாக கமலின் நுழைவில் இருந்து தொடங்கியது. வீட்டுக்குள் ஒரு மறைவான இடத்தில் இருந்து பேசிக் கொண்டிஇருந்தார். இந்த சீசனோட ரகசிய அறையைக் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தார். யாருக்கு உபயோகப்படப் போகிறதெனத் தெரியவில்லை. அதற்கப்புறம் இந்த வாரத்தை பற்றிய வர்ணனைகள் அவரது பாணியில் செய்தார் கமல். வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம். போன வியாழன் இரவில் இருந்தே ஆரம்பித்தது. ‘தன்னோட மேக்கப் கிட்டைத் திருடிட்டாங்க, எல்லார் பொருளும் திரும்பி வந்துருச்சு, ஆனா என்னோடது மட்டும் வரல, இதுக்குக் காரணம் சாக்ஷி தான்’ என கவினிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மீரா. பெண்களுக்கு ஒன்றெனில் துடித்துப் போவதில் கவினுக்கு இணையாக யார் இருக்கிறார்கள்? உடனே சாக்ஷியிடம் போய் இதைப் பற்றிக் கேட்கிறான். சாக்ஷி எதுவும் திருடியது போல் நமக்குக் காட்டப்படவில்லை. அதுவும் இல்லாமல், மாட்டிக்காமல் திருடும் அளவுக்கு சாக்ஷிக்கு மூளை இர...
பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

பிக் பாஸ்
'வண்டியிலே நெல்லு வரும்' பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் சொல்வதற்கு கேன்வாஸ் செய்திருக்கிறார்கள். லியா கவினிடம் கேட்ட போது கண்டிப்பாக முடியாது எனச் சொல்லிவிட்டார். லியா, அபி இரண்டு பேரும் அவங்க என்னென்ன தப்பு செய்தார்கள் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டாலும், கவின் அதை ஒத்துக் கொள்ளவே ...
பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ் 3 – நாள் 32

பிக் பாஸ்
அதே கக்கூஸ், அதே கவின், அதே லியா, அதே கடலை, அதே நான், அதே நீங்க. ஏய் யப்பா, முடியலைய்யா கவினு. இடத்தையாவது மாத்தலாம். நாட்டாமைக்கு மரியாதை தருவதைப் பற்றி பிக் பாஸ் கிளாஸ் எடுத்திருப்பார் போல. டாஸ்க் ஆரம்பித்த உடனே, ஒரிஜினல் நாட்டாமை பாட்டு பாடி சேரனைக் கூட்டிட்டு வந்தார். இப்படியே மொக்கையாகவே போய்க் கொண்டிருக்கே என்று யோசித்த 'டைரக்டர்' சரவணன், ‘நான் ஒரு உண்மையைச் சொல்லப்போறேன்’ என சாண்டி, கவினை அழைத்து ஒரு கதை சொல்றார். கதைப்படி பாம்புபட்டி நாட்டாமை சேரனும், கீரிப்பட்டி நாட்டாமி மதுவும் கணவன்-மனைவி. தன் மனைவி தன்னை மாதிரியே நாட்டாமையாக ஆக வேண்டுமென ஆசைப்பட்ட போது, அதைத் தடுக்கிறதானால் இரண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. அவங்களோட குழந்தை தான் லியா. இது எப்படி இருக்கு? இதை வைத்து ஒரு ட்ராமா செய்யலாமென சேரனிடமும், மதுவிடமும் இதைச் சொல்லி, லிவிங் ஏரியால எல்லாரும் கூடி இருக்கும் போது இந்த உண்மையைச...
பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ் 3 – நாள் 31

பிக் பாஸ்
காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் சொல்லிக் கொடுத்த சாண்டி, மீராவை எருமையாக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். சாண்டி ஒருநாள் மீராவிடம் மாட்டுவார். அன்னிக்கு இந்த மேட்டர் பேசப்படும். லியாவும் மீராவும் போட்ட கோலத்தை அலங்கோலம் பண்ணிக் கொண்டிருந்தாரு சாண்டி. ‘வருக, நல்வரவு’ என எழுதிருந்ததை, ‘வாந்தி, நல்வாந்தி’ என மாற்றியது மீரா கவனத்துக்கு வர, அவங்க வந்து அதை மாற்றி...
பிக் பாஸ் 3 – நாள் 30

பிக் பாஸ் 3 – நாள் 30

பிக் பாஸ்
காலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. 'ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க அடுத்த ஏரியாவுக்கு போகனும் என்றால் அவங்க சொல்ற டாஸ்க் செய்யவேண்டும். பிக் பாஸ் ஒவ்வொருவரையாக அழைத்து, கேரக்டர் எப்படிச் செய்யணுமெனச் சொல்லிக் கொண்டிருந்தார். சேரன் - ஊர் நாட்டாமை மீரா - மகனை கைக்குள் வைத்துக் கொள்ளும் தாய் தர்ஷன் - அம்மாவுக்கு அடங்கின பையன், ஆனா பொண்டாட்டி மேல பாசமாக இருப்...