
பிக் பாஸ்: 3 நாள் 62 – ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ – கவின் & லாஸ் மைண்ட்-வாய்ஸ்
60 கேமராக்கள் என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில், 60 ஸ்கிரீனுடன் தோன்றினார் கமல். பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. கமலே சொன்னது போல் இத்தனை கேமராவில் இருந்தும் ஒரு மணி நேரத்துக்கான ஃபூட்டேஜ் எடுத்து, தேவையானது, தேவையில்லாதது எனப் பிரித்து, எடிட் பண்றதெல்லாம் சரியான வேலையாக இருக்கும். அதற்கே ஒரு பெரிய டீம் தேவை. ஆனால் அதில்லாமல் சட்ட வல்லுநர்கள், மனநல மருத்துவர்கள், சமூக அக்கறையாளர்கள் என இன்னொரு டீம் இருக்காம். எதை காண்பிக்க வேண்டும், எது வேண்டாம் என இவங்க எல்லோரும் சேர்ந்து தான் முடிவு செய்வதாகச் சொன்னார்.
வெள்ளிக்கிழமை பாட்டு போட்டும் யாரும் பெரிதாக எழுந்திரிக்கவில்லை.
காபி சாப்பிட்டு பார்த்தால், மீரா மாதிரி யோகா பண்ணிக் கொண்டிருந்தார் கஸ். சோபாவில் உட்கார்ந்து தான் யோகா செய்வார்களா? சீன் போட்டாலும் அதில் கொஞ்சமாச்சும் மூளையை உபயோகிக்க வேண்டாமா? பாய்ஸ் டீம் அதைக் கலாய்த்துக் கொண்டிருக...















