32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1274 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 17 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 17)
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம் இது புதிது

கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்

மாமனிதன் படத்தின் நீட்சியாகவே உள்ளது. ஒரு ஆண், தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்குச் செல்வான் என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பதிந்துள்ளார் சீனு ராமசாமி. செல்லதுரையும், அவன் தங்கையும் நிராதரவாக ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ஆதரவில் வளர்கின்றனர். தன் தங்கைக்காகவே வாழுகிறான் செல்லதுரை. வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமாக, செல்லதுரையின் தங்கை ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்; சிறு வயதில் தன்னை விட்டுச் சென்ற தாயைப் பார்க்கின்றான்; வேறொரு மணம் புரிந்து கொள்ளும் தந்தையும் அவனைத் […]

20/09/2024 Dinesh R
லப்பர் பந்து விமர்சனம் சினிமா

லப்பர் பந்து விமர்சனம்

வெற்றி என்பது இலக்குகளைத் தீர்மானித்து ஓடுவது அல்ல நான்கு பேருக்கு நன்மை பயக்கும் விதமான மாற்றத்துக்கு முன்னுரிமை தருவதென்ற மிக மெச்சூர்டான விஷயத்தைப் பேசியுள்ளது படம். கிரிக்கெட் மீதான ஈடுபாடு, ஈகோ, காதல், குடும்பம், உறவுகளுக்குள் உண்டான பிணைப்பு, ஈகோவைத் துறத்தல்,மென்னுணர்ச்சி (Sentiment), எமோஷன்ஸ், நட்பு, சாதி, சமூக நீதி என இப்படம் கலந்து கட்டி ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ரசிக்க வைக்கிறது. “கெத்து” என அழைக்கப்படும் 39 வயது நட்சத்திர பேட்ஸ்மேனை ஆஃப் சைடில் […]

20/09/2024 Dinesh R
நந்தன் விமர்சனம் இது புதிது

நந்தன் விமர்சனம்

ஆண்டை கோப்புலிங்கத்திற்குப் பரம விசுவாசியாக உள்ளார் கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத்குமார். ஆதலால், தனித்தொகுதியாக்கப்படும் வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குக் கூழ்பானையைத் தேர்வு செய்கிறார். தான் ஆட்டுவிக்கும் பாவையாகக் கூழ் பானை இருப்பான் என்ற நம்பிக்கை சிதையும் வண்ணம், தங்களுக்கென ஒரு தனிச் சுடுகாட்டைத் தன்னிச்சையாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுகிறார் அம்பேத்குமார். அதனால் கோபமுறும் கோப்புலிங்கத்தின் எதிர்வினையும், அதை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் முடிவு. தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களை, சமூகத்தில் […]

19/09/2024 Dinesh R
ARM விமர்சனம் அயல் சினிமா

ARM விமர்சனம்

ARM: Ajayante Randam Moshanam – அஜயனின் இரண்டாம் திருட்டு நான்கு தலைமுறைகளைச் சேர்ந்த மூவரின் கதை. களரி வீரனான கேலு, வீரனின் மகனான திருடன் மணியன், திருடனின் பேரனான அஜயன் என படத்தில் மூன்று நாயகன்கள், மூன்று குணாதிசயங்கள், மூன்று காதல்கள், மூன்று கதைகள் உள்ளன. காலத்தை வாகனமாகக் கொண்ட ஓர் அருவ பிரபஞ்ச பயணியின் குரலில் படம் தொடங்குகிறது. விண்கல்லால் செய்யப்பட்ட விளக்கைத் தனது வீரத்தின் பரிசாகக் கொண்டு வருகிறார் கேலு. காதலுக்காகவும், துரோகத்திற்குப் […]

13/09/2024 Dinesh R
The GOAT விமர்சனம் இது புதிது

The GOAT விமர்சனம்

The Greatest Of All the Time – எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். ‘இனி நடிக்கப் போவதில்லை’ என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது. […]

06/09/2024 Dinesh R
ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம் அயல் சினிமா

ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

பூமியிலிருந்து 1600 ஒளியாண்டுகள் தள்ளியுள்ள, பகலே இல்லாத ஒரு கிரகத்தில் சிக்கியுள்ளார் ரெயின். அவ்விடத்தை விட்டுத் தப்பிக்க, ரெயினின் முன்னாள் காதலன் டைலர் ஒரு யோசனையை முன்மொழிகிறான். அரைமனதுடன் சம்மதிக்கும் ரெயினும், அவனது இயந்திரத் தம்பி ஆன்டியும், டைலர் குழுவும், ஈவாகா எனுமிடத்திற்குச் செல்லத் தேவைப்படும் குளிர்சீர்நிலைக்கருவிகளைச் (Cryostatic Chamber) சேகரிக்க, ஒரு சிதிலமடைந்த விண்கப்பலுக்குள் செல்கின்றனர். விண்கப்பல் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்கு ரோமுலஸ் என்றும்; மற்றதிற்கு ரெமுஸ் என்றும் பெயர். ரோம் என்ற நகரம் […]

25/08/2024 Dinesh R
கொட்டுக்காளி விமர்சனம் இது புதிது

கொட்டுக்காளி விமர்சனம்

கூழாங்கல் படத்தினை இயக்கிய P.S.வினோத்ராஜின் இரண்டாவது படம். முதற்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவா தயாரித்திருந்தனர்; இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடகக்ஷன்ஸில் இயக்கியுள்ளார். வழக்கமான வணிக, மசாலா படங்களைத் தவிர்த்து பார்வையாளர்களின் சிந்தனையைக் கோரும் படங்களை எடுப்பதற்காகவே இயக்குநருக்கு பாராட்டுக்கள்.  கொட்டுக்காளி என்றால் அழுத்தமான பிடிவாதக்காரி எனப் பொருள் கொள்ளலாம். பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் மீனாவை சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர் மீனாவின் பெற்றோரும், பாண்டியின் குடும்பத்தினரும். மீனாவின் முறைமாமன் பாண்டி ஆவார். வீட்டிலிருந்து கிளம்பி சாமியாரின் இருப்பிடம் வரையிலான […]

23/08/2024 Dinesh R
வாழை விமர்சனம் இது புதிது

வாழை விமர்சனம்

வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். […]

23/08/2024 Dinesh R
சாலா விமர்சனம் இது புதிது

சாலா விமர்சனம்

விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே! குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு. […]

22/08/2024 Dinesh R
போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம் இது புதிது

போகுமிடம் வெகுதூரமில்லை விமர்சனம்

அன்பே சிவம், மாநகரம், அயோத்தி முதலிய படங்கள் வரிசையில், சக மனிதனுக்கு ஒன்றெனில் உதவ முன்வரவேண்டும் என்ற கருத்துடன் வெளிவந்துள்ள படம். படத்தைத் தயாரித்த ஷார்க் பிக்சர்ஸ் சிவா கிளாரிக்கு வாழ்த்துகள். அமரர் ஊர்தி ஓட்டுநரான குமார், சென்னையில் இருந்து களக்காடு வரை ஒரு பெரியவரின் உடலை எடுத்துக் கொண்டு செல்கிறார். அடிக்கடி நின்றுவிடும் தனது வண்டியைத் தள்ளுவதற்காக நளினமூர்த்தியை ஏற்றிக் கொள்கிறார். வழியில் எதிர்பாராதவிதமாக ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் குமார். அச்சிக்கலில் இருந்து […]

21/08/2024 Dinesh R
வேதா விமர்சனம் இது புதிது

வேதா விமர்சனம்

“சூத்திரர்கள் ஏன் காலில் உருவானார்கள்?” – கல்லூரி மாணவி வேதா. “அதான் பெரியய்யா சொன்னாரே! அதெல்லாம் சொர்க்கத்துல நிச்சயிக்கப்பட்டதுன்னு” – வேதாவின் அக்கா. “அப்புறம் ஏன் சட்டத்தைச் சொல்லித் தர்றாங்க? சமத்துவம்னு பேசுறாங்க?” ஆயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரரும், நூற்றைம்பது கிராமங்களுக்குத் தலைவருமான பெரியய்யா என்றழைக்கப்படும் ஜிதேந்தர் பிரதாப் சிங் ஒரு மாமன்னன் போல் வலம் வருகிறார். எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும், அனைவரும் முன்னேற வேண்டும், ஆனால் மற்ற சமூகத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணமுடையவர். […]

16/08/2024 Dinesh R
தங்கலான் விமர்சனம் இது புதிது

தங்கலான் விமர்சனம்

சார்பட்டா பரம்பரையின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ் பிரபாவும், பா. ரஞ்சித்தும் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாகவே பார்வையாளர்களிடம் நிலவியது. ‘மாய எதார்த்தம் (Magical Realism)’ வகைமையைச் சேர்ந்த படம் என இசை வெளியீட்டின் போது, எதிர்பார்ப்பில் எண்ணெயை ஊற்றினார் தமிழ் பிரபா. அத்தனைக்கும் ஆசைப்படு என்கிற ஜக்கி வாசுதேவின் புத்தகத் தலைப்புதான், தங்கலான் படத்தின் மையச்சரடு. நாடாளும் மன்னன், ஆங்கிலப் பேரரசின் அதிகாரி, எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அத்தனை பேரும் தங்கத்திற்கு ஆசைப்படுகின்றனர். […]

16/08/2024 Dinesh R
ரகு தாத்தா விமர்சனம் இது புதிது

ரகு தாத்தா விமர்சனம்

ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா […]

16/08/2024 Dinesh R
கவுண்டம்பாளையம் விமர்சனம் இது புதிது

கவுண்டம்பாளையம் விமர்சனம்

ஓரு சிங்கத்தைக் கொளுத்தி விடுகின்றனர். அது எரிச்சல் தாங்காமல் ஆக்ரோஷமாக ஓடி வந்து கவுண்டம்பாளையம் என்ற தலைப்பில், வலி வேதனை கதறலுடன் பாய்கிறது. இப்படித் தலைப்பிலேயே வன்முறை தொடங்கிவிட, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அமர்ந்தால், பசுபதி மே/பா. ராசாக்காபாளையம் படத்தில் இருந்து இன்ஸ்பையராகி முதற்பாதியை ஒப்பேற்றியுள்ளார். ரஞ்சித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘குழந்தை’ ஆகும். வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத வடிகட்டின அப்பாவி. அவர் உடன் வேலை செய்யும் சேச்சி சினுங்கலான குரலில், ‘வா பிசையலாம்’ […]

12/08/2024 Dinesh R
அந்தகன் விமர்சனம் இது புதிது

அந்தகன் விமர்சனம்

அந்தகன் என்றால் பார்வையற்றவன் என்ற பொருள். ‘அந்தாதுன்’ எனும் ஹிந்திப்படத்தின் உரிமையை வாங்கி மறு உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் தியாகராஜன். பார்வையற்றவரான க்ரிஷ், பியானோ இசைக்கலைஞராக ஜூலியின் ரெஸ்டோபாரில் பணியில் சேருகிறார். அவரைத் தனது கல்யாண நாளன்று, தன் வீட்டில் வந்து வாசிக்கும்படி நடிகர் கார்த்திக் கேட்டுக் கொள்கிறார். க்ரிஷ், நடிகர் கார்த்திக்கின் வீட்டிற்குச் செல்ல, அங்கே கார்த்திக்கின்மனைவி சிமியால் கார்த்திக் கொல்லப்பட்டு இறந்துகிடக்கிறார். பார்வையற்றவர் என்ற போதும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததால் பிரச்சனையில் […]

09/08/2024 Dinesh R