Shadow

திரை விமர்சனம்

Godzilla X King: The New Empire விமர்சனம்

Godzilla X King: The New Empire விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பூமியின் மேற்பரப்புக்குக் கீழுள்ள பூமியின் அடியாழத்திலிருந்து (Hollow Earth) புது அச்சுறுத்தல் முளைத்திட, கிங் காங்கும், காட்ஸில்லாவும் இணைந்து தடுக்கின்றனர். பூமிக்கு மேற்பரப்பில் இருக்கும் காட்ஸில்லா, டைட்டன்கள் எனும் இராட்சச ஐந்துகளிடம் இருந்து உலகைக் காப்பாற்றிக் கொண்டு ரோம் நகரத்து கொலசியத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளது. கிங் காங்கோ, பூமியின் அடியாழத்தில் வேட்டையாடிக் கொண்டு தன் காட்டு வாழ்க்கையில் மகிழ்வாக இருக்கிறது. இந்நிலையில், பூமியின் அடியாழத்தில் இருந்து வினோதமான சமிக்ஞைகள் வருகின்றன. அதே சமயம், வாய் பேசமுடியாத காது கேளாதவளும், ஐவி பழங்குடியின் கடைசி நபரும், ஐலீனின் தத்து மகளுமான ஜியாவிற்கும் அந்த சமிக்ஞைகளை உணருகிறாள். தன்னை யாரோ, பூமியின் அடியாழத்திலிருந்து உதவி கேட்பதாக உணருகிறாள். அந்த சமிக்ஞையை உணரும் காட்ஸில்லாவும் நகரத் தொடங்குகிறது.ஜியா, ஐலீன், பெர்னி ஹேயஸ், ட்ரேப...
நேற்று இந்த நேரம் விமர்சனம்

நேற்று இந்த நேரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும் நாயகியும் மூன்றாண்டுகளாகக் காதலிப்பதைக் கொண்டாட நினைக்கின்றனர். மேலும், கல்லூரி வாழ்க்கை முடிவதாலும், நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் என இளைஞர்கள் எழுவர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலாக்கு வந்த இடத்தில் நாயகன் காணாமல் போகிறார். நாயகனுக்கு என்னானது என்ற புலனாய்வு விசாரணையே படத்தின் கதை. ‘ராஷோமோன் (1950)’ எனும் ஜப்பானியத் திரைப்படப் பாணியில், கதாபாத்திரங்கள் அனைவரும் காணாமல் போன நாயகனைப் பற்றிச் சொல்கின்றனர். நாயகனைப் பற்றிய விவரணை நண்பர்களின் பார்வையிலிருந்து விரிகிறது. அந்த விவரணையில், நாயகன், எதிர் நாயகனாக மெல்ல மாற்றம் பெறுகிறான். காணாமல் போன நாயகனே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், மேலும் ஒரு நண்பன் காணாமல் போகிறான். ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடித்துள்ளனர். கெவின். N இசையமைக்க,...
கா – The Forest விமர்சனம்

கா – The Forest விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கா என்றால் காடு அல்லது கானகம் என்பதாகப் பொருளென உருவகப்படுத்தியுள்ளனர். ஆனால், 'கா' என்றால் காத்தல் என்று பொருள் கொள்ளலாமே அன்றி காடு எனக் கொள்ளலாகாது. ஆதியும் காடே, அந்தமும் காடே என்ற பாடல் வரிகளுடன் அடர்ந்த காட்டின் அட்டகாசமான விஷுவல்ஸுடன் படம் தொடங்குகிறது. கடுகுபாறை வனக்காவல் நிலையத்தின் அருகே முகாமிட்டுள்ளார் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞரான வெண்பா சுப்பையா. மதி என்ற பயந்த சுபாவிக்கு அவரது தந்தையின் வேலை கிடைத்து, கடுகுபாறை வனக்காவல் நிலையத்தில் பணியில் சேருகிறார். அரசியல் பேசி வில்லங்கத்தை உண்டாக்கும் ஓர் இளம்பெண்ணைக் கொலை செய்ய, அம்மலை வனப்பகுதிக்கு வருகிறார் விக்டர் மகாதேவன். இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. மதி பாறையிடுக்கில் கீழே சகதியில் விழுந்து, மேலே வெளிச்சத்தைப் பார்ப்பது மஞ்ஞுமள் பாய்ஸில் வரும் காட்சி போலவே உள்ளது. விழுந்து கிடக்கும் இடத்தில் இருந்து மேலே வர இயலாம...
வெப்பம் குளிர் மழை விமர்சனம்

வெப்பம் குளிர் மழை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வெப்பமும் குளிரும் இணைந்தால் மழை பொழிவது போல், ஆணின் வெப்பமான விந்தணுவும், பெண்ணின் குளிர்வான கருமுட்டையும் இணைவதால் குழந்தை பிறக்கிறது என்பதை உணர்த்தும் குறியீட்டுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும், குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏச்சுபேச்சுக்கும் ஆளாகின்றனர் நாயகனும் நாயகியும். நாயகனுக்குத் கோயில் திருவிழாவில் கிடைக்கும் முதல் மரியாதை பற்றிய ஊர் பஞ்சாயத்தில், குழந்தையில்லாததால் அவமானப்படுத்துகிறார். நாயகனின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், நாயகி கணவனை விட்டு விலகி, நாயகனை இரண்டாம் கல்யாணத்திற்கு வற்புறுத்துகிறாள். அதில் நாயகன் ஆர்வம் நாயகன் காட்டாததால், நாயகி வேறொரு முடிவு எடுக்கிறாள். அம்முடிவு, அத்தம்பதியின் வாழ்வை எப்படிப் பாதித்தது என்பதே படத்தின் கதை. கிராமத்து வாழ்வியலை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. நாயக...
Hot Spot விமர்சனம்

Hot Spot விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று சமூகத்துக்குக் கருத்து சொல்லியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். ஒரு பெண், ஆணுக்குத் தாலி கட்டினால்? ஆண், சமையலறையில் சிறைப்பட்டால்? ஆண், மாமனாரின் ஏச்சுபேச்சுக்கும் ஆளானால்? ஆண், நண்பர்களைப் பார்க்கச் செல்ல மாமனாரின் அனுமதியை எதிர்பார்க்க நேர்ந்தால்? இதுதான் Happy Married Life-இன் கதை. ஆதித்யா பாஸ்கரின் அதிர்ச்சியாகும் பாவனை...
இடி மின்னல் காதல் விமர்சனம்

இடி மின்னல் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹரனும் ஜனனியும் காதலிக்கின்றனர்; காரில் செல்லும் பொழுது, ரித்தீஷ் ஜெயினை மோதிவிடுகின்றனர். ரித்தீஷ் ஜெயினின் மகன் அபிஷேக் ஜெயினிற்கு ஆதரவாக அப்பகுதியில் வசிக்கும் விபச்சாரி துணை நிற்கிறாள். ரித்தீஷ் வாங்கிய கடனிற்காக அபிஷேக்கைக் கவர நினைக்கிறான் வல்லநாட்டு அருள்பாண்டியன். இவர்தான் இடி; அபிஷேக்தான் மின்னல்; ஹரனும் ஜனனியும்தான் காதல். இடைவேளையில், மூன்று திரைச்சட்டகங்களாகப் பிரித்துப் படத்தின் தலைப்பைப் போடுகிறார்கள். மனநலத்தைப் பேணுவதன் அவசியம் குறித்த படம் என்று படக்குழு சொல்லியிருந்தனர். அபிஷேக்கிற்கு, 'இருமன ஒழுங்கின்மை (Bipolar Disorder)' இருப்பதாக நாயகன் கண்டுபிடிக்கிறார். நாயகன் சைக்காலஜி படித்தவர் எனச் சொல்லப்படுகிறது. அவ்வுழுங்கின்மை வாய்க்கப்பெற்றால் மனம் இரண்டு வெவ்வேறு உணர்ச்சிகளின் எல்லைக்கு ஊஞ்சல் போல் (swing) போய் வந்து கொண்டிருக்கும். ஆனால், சில காட்சிகளில் அபிஷேக்கின் கண்கள...
ரெபல் விமர்சனம்

ரெபல் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூணாரின் நெற்றிக்குடி எஸ்டேட்டைச் சேர்ந்த கதிர் பாலக்காட்டுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார். கல்லூரியிலுள்ள மலையாளிகள் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். கதிர் கலக்கக்காரராக உருமாறி புரட்சி செய்கிறார். படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, நாயகன் கதிர் புரட்சி தான் தீர்வு எனக் கலகம் செய்வது, செங்கொடி ஏந்திய LDP கட்சியின் SFY எனும் மாணவர் சங்கத்தை எதிர்த்தும் போராடுகிறார். வசனங்களில் கம்யூனிஸ்ட் என்றே விளிக்கிறார்கள். நாயகன் எதிர்க்கும் இன்னொரு கொடி, நீல வண்ணத்தில் இருக்கும் UDP கட்சியின் KSQ எனும் மாணவர் சங்கமாகும். காங்கிரஸ் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர். கொடி இங்குப் பிரச்சனையில்லை, அதை யார் பிடித்துள்ளார் என்பதைப் பொறுத்தே சிக்கல் என்கிறார் கல்லூரி விரிவுரையாளர் உதயகுமாராக வரும் கருணாஸ். நாயகன் கதிர் உருவாக்கும் TSP (தமிழ் ஸ்டூடன்ட்ஸ் பார்ட்டி)-இன் கொடி, கருப்ப...
Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

Razakar : The Silent Genocide Of Hyderabad (A) விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, நிஜாம் மிர் ஒஸ்மான் அலி கானின் ஆளுகைக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குழப்பங்களையும், அதன் விளைவாக ஹிந்துக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதத்தையும் பற்றிப் பேசுகிறது இப்படம். மிர் ஒஸ்மான் அலி கானை யோசிக்கவிடாமல், எப்படி காஸிம் ரஸ்வி, ரஸாக்கர் ஆயுதப்படையை உருவாக்கி ஹைதராபாத் மாகாணத்து மக்கள் மீது வரிச் சுமையையும், ஹிந்து மத சடங்குகளையும் திருவிழாக்களையும் பொதுவில் கொண்டாடத் தடையையும் விதித்தார் என்பதே படத்தின் திரைக்கதை. பாஜகவைச் சார்ந்த குடூர் நாராயண ரெட்டி, இப்படத்தை சுமார் 40 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார். முதல் பாதி முழுவதுமே, காணச் சகியாக் காட்சிகளாகவே உள்ளன. ஊரைக் கொளுத்துவது, பெண்களைப் பலாத்காரம் செய்வது, எதிர்ப்பவர்களைக் கொல்வது என ரஸாக்கர்களின் கொடுமையை விரிவாகக் காட்டுகின்றனர். வரலாற்றைத் தெரிய...
காடுவெட்டி விமர்சனம்

காடுவெட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காடுவெட்டி குருவைப் பற்றிய கதை இல்லை இப்படம். ஆனால், காடுவெட்டி என்கிற தலைப்பைப் பார்த்ததும், அதன் அரசியல் என்னவாக இருக்கும் என யூகிக்கிறார்களோ, அதை ஒரு சதவிகிதம் கூட ஏமாற்றாமல் தந்துள்ளனர். ஆணவக் கொலைகளுக்குக் காரணம் ஆதிக்க சாதியினர் இல்லை என்றும், அதற்கு யார் உண்மையில் காரணம் என்றும், ஓர் அரிய கண்டுபிடிப்பையே நிகழ்த்தியுள்ளார் இயக்குநர் சோலை ஆறுமுகம். நகரத்தில் ஒரு காதல் ஜோடி. வெவ்வேறு சாதியைச் சார்ந்த அந்த ஜோடிக்குப் பெற்றோர்களே முன் நின்று கல்யாணம் பண்ணி வைக்கிறார்கள். அடுத்து, அதே ஜோடி, அதே குடும்பம், அதே ஜோடி, அதே பெற்றோர்கள், அதே காதல் கிராமத்தில் நிகழ்ந்தால், அதற்குப் பின்னணியில் என்னவெல்லாம் நடக்கும் என இரண்டு கதைகளை ஒப்பிடுகிறார். நகரத்துக் காதல் சுபமாகிறது, கிராமத்துக் காதல் ஏன் ஆணவக்கொலையில் முடிகிறது என கதை பயணிக்கிறது. படத்திற்குக் கதையும் தயார், அரசியலும் தயார், ஆனால் பாவம்...
பிரேமலு விமர்சனம்

பிரேமலு விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜாலியாய் ஒரு படம் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டுமென்றால், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள பிரேமலு மிக நல்ல தேர்வாக இருக்கும். கல்லூரிக் காதல் புட்டுக் கொள்ள, UK போக விசாவும் கிடைக்காமல் போக, ஊரை விட்டு எங்கேயாவது போனால் பரவாயில்லை என்று நண்பனுடன் GATE பயிற்சிக்காக ஹைதராபாத் செல்கிறான் சச்சின். ஹைதராபாத்தும் சலித்து, சென்னையில் இருக்கும் நண்பர்களுடன் இணையலாம் என யோசிக்கும் பொழுது IT-இல் பணிபுரியும் ரீனுவைப் பார்க்கின்றான். கண்டதும் காதலில் விழ, ரீனுவை இம்ப்ரஸ் செய்ய சச்சின், அவனது நண்வன் அமல் டேவிஸுடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகள் தான் படத்தின் கலகலப்பான கதை. இத்தனை மெலிதான ஒரு கருவை, மிகவும் ரசிக்கும்படியான திரைக்கதையாக எழுதி அசத்தியுள்ளனர் இயக்குநர் கிரிஷ் AD-உம், கிரண் ஜோஸும். ‘காதல்டா! ஒரு தடவ தான் வரும், ஒருத்தங்க மேல தான் வரும்’ என ஓவர் எமோஷ்னல் ஆகாமல், அதில் அன்றாட வாழ்வின்...
GAAMI விமர்சனம்

GAAMI விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சமஸ்கிருதத்தில், காமி என்றால் ‘தேடல் உடையவர்’ எனப் பொருள். சிவனின் சாபத்தைப் பெற்றவராகக் கருதப்படும் அகோரி ஆசிரமத்திலுள்ள சங்கர், தேவதாசி துர்காவின் மகளாகப் பிறக்கும் உமா, இவ்திய - சீன எல்லையில் அநாதைகள் மீது நடக்கும் சட்டவிரோதமான மருத்துவ ஆராய்ச்சியில் சிக்கிக் கொள்ளும் CT-333 என அடையாளமிடப்பட்ட ஒருவன் என மூன்று பேரைப் பற்றிய கதை. மனிதர்கள் யாராவது தொட்டால், உடலில் நீலம் பாவி மூர்ச்சையாகிவிடுவார் சங்கர். அத்தகைய சாபத்தைப் பெற்ற சங்கரை, அகோரிகளே தங்கள் கூட்டத்தில் இருந்து வெளியில் அனுப்புகின்றனர். தான் யார் என்பதையும் அறியவும், தன் சாபத்துக்கான விமோசனத்தைத் தேடியும், தன்னை அகோரி ஆசிரமத்தில் விட்ட கேதார் பாபாவைத் தேடி, ஹரித்வாரிலிருந்து பிராயக்ராஜில் (அலஹாபாத்) நடக்கும் கும்பமேளாவிற்குச் செல்கிறான் சங்கர். சிறுமி உமாவையும் தேவதாசியாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூளையின் செயற்திறனை மாற்...
அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

அரிமாப்பட்டி சக்திவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரிமாப்பட்டி என்கின்ற கிராமத்தில் இன்றளவும் இருந்து வரும் சாதியக் கொடுமைகளைப் பற்றி ஆவணப்படுத்தும் திரைப்படம் தான் அரிமாப்பட்டி சக்திவேல்.கதை என்று பார்த்தால் பழகி சலித்தக் கதை தான். கீழ் சாதி என்று சொல்லப்படுப்படும் வகுப்பை சேர்ந்த நாயகன், மேல் சாதி என்று சொல்லப்படும் வகுப்பை சேர்ந்த நாயகி. இருவருக்குமான காதல், சாதிய பாகுபாட்டால் அந்த காதலுக்கு வரும் எதிர்ப்பு, தனிப்பட்ட முறையில் நாயகனுக்கு முதலில் இயக்குநராக வேண்டும், பின்பு தான் திருமணம் என்கின்ற லட்சியம், இந்தப் பிரச்சனைகளையெல்லாம் கடந்து காதல் கைகூடியதா..? இல்லையா..? என்பதே அரிமாப்பட்டி சக்திவேலின் மொத்தக் கதை.கதையாகவும் திரைக்கதையாகவும் பார்த்தால் எந்த வித புதுமையும் சுவாரஸ்யமும் இல்லை. குறைந்தபட்சம் காட்சி அமைப்புகளாவது ஈர்ப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறதா..? என்றால் அதுவும் இல்லை.சமூகத்தில் நில...
பைரி விமர்சனம்

பைரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புறா பந்தயத்தில் ஏற்படுகின்ற முன்பகை சிலரின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே பைரி திரைப்படத்தின் ஒன்லைன்.தமிழ் சினிமாவில் Cult movies வகையறா சினிமாக்கள் மிக மிக குறைவு. தமிழ் சினிமாவில் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கொண்டாடப்பட்ட கல்ட் மூவிஸ் என்று சொன்னால், ஆரண்ய காண்டம், சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை, பருத்தி வீரன், சூது கவ்வும் போன்ற திரைப்படங்களைக் கூறலாம். விக்ரம் வேதா மற்றும் பீட்ஸா படங்களைக் கூட ஒரு வித்த்தில் கல்ட் திரைப்படங்களாக எடுத்துக் கொள்ளக் கூடும்.இது போன்ற திரைப்படங்களில் என்ன இருக்குமென்றால் யதார்த்தம் ரத்தமும் சதையுமாக இருக்கும், யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான கதைகூறும் முறை இருக்கும். எல்லாக் கதாபாத்திரங்களும் சரி தவறுகள்: கலந்து படைக்கப்பட்டு இருப்பார்கள். திரைமொழியில் சொல்ல முயன்றால் Grey Shade அதாவது நல்லவனென்றும் சொல்ல முடியாத கெட்டவன் என்றும் ச...
Bramayugam விமர்சனம்

Bramayugam விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கேரளத்தில் நாட்டார் கதைகள், தமிழின் தொன்மையைப் போலவே மிகப் பிரபலமானதாகும். 18 ஆம் நூற்றாண்டில், கேரளத்தில் வாழ்ந்த கொட்டாரத்தில் சங்குண்ணி (Kottarathil Sankunni) என்பவர். மக்களிடையே பேசப்பட்ட நாட்டார் கதைகள் அனைத்தையும் ஐதீயமாலா (Aithihyamala) என்ற தொகுப்பாகக் கொண்டுவந்தார். எட்டு பாகங்களில் சுமார் 126 கதைகள், இந்தத் தொகுப்பில் இருக்கிறது. இன்றைக்கும் இந்தத் தொகுப்பு கேரளாவில் மிகப் பிரபலமானவை. இந்தக் கதைகள் அனைத்தும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் சம்பவங்கள், மந்திரவாதிகள் மற்றும் பூமிக்கடியில் உள்ள குபேரனின் அனைத்து செல்வங்களைக் காக்கும் அழகு மிக்க பெண்கள், யோகக்கலை, மன்னர்கள் மற்றும் களரிப்பயிற்று வல்லுநர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யானைப்பாகன்கள் மற்றும் தந்திர நிபுணர்கள் என பலத்தரப்பட்ட மனிதர்கள் பற்றி அமைந்துள்ளன. இந்தக் கதைகளில் ஒன்றாக குஞ்சாமோன் போற்றி எனும் மந்திரவாதி பற்றிய கதையும் ...
சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோகிப...