Shadow

திரை விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தங்கள் அரசியல் லாபத்திற்காக ஒரே ஊரில் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்து இஸ்லாமிய மக்களிடையே பிரச்சனையைத் தூண்டிவிடப் பார்க்கும் அரசியல்வாதிகள். இது தெரியாமல் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எழும் போட்டியில் அடித்துக் கொள்ளும் இந்து, இஸ்லாம் விளையாட்டு வீரர்கள், இதற்கு மத்தியில் ஊரில் தடைபட்டுப் போன கோவில் திருவிழா, முறைத்துக் கொண்டு திரியும் இரு வேறு சமயத்தைச் சேர்ந்த நாயகர்களின் அப்பாக்கள் இருவரும் உயிர் தோழர்கள் இப்படியிருக்கும் ஒவ்வொரு ஒன்லைன் –களுக்கும் சினிமாத்தனமான முடிவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எழுதத் தெரியும் என்றால் அதுதான் ஒட்டு மொத்த லால் சலாம் திரைப்படம்.தன் தந்தை மீது சங்கி என்னும் முத்திரை விழுவதை அவமானமாகக் கருதும் மகள் கிடைப்பது ஒரு கொடுப்பினை தான்.  அந்த முத்திரை அவமானகரமானது, என் தந்தை அப்படி இல்லை என்று சொல்லத் துடித்து இப்படி ஒரு திரைப்படத்தை மகள் ஐஸ்வர்யா ...
இமெயில் விமர்சனம்

இமெயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி “DIE GAME” என்கின்ற விளையாட்டை விளையாட இமெயில் வழியே ஒரு அழைப்பு வருகிறது. அவரும் அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறார். அதில் மூன்று பேரின் புகைப்படம் இருக்கிறது.  அவர்களில் யார் இறக்கப் போகிறார்கள் என்பதை நாயகி சரியாக கணித்துவிட்டால் அவளுக்கு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும் என்று விதிமுறைகள் கூற, பணத்தேவையில் இருக்கும் நாயகி அந்த விளையாட்டை விளையாடத் துவங்குகிறாள். அந்த விளையாட்டு விபரீதமாகி நாயகியின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதே “இமெயில்” திரைப்படம்.கேட்பதற்கு சுவாரஸ்யமாகத் தோன்றக் கூடிய நல்ல லைன் தான். ஆனால் அந்த லைனை, கதையாக மாற்றி, அதற்கு திரைக்கதை எழுதிய விதத்தில் தான் படக்குழுவினர் கோட்டை விட்டிருக்கின்றனர்.ஆரம்பத்தில் வரும் காதல் எபிசோடுகளும், மனோபாலா வரும் எபிசோடுகளும் நம் பொறுமையை அதிகமாக சோதிக்கின்றன.  ஹீரோயின் விபரீதமான அந்த விளையாட்டை விளையாடத் துவ...
லவ்வர் விமர்சனம்

லவ்வர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
80 மற்றும் 90களின் காலகட்ட காதல்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான காதல்கள் சொல்லாமலே முடிந்து போயிருக்கும்.  ஆனால் இன்றைய 21ம் நூற்றாண்டுத் தலைமுறையின் காதல்கள், பார்த்த மறுகணத்தில் காதலைச் சொல்லியும், காதலியுடன் கை கோர்த்து சுற்றியும், ஒன்றாக பழகியும், படுக்கையை பகிர்ந்தும் கூட தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான காதல்கள் கல்யாணத்தில் கைகூடாமல் கலைந்துவிடுகிறது.  படுக்கையை பகிர்வதையே உச்சகட்ட லட்சியமாகக் கொண்டு இயங்கியிருக்கும் காதல்கள் அதில் சில பல இருக்கலாம். ஆனால் அவைகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உண்மையாகவே காதலை வாழ்க்கைத் துணைக்கான தேடலாகப் பார்த்தோ, இல்லை காதலியையோ காதலனையோ உருகி உருகி உண்மையாக காதலிப்போர் கூட இறுதியில் சேராமல் பிரிந்துவிடுகிறார்கள்.  அதன் பின்னணியில் உள்ள சமூகவியலையும் உளவியலையும் ஒரு சேர பேசும் படம் தான் “லவ்வர்”. கல்லூரி காலத்தில் இருந்...
டெவில் விமர்சனம்

டெவில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆண் பெண் இருபாலருக்குமான உறவுநிலைச் சிக்கலை சிக்கலே இல்லாமல், சிரத்தையும் இல்லாமல், த்ரில்லர், தத்துவார்த்தம், ஆன்மீகம் என பல தளங்களின் வழியே பேச முயன்றிருக்கும் திரைப்படம் தான் டெவில்.டெவில் என்கின்ற தலைப்பிற்கான நேரடியான விளக்கங்களோ, பூடகமான விளக்கங்களோ கதை மற்றும்  திரைக்கதையில் இல்லை.  நாம் கதையாடலை மையமாகக் கொண்டு, மானசீகமாக எல்லோர் மனதிற்குள்ளும் ஒளிந்திருக்கும் சாத்தான் என்று சொல்ல முற்பட்டால்,  மணம் தாண்டிய உறவுகளையும் அந்த உணர்வு நிலைகளையும் நாம் சாத்தானாக உருவகப்படுத்திகிறோம் என்கின்ற தவறான பொருள் கொள்ளல் தோன்றும். எனவே அதைத் தவிர்த்து  நாயகன் விதார்த்தின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, இந்த டெவில் என்பதன் அர்த்தத்தை ஆணின் மனதிற்குள் ஒளிந்திருக்கும் கயமை என்று பொருள் கொள்ளலாம்.தான் தவறிழைக்கும் போது அதை மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதி , எதிர்பாலாகிய மனைவியிடமோ அல்லது காதல...
வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடவுள் மீது மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளை வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கும் நாயகன், அவன் கல்லாவில் தனக்கும் பங்கு வேண்டும் என்று போட்டிக்கு வரும் அந்த ஊர் தாசில்தார், இவர்கள் இருவருக்கும் இடையில் பகை வளர, இறுதியில் இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோயிலின் நிலை என்ன ஆனது, மக்களின் நம்பிக்கை என்ன ஆனது என்பதே “வடக்குப்பட்டி ராமசாமியின் கதை. கதை 1960 காலகட்டங்களில் நடக்கிறது. ஊரின் கண்ணாத்தா என்னும் காவல் தெய்வத்திற்கு ஒரு பின்கதை வைத்து, அதை மக்கள் தெய்வமாக நம்புவதற்கு சில நிகழ்வுகளை நேரிடை சாட்சியாக நிகழ்த்திக் காட்டி, அதே நிகழ்வுகளின் மூலம் நாயகனான வடக்குப்பட்டி ராமசாமி, அந்த நம்பிக்கைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்க முடிவெடுத்து எதிர்திசையில் நகரும் கதாபாத்திர முரண்களை ஆரம்பத்திலேயே அருமையாக கட்டமைக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. மக்களின் மூடநம்பிக்கைகளையும், நேர்த்திக்கடன் செ...
சிக்லெட்ஸ் விமர்சனம்

சிக்லெட்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எப்படியாவது ஒரு முறையாவது பாய் பிரெண்ட்-உடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி ஓடும் மூன்று 2கே கிட்ஸ் இளம்பெண்களும், அவர்களை உடலுறவு செய்துவிடாமல் தடுத்து விட வேண்டும் என்று அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடும் அந்த இளம் பெண்களின் குடும்பத்தாரும் என இருதரப்பும் ஓட, இறுதியில் இந்த ஓட்டப் பந்தயத்தில் யார் வென்றார்கள் என்பதே “சிக்லெட்ஸ்” திரைப்படத்தின் கதை. சாதீக் வர்மா, நயன் கிருஷ்ணா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜேக் ராபின்சன், அம்ரீதா ஹோல்டர், மஞ்சீரா, ராஜகோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  பாலமுரளி பாலு இசையமைக்க, கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பைக் கவனிக்க, முத்து இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இன்றைய 2K கிட்ஸ் அனைவரும் கண்டிப்பாக யோசிக்காமல்  தமிழ்த் திரைப்பட இயக்குநர்க...
மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு பள்ளி 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முறைகேடு செய்து முழுத் தேர்ச்சி அடைந்து விட்டதாக கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்படுகிறது.  அதுவும் 12 ஆண்டுகள் கழித்து. உடனே நீதிமன்றமும் அந்த வருடத்தில் தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களும் மீண்டும் அதே வகுப்பில் மூன்றாண்டு காலம் படித்து தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும், அப்படி வெற்றிபெறத் தவறினால் அவர்கள் மேற்படிப்பு படித்து பெற்ற பட்டங்கள் எல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பைக்  கொடுக்கிறது.அந்த குறிப்பிட்ட வருடத்தில் படித்திருந்த அத்தனை மாணவ மாணவிகளும் ஆளுக்கொரு திசையில் சென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  சரி இப்படி ஒரு மடத்தனமான தீர்ப்புக்கு செவி சாய்த்து யார் மீண்டும் படிக்க வரப்  போகிறார்கள் என்று நாம் நினைத்தால், இயக்குநர் அந்த வருடத்தில் படித்த அத்தனை மாணவ மாணவிகளையும் யூனிபார்ம் சகிதமாக ஆஜ...
தூக்குதுரை விமர்சனம்

தூக்குதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பழங்கால காதல் கதை, பழங்கால பேய்க்கதை இரண்டும் சேர்ந்தால் அதுதான் தூக்குதுரை திரைப்படத்தின் கதை. இனியாவின் குடும்பம் திருவிழாக்களில் ஊரின் முதல் மரியாதையைப் பெறும் ஜமீன்தார் குடும்பம். திருவிழாக்களில் புரொஜெக்டர் மூலம் படம் ஓட்டிக் காட்டும் யோகிபாபுவிற்கும் இனியாவிற்கும் காதல் மலர்கிறது. தங்கள் காதலைக் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஊரைவிட்டு  ஓட முயற்சி செய்கிறார்கள். ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்ளும் அவர்களில் யோகிபாபுவை இனியா குடும்பம் ஊர் மக்களோடு சேர்ந்து ஒரு கிணற்றில் வைத்து எரித்துக் கொன்றுவிடுகிறார்கள்.  அந்த கிணற்றுக்குள் ஜமீன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு விலைமதிப்புமிக்க கிரீடம் மாட்டிக் கொள்கிறது. அதை எடுக்க வருபவர்களை யோகிபாபு பேயாக வந்து மிரட்டுகிறார். அதை மீறி கிரீடத்தை கைப்பற்றினார்களா இல்லையா என்பது மீதிக்கதை. யோகிபாபு இருந்தாலே ...
Blue Star விமர்சனம்

Blue Star விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மற்றுமொரு ஆடுகளத்தின் கதை.  ஊரில் இரண்டு கிரிக்கெட் அணிகள். அவர்களிடையே ஜாதி ரீதியிலான பிளவு. இரண்டு அணிகளும் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் திரிய, வர்க்கம் அவர்கள் இருவரையுமே இன்னும் கீழாகத்தான் பார்க்கிறது என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் முகத்தில் அறைய, இரு அணிகளும் கைகோர்த்து வர்க்கத்தை ஜெயிப்பதே இந்த “ப்ளூ ஸ்டார்” படத்தின் கதை. படத்தின் துவக்கம் மிக மெதுவாகச் செல்கிறது. கதையற்ற காட்சிகளின் கோர்வையாக மட்டுமே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் படம், காலணி அணியினருக்கும், ஊர்க்கார அணியினருக்குமான 3 பால் மேட்சில் தான் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குப் பின்னர் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் விதிகளுக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, விளையாட்டுக்கே உண்டான சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் திரைப்படம் பரபரப்பாகச் செல்கிறது.  க்ளைமாக்ஸ் காட்சியில் பி...
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக்க...
கேப்டன் மில்லர் விமர்சனம் :

கேப்டன் மில்லர் விமர்சனம் :

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
’முன்னாடி நம்ம நாட்டுக்காரனுக்கு கீழ அடிமையா இருந்தோம்… இப்ப வெளிநாட்டுக்காரன் கீழ அடிமையா இருக்கோம்… யார் கீழ இருந்தா என்ன…? எல்லாம் அடிமைதான… இவன் என்னை செருப்பு போடாதங்குறான்… கோயிலுக்குள்ள வராதங்குறான்… அவன் என் காலுக்கு பூட்ஸ் குடுக்குறான்.. மருவாதியான வாழ்க்கை வாழணும்னு ஆசப்படுறேன்… நான் பட்டாளத்துக்கு போறேன்…” என்று ஆங்கிலேயரின் சிப்பாயாக பணிக்குச் சேரும் அனலீசன் என்கின்ர ஈசா, மில்லர் என்கின்ற பெயர் மாற்றத்துடன் துப்பாக்கி ஏந்த அவனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது. அதை செய்ய முடியாதவனாக மனம் மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நோக்கி பிடிக்க வேண்டிய துப்பாக்கியை வெள்ளையனின் ராணுவ வீரர்களை நோக்கியும் தளபதியையும் நோக்கியும் திருப்பினால்” என்ன நடக்கும் என்பதை கற்பனையாக பேசி இருக்கும் திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”.இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்...
அயலான் விமர்சனம்

அயலான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நெடுநாளாக புரொடெக்‌ஷனில் இருந்து, படம் வெளியாகுமா இல்லை கைவிடப்படுமா என்பதான சந்தேகங்கள் முதற்கொண்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து, அவைகளை வெற்றிகரமாக கடந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு வெள்ளித் திரையில் வெளியாகியிருக்கிறார் அயலான்.  ‘இன்று நேற்று நாளை’ என்கின்ற அறிவியல் புனைவு கதையை தன் முதற்படமாக செய்து பெரும் வெற்றி கண்ட இயக்குநர் ரவிக்குமாரின் அடுத்த படம். சிவகார்த்திகேயன் நடிப்பில்  பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்தப் படம் என்று படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். படம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும்  பூர்த்தி செய்திருக்கிறதா…? என்று பார்ப்போம். ஏலியன்ஸ் வகை திரைப்படம் என்றாலே வழக்கமான, அதற்கென்றே அளவெடுத்து தைத்தார் போன்ற ரெடிமேட் திரைக்கதை ஒன்று உண்டு. அதுயென்னவென்றால் ஏலியன்கள் பூமியை தாக்கி அழிக்க வருவார்கள். ந...
ஹனுமான் விமர்சனம்

ஹனுமான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிறப்பிலிருந்தே தான் ஒரு சூப்பர் ஹீரோவாக ஆக வேண்டும் என்று வெறி கொண்டு அலையும் ஒரு கதாபாத்திரம்.  பிறப்பிலிருந்தே எந்தவொரு நோக்கமும் இன்றி தான் தோன்றித்தனமாக அலைந்து திரியும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு எதிர்பாராத விதமாக சூப்பர் ஹீரோவின் சக்தி கிடைக்கிறது.  இந்த இரு நேரெதிர் கதாபாத்திரமும் அந்த சக்திக்காக மோதிக்கொள்ளும் மோதலே இந்த “ஹனுமான்” திரைப்படம்.இந்திய மொழித் திரைப்படங்களும் இந்த இருபதாம் நூற்றாண்டில் சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரமிப்பூட்டும் காட்சிகளை படைக்கத் துவங்கி இருக்கும் இந்த நேரத்திலும், அயோத்தியில் ராமர் கோவில் திறக்க இருக்கும் நேரத்திலும் இந்த ‘ஹனுமான்’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பாகுபலி தொடங்கி ஆதிபுருஷ் திரைப்படம் வரை சிஜி தொழில்நுட்பத்துடனும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்துடனும் கற்பனையான காட்சிகளை திரைக்கு கொண்டு வரும் சாத்தியக் கூறுகளை இந்த...
மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹீரோ ...
மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் விமர்சனம்

இது புதிது, திரை விமர்சனம்
கிறிஸ்துமஸ் பிறக்க இருக்கும் நள்ளிரவு நேரத்தில் தன் நான்கு வயது மகளைக் கூட்டிக் கொண்டு பம்பாய் நகர வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறாள் படத்தின் நாயகியான மரியா (கத்ரீனா கைஃப்).  எப்படி தன் மகன் இயேசு பிரானை ஏரோது மன்னனின் கொலைக்களத்தில் இருந்து காப்பாற்ற மரியாளும் யோசேப்பும் முயன்று அந்த நடு இரவில் ஒடிக் கொண்டு இருந்தார்களோ, அதே போல் தன் மகளின் நன்மைக்காக இந்த மரியாவும் தன்னந்தனியே ஒடிக் கொண்டிருக்கிறாள்.  இந்த மரியாவின் மகளுக்கு அப்படி என்ன ஆபத்து வந்தது; தன் மகளைக் காக்க மரியா எடுத்த நடவடிக்கை என்ன என்பதே இந்த “மெரி கிறிஸ்துமஸ்” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.ஒரு திரைப்படத்தில் நாம் எதிர்பார்க்கின்ற திருப்பங்களும்  எதிர்பார்க்கும் திரைக்கதையும் இருக்கும் போது,  பல தருணங்களில் சோர்வாகவும் எரிச்சலாகவும் இருக்கும்.  சில தருணங்களில் கதை போகும் போக்கை கச்சிதமாக கணித்துவிட்டோம் என்கின்ற மமதை...