Shadow

திரை விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை மூன்றுபேர்  அடித்துப் போட்டுவிட்டு, தன் வீட்டில் இருந்த லட்சுமியை  தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் விஜய் சேதுபதி. லட்சுமி என்பது என்ன, அந்தப் புகாரைக் காவல்துறை ஏன் எடுத்துக் கொள்ள மறுக்கிறது, பின்னர் ஏன் அந்தப் புகாரை எடுத்துக் கொள்கிறது, அந்தப் புகாரின் பின்னால் ஒளிந்திருக்கும்  உண்மை என்ன என்பது தான் இந்த மகாராஜாவின் கதை. கதையை விரிவாகப் பேச முயன்றால் திரைக்கதையின் சுவாரசியங்கள் கெட்டுவிடும் என்பதால், கதை என்ன என்பதைப் பெரிதாக விவாதிக்காமல் காட்சிகளையும், திரைக்கதை யுக்தியையும், கதாபாத்திர வடிவமைப்பையும் பற்றி அதிகமாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். காட்சிகளைப் பற்றிப் பேசத் துவங்கினால், ஒவ்வொரு காட்சியுமே Half Way-இல் துவங்குகிறது. அதாவது ஒரு சம்பவத்தின் பாதியிலிருந்து காட்சி துவங்குகிறது. அதுபோல் ஒரு காட்சி துவங்கும்...
ஹரா விமர்சனம்

ஹரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்லூரிக்குப் படிக்கப் போன இடத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகும் தன் மகளின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க பயணப்படும் ஒரு தந்தையின் பயணமே இந்த “ஹரா” திரைப்படம்.“மைக் மோகன்” என்றும் “வெள்ளிவிழா நாயகன்” என்றும் புகழப்படும் நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடித்திருக்கிறார். இளமை காலங்களிலேயே அவர் ஆக்‌ஷன் எல்லாம் அவ்வளவாக செய்த்தே இல்லை. வயோதிகத்தில் அழைத்து வந்து வலுக்கட்டாயமாக ஆக்‌ஷன் காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள். அவரது உடலும் வயதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. கதை நாயகனாகவும், காதல் நாயகனாகவும் அறியப்பட்டவரை கமர்ஸியல் நாயகனாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கை கொடுக்கவில்லை.அப்பாவிற்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்துமே அயர்ச்சியைக் கொடுக்கின்றன. துடுப்பற்ற ஓடம் போல் தி...
அக்காலி விமர்சனம்

அக்காலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தான் வழிபாட்டின் மூலமாக தங்களை சக்தி வாய்ந்த மனிதராக மாற்றிக் கொள்ள முயலும் கூட்டத்தைப் பற்றிய கதை.சாத்தான் வழிபாடு, ப்ளாக் மேஜிக் என வெகுஜன யதார்தத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் கதைக்களம். ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் எல்லாம் காணாமல் போகின்றன என ஒரு வழக்கு வருகிறது. அந்த பிதை குழியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணக்கில் அங்கு வேட்டைக்கு வரும் போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு கும்பல் பிணங்கள் மற்றும் மண்டை ஓட்டைக் கொண்டு விசித்திரமான பூஜை செய்து கொண்டிருக்க, அதே இரவில் அமானுஷ்யமாக நடந்து கொள்ளும் ஒரு இளம் பெண் கடத்தப்படுகிறாள். அந்த இளம் பெண் ஏன் கடத்தப்பட்டாள்; அந்த விசித்திர பூஜையில் ஈடுபட்ட கூட்டத்தினர் யார் என்பதை அந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாயிலாக கதை சொல்லும் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.9...
கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
பகலறியான் விமர்சனம்

பகலறியான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் தான் காதலித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓரிரவில் ஓடிப் போக தயாராகிறான். ஓடிப் போன தன் தங்கையை தன் சகாக்களுடன் தேடி அலைகிறான் அண்ணன். இந்த நாயகன் கதாபாத்திரமும் அண்ணன் கதாபாத்திரமும் தவறான தொழில் செய்பவர்கள் என்பதால், தொழில் சார்ந்த பகையும் அந்த இரவில் இருவருக்கும் தொல்லை கொடுக்க மேற்கொண்டு நடந்தது என்ன..? என்பது தான் பகலறியானின் கதை.இப்படத்தின் கதையை வேறு மாதிரியும் கூற முடியும். சற்று ஆழமாகப் பார்த்தால் அதுதான் இப்படத்தின் கதை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதைத் தான் இயக்குநர் ட்விஸ்ட் ஆக வைத்திருக்கிறார் என்பதால் மேற்கொண்டு அது குறித்து மேலதீக தகவல்கள் கொடுக்க முடியவில்லை. கதைகளில் ட்விஸ்ட் இருக்கலாம். ஆனால் கதையவே ட்விஸ்ட் ஆக கூறும் முதல்படம் நான் பார்த்த வரையில் இதுதான்.படத்தின் கடைசி 20 நிமிடம் வரை படத்தின் கதை இதுதான் என்பது புரியாது. ஒரு காதல் ஜோடி ஓடப் பார்க்கிறது....
PT சார் விமர்சனம்

PT சார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை ஒரு உடற்கல்வி ஆசிரியர் எதிர்த்து நீதி வாங்கித் தந்தால் அதுதான் இந்த “PT சார்” திரைப்படம்.ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தி கல்வித் தந்தை என்று போற்றப்பட்டு வருபவர் தாளாளர் குரு புருஷோத்தமன் (தியாகராஜன்). இவரது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கனகவேல் (ஹிப் ஹாப் ஆதி) எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியையான வானதி (காஷ்மீரா) மீது காதல் கொள்வது எந்த வம்பு தும்புக்குள்ளும் வராது என்பதால் ஒட்டு மொத்தப் பள்ளிக்கும் தெரியும்படி தைரியமாக காதலித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிப்பவரும் தன் பள்ளிக்கு அருகே அதே நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படிப்பவருமான நந்தினி (அனிகா சுரேந்திரன்) பள்ளியுடன் தொடர்புடைய ஒரு பாலியல் அத்துமீறல்...
The Garfield Movie விமர்சனம்

The Garfield Movie விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
திங்கட்கிழமையை வெறுக்கும், உணவை மிக மிக விரும்பும், எவரையும் மதிக்காத புசுபுசு புஷ்டி பூனையாகிய கார்ஃபீல்ட், 15 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையைக் காண்கிறது. ஜிம் டேவிஸ் என்பவரால் 1976 இல், காமிக் துண்டாக அறிமுகமான ஆரஞ்சு நிற கார்ஃபீல்ட் பூனை, உலகளவில் பல செய்தித்தாள்களில் பரவலாக இடம்பெற்று, கின்னஸ் சாதனை பெற்றுள்ளது. கார்ஃபீல்ட் உமிழும் புத்திசாலித்தனமான பகடிகள் தான் அதன் சிறப்பே! இப்படத்தில் அதை அழகாகக் கொண்டு வந்துள்ளனர். சாலையில் தனித்து விடப்பட்டு பரிதாபமாக இருக்கும் பூனையை ஜான் தத்தெடுக்கிறார். ‘ஜான் என்னைத் தத்தெடுக்கலை. நான் தான் ஜானைத் தத்தெடுத்தேன்’ என ஆரம்பிக்கும் கார்ஃபீல்டின் அட்டகாசம் முதற்பாதி முழுவதும் அற்புதமாக விரவியுள்ளது. விலையுயர்ந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்து, எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு, CatFlix பார்க்கும் பரம சுகவாசியாக ராஜவாழ்க்கை வாழ்கிறது கார்ஃபீ...
இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிவேல், ஜமீன் வீட்டில் பெண் எடுக்கிறார். தான் சம்பந்தம் செய்யவுள்ளது திவாலான ஜமீன் எனத் தெரியாமல், கல்யாணம் முடிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஏமாற்றத்துடனே தன் வாழ்க்கையைத் தொடரும் வெற்றிவேலின் வீட்டில், சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வரும் பயங்கரவாதி ஒருவன் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறான். பிறகு என்னானது என்பதே படத்தின் கதை. ஜமீன் விஜயகுமாராகத் தம்பி ராமையா அறிமுகமானதில் இருந்து படத்தின் கலகலப்பு இரட்டிப்பாகிறது. படத்தினைத் தாங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது மகனாக நடித்துள்ள பாலசரவணன், சிற்சில காட்சிகளில் மட்டும் அசத்தியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில், சந்தானம் சமாளிக்கும் பொழுது, குழப்பத்துடன் தரும் ரியாக்ஷங்களில் ரசிக்க வைக்கிறார். வெற்றிவேலின் மனைவி தேன்மொழி பாத்திரத்தில், பிரியாலயா நாயகியாக அறிமுகமாகியுள்ள...
எலக்‌ஷன் விமர்சனம்

எலக்‌ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகர்களின் அரசியலை விட்டுவிட்டு நடுத்தர மக்களின் அரசியலை அச்சு அசலாகக் காட்டியிருக்கிறது இந்த எலக்‌ஷன் திரைப்படம். அரசியல், தேர்தல் போன்றவைகளை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், அதன் அங்கமாக மாறி அதனோடு பயணிப்பதற்குமான வித்தியாசங்களை ஆணித்தரமாகப் பேசியிருக்கிறது எலக்‌ஷன் திரைப்படம். ஜனநாயகத்தின் பலமே இந்தத் தேர்தல் முறையின் மூலம் தங்களைத் ஆளப் போகிறவர்களை மக்கள் தாங்களே தேர்ந்தெடுப்பது தான் என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், அப்படி மக்களால் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருக்கிறார்கள்? நல்லவன் என்றோ, நல்லது செய்பவன் என்கின்ற நம்பிக்கையைப் பெற்ற ஒருவனோ, இந்தத் தேர்தல் நடைமுறைகளின் வழி மக்களின் தலைவன் ஆகிவிட முடியுமோ என்று கேட்டால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதே சத்தியமான பதில். அதைத்தான் இந்த எலக்‌ஷன் பேசி இருக்கிறது. நாற்பது ஆண்டு காலம் கட்சிக்காக நாயாக உழ...
படிக்காத பக்கங்கள் விமர்சனம்

படிக்காத பக்கங்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பாகப் பார்த்தால் கதை சொல்ல வரும் கருத்து, பெரிய பெரிய குற்றங்கள் நடக்கும் போது, அவை தொடர்பான செய்திகள் கண்ணைக் கவரும் வகையில் பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாக வரும். அதே குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையும், குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் ஜாமீன் தொடர்பான செய்திகளும், அவர்களின் விடுதலை தொடர்பான செய்திகளும் கண்ணில் படாத குட்டிச் செய்திகளாக பத்திரிக்கையில் வெளியாகும். பெரும்பாலும் நாம் இந்தக் குட்டிச் செய்திகளை படிக்காமல் கடந்து விடுவோம் அல்லது தவறவிட்டு விடுவோம். அவை தான் படிக்காத பக்கங்கள். தலைப்பும் அது சொல்ல வரும் கருத்தும் ஓகே. ஆனால் அது கதையோடு எந்த வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்று கேட்டால் கதைக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்பது போல் தான் இருக்கிறது. படத்தின் கதை என்னவென்றால் நடிகை ”ஸ்ரீஜா”-வாகவே நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் படப்பிடிப்பிற்காக சேலம் ஏற்காடு பகுத...
தலைமை செயலகம் விமர்சனம்

தலைமை செயலகம் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
என்றோ செய்த ஊழல், ஆளும் முதல்வரின் கழுத்தை நெறுக்க, முதல்வரின் கைத்தடிகள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி அடுத்த முதல்வராவதற்கு காய் நகர்த்த, அதே நேரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் பன்சால் மற்றும் அவன் கூட்டாளிகள் ஐவரைக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற கௌலைகாரி துர்காவைத் தேடும் வழக்கு போலீஸ் இடமிருந்து சி.பி.ஐ.-க்கு மாற்றப்படுகிறது.  இந்த வட இந்திய மற்றும் தென் இந்திய நிகழ்விற்குமான தொடர்பு என்ன என்பதே இந்த தலைமை(ச்) செயலகம் இணைய தொடரின் கதை. ராடன் நிறுவனம் சார்பில் ராதிகா சரத்குமாரும், சரத்குமாரும் தயாரித்திருக்கும் இந்தத் தொடரை வசந்த பாலன் இயக்கி இருக்கிறார்.  கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன், பரத், ஆதித்யா மேனன், சந்தான பாரதி, கவிதா பாரதி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். எப்போதோ செய்த ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இர...
உயிர் தமிழுக்கு விமர்சனம்

உயிர் தமிழுக்கு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பில் வரும் தமிழ் என்பது நம் தாய் மொழி தமிழ் அல்ல. படத்தில் வரும் நாயகியின் பெயர் தமிழ். இப்பொழுது உயிர் தமிழுக்கு என்ன மாதிரியான படம் என்பது புரிந்திருக்கும். இது ஒரு காதல் படம். காதல் படத்தில் அமீருக்கு என்ன வேலை என்ற கேள்வி வந்துவிடும் என்று எண்ணி, காதல் கதை நடக்கும் பின்புலத்தை அரசியல் ஆடுகளமாக மாற்றி இருக்கிறார்கள். எதிர் எதிர் கட்சிகளில் பயணிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல். கட்சி பகைமை, நாயகன் மீது விழும் கொலைபழி இவற்றைக் காரணம் காட்டி காதலைக் கழுவேற்றப் பார்க்க, காதல் கரை சேர்ந்ததா இல்லையா என்பதே இந்த உயிர் தமிழுக்குப் படத்தின் கதை. எதிர்கட்சியின் மாவட்ட செயலாளரான ஆனந்த்ராஜ் தன் மகள் தமிழை வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடச் செய்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மீது காதல்வயப்படும் நாயகன் அமீர், தானும் அரசியலில் குதித்தால் தான் நாயகியோடு நெருக்கமாகப்...
ரசவாதி விமர்சனம்

ரசவாதி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குற்றப்பின்னணியுடன் அறிமுகமாகும் ஒரு காவல்துறை அதிகாரி. சித்த மருத்துவம் செய்து கொண்டு, இயற்கை ஆர்வலராக அமைதியான முறையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்த வைத்தியர். இந்த சித்த வைத்தியர் மீதும், அவருக்கு இருக்கும் காதல் மற்றும் காதலி மீதும் இந்தக் காவல்துறை அதிகாரிக்கு தீராத வன்மம். வன்மம் ஏன், வன்மத்தால் விளைந்தது என்ன என்பதே இந்த ரசவாதி திரைப்படத்தின் கதை. மெளனகுரு, மகாமுனி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.  சித்தவைத்தியர் சதாசிவ பாண்டியனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். ஒரு காலை சற்று தாங்கித் தாங்கி நடந்து கொண்டு, யானை போன்ற வனவிலங்குகளின் காலில் உடைந்த மதுபாட்டில்கள் காயத்தை ஏற்படுத்திவிடும் என்கின்ற அக்கறையுடன் அவற்றை அப்புறப்படுத்தும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்திராவாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷிற்க...
ஸ்டார் விமர்சனம்

ஸ்டார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரைத்துறையில் நாயகனாக சாதிக்க வேண்டுமென்கின்ற கனவுடன் வாழ்ந்து வரும் இளைஞன், தன் கனவை நிஜமாக்க வாழ்க்கையில் என்ன மாதிரியான தடைகளையும் சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறான், அவற்றைக் கடந்து அவன் தன் கனவை அடைந்தானா என்பதைப் பேசும் படமே இந்த “ஸ்டார்”. சினிமாவில் சாதிக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாபின்னமாகி இறுதியில் தன்னை ஒரு புகைப்படக் கலைஞராக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதன் (லால்), தன் ஒட்டுமொத்தக் கனவையும் வளர்ந்து வரும் மகன் (கவின்) தோள்களில் தூக்கி வைக்க, பள்ளியில் ஆறு வயதில் பாரதியார் வேஷம் போட்டு மேடை ஏறப் போகும் மகன் கலை, அப்பாவின் வார்த்தைகளின் வழியே எதிர்காலத்தில் தான் ஒரு நடிகனாக நாயகனாக வரவேண்டும் என்கின்ற கனவையும் தன் மனதில் ஏற்றிக் கொள்கிறான். அந்தக் கனவு அவனை எப்படி தூக்கத்தையும் நிம்மதியையும் தொலைக்கச் செய்து துரத்தியது என்பதை விவர...
ரத்னம் விமர்சனம்

ரத்னம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம்.வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் இருக்கிறார். சமுத்திரக்கனியும் ரத்னமாகிய விஷாலை ரத்னம் போல் பொத்திப் பாதுகாக்கிறார். அவர்களுக்குள் அப்படி என்ன பாசப் பிணைப்பு என்பதற்கு ஒரு பின்கதை. திருத்தணியில் இருந்து வேலூருக்கு நீட் தேர்வு எழுத வரும் ப்ரியா பவானி சங்கரைப் பார்த்ததும் வழக்கமான ஹீரோக்கள் உருகுவது போல் விஷாலும் உருகுகிறார். அவர் ஏன் அப்படி உருகுகிறார் என்பதற்குப...