Shadow

திரை விமர்சனம்

கும்பாரி விமர்சனம்

கும்பாரி விமர்சனம்

இது புதிது, திரை விமர்சனம்
இப்பொழுதெல்லாம் பேய்ப்படங்கள் நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படும் படங்களைப் பார்க்க திரையரங்கு வாசலை மிதிக்கவே பயமாக இருக்கிறது.  சினிமா திரைப்படங்களின் வகைமைகளில் மிகக் கடினமானது நகைச்சுவைத் திரைப்படங்கள் தான். அதை சிலர் நினைப்பது போல் அவ்வளவு எளிதாக எழுதிவிடவும் முடியாது, எடுத்துவிடவும் முடியாது.  ஆனால் சினிமாத்துறையின் வெளியில் இருந்து பார்க்கும் சிலருக்கு நகைச்சுவைப் படங்களை எளிதாக எடுத்துவிடலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கும் போலத் தெரிகிறது. எனவே வருவோர் போவோர் எல்லாம் நகைச்சுவைப் படம் எடுக்கிறோம் என்று சொல்லி, எதையோ எடுத்து வைக்கிறார்கள். அவர்களுக்குத் தயாரிப்பாளர்களும் கிடைக்கிறார்கள் என்பது அதைவிட பெரும்கொடுமை. அந்த வரிசையில் நாங்கள் நகைச்சுவைப் படம் எடுத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு பார்வையாளர்களைச் சோதிக்க வந்திருக்கும் அடுத்த பட...
மதிமாறன் விமர்சனம்

மதிமாறன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அப்பார்ட்மென்ட்களில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்கள், உருவம் குள்ளமாக இருந்தாலும் தன் பாசமான தாய் தந்தையரோடும், தனக்கு உறுதுணையாக இருக்கும் தன் அக்காள் மதியுடனும் சந்தோஷமாக வாழ்ந்தபடி தன் அப்பாவைப் போல் வருங்காலத்தில் ஒரு போஸ்ட்மேனாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் நெடுமாறன். இந்த இரு வேறு புள்ளிகளும் சந்திக்கும் இடம் தான் “மதிமாறன்” திரைப்படத்தின் கதை. நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார். இவர் தான் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அயலான்” படத்தில் அயலான் வேடத்தில் நடித்து இருக்கிறார். மதிமாறன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். தன்மான உணர்வு, சமூகத்தின் மீதான வெறுப்பு, அக்காள் மதி மீதான அன்பு, தந்தையின் மீதான மரியாதையும் அவர் தொழில் மீதான பிடித்தமும்,  சக தோழியுடனான காதலும் நட்பும் என எ...
ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

ஜிகிரி தோஸ்த் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மூன்று நண்பர்கள். அதில் ஒருவன் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைபவன், மற்றொருவன் தீவிரவாதிகளின் செல்ஃபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் சாதனம் ஒன்றைத் தன் கல்லூரி ப்ராஜெக்ட் ஆகச் செய்துவிட்டு, அது செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல் போனதை எண்ணி நொந்து போய் இருப்பவன்.  இவர்களுக்கு உதவிக் கொண்டு ஜாலியாகச் சுற்றித் திரியும் மற்றொருவன். இவர்கள், ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்திக் கொண்டு செல்வதைப் பார்க்கிறார்கள்.  மேற்கொண்டு என்ன நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா, யூகிக்க முடிந்தால் அது தான் ஜிகிரி தோஸ்த் திரைப்படத்தின் கதை. மிக எளிமையான கதை, அதைவிட எளிமையான திரைக்கதை என ஒரு அடிப்படையான சினிமா தான் ஜிகிரி தோஸ்த். அது தவிர்த்து அதை ஆழமாக அலசிப் பார்ப்பதற்கு வேறொன்றும் இல்லை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எவ்வளவு நேர்த்தியாக எடுக்க முடியுமோ அவ்வளவு நேர்த்தியாகப் படத்தை எடுத்திருக்...
நந்திவர்மன் விமர்சனம்

நந்திவர்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பல்லவர் காலத்தில் செஞ்சி நகரை ஆண்டு வந்த நந்திவர்மன் என்கின்ற அரசன், தன் ஊரை கொள்ளையிட வந்த கொள்ளையர் கூட்டத்தினை விரட்டியடிக்கும் முயற்சியில் மாண்டு போகிறான். அதனைத் தொடந்து அந்த ஊரும், நந்திவர்மன் பூஜித்து வந்த சிவபெருமான் கோவிலும் பூமிக்குள் புதையுண்டு போனதாக நம்பப்படுகிறது.  இதை அறிந்து கொள்ளும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவினர், செஞ்சி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தி புதையுண்ட கோவிலையும், நந்திவர்மனின் வரலாற்றை மீட்டு உலகிற்கு உரைக்க முடிவு செய்து, ஒரு குழுவாக செஞ்சி பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அந்த ஊரில் சிலர் இரவு நேரத்தில் அந்த கோவில் புதையுண்ட பகுதிக்கு சென்று மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது என்று அந்த ஊரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.  இதனால் ஊர் மக்கள் அந்தக் கோவில் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய...
சலார் விமர்சனம்

சலார் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கே.ஜி.எஃப் 1 & 2 திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அடுத்த படம். பிரபாஸுடன் ஈணைகிறார் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறிப் போய் கிடந்தது. அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம். மிகப்பெரிய வெற்றிப் த படம் “சலார்”. பாகுபலி நாயகன் பிரபாஸும் பிரசாந்த் நீல் உடன் இணைந்ததால் படத்தின் மீதாபடங்களை கொடுக்கும் இயக்குநர்களுக்கு எப்போதும் வரும் சிக்கல் தான் பிரசாந்த் நீலுக்கும் வந்திருக்கிறது. கே.ஜி.எஃப் திரைப்படத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்கின்ற அழுத்தத்திலேயே படம் எடுத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சரி அழுத்தம்  இருக்கும் தான்.. அதற்காக கே.ஜி.எஃப் திரைப்படத்தை மீண்டும் அப்படியே எடுத்து வைத்தால் எப்படி..? கே.ஜி.எஃப் திரைப்படத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அது எல்லாம் “சலார்” திரை...
சபாநாயகன் விமர்சனம்

சபாநாயகன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காதலும் கடந்து போகும்; அது காலம் செல்ல செல்ல மறந்து போகும் என்கின்ற 2கே கிட்ஸ்கான டேக் இட் ஈஸி காதல் கதை தான் இந்த சபாநாயகன்.அரவிந்த் என்று சொல்லப்படும் ச.பா.அரவிந்திற்கு பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் டிகிரி முடிக்கும் போது ஒரு காதல், பின்னர் சிங்கப்பூரில் இருக்கும் அம்மா அப்பாவை பார்க்கச் சென்ற போது அங்கு ஒரு குட்டி காதல், மீண்டும் பள்ளிகால க்ரஷ் திரும்ப வாழ்க்கையில் வந்ததால் மீண்டும் அவளுடன் காதல், பிறகு எம்.பி.ஏ படிக்கும் போது மற்றுமொரு காதல் இப்படி பல்வேறு காதல்கள் அடங்கிய அரவிந்த்-தின் ஆட்டோகிராப் டைரியே இந்த சபாநாயகன்.படம் எப்படியோ தொடங்கி, எப்படியோ நகர்ந்து எப்படியோ முடிந்து போகிறது.  பள்ளிகால காதலோ, கல்லூரி காலக் காதலோ, எம்.பி.ஏ கால காதலோ எதுவுமே மனதில் ஒட்டவில்லை. நாயக கதாபாத்திரமோ தன் காதல் மீதோ, தன் காதலி மீதோ எந்தவித பிடிப்பும் அழுத்தமும் தீவிரத்தன்மையும் இல்லாமல் இர...
ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பே கதையைச் சொல்கிறது. ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கிறது. அது யாருக்கு கிடைக்கிறது, எப்படி கிடைக்கிறது, அதை அந்தக் கதாபாத்திரத்தால் அனுபவிக்க முடிந்ததா, அந்தப் பொற்காசுகளை பயன்படுத்துவதில், சொந்தம் கொண்டாடுவதில் எத்தனை சவால்கள் வந்தன என்பதே இந்த ஆயிரம் பொற்காசுகளின் கதை. பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் “ஆயிரம் பொற்காசுகள்” ஆகும்.  அறிமுக இயக்குநர் ரவி முருகையா இயக்கி இருக்கிறார். விதார்த், பருத்தி வீரன் சரவணன், அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவர்களோடு ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  பானுமுருகன் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசையமைத்து இருக்கிறார்.  விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இ...
கண்ணகி விமர்சனம்

கண்ணகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்ணுக்கு தாலி தான் பாதுகாப்பு என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் ஒரு பெண்ணுக்கு அந்த தாலி அவள் எதிர்பார்த்த பாதுகாப்பைக் கொடுக்கவில்லை என்றால் அவளது வாழ்க்கை என்னவாகும் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியே “கண்ணகி” திரைப்படத்தின் மையக்கரு. கலை (அம்மு அபிராமி)-க்கு எப்படியாவது ஒரு பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பெரும் சிரத்தையுடன் முயற்சி செய்கிறது கலையின் குடும்பம்.  குழந்தை பிறக்கத் தகுதியில்லை என்பதைக் காரணம் காட்டி வலுக்கட்டாயமாக விவாகரத்து கேட்டு நிற்கும் நேத்ராவின் கணவன் குடும்பம், திருமணமே செட் ஆகாது என்கின்ற எண்ணத்துடன்  லிவிங் டுகெதரில் இருக்கும் நதி கதாபாத்திரம்,  வயிற்றில் கலைக்க முடியாத சூழலில் இருக்கும் நான்கு மாத கருவைக் கலைக்க, தன் காதலனுடன் சேர்ந்து பெரும் போராட்டம் நடத்தும் கீதா கதாபாத்திரம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் வாய...
ஃபைட் க்ளப் விமர்சனம்

ஃபைட் க்ளப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
உப்புக்காற்றும் உறை மணலும் உறவாடும்  வடசென்னைப் பகுதிகளை களமாக எடுத்துக் கொண்டு, அம்மக்களின் மனநிலையிலும் வாழ்க்கையிலும் ஒளிந்திருக்கும் இருவேறுவிதமான முரண்பட்ட வாழ்க்கை முறையை  யதார்த்த அழகியலுடன் பேச முற்பட்டிருக்கிறது ஃபைட் கிளப். வடசென்னை என்றாலே கால்பந்தாட்டமும், கேரம் போர்டுகளும், ரெளடியிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் தானா? இதைத் தாண்டி அம்மக்களிடம் வாழ்க்கை மற்றும் வாழ்வியலுக்கான கூறுகள் ஏதுமே இல்லையா  என்கின்ற கேள்வி எவ்வளவு நியாயமானதோ,  அதே அளவிற்கு நியாயமானது, அங்கு ஏன் ரெளடிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகின்றது என்பதும்.  இவற்றை மாற்ற அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன  என்கின்ற கேள்விகளும் முக்கியமானவை. வடசென்னை என்பது புரசைவாக்கத்தின் பின்புறமுள்ள அயனாவரத்தில் துவங்கி பெரம்...
ஆளவந்தான் விமர்சனம்

ஆளவந்தான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதயம் பேசுகிறது’ இதழில், 80களில் “தாயம்” என்ற பெயரில் கமல் எழுதிய தொடர், 2001 இல் ‘ஆளவந்தான்’ ஆகத் திரையேற்றம் கண்டது. திரைக்கதை, வசனத்தைக் கமல் எழுத, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். வெளியான போது 178 நிமிடங்கள் கால அளவினைக் கொண்ட படத்தைத் தற்போது 122 நிமிடங்களாகச் சுருக்கி, 4K தெளிவுத்திறனில் (resolution) வெளியிட்டுள்ளனர். சித்தி கொடுமைக்கு உள்ளாகும் விஜயும் நந்துவும் இரட்டையர்கள். விஜயை, அவரது மாமா இராணுவப்பள்ளியில் சேர்க்க, தந்தையுடன் தங்கும் நந்துவோ சித்தியைக் கொன்ற குற்றத்திற்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். இராணுவ அதிகாரியாகும் விஜய், தேஜஸ்வினியைக் காதலித்துத் திருமணம் புரிகிறார். சித்தி தான் தேஜஸ்வினியாக வந்துள்ளார் என நம்பும் மனச்சிதைவுடைய (schizopernia) நந்து, தேஜஸ்வினியைக் கொன்று விஜயைக் காப்பாற்ற நினைக்கிறான். வேட்டையாடப் பயிற்சியெடுத்த விஜய் தேஜஸ்வ...
கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மந்திரத்தாலோ, தந்திரத்தாலோ ஒன்றைத் தருவிப்பதையோ, வரவைப்பதையோ கான்ஜுரிங் எனச் சொல்வார்கள். அப்படி மந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்கின்றான் கண்ணப்பன். அவனுடன் டெவில் ஆர்ம்ஸ்ட்ராங்கும், சைக்காட்ரிஸ்ட் ஜானியும், கண்ணப்பனின் குடும்பத்தினரும் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித் தவறித் தூங்கினால், அந்த அமானுஷ்ய கனவு மாளிகைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதில் இருந்து எப்படித் தப்பிக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை. கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கான நேரத்தை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, நேராகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். சதீஷ் தனியாகச் சிக்கிக் கொண்ட காட்சிகளில், தொழில்நுட்பத்தின் உதவியால் அச்சுறுத்த முயற்சி செய்துள்ளனர். ஹாலிவுட்டின் கான்ஜுரிங் சீரிஸ் படங்களே பார்வையாளர்களை அச்சுறுத்தத் திணறி வரும் சூழலில், கோலிவுட் படங்கள் தஞ்சம் அடைவது நகைச்சுவையில். இப்படம் அ...
கட்டில் விமர்சனம்

கட்டில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மூன்று தலைமுறையாக வசித்து வரும் வீட்டை விற்றுவிட்டு கிடைக்கும் காசு பணத்தைக் கொண்டு, வியாபாரம் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நாயகனின் அண்ணன்கள் மற்றும் அக்காமார். நாயகன் தன் தாய், தன் மனைவி மற்றும் மகனோடு அதே வீட்டில் வாழ்ந்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்து வருகிறான். நாயகனும் அவன் மனைவியும், நாயகனின் தாயும் அந்த வீட்டை விற்கும் முயற்சியை கைவிடச் செய்ய முயற்சி செய்கிறார்கள். அது முடியாமல் போகும்பட்சத்தில், தங்கள் பரம்பரையில் ஒவ்வொரு குழந்தையும் பிறந்து தவழ்ந்த பூர்விக கட்டிலையாவது காப்பாற்ற முனைகிறார்கள். அதை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா..? என்பதே “கட்டில்” திரைப்படம்.ஒரு இயல்பான யதார்த்தமான கதை. அந்த கதையின் போக்கில் ஒரு சிக்கல், அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் க்ளைமாக்ஸ் என எளிய முறையில் பயணிக்கும் திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதில் இவ்வளவு பெர...
சூரகன் விமர்சனம்

சூரகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு விபத்தில் கண் பார்வை பாதிப்புக்குள்ளான நாயகன், அதை மறைத்து போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்.  அவரின் கண் பார்வை குறைபாட்டால் ஒரு அப்பாவிப் பெண் பலியாகிவிட, நாயகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதே நேரம் ஒரு உயிர் போய்விட்டதே என்கின்ற குற்றவுணர்ச்சி மேலெழ நாயகன் விரக்தியுடன் இருக்கிறார். அந்த சூழலில் சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தும் அப்பெண்ணையும் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இந்த குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்ள நாயகன், சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண் சாவில் இருக்கும் மர்மத்தை உடைத்து தன் குற்றவுணர்வில் இருந்து விடுபட நினைக்கிறான். அந்த இளம்பெண் மரணத்தின் பின்னால் இருக்கும் நபர்களை நாயகன் கண்டறிந்தானா..? தன் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட்டானா..? என்பதை விளக்குகிறது திரைக்கதை.ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம். அதன் பின்னா...
“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன்

“துருவ நட்சத்திரம் வெளியீட்டில் சிக்கல் ஏன்?” – தயாரிப்பாளர் கே. ராஜன் | எமகாதகன்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்' ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் கே.ராஜன், “இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி சென்சார் சான்றிதழ் பெற்றும் கூட ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. மிகப் பெரிய படமான து...
பார்க்கிங் விமர்சனம்

பார்க்கிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே.  இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம்....