Shadow

திரை விமர்சனம்

நாடு விமர்சனம்

நாடு விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘எங்கேயும் எப்போதும்’,  ‘ இவன் வேற மாதிரி’  போன்ற  திரைப்படங்களை இயக்கிய  சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம் புலி, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படம் “நாடு”.  மருத்துவர் ஒருவர் இல்லாமல் சொல்லொன்னா துன்பத்திற்கு உள்ளாகும் மலைவாழ் கிராம மக்கள், இறுதியாகத் தங்கள் கிராமத்திற்கு வரும் ஒரு பெண் மருத்துவரைத் தங்கள் கிராமத்தில் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் போராட்டமே இந்த “நாடு” திரைப்படம். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால்,  உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த மலைக்கிராமத்திற்கு நியமிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும்  ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலத்திற்குள் மாற்றல் வாங்கிக் கொண்டு கிளம்பிவ...
குய்கோ விமர்சனம்

குய்கோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கதைக்காகத் திரைக்கதைக்காகப் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நிறைய உண்டு. ஆனால் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவைக்காகவும் நையாண்டிக்காகவும், அரசியல் பகடிகளுக்காகவும், கதாபாத்திர வடிவமைப்பிற்காகவும், இயல்பான யதார்த்தமான நடிப்பிற்காகவும் பாராட்டப்பட்ட, வசூல் சாதனை புரிந்த, ஹிட் அடித்த திரைப்படங்கள் நம்மிடையே மிகவும் குறைவு. அமைதிப்படை, களவாணி, தமிழ்ப்படம், ஒரு கிடாயின் கருணை மனு, ஆண்டவன் கட்டளை என வெகு சில படங்களே! அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த "குய்கோ". அமைதிப்படை திரைப்படம் நம் நாட்டின் அரசியல் சூழலையும் அரசியல்வாதிகளையும் பகடி செய்த திரைப்படம். தமிழ்ப்படம், நம் தமிழ் சினிமாவில் இருந்த க்ரிஞ்சான விசயங்களையும், அவலங்களையும் பகடி செய்தது. அந்த வரிசையில் நாம் வாழும் வாழ்க்கையையும், நம்மிடம் இருக்கும் அறியாமையையும், பகட்டான வாழ்க்கை மீது...
80’ஸ் பில்டப் விமர்சனம்

80’ஸ் பில்டப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சந்தானத்தின் தாத்தா R. சுந்தர்ராஜன் இறந்து விட, அவரது 5 ஆசைகளை நிறைவேற்றிய பின்பே அவரை அழைத்துச் செல்வேன் என வரமளிக்கிறார் எமன் K.S.ரவிக்குமார். தாத்தாவின் சாவிற்கு வரும் ஒரு பெண் மீது கண்டதும் காதல் கொள்கிறார் கமல் ரசிகரான சந்தானம். தாங்கள் திருடிய வைரங்கள், இறந்துவிடும் R. சுந்தர்ராஜனின் வயிற்றுக்குள் மாட்டிக் கொள்ள, அதை மீட்கப் பார்க்கின்றது மன்சூர் அலிகானின் குழு. இந்த மூன்று கதையும், ஒரு சாவு வீட்டில் நிகழ்கிறது. சந்தானத்தின் காதல் கை கூடியதா, R. சுந்தர்ராஜனின் ஆசைகள் நிறைவேறினவா, திருட்டுக் குழுவிற்கு வைரங்கள் கிடைத்ததா என்பதே படத்தின் முடிவு. மேலே உள்ள பத்தியிலுள்ள மூன்று கதையையும் ட்ரெய்லரியே காட்டி, ஒரு பக்காவான காமெடிப் படத்திற்கான உத்திரவாதத்தை ஏற்படுத்தி இருந்தார் இயக்குநர் கல்யாண். ஆனால், அண்ணனுக்கும் – தங்கைக்கும் எதற்கெடுத்தாலும் சவால் என புதுக்கதையில் படம் தொடங்கிப் பயணிக்...
நெப்போலியன் விமர்சனம்

நெப்போலியன் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நெப்போலியனின் மொத்த வாழ்க்கையையும் மூன்று வார்த்தையில் அடக்கிவிடலாம். படம் முடியும்பொழுது, அவர் இறக்கும் முன் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைத் திரையில் காட்டுகின்றனர். அவை, ஃபிரான்ஸ், படை (Army), ஜோசஃபின் ஆகும். அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமான இம்மூன்றும் தான் நெப்போலியனின் வாழ்க்கையும், இந்தப் படத்தின் திரைக்கதையும் ஆகும். இப்படம், நெப்போலியனை ஒரு காவிய நாயகனாகக் கொண்டாடவில்லை. மாறாக, அவரை ஒரு சக மனிதராகத் திரையில் முன்னிறுத்தி, ரிட்லி ஸ்காட் ஒரு காவிய படைப்பைக் கொடுத்துள்ளார். பிரபலமான ஆங்கிலக் கவிஞரான பைரான் பிரபு, நெப்போலியனை ஒரு ரொமான்ட்டிக் நாயகனாகவும், தனிமையில் சிக்கிய, இடருக்கு உள்ளான குறைப்பாடுள்ள மேதைமையாகப் பார்த்தார். கிட்டத்தட்ட ரிட்லி ஸ்காட்டின் இப்படமும் அதையே பிரதிபலிக்கிறது. போர்க்களத்தில் இருந்து, அவர் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்கள் மிகப் பிரபலம். போர்க்களத்தில், ...
தி மார்வெல்ஸ் விமர்சனம்

தி மார்வெல்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
லிட்டில் வுட்ஸ் (2018), கேண்டிமேன் (2021) ஆகிய படங்களை இயக்கிய நியா டகோஸ்டாவின் மூன்றாவது படம், ‘தி மார்வெல்ஸ்’ ஆகும். நியா, மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் முதல் கறுப்பினப் பெண் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றாற்போல், படத்தில் மூன்று பெண் சூப்பர் ஹீரோக்கள் என்பது இன்னொரு சிறப்பம்சம். சூப்பர் ஹீரோ படமென்றால், ஒரு பலமான சூப்பர் வில்லன் வேண்டும். ஆனால் அதி சூப்பர் வில்லனான தானோஸைத் தடுக்க, அத்தனை சூப்பர் ஹீரோக்களும் இணைய வேண்டியதாகி இருந்தது. அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முடிவில், தானோஸ் ஒரு புன்னகையுடன், ‘என்னை விட சூப்பர் வில்லன் யாரிருக்கா?’ என ஒரு சொடுக்கில், மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களுக்கே உரிய கலகலப்பையும் சுவாரசியத்தையும் தன்னுடனேயே கொண்டு சென்றுவிட்டார். அதற்குப் பின்னான மார்வெலின் படங்கள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ரகமாக உள்ளது. இணை பிரபஞ்சம், பன்னண்டம்,...
ஜப்பான் விமர்சனம்

ஜப்பான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கடந்த வருடத்தின் தீபாவளி வெற்றியாளரான ‘சர்தார்’ படத்தின் நாயகனான கார்த்தியின் படமென்பதாலும், குக்கூ, ஜோக்கர் முதலிய படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜுமுருகனின் படமென்பதாலும், ஜப்பான் மீதோர் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இருநூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள், ராயல் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டுத் திருடப்பட்டுவிடுகின்றன. முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பாங்கினைக் கொண்டு, கொள்ளையடித்தது ஜப்பான் என உறுதி செய்கின்றது காவல்துறை. ஜெகஜால கில்லாடியான ஜப்பானைக் காவல்துறையால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. கங்காதரராக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். படத்தின் அசுவராசியத்திற்குக் காரணம், கங்காதரர் போல் முழுமை பெறாத கதாபாத்திரங்களே காரணமாகும். பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஜித்தன் ரமேஷைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது, திரைக்கதையின் பலவீனத்துக்கு அச்சாரம் இட்டுள்ளது. ‘அண்ணாமலையா...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கத்தியால் ஒருவர் கண்ணில் வரவழைக்கும் கண்ணீரை விட, கலையால் ஒருவர் கண்ணில் வரவழைக்கப்படும் கண்ணீர் துளி சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்துவதற்கான உயிர்த்துளி என்பதை ஒருவித கோணத்தில் கூறிய திரைப்படம் ஜிகர்தண்டா. அதே கருத்தை மற்றொரு மாற்றுக் கோணத்தில் இன்னும் அழுத்தமாக, தீவிரமாகப் பேசியிருக்கும் திரைப்படம் தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. ”கலையை நீ தேர்ந்தெடுக்கவில்லை; கலை தான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறது” என்கின்ற கனமான கவித்துவமான வரிகளுடன் துவங்குகிறது திரைப்படம். அந்த வரிகளுக்கான நியாயத்தை ஒவ்வொரு காட்சியிலும் சிறுகச் சிறுக கடத்தி, படம் முடியும் அந்தக் கடைசி ஃப்ரேமில் அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை நிரூபிக்கிறது. 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் இருக்கும் சில சாயல்கள் இப்படத்திலும் உண்டு. உதாரணத்திற்கு ஊரே பார்த்து நடுங்கும் ஒரு கொலைகார ரெளடி, அவனை நாயகனாக வைத்து படம் எடுக்க வேண்டிய நி...
கிடா விமர்சனம்

கிடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 மதுரை மாநகரின் ஒட்டு மொத்த ஊரும் அடுத்த நாளின் தீபாவளி கொண்டாட்டங்களுக்காக  தயாராகிக் கொண்டிருக்க,  ஊருக்கு வெளிப்புறம் இருக்கும்  ஒரு சிறு கிராமத்தில், வயதான பெரியவரும் அவரின் பேரனும் தவிப்போடு அமர்ந்திருக்கின்றனர்.  பெரியவருக்கு தன் பேரன் ஆசையாக கேட்ட ஆடையை வாங்கிக் கொடுப்பதற்காக அவன் ஆசையோடு வளர்த்த ”கிடா”-வை விற்கத் துணிந்தும், அதை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்ன ஆள் இன்னும் வரவில்லையே என்கின்ற பதட்டம். பேரனுக்கோ தான் ஆசைப்பட்டு கேட்ட ஆடைக்காக தான் ஆசை ஆசையாக வளர்த்த கிடாவை நம்மிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என்கின்ற பதட்டம்.  இவர்கள் இருவரின் பதட்டம் இதுவென்றால்,  கறிக் கடையில் ஆடு வெட்டுவதையே தொழிலாக கொண்ட தன்னை, குடிக்கிறேன் என்கின்ற காரணத்தால், தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது கடையை விட்டு அனுப்பிய தன்முதலாளி மகனுக்கு எதிராக தீபாவளி...
ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

ஸ்கந்தா – தி அட்டாக்கர் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைப்பு வைப்பது ஒரு கலை. சிலர், தலைப்பில் கதைக் கருவைத் தொட்டுச் செல்வார்கள்; சிலர், முழுக்கதையையும் உணர்த்துவார்கள்; சிலர், சம்பந்தமே இல்லாமல் என்னத்தையாவது தலைப்பென வைப்பார்கள். படத்தின் விமர்சனத்தையே தலைப்பாக்கும் தைரியம், நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 'சிம்ஹா', 'லெஜண்ட்', 'அகண்டா' முதலிய படங்களை இயக்கிய ஆக்ஷன் இயக்குநர் போயபட்டி ஸ்ரீனுவிற்கே உண்டு. படம், பார்வையாளர்களைக் கிஞ்சித்தும் கருணையின்றிச் சாவடி அடிக்கிறது. அதை நேர்மையாகத் தலைப்பிலேயே சுட்டிக் காட்டி, நேர்மை என்றால் 'ஹமாம்' சவர்க்காரம் மட்டுமில்லை, தானும் தானென உலகிற்கு எடுத்தியம்பியுள்ளார் ஸ்ரீனு. இரண்டு வில்லன்களின் அறிமுகம் காட்டப்பட்டவுடன், ஆந்திரக் காரத்துடன் முழுச் சாப்பாடு விருந்து தயாரென நினைக்கையில், அது தொடங்குகிறது. அது என்றால் படத்தின் 'அட்டாக்' வெர்ஷன். ரெகுலராக ஜிம்முக்குப் போய் நன்றாக உடலை வளர்த்து வைத்திருக்கும் ஒரு...
கூழாங்கல் விமர்சனம்

கூழாங்கல் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வறண்ட நிலப்பகுதியில் பயணிப்பவர்கள், தண்ணீர் தாகத்தைத் தணிக்க கூழாங்கல்லை வாயில் வைத்துக் கொள்வார்கள். அத்தகையதொரு நிலப்பகுதியை வேலுவும், அவனது தந்தை கணபதியும் நடந்தே கடக்கின்றனர். பிறந்த வீட்டுக்குப் போன மனைவியை அழைத்து வர, கடன் வாங்கிப் பேருந்தில் செல்லுகிறான் குடிகாரனான கணபதி. மீண்டும் திரும்புகையில், நல்ல உக்கிரமான வெயிலில் தந்தையை நடக்க வைக்கிறான் வேலு. நடப்பது வேலுவிற்கும், கடன் வாங்கிப் பேருந்தில் வரக் குறைவான வாய்ப்பைப் பெற்ற அவனது தாயிற்கும் வழக்கமானது ஒன்றாகும். ஆனால் மாப்பிள்ளை முறுக்குடன் திரியும் கணபதிக்குப் புதுசு. தந்தையை, நடக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு துண்டு கண்ணாடியைக் கொண்டு தந்தையின் முதுகையும் சூரியக்கதிர்களால் சூடேற்றியும் விளையாடுகிறான். வத்திப்பெட்டியை ஒளித்து வைத்து பீடி பிடிக்க நினைக்கும் தந்தையைக் கோபப்படுத்துகிறான். முழுப் படமுமே அவ்விருவரின் நடைப்பயணம் மட்டு...
லைசென்ஸ் விமர்சனம்

லைசென்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அறிமுக இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “லைசென்ஸ்”.  சிறு வயது குழந்தை முதல் பல் போன பாட்டி வரை பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்படும் மோசமான சூழல் உழவும் இந்தக் காலகட்டத்தில்,  இது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயன்றிருக்கும் அந்த முயற்சியினாலும் சிறப்பான நடிப்பினாலும் கவனம் ஈர்க்கிறது “லைசென்ஸ்” திரைப்படம். பள்ளிப்பருவத்தில் இருந்தே தனக்கோ, தன் சுற்றத்தாருக்கோ நடக்கும் பாலியல் அத்துமீறல்களைத் தட்டிக் கேட்கும் துணிச்சலான பெண்ணான பாரதி,  தவறுகளைத் தட்டிக் கேட்டுத் தண்டிக்கும் பணியை விட, தவறே செய்யாத இளம் சமுதாயத்தை உருவாக்கும் ஒப்பற்ற பணி ஆசிரியர் பணி என்பதை தன் தந்தை மூலமாக உணர்ந்து, தன்னை ஒரு ஆசிரியையாக மாற்றிக் கொள்கிறார்.  மேலும் சமூகப்பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பாரதி, ...
எனக்கு End-யே கிடையாது – விமர்சனம்

எனக்கு End-யே கிடையாது – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கால் டாக்ஸி ஓட்டுநரான சேகர், ஒரு அழகான கவர்ச்சியான இளம்பெண் ஊர்வசியை நள்ளிரவு நேரத்தில் அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார்.  அங்கு அந்த இளம்பெண் சேகரை மது விருந்துக்கு அழைக்க, முன்பின் தெரியாத அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் சேகர் நுழைகிறார். அதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும், இதனால் சேகர் வாழ்க்கை என்னவானது என்பதும் தான் “எனக்கு End-யே கிடையாது திரைப்படத்தின் கதை.ஊர்வசி வருகையில் இருந்தே சூடு பிடிக்கத் துவங்கும் திரைக்கதையின் டெம்போ அடுத்து எங்குமே குறைவதே இல்லை. சேகர் ஊர்வசியின் வீட்டுக்குள் நுழைகின்ற அந்த தருணத்தில் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பது தான். நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது அப்படி அப்படியே நடப்பதால் பார்வையாளனாக நம்மால் திரைப்படத்துடன் ஒன்ற முடிகிறது.அதிலும் சேகரும் ஊர்வசியும் சேர்ந்து டகீலா அ...
இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலிக்கும் இளம் பெண்.  அதே நேரம் வரிசையாக ஒரு வழக்கோடு சம்பந்தப்பட்ட சில முக்கியப் புள்ளிகளை கடத்தி கொலை செய்து வரும் ஓர் இளம் படை. இந்த இரண்டுக்குமான தொடர்பே ”இந்தக் க்ரைம் தப்பில்ல” படத்தின் ஒன்லைன்.தேவகுமார் இயக்கத்தில்  மதுரா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகி இருக்கும் இப்படத்தில் ஆடுகளம் ‘நரேன்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவரோடு சின்னத்திரை புகழ் பாண்டி கமல்,  மேக்னா ஈழன், முத்துக்காளை மற்றும் புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.பழிவாங்கும் இளைஞர் படையை முன்னின்று நடத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.  படம் முழுவதும் காலில் அடிபட்ட நிலையில் உட்கார்ந்து கொண்டே இளைஞர்களை ஒன்று திரட்டி வழிநடத்தும் கதாபாத்திரம். கொடுத்த கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பகா செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். ...
Shot Boot Three விமர்சனம்

Shot Boot Three விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நான்கு நண்பர்கள் தொலைந்து போன தங்கள் நாயைத் தேடிச் செல்லும் சாகசங்கள் நிறைந்த பயணம் தான் shot Boot Three திரைப்படத்தின் கதை.பணக்கார அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.  தங்கள் சுக துக்கங்களோடு தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களையும் கூட பங்கு பிரித்துக் கொள்ளும் பாசக்காரப் புள்ளைகளாக இருக்கும் அவர்களுக்கு, அந்த அப்பார்ட்மெண்டின் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு இருக்கும் பூவையாரும் நல்ல நண்பன்.  தனக்கு விளையாட்டுத் துணையாக ஒரு தம்பி கூட வேண்டாம், ஒரு நாய்குட்டி போதும் என்று கோரும் தங்கள் நண்பனின் கோரிக்கையை அவன் பெற்றோர் உதாசீனப்படுத்த, நண்பர்கள் சேர்ந்து ஒரு குட்டி நாய்க்குட்டியை தங்கள் நண்பனின் பிறந்தநாள் பரிசாக கொடுக்கிறார்கள். அப்படி கிடைத்த அவர்களின் நட்பு வட்டத்திற்குள் வந்த நாய்க்குட்டி ஒரு நாள், இவர்களின் அஜாக...
சந்திரமுகி 2 விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது, ஒரு பெரிய பாம்பு  வருகிறது,  வேண்டா விருந்தாளியாக நாயகன் வருகிறார், பிறகு குடும்பத்திடம் நல்ல பெயரும் வாங்குகிறார்.  பக்கத்து வீட்டுப் பெண்ணாக அரண்மனை மீதான அலாதி ஆவலுடன் நாயகி இருக்கிறார்.  நாயகனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் மேல் காதலும் வருகிறது. சந்திரமுகி அறை ரகசியமாகத் திறக்கப்படுகிறது. சந்திரமுகி ஆவி...