Shadow

திரை விமர்சனம்

அஸ்வின்ஸ் விமர்சனம்

அஸ்வின்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த உலகில் வரக்கூடிய ஒரு பிரச்சனையை வேறு ஒரு உலகில் சென்று தீர்க்க வேண்டும். அதற்கு இந்த உலகில் உயிர்விடவேண்டும். அப்போது தான் அந்த உலகில் உயிர்பெற முடியும். இப்படியான ஒரு சூழல் நாயகன் வசந்த் ரவிக்கு வருகிறது. இது படத்தின் பின்பாதியில் வரக்கூடிய கதை. அப்போ முன்பாதி கதை? லண்டனில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அப்பால் ஒரு பாழடைந்த மேன்சன் இருக்கிறது. அந்த மேன்சனுக்குள் பல அமானுஷ்யங்களும் கண்டுபிடிக்கப் படாத பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்த மேன்சனுக்குள் செல்கிறார்கள் வசந்த் ரவி டீம். காரணம்? ஒரு பிரபலமான யூட்யூப் தளத்திற்காக. சென்றவர்களுக்கு என்னானது என்பதே முன்பாதி கதை. முதலில் சொன்ன அந்த மறு உலகக் கதையே இவர்களின் மேன்சன் பிரவேசத்தால் தான் நிகழ்கிறது. ஒரு ஸ்கிரீன...
தலைநகரம் 2 விமர்சனம்

தலைநகரம் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தலைநகரம் சென்னையை மூன்று ரெளடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மூவருக்குமே தான் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையை ஆள வேண்டும் என்பது ஆசை. இதனால் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளத் துடிக்கின்றனர். அதே நேரம் பழைய ரெளடியான ‘ரைட்டு’, ‘இந்தக் கத்தி, இரத்தம் இதெல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கி, மாலிக் பாய் (தம்பி இராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். ஆனால் காலமும் சூழலும் ரைட்டைத் தன் கையில் மீண்டும் கத்தி தூக்க வைக்க, ஒட்டு மொத்த சென்னையும் அவன் கட்டுப்பாட்டில் வருகிறது. அது எப்படி என்பதைச் சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறது தலைநகரம் 2. படத்தின் மிகப் பெரிய பலமே அந்த மூன்று ரெளடிகளும், அவர்களின் பின்கதையும் தான். நஞ்சப்பா, வம்சி, மாறன் என மூன்று ரெளடிகள். இந்த மூன்று ரெளடிகளுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திர வடிவமைப்பு. நஞ்சப்பா 5 - 6 இளம் ரெளடிகளை வைத்துக் கொண்டு தொழில்...
அழகிய கண்ணே விமர்சனம்

அழகிய கண்ணே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு படம் எதைப் பற்றி பேச வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் சுவாரசியமான சவாலைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது இந்த ‘அழகிய கண்ணே’ திரைப்படம். படத்தின் ஆரம்பக் காட்சியில் நாயகனை ஏரி அருகே இருக்கும் ஒரு இடத்தில் வைத்து எரிக்கப் பார்க்கும் போது, இது ஓர் அதிரடி திரைப்படம் போல என்று தோன்றியது. முதல் பாடல் கருத்தாக ஒலிக்கும் போது, சரி இது சமூக கருத்துள்ள படம் போல என்று தோன்றியது. எதிர் வீட்டு அய்யர் பொண்ணுக்கு டிராமாவிற்கு கதை எழுதிக் கொடுத்து கரெக்ட் செய்து காதலிக்க தொடங்கியவுடன் சரி இது காதல் கதைதான் என்று தீர்மானித்திற்குத் தள்ளியது படம். இடையில், அறிமுக நாயகன் லியோ சிவகுமார் இயக்குநர்களுக்கு கடிதமாக எழுதித் தள்ளி இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகப் போகிறேன் என்று சென்னை கிளம்புகிறான். லியோ சிவகுமார், திண்டுக்கல் லியோனியின் மகனாவார். நாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். அங்குப் போனது...
தண்டட்டி விமர்சனம்

தண்டட்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை. இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி. 57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தில்...
தி பிளாஷ் விமர்சனம்

தி பிளாஷ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
டிசி (DC) என்றால் டார்க் காமிக்ஸ் என்றொரு பொதுவான அபிப்ராயம் உலகளாவில் நிலவியது. வொண்டர் வுமன் (2017), அக்வா மேன் (2018), ஷசாம் (2018) முதலிய படங்களின் மூலம் தங்களுக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் போல் கலகலப்பான கொண்டாட்டத்தை அளிக்கக்கூடிய படம் எடுக்க முடியும் என நிரூபித்தனர். ‘தி பிளாஷ்’ படமும் அத்தகைய கொண்டாட்டத்திற்கு உறுதியளிக்கிறது. பேரி ஆலன், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் தனது சக்தியைப் பயன்படுத்தி கடந்த காலத்திற்குள் செல்லமுடியுமென தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். கடந்த காலத்திற்குள் சென்று, தனது தாயின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் பேரி ஆலன். ‘அது நடைமுறை சாத்தியமில்லா ஒன்று’ என பேட் மேன் எச்சரித்தும், ஸ்பீட் ஃபோர்ஸ் மூலமாகக் கடந்த காலத்திற்குள் விபரீதப் பயணத்தை மேற்கொள்கிறார் பேரி ஆலன். கடந்த காலத்தை மாற்றிவிட்டு, நிகழ்காலத்திற்கு வரும் வேளையில், ஸ்பீட் ஃபோர்ஸ்க்குள் நுழையும் ...
பொம்மை விமர்சனம்

பொம்மை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
Mannequin (1987) என்ற ஆங்கிலப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை. ஒரு நிறுவனத்தில் பொம்மை செய்யும் கலைஞராக வேலை செய்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அவர் வடித்தெடுக்கும் பொம்மையில் தன் காதலி பிரியா பவானி சங்கரைப் பார்க்கிறார். அந்தப் பொம்மை உயிர் பெற்று வந்து எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசுகிறது. தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பொம்மைக்காகக் கொலையும் செய்கிறார். அந்தக் கொலைக்கான விசாரணை ஒருபுறம் நடக்க, பொம்மையைத் தன்னோடு வைத்துக் கொள்ள எஸ்.ஜே. சூர்யா போராட, எப்படியான முடிவு அமைந்தது என்பதே படத்தின் கதை. எஸ்.ஜே. சூர்யா நல்ல நடிகர் என்பதைப் பல படங்களில் நிறுவியிருக்கிறார். அதே போல் கொஞ்சம் ஓவராக நடிப்பார் என்பதையும் சில படங்களில் நிறுவியிருக்கிறார். அந்தச் சில படங்களில் ஒன்றாக இந்தப் படமும் அமைந்தது ரசிகனின் துரதிர்...
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்ட அதிநவீன ரோபாட்ஸ்க்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (உருமாறிகள்) எனப் பெயர். வாகனங்களாக உருவெடுக்கும் உருமாறிகளுக்குப் பெயர் ஆட்டோபாட்ஸ். இந்தப் படத்தொடரின், நாயகர்கள் இந்த ஆட்டோபாட்ஸே! இந்தப் பாகத்தில், உலகைக் காக்க ஆட்டோபாட்ஸ்களுடன் இணையும் புது உருமாறிகளாக மேக்ஸிமல்ஸ் அறிமுகமாகின்றனர். கொரில்லா, புலி, பறவை போன்ற மிருகங்களாக மாறும் ரோபாட்கள் அவை. கிரகங்களை உண்டு கொழிக்கும் இருள் கடவுளான யுனிக்ரான், மேக்ஸிமல்ஸின் கிரகத்தை அழித்து உண்கிறது. யுனிக்ரான் கையில், ‘ட்ரான்ஸ்வார்ப்’ எனும் நவீன தொழில்நுட்பத் திறவுகோல் கிடைக்கக் கூடாதென மேக்ஸிமல்ஸ் அதை எடுத்துக் கொண்டு மறைகின்றனர். ட்ரான்ஸ்வார்ப் கிடைத்தால், காலத்தையும் தூரத்தையும் வளைத்து, பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுதும் வேண்டுமானாலும் செல்லக்கூடும். மேக்ஸிமல்ஸ், ட்ரான்ஸ்வார்பைப் பூமியில் கொண்டு ...
போர் தொழில் விமர்சனம்

போர் தொழில் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
யூகித்தறிய முடியாத கொலைக் குற்றங்களைத் துப்பறியும் இரு காவலர்களின் கதை. காவலர் வேலை என்பது போர்த் தொழிலுக்கு நிகரானது. வேலைக்கான அவார்டும் ரிவார்டும் நம் எதிரிலேயே அடுத்தவங்களுக்குச் செல்லும் சூழலும் காவல்துறை பணியில் உண்டு. இவற்றை எல்லாம் உள்வாங்கியும், ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ எனப் பணியாற்றும் கம்பீர அதிகாரி சரத்குமார். அவருடன் வேலை பழகும் வேட்கையுடன் வந்து இணைகிறார் அசோக் செல்வன். இந்நிலையில் திருச்சியில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகளுக்கான காரணி என்ன, கொலைகளை நிகழ்த்திய கர்த்தா யார் என சரத் - அசோக் செல்வன் கூட்டணி நூல் பிடித்துக் கண்டுபிடிப்பதே படத்தின் முழுக்கதையும். நாடி நரம்பெல்லாம் க்ரைம் டிப்பார்ட்மென்ட் காவல் அதிகாரி மேனரிசம் ஊறிப்போன ஒருவரால் தான் இப்படி நடிப்பில் அசரடிக்க முடியும். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சரத்குமார்....
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“என் படத்துல, ஒண்ணு, நாயகன் கத்திப் பேசணும். இல்லன்னா, கத்தியால பேசணும்.” - இயக்குநர் முத்தையாநீதி, நேர்மை, நியாயம். அதற்காக அடி, வெட்டு, குத்து என களத்தில் இறங்கி வெளுக்கிறார் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். நீதி, நேர்மைக்காக அடிக்கிறார் எனப் பார்த்தால், ரிஷி ரித்விக்கை அடித்துவிட்டு அவரது கூலிங் கிளாஸை எடுத்துக் கொள்கிறார். ‘என்னய்யா உன் நியாயம்?’ என யோசித்தால், ‘என்னை அடிச்சுட்டான்’ என ரிஷி ரித்விக்கும் அவரது அப்பாவை மறுபடியும் சண்டைக்கு அழைத்து வருகிறார். 'என்னங்கடா இது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!' என பார்வையாளர்கள் நெற்றியைச் சுருக்க, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமோ அவரையும் சீரியசாகப் போட்டு வெளுக்கிறார். அவர் ஃப்ரேமில் சண்டை செய்து கொண்டேயிருக்க, படத்தில் மூன்று மூத்த வில்லன்கள், அவர்களது வாரிசுகளாக ஏழு இளைய வில்லன்கள். தமிழ்ச்செல்விக்கு 100 ஏக்கர் நிலமும், 6 பெரிய வீடு...
ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதிரை வ...
ஏலியன்ஸ் 2042 விமர்சனம்

ஏலியன்ஸ் 2042 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பூமியைத் தாக்கி, அழித்து, தண்ணீரை உறிஞ்சும் ஆக்ரோஷமான பவர் ஃபுல்லான வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது சீனப்படை. எத்தனை வருடம்தான் அமெரிக்கர்களே உலகைக் காப்பாற்றுவார்கள்? ‘ஏலியன்’ எனும் படத்தை 1979இல் ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். அதன் அடுத்த பாகத்தை, அவதார் படப்புகழ் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1986 இல் ‘ஏலியன்ஸ்’ என்ற படத்தை எடுத்திருந்தார். ‘ஏலியன்ஸ் 3 (1992)’, ‘ஏலியன் ரீசரக்ஷன் (1997)’, ‘ப்ரோமிதியஸ் (2012)’, ‘ஏலியன் கோவெனன்ட் (2017)’ என படங்கள் வந்தன. அதில்லாமல், ‘ஏலியன் Vs பிரிடேட்டேர் (2004)’, ‘ஏலியன்ஸ் Vs பிரிடேட்டேர்: ரெக்வியம் (2007)’ என ஏலியன்ஸ்களை முன்னிலைப்படுத்தி மேலும் ஒரு தொடர் உருவானது. நானூறு கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். எத்தனை முறை சுட்டாலும், இறக்காதவைகள். மூளையே தலையாக, அதில் ஏகத்திற்குக் கண்களும், வாயும் உடைய வினோதமான ஜந்துக்களாய...
தீராக்காதல் விமர்சனம்

தீராக்காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரிந்த காதல் என்பது ஒருவழிப்பாதை. அதில் திரும்ப முடியாது. அப்படியே முடிந்தாலும், ‘திரும்பக் கூடாது’ என்பதைப் பேசுகிறது தீராக்காதல் திரைப்படம். கொஞ்சம் விட்டுவிட்டு என்றாலும், இன்ப நிழலாடும் வீட்டிற்குள் திடீரென புயல் அடித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புயலைச் சந்திக்கிறார் நாயகன் ஜெய். மனைவி ஷிவதா, மகள் ஆர்த்தி, நல்ல மரியாதையும் சம்பளமும் உள்ள வேலை என நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜெய். அலுவலக வேலையாக ஒருமுறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மண வாழ்வுப் பிரச்சனைகளை ஜெய்யிடம் சொல்கிறார். அதன் பிறகு அவர்களின் உறவு எந்த அளவிற்கு வளர்கிறது, அதன் பின் இருவர் வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன எனப் பயணிக்கிறது படம். கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியாக ரசிகனுக்குக் கதையை உணர்த்த வேண்டிய பொறுப்...
ஃபாஸ்ட் X விமர்சனம்

ஃபாஸ்ட் X விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
“குடும்பம் தான் எல்லாம்” எனும் இப்படத் தொடரில் வரும் வசனங்கள், மற்ற படங்களில் வரும் பாத்திரங்கள் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தும் அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தந்தையின் மரணத்திற்காகப் பழிவாங்க நினைக்கும் வில்லன் டான்டே, ‘உனக்குக் குடும்பம்தானே எல்லாம்!’ என டொமினிக்கின் குடும்பத்தை நிர்மூலமாக்கத் திட்டங்கள் தீட்டுகிறார். அதற்காக ஒரு சதித்திட்டத்தைத் தீட்டி, ஏஜென்சி உதவி கேட்பதாக நம்ப வைத்து, ரோமில் நடக்கும் வெடி விபத்துக்கு டொமினிக்கின் குழுவைப் பொறுப்பாளியாக்கி விடுகிறார் டான்டே. ஏஜென்சி, டொமினிக்கையும் அவரது குழுவையும் கைது செய்ய உலகம் முழுக்கத் தேட, டான்டேவைத் தேடிச் செல்கிறார் டொமினிக். டான்டேவிற்கு, டொமினிக்கின் மகன் லிட்டில் B இருக்கும் இடம் தெரிந்துவிட, அச்சிறுவனைக் கொல்ல விரைகிறார் டான்டே. டொமினிக்கால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. படம் முழுக...
யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
'உலகிலுள்ள எல்லா ஊரும் நமது ஊரே; வையத்திலுள்ள அனைத்து மக்களும் நம் உறவினரே!' என்ற ஒப்பற்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பிய கணியன் பூங்குன்றனாரின் மிகப் பிரபலமான புறநானூற்றுச் செய்யுளின் முதல் வரியைத் தலைப்பாக்கி, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர் படக்குழு.  இலங்கையில் இருந்தால் சில்லுகளின் (குண்டுகள்) வெடிப்பால் எந்நேரமும் இறக்கலாம் என அஞ்சி நடிகர் ராஜேஷ் சிறுவனாக இருக்கும் விஜய்சேதுபதியை லண்டன் அனுப்புகிறார். செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அகப்படுகிறான் சிறுவன். அந்தச் சிறுவன், விஜய் சேதுபதியாக வளர்ந்து கொடைக்கானலில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்கிறார். தனது அடையாளத்தை மறைக்கிறார். இன்னொரு புறம் மகிழ் திருமேனி விஜய்சேதுபதியைக் கொல்ல வேண்டும் என அலைகிறார். இப்படி அலைபாயும் கதையின் இலக்கு என்ன என்பதை...
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன்  ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவ...