Shadow

திரை விமர்சனம்

குஷீ விமர்சனம்

குஷீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு ஏற்கனவே தமிழில் ஹிட்டடித்த ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு.  படத்தின் ட்ரைலரில் வரும் ஒரு வசனம்  மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா எனும் தமிழ் திரைப்படத்தை நினைவு கூறும் வசனம்,  படத்தின் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது,  படத்தின் இயக்குநர் சிவ நிர்வானா ஒரு தீவிரமான மணிரத்னத்தின் ரசிகர் என்று கூறி, அதனால் படத்தில் அவரின் பாதிப்புகள் இருக்கும் என்று கூறினார். இருக்கலாம். தவறில்லை.  அதற்காக அவரின் படத்தையே திருப்பி எடுத்தால் எப்படி..? படத்தின் முதல்பாதி பம்பாயின் சாயல் என்றால் இரண்டாம் பாதி முழுக்க அலைபாயுதேவின் அலை வீசுகிறது.  இருப்பினும் ஷாலினி இடத்தில் சமந்தாவைப் வைத்துப் பார்க்கும் போது மனம் அலைபாயத்தான் செய்கிறது.  மேலும் துறுதுறுப்புக்கும் வசீகரத்திற்கும் பேர் போன மாதவனை ஈடு செய்யும் விதமாக அங்கு விஜய் தேவரகொண்டா நிற்கும் போது,  சிவ நிர்வான...
பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...
King of Kotha விமர்சனம்

King of Kotha விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறாம் (1996) காலகட்டத்தில் கோதா என்னும் ஊரைத் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைக்கும் சில கூட்டங்களுக்கு இடையேயான யுத்தமும், ஒட்டு மொத்த கூட்டத்தையும் துடைத்துத் தூக்கிப் போட நினைக்கும் காக்கிச் சட்டைகளின் காய் நகர்த்துதலுக்கும் இடையேயான அன்பும் நட்பும் காதலும் ஏமாற்றமும் துரோகமும் வயோதிகமும் இரத்தமும், இதனோடு பெண்களின் அரசியலையும் உள்ளடக்கியது தான் ‘கிங் ஆஃப் கோதா’வின் கதை. கோதா என்னும் ஊர் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதான கார்ட்டூன் கதை சொல்லலுடன் தொடங்கும் கதை, அந்த ஊருக்குப் புதிதாக வந்து சேரும் உதவி ஆணையரின் பார்வையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் யார் என்று ஆய்வாளர் மூலம் விளக்கப்படும் காட்சிகளின் மூலம் பெரும் கதையாக விரிகின்றது. ‘கண்ணன் பாய்’ என்கின்ற ஒருவனின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும் ஊர், போதைக் கலாச்சாரத்தில் தள்ளாடு...
அடியே விமர்சனம்

அடியே விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பள்ளிக்காலத்தில் தன்னோடு பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்ல எத்தனிக்கும் நாயகனின் வாழ்க்கை எதிர்பாராத விதமாக திசை மாறிப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து விரக்தியின் உச்சத்தில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணியும் தருணத்தில் நாயகி இன்னும் தன் நினைவுகளோடு இருப்பது தெரிய வர, தான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருப்பதாக நினைக்கும் நாயகன், நாயகியைச் சந்தித்து தன் காதலை சொல்ல முனைகிறான். அதற்கு இடையில் நடக்கும் குழப்பங்களை மீறி நாயகனின் காதல் வெற்றி பெற்றதா என்கின்ற கேள்விக்கான விடை தான் திரைப்படத்தின் கதை. கதையாகப் பார்க்கும் போது, வெகு சாதாரணமான, காதலும், காதல் கைகூடுமா என்கின்ற கேள்வியையும் தவிர்த்து ஒன்றுமே இல்லாத கதையாகத் தோற்றமளிக்கும் ‘அடியே’, அதன் திரைக்கதையினால் வித்தியாசப்படுகிறது. ‘டைம் டிராவல்’ கதைகள் நமக்கு சற்றே பரிச்சயமான கதைகள் தான். அந்த டைம் டிராவல் கதைக்குள் “மல்டி வெர்ஸ்” அதாவ...
“குஷி – முகத்தில் புன்னகையும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்” – விஜய் தேவரகொண்டா

“குஷி – முகத்தில் புன்னகையும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்” – விஜய் தேவரகொண்டா

சினிமா, திரை விமர்சனம்
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம், செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தth திரைப்படத்தை இயக்குநர் சிவ நிர்வானா இயக்கியுள்ளார். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இப்படத்தினைத் தமிழில் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என்.வி. பிரசாத்தும், மலையாளத்தில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான முகேஷ் ஆர். மேத்தாவும் வெளியிடுகின்றனர். இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்...
Broken Script விமர்சனம்

Broken Script விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜோ ஜியோவானி சன்ஜித் சிங் தமிழ் பேசத் தெரியாத ஒரு வெளிநாட்டு  நபர். இவர் ஒரு திரைப்படம் அதுவும் தமிழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.  தானே தயாரிக்கவும் தயாராக இருக்கிறார். இவரை நெருங்கும் ஒருவர் நான் தமிழில் உங்களுக்கு ஒரு படம் இயக்கிக் கொடுக்கிறேன் என்று சொல்ல, படப்பிடிப்பும் துவங்குகிறது. படம் பாதிக்கு மேல் முடிவடைந்த பின்னர் தான் ஜியோவானி சன்ஜித் சிங் ஒரு விசயத்தை உணர்கிறார்.  அவர்கள் எடுத்துக் கொண்டு இருப்பது ஒரு ஹாலிவுட் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்று. உடனே அந்த இயக்குநரை அடித்து விரட்டிவிட்டு, படத்தை அப்படியே கிடப்பில் போடுகிறார். சில வருடங்கள் செல்கின்றது. அந்தப் படத்தை அப்படியே போட மனமில்லாமல் எடுத்த படத்துணுக்குகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரே புதிதாக கதை எழுதி இயக்கத் துவங்குகிறார்.  இத்தனைக்கும் அவருக்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கூட முழுதாகத் தெரியாது. ஆன...
3.6.9 விமர்சனம்

3.6.9 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவிலேயே சிறந்த புகழ்பெற்ற திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நடிப்பில் சிவ் மாதவ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் 3.6.9.அதிகாலை வேளையில் ஒரு திருச்சபையில் காலை நேர பூஜைக்காக பாதிரியாரும் அவரின் உதவியாளர்களும் தயாராகிக் கொண்டு இருக்க, மக்களும் கூட்டம் கூட்டமாக வரத் துவங்க, பூஜை துவங்கிய சில நிமிடங்களில் ஒட்டு மொத்த திருச்சபையையும் கைகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் ஒரு கூட்டம் முற்றுகையிட்டு அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.  அந்த கூட்டத்தின் தேவை என்ன…? அது அவர்களுக்கு கிடைத்ததா இல்லையா..?  அந்தக் கூட்டத்திடம் இருந்து பொதுமக்கள் தப்பித்தார்களா..? இல்லையா..? என்பதே இப்படத்தின் ஒற்றை வரிக் கதை.இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது வெறும் 81 நிமிடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட திரைப்படம், தணிக்கைக் குழுவும் படப்பிடிப்...
வான் மூன்று விமர்சனம்

வான் மூன்று விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வான் மூன்று. கவித்துவமான தலைப்பு. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது.  காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு யுவன் யுவதி பார்க்கும் ஒரு வானம்,  40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த இணை பார்க்கும் இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து தங்கள் இளமையை இனிப்போடு களிக்க விரும்பிய இணைக்கு குழந்தை வந்துவிட்டதோ என்று பயம், பரிசோதிக்க வந்த இடத்தில் மூளை பாதிப்பு என்று தெரிந்து பயம் கூட, இவர்கள் பார்ப்பது மூன்றாம் வானம்.இவை படத்தின் ஆரம்பக் காட்சிகள். இந்த முதல் பத்தியை படிக்கும் போதே அடுத்த என்ன நடந்திருக்கும் என்று கணித்திருப்பீர்கள்.  படத்தின் முத...
சான்றிதழ் விமர்சனம்

சான்றிதழ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் கருவறை கிராமத்திற்கு சிறந்த கிராமத்திற்கான மத்திய அரசின் விருது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட, ஊர்மக்கள் அந்த விருதை ஜனாதிபதியே இங்கு வந்து தங்களுக்கு வழங்கவேண்டும், இல்லையென்றால் விருதைப் புறக்கணிப்போம் என்று கூறுகின்றனர். அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த மந்திரி காரணமே இல்லாமல், ‘என்னையே எதிர்க்கிறீர்களா? இருங்க உங்களைப் பழிவாங்குகிறேன்’ என்று வெளியேறி எந்த ஆணியையும் புடுங்காமல் இருக்க, காரணமேயில்லாமல் அவரின் கரை வேஷ்டி பிடுங்கப்பட, காரணமேயில்லாமல் கண்டக் கண்ட கதாபாத்திரங்கள் எல்லாம் கதைக்குள் வர, காரணமேயில்லாமல் ஜனாதிபதி கொடுக்கவேண்டிய விருதை கவர்னர் கிராமத்திற்கே வந்து கொடுத்துவிட்டுப் போவதோடு முதல்பாதி முடிவடைய, காரணமேயில்லாமல் இரண்டாம் பாதி முழுக்க தறுதலை கிராமம் எப்படி கருவறை கிராமமாக மாறியது என்பத...
டைனோசர்ஸ் விமர்சனம்

டைனோசர்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் பெயரைப் போலவே படக்கதையும் மிகப் பெரியது. ஒரு வரிக்குள் இதன் கதையை அடக்கவே முடியாது. டைனோசர்ஸ் எப்படி ஒரு புரியாத புதிரோ அப்படித்தான் டைனோசர்ஸ் (Die No Sirs) படத்தின் கதையும். நாயகன் மண்ணு-விற்கு ஒரு கதை, துரைக்கு ஒரு கதை, சாலயார்-க்கு ஒரு கதை, கிளியப்பனுக்கு ஒரு கதை, நாயகன் மண்ணுவின் அண்ணனுக்கு ஒரு கதை, நாயகி தீபாவுக்கு ஒரு கதை, மத்தியச் சிறையில் இருந்து வெளியான கைதிக்கு ஒரு கதை, இது போதாதென்று மண்ணு-வின் அப்பா, அம்மா, சாலயார், கிளியப்பன் இவர்களுக்கு ஒரு கதை. இந்தக் கதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டவே இல்லை என்பது தனிக்கதை. கிளியப்பன், சாலயார் என இரண்டு குழுவிற்கும் பகை. இதிலெல்லாம் தலையிடாமல் நாயகன் மண்ணு, அவன் அண்ணன் பழனி, அவர்களின் அம்மா மூவரும் வாழ்கிறார்கள். பழனியின் நெருக்கமான நண்பன் துரை சாலயாரின் கையாள். கல்யாணம் ஆகி பத்தே நாளில் கொலை வழக்கில் ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய சூழல் வர,...
எக்கோ விமர்சனம்

எக்கோ விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நம்மிலிருந்து புறப்படும் ஒலிகள் சில நேரம் சென்று தேங்கவோ, பதுங்கவோ, கரைந்து போகவோ வழியின்றி வெற்றிடத்தில் பட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வரும். அந்த எதிரொலியை ஆங்கிலத்தில் எக்கோ என்கிறோம். முதல் வாக்கியத்தில் இருக்கும் ஒலிகள் என்கின்ற வார்த்தையை எடுத்துவிட்டு வினைகள் என்று வார்த்தையை நிரப்பி அதே வாக்கியத்தை மீண்டும் ஒரு முறை படித்தால் அது தான் இந்த எக்கோ படத்தின் ஒன்லைன். புதுமணத் தம்பதியாக தங்கள் மணவாழ்க்கையைத் துவங்கவிருக்கும் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி இணைக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்ரீகாந்திற்கு விசித்திரமான சத்தங்கள் காதைக் கிழிப்பது போல் கேட்கத் துவங்குகிறது. அது போல் துணி தொங்கும் இடத்தில் நகக்கீறல்கள், கால் பாதத்தில் படிந்து அடுத்த நொடி காணாமல் போன இரத்தம், திரைச்சீலை அவரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்வது போன்ற பல அசம்பாவிதங்கள் நடக்க, அவரின் வேலைத் திறன் பாதிக்கப்படுகிறது....
கொலை விமர்சனம்

கொலை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை. இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே அது உருவாக்கப்பட்ட விதத்திலும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒளிக் கீற்றுகள், வண்ணங்கள் ஆகியவற்றின் பலத்தினாலும் இந்திய வரைவியலுக்கு உட்பட்ட கதைக்களமான நிலத்தை ஹாலிவுட் காட்சியமைப்போடு காட்டி மிரட்டியதற்காக வெகுவாக பாராட்டும் வரவேற்பும் பெற்றது. அது போல் தான் கொலை திரைப்படமும். படத்தின் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சி பிம்பங்கள் மட்டுமன்றி ஒட...
பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

பாபா பிளாக் ஷீப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
புட் சட்னி யூ-டியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகனும், ப்ளாக் ஷீப் யூ-டியூப் சேனல் குழுவினர் மொத்த பேரும் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருப்பதாலோ என்னவோ மொத்த படமும் ஒரு யூ-டியூப் வீடியோ பார்க்கும் உணர்வையே ஏற்படுத்துகிறது. இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். மாணவர்கள் தற்கொலை எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ளக்கூடாது. எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பது தான் பத்தின்ட கரு. ஆனால் இந்தக் கருத்தை சொல்வதற்கான கதையோ, திரைக்கதையோ படத்தில் இருக்கிறதா என்றால் சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். 2k கிட்ஸ்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே படம் எடுத்தது போல் இருக்கிறது. அவர்களுக்கு அட்வைஸ் என்றால் பிடிக்காது, சீரியஸ்னஸ் என்றால் ஆகவே ஆகாது, செண்டிமென்ட் என்றால் கிரிஞ்ச் என்பார்கள். அவர்களுக்கு ஜாலியாக இருப்பது மட்டுமே பிடிக்கும். ஆனாலும் அவர்கள் மிகுந்த பொறுப்பு...
மாவீரன் விமர்சனம்

மாவீரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மண்டேலா என்னும் மகத்தான க்ளாசிக் திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படம். டான், ப்ரின்ஸ் என தரை லோக்கல் அளவிற்கு காக்டெயில் கமர்ஷியல் கொடுக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என இவர்கள் இருவரின் இணைவையும் ஒட்டு மொத்த திரையுலகு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ்நாடே உற்றுப் பார்த்தது. படம் மாஸாக வருமா, க்ளாஸாக வருமா என இப்படி ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்தான் மாவீரன். ட்ரெய்லரைப் பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படமாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் இது ஒரு சூப்பர் ஹீரோ வகைத் திரைப்படம் இல்லை. ஏனென்றால் சூப்பர் ஹீரோ செய்யும் எந்தவொரு செயலையும் மாவீரன் செய்வதில்லை. நம்மூர் ஹீரோக்கள் செய்யும் வேலையைத் தான் செய்கிறார். ஏதோ குரல் கேட்கிறது குரல் கேட்கிறது என்று டிரைலரில் வருவதை வைத்துப் பார்த்தால் ஒரு வேளை உளவியல் சம்பந்தமான திரைப்படமாக இருக்குமோ என்...
இன்சிடியஸ்: தி ரெட் டோர் விமர்சனம்

இன்சிடியஸ்: தி ரெட் டோர் விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம். இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. ஐந்தாவது பாகமான இப்படம், 2011 இலும், 2013 இலும் வெளிவந்த முதலிரண்டு படங்களின் தொடர்ச்சியாகும். டால்டன் லாம்பேர்ட் எனும் சிறுவனுக்கு இயற்கையாகவே தன் ஸ்தூல உடலில் (Physical body) இருந்து சூட்சும உடலைப் (Astral body) பிரித்து, சூட்சுமப் பயணம் (Astral projection) வல்லமை இருக்கும். அப்படி அவன் தனது 10 ஆவது வயதில் சூட்சுமப் பயணம் மேற்கொள்ளும் பொழுது, சிவப்புக் கதவின் பின்னாலிருக்கும் தீய ஆவிகள் நிரம்பிய The Further எனும் இருண்மை வெளியில் சிக்கிக் கொள்கிறான் டால்டன். அவனது ஸ்தூல உடலைத் தீய சக்திகள் ஆக்கிரமிக்க முயல்கின்றனர். முதல் பாகத்தில், கோமாவில் இருக்கும் டால்டனுக்காக அவனது தந்தை ஜோஷ் லாம்பேர்ட் சூட்சுமப் பயணம் மேற்கொண்டு, இருண்மை வெளியி...