Shadow

திரை விமர்சனம்

சித்தா விமர்சனம்

சித்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறு குழந்தைகள் கைகளில் போன் கொடுப்பதும், அவர்கள் போனில் இருக்கும் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதை பதைபதைப்புடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பேசி இருக்கிறது “சித்தா”  திரைப்படம்.  சித்தப்பா என்பதை சுருக்கி “சித்தா, சித்தா” என்று கூப்பிடுவதையே  படத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றனர்.அண்ணன் மறைவுக்குப் பின்னர் தன் அண்ணி மற்றும் அவர்களின் 8 வயது குழந்தையுடன் வாழும் ஈஸ்வரனாகிய சித்தார்த்தின் வாழ்க்கை இயல்பான மகிழ்ச்சியுடன் செல்கிறது. சிறுவயதில் தொலைத்த காதலியும் கூட எதிர்பாராவிதமாக மீண்டும் சித்தார்த் வாழ்க்கையில் வந்து ஐக்கியம் ஆகிறாள்.  சித்தார்த்திற்கு தன் அண்ணன் மகள் ஈஸ்வரி என்றால் உயிர்.  அது போல் சித்தார்த்தின் பள்ளிகாலத் தோழன் வடிவேலுவுக்கு அவனின் அக்கா மகள் வைஷ்ணவி என்றால் உயிர். இவர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல் மகிழ்ச்சியாக வாழ்...
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
”காதல் ஒரு கடலு மாறி டா” என்றார் நம்மவர் கமல்ஹாசன். உண்மைதான். கடலின் பிரம்மாண்டமும், ஆழமும், அதனுள் அமிழ்ந்திருக்கும் ஜீவராசிகளும் நம் கண்களுக்கு மாத்திரமல்ல, நம் மனதிற்கும் அறிவிற்கும் கற்பனைக்குமே அப்பாற்ப்பட்டவை. அப்படித்தான் காதலும்.  எவருக்கு, எவரின் மேல், எதற்கு, எப்படி, எப்பொழுது இப்படி எந்தவொரு கேள்விக்குமே விடை கூற முடியாத கடலுக்கு இணையான பிரம்மாண்டமும், ஆழமும், விநோதமும் கொண்ட புரியாத புதிர் தான் “காதல்”.  அப்படி ஒரு இயல்புக்கு மீறிய,  சொல்வதற்கே இன்றும் மக்கள் கூச்சப்படும், இதுவரை ஓரிரு படங்களைத் தவிர்த்து பெரும்பாலான படங்களில் யாரும் பேச முன்வராத ஒரு காதலை, ஒரு அன்பை, காமத்தின் மற்றொரு வடிவத்தை துணிச்சலாகப் பேசி இருக்கும் திரைப்படம் தான் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே”.நடிகை நீலிமா ராணியும் அவர் கணவர் இசையும் இணைந்து, இசை பிக்சர்ஸ் சார்பாக Shortflix OTT தளத்திற்காக தயாரித்த...
ஐமா விமர்சனம்

ஐமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாயகியும்,  தன் அம்மாவின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து சென்ற நாயகனும் ஒரே நேரத்தில் கடத்தப்படுகிறார்கள்.  கடத்தியவர்கள் யார்..? என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பதே “ஐமா” திரைப்படத்தின் கதை.கடத்தப்படும் நாயகன் நாயகி இருவருக்குமான முன்கதை கதைக்கு தேவை இல்லை என்றாலும் கூட, மிகுந்த நாடகத்தன்மையோடு இருப்பது மிகப்பெரிய குறை. மேலும் கடத்தப்பட்ட இருவரும் தப்பிக்க்கும் படியே எல்லாம் செட் செய்து வைத்துவிட்டு, அவர்களை சுவாரஸ்யமே இல்லாத அந்த விளையாட்டை ஏன் விளையாடச் சொல்கிறார்கள் என்பதற்கான காரணம் திரைக்கதையில் துளி அளவும் இல்லை.  அவர்கள் மருத்துவ தேவைகளுக்காகத் தான் கடத்தப்படுகிறார்கள் என்றால், அவர்களை அடைத்து வைத்தே அந்த தேவைகளை வில்லன் டீம் அடைந்துவிட முடியுமே.. எதற்கு இப்படி ஒரு விளையாட்டு..?படத்தின் ஆரம்ப காட்சிகளில் துளி அளவு கூட...
Are you ok baby விமர்சனம்

Are you ok baby விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 ஒரு விசித்திரமான சூழலில் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் பணம் பெற்றுக் கொண்டு தத்தெடுத்து வளர்க்க விரும்பும் தம்பதிக்கு கொடுத்துவிடுகிறாள். அவளே ஒரு வருடம் கழித்து தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும்  அணுகுகிறாள்.  முடிவு என்ன ஆனது என்பதே “Are You Ok Baby” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் ஹோஸ்டிங் செய்து நடத்திய “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் போன்ற “சொல்லாததும் உண்மை” என்கின்ற நிகழ்ச்சியில் இருந்து தான் திரைப்படம் துவங்குகிறது.  அந்த நிகழ்ச்சியை திரைப்படத்திற்குள் வழங்குபவராக லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.“சொல்லாததும் உண்மை” என்கின்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒரு இளம்பெண், தன் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குழந்தையை சிலர் பணம் கொடுத்து பெற்றுக் கொண...
மார்க் ஆண்டனி விமர்சனம்

மார்க் ஆண்டனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை.ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ சென்று தன்னையே பார்க்கும்.  ஆனால் தொடர்புகளை ஏற்படுத்த முயலாது, வெறும் சம்பவங்களை மட்டும் மாற்றும். அதாவது டைம் டிராவல் செய்து வந்திருக்கும் நான், எதிர்காலத்தில் இருக்கும் என்னையோ அல்லது இறந்த காலத்தில் இருக்கும் என்னையோ பார்க்கும் போது நான் சென்று என்னுடன் பேச முற்படமாட்டேன்.  ஏனென்றால் அந்த கால டைம...
எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு விமர்சனம்

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நல்ல திரைப்படம் வந்தால், அதை அப்படியே காப்பயடிப்பது போல் மோசமான பல திரைப்படங்கள் வரும்.  அந்த வரிசையில் வந்திருக்கும் திரைப்படம் “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”.  ஒரு நல்ல கருத்தை கூட எப்படி யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாத விதத்தில் கூறுவது என்பதற்கான சமீபத்திய உதாரணமாகவும் விளங்குகிறது “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”.வெண்ணிலா கபடிக் குழு,  ஜீவா போன்ற விளையாட்டுத் தொடர்பான பட வரிசையிலும் இப்படத்தை வைத்துப் பேச முடியும். அதே போல் சம காலத்தில் போற்றுதலையும் விவாதங்களையும் கிளப்பி வரும் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களின் பட வரிசையிலும் இப்படத்தை வைத்துப் பேச இயலும். எதை முன்னிட்டு என்றால் விளையாட்டுத் துறைக்குள் இருக்கின்ற அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சாதிய வன்கொடுமைக்கு எதிரான எழுச்சி என இந்த இரண்டையும் முன்னிட்டு தான்.ஆனால் மேற்கூரிய உதாரண திரைப்படங்...
பரிவர்த்தனை விமர்சனம்

பரிவர்த்தனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்து, கல்லூரியில் தன்னோடு படித்த தன் தோழியை பார்க்க வரும் நாயகி, தன் தோழி இன்னும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருப்பதையும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருவதையும்,  அவள் வாழ்க்கையில் பள்ளி காலத்தில் நடந்த சோகக்கதையை தான் அவளின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதையும் அறிகிறாள்.  தன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் நாயகி தோழியின் வாழ்க்கைக்கும் தன் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பையும் அறிந்து அடுத்த என்ன முடிவு எடுத்தால் என்பதே பரிவர்த்தனை.மீண்டும் ஒரு பள்ளிக்கூட வயது காதலை காவியமாக்கும் முயற்சி தான் இந்த பரிவர்த்தனை. உண்மையாகவே அந்த பால்ய வயதில் தோன்றும் பள்ளிக்கூட காலத்து காதல் ஒரு காவியமாக இருக்கலாம் தான்.  ஆனால் ஒரு திரைப்படம் அந்தக் காதலை கையாள்வதற்கான முயற்சியை பயிற்சியை அந்த இளம் சிறார்களுக்கு அளிக்க வேண்டும். அதைவிடுத்து வாழ்க்கையைப் பற்றிய எந்தப் பு...
கெழப்பய விமர்சனம்

கெழப்பய விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2014ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் WILD TALES என்று ஒரு படம் வெளியானது. 6 கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆந்தாலஜி திரைப்படம்.  அப்படத்தில் ஒரு கதை ஹைவேயில் நடக்கும்,  ஹாஸ்ட்லியான கார் ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும்,  ஒரு Porter போன்ற வண்டி ஓட்டிச் செல்லும் ஒருவருக்கும் ஒருவரையொருவர் முந்திச் செல்வதில் ஏற்படும் ஈகோ அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்பதை கூறி இருப்பார்கள்.அதே கதை தான் இந்த கெழப்பய திரைப்படத்திலும்.  கிராமம் நோக்கிச் செல்லும் குறுகிய சாலையில் சைக்கிளில் செல்லும் ஒரு பெரியவர், பின்னால் வரும் மோரிஸ் ரக கார் ஒன்றுக்கு வழிவிடாமல் தொந்தரவு செய்கிறார்.  இதனால் அந்தப் பெரியவருக்கும் காரில் செல்பவர்களுக்கும் இடையே கைகலப்பு ஆகிறது. ஆனால் இங்கு அவர் வழிவிடாமல் இருப்பதற்கு காரணம் ஈகோ இல்லை.  அதை மீறிய ஒரு விசயம். அது என்ன என்பதே இந்த கெழப்பய- திரைப்படத்தின் கதை.ஒரு நல்ல சுவாரஸ்யமா...
துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

துடிக்கும் கரங்கள் – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போதைப் பொருள் தடுப்புப்  பிரிவு ஐஜியின் மகள் மர்மமான முறையில் பூட்டிய காருக்குள் சடலமாக மீட்கப்படுகிறார்.  அதே நேரம் தன் மகனைத் தேடி சென்னைக்கு வரும் வயதான முஸ்லீம் பெரியவர்(சங்கிலி முருகன்), மகனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருக்க, அவன் இருக்கும் இடம் தெரியாமல் தெருத் தெருவாக அலைகிறார். ‘கொத்து பரோட்டோ” என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தும் விமலும், சதீஷும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு உதவ எண்ணி அப்பெரியவரின் மகன் காணாமல் போனது தொடர்பான தகவலை வீடியோவாக வெளியிட்டு உதவி கேட்கின்றனர்.  இதைத் தொடர்ந்து இறந்து போன ஐ.ஜியின் மகளுக்கும் காணாமல் போன முஸ்லீம் பெரியவரின் மகனுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் என்ன ஆனார்கள் என்கின்ற கேள்விக்கான விடை தேடும் முயற்சியே “துடிக்கும் கரங்கள்”.முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக விமல் முயற்சித்திருக்கும் படம், முதல் சண்டைக் காட்சியில் ரவுண்டு கட்டி நிற்கும் ர...
அங்காரகன் விமர்சனம் :

அங்காரகன் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
மலை கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு ரெசார்ட் இயங்கி வருகிறது.  அந்த ரெசார்ட்டுக்கு தன் நண்பர்களோடு வந்து தங்கியிருக்கும் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டாள் என்று தேடத் துவங்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது.  அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அங்கு தங்கி இருப்பவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட, அவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட, அந்த ரெசார்ட்டில் இன்னொரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அங்கு நடக்க, முடிவில் என்ன ஆனது, காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்பதே அங்காரகனின் கதை.ரெசார்ட்டில் இரண்டு பெண்களோடு தங்கும் ஒரு இளைஞன்.  இந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தான் கதையின் ஆரம்பத்தில் காணாமல் போவது.  இவர்கள் சுற்றுலாவிற்கு வந்தவர்கள். ஒரு கணவன் மனைவி ஜோடி, இருவருமே அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை போக்கி...
நூடுல்ஸ் விமர்சனம் :

நூடுல்ஸ் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சாமானியனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே “நூடுல்ஸ்” திரைப்படத்தின் ஒன்லைன்.‘தில்’ ‘அய்யப்பனும் கோஷியும்’ போன்ற படங்களிலும் இந்த ஒன்லைனரை காண முடியும். படம் துவங்கும் போது ஒரு மலையாளத் திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவிற்கு யதார்த்தமான ஒரு மேக்கிங்.ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் ஒன்றின் குடியிருப்புவாசிகள் மொட்டை மாடியில் கூடி பாட்டுக்குப் பாட்டு போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எல்லா சனிக்கிழமை இரவுகளிலும் இது அவர்களின் வழமை என்பதும் தெரிய வருகிறது. விளையாட்டின் உற்சாகத்தில் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது.  இதை தொந்தரவாக நினைத்த யாரோ போலீஸில் புகார் தெரிவிக்க, கீழே அதே தெருவில் ரோந்து சென்று கொண்டிருக்கும் அந்த ...
தமிழ்க்குடிமகன் விமர்சனம்

தமிழ்க்குடிமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்குள் ஒரு பெரிய வீட்டிற்குள் சாவு விழுந்துவிடுகிறது. அந்த ஊரில் பிணத்திற்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும், குடிமகன் என்று பொதுவாக அழைக்கப்படும் சின்னச்சாமி (சேரன்) கதாபாத்திரம் தனக்கு முன்பு நேர்ந்த அவமானகரமான நிகழ்வுகளால்,  பிணத்திற்கு சடங்குகள் செய்து அடக்கம் செய்யும் வெட்டியான் பணியை விட்டுவிட்டு வேறு தொழில் செய்து பிழைத்து வருகிறான்.  ஒட்டுமொத்த ஊரும் அவனை இறந்த பெரியவருக்கு இறுதிச்சடங்கு செய்து தான் ஆக வேண்டும் என்று அவனை வற்புறுத்த,  மிரட்ட, அந்தத் தொழிலை இனி தன் வாழ்நாளில் தான் ஒரு போதும் செய்யப் போவதில்லை என்று சின்னச்சாமி திடமாக முடிவு செய்து ஒட்டு மொத்த ஊரையும் எதிர்த்து நிற்கின்றான். இதன் முடிவு என்ன ஆனது என்பதே இந்த தமிழ்க்குடிமகன் பேசும் அரசியல்.சமகால சமூக நிகழ்வுகளையும், சாதிய நிகழ்வுகளையும் அரசியல் நிகழ்வுகளையும் முன்னிட்டுப் பார்க்கும் போது தமிழ்க்குடிமகன் ஒரு தவிர...
மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நாயகி,  தன் அம்மாவின் மறைவுக்குப் பின்னர், தனக்குத் துணையாக ஒரு குழந்தை வேண்டும் என்று நினைக்கிறார்.  அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்பாமல்,  தன் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  இதற்காக  மருத்துவரை சந்தித்து விளக்கம் கேட்கும் நாயகி அங்கிருக்கும்  ஸ்பேர்ம் டோனார்கள் மீது ஏற்பட்ட திருப்தியின்மையினால் தன் வயிற்றில் உருவாகப் போகும் குழந்தைக்கு உயிர் கொடுக்கும் (ஸ்பேம் கொடுக்கும்) டோனாரை நானே தேர்வு செய்து அழைத்து வரலாமா என்று கேட்க, டாக்டரும் அதற்கு சம்மதிக்க. தனக்கான ஸ்பேம் டோனாரைத் தேடி தன் தோழியுடன் அலைகிறார்.  அப்படி நாயகியும் அவள் தோழியும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் நாயகன் ஒருகட்டத்தில் நாயகியை விரும்பத் துவங்க, சிக்கல் முளைக்கிறது.  இதற்குப் பின்னர் என்ன ஆனதே என்பதே மிஸ் ஷெட்டி மிஸ்...
ஜவான்- விமர்சனம்

ஜவான்- விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் கமர்ஸியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் இவைகளில் நாம் கேட்கக்கூடாத கேள்வி கதை என்ன என்பது.  ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான்.  நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையை தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். ஹீரோ மீண்டு வந்து பழிவாங்குவார்.  சில சமயங்களில் ஹீரோ பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார்.  இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.  உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.’தெறி’ தன் குடும்பத்தை சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’  தன் அப்பா அம்மாவை கொன்றவனை பழி வாங்கும் மகன்(கள்), “...
ரங்கோலி – விமர்சனம்

ரங்கோலி – விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
புள்ளி வைத்து கோலம் போடுவது ஒரு அழகான கலை. கோலத்தின் முதல் புள்ளி எது..? முற்றுப்புள்ளி எது என்பதை எவராலும் கண்டறிய முடியாது. ஏனென்றால் கோலத்தினை நீங்கள் எங்கும் தொடங்கலாம், எங்கும் முடிக்கலாம்.  அதன் அழகியலே ஒரு புள்ளியில் தொடங்கி ஒவ்வொரு பக்கமும் அழகாய் விரிவது தான்.  ஆனால் இந்த வரையறை பெரும்பாலும் சினிமாவிற்கு ஒத்துவராது.  ஒரு புள்ளியில் தொடங்கி பல்வேறு பக்கங்களில் விரிவதற்கான அழகியல் அல்ல சினிமா.  அது பல்வேறு கதைகளாகத் துவங்கி ஒரு புள்ளியை நோக்கி குவிதற்கான அழகியல்.  ரங்கோலி திரைப்படம் தவறவிடுவது அதைத்தான்.படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளைப் பார்த்ததும், “DON’T JUDGE THE BOOK BY ITS COVER” என்ற சொல்லாடல் நினைவிற்கு வந்தது.  அடுத்து இன்னும் சில காட்சிகள் கடந்ததும், “SOMETIMES WE HAVE TO JUDGE THE BOOK BY IT’S COVER ITSELF” என்று எண்ண வைத்தது.  ஏனென்றால்  படம் துவங்கிய சில நிமிடங்கள...