32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1274 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 37 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 37)
MUDDY திரை விமர்சனம் அயல் சினிமா

MUDDY திரை விமர்சனம்

சகதியும் சேறும் நிரம்பிய கரடுமுரடான பாதையில், விறுவிறுப்பான கார் சேஸிங் (chasing) காட்சிகளை ரசிப்பவர்களுக்கான ஆக்ஷன் திரைப்படம். மட்டி ரேஸை (mud race) மையமாகக் கொண்டு, இந்திய சினிமாவில் வந்துள்ள முதல் படமிது. பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ்  பட நிறுவனம் சார்பில், டாக்டர் பிரகபல் இயக்கியுள்ள படம் மட்டி. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் மலையாளப் படமான இது, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. […]

10/12/2021 Dinesh R
ஜெயில் விமர்சனம் சினிமா

ஜெயில் விமர்சனம்

தமிழ் சினிமாவில் 25 சிறந்த படங்களைத் தேர்வு செய்தால் அதில் வசந்தபாலனின் படம் ஒன்று நிச்சயம் இடம்பெறும். அப்படியொரு படைப்பாளி வசந்தபாலன். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ஜெயில் மீது எல்லாருக்கும் இயல்பாய் ஒரு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் தனது இப்படம் ‘நில உரிமை’யைப் பற்றிப் பேசுகிறது என மிகவும் அழுத்தமாகப் பதிந்த வண்ணம் இருந்தார். ஆனால் படம் அதை நோக்கிப் பயணிக்கிறதா என்பது கேள்விக்குறியே! வடசென்னை காவேரி நகரில் […]

10/12/2021 Dinesh R
ஆன்டி இண்டியன் விமர்சனம் சினிமா

ஆன்டி இண்டியன் விமர்சனம்

இந்துத்துவர்களைத் தவிர்த்து ஏனையோர் தேசவிரோதிகள் எனப் பொருள்பட ஹெச்.ராஜா மொழிந்த ‘ஆன்டி இண்டியன்’ என்ற கோபச் சொல்லையே தலைப்பாக்கி அசத்தியுள்ளார் ப்ளூசட்டை மாறன். அது கவன ஈர்ப்பிற்காக மட்டுமல்லாமல் கதையோடு ஒன்றி வருவது மேலும் சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் ஆகப்பெரும் பலம் என்று மார் தட்டிச் சொல்லும் அரசியல் வாதிகள், வேற்றுமைகளை வளர்த்தெடுப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதையும், மதம் மனிதனைப் பண்படுத்தும் வேலையைத் தான் செய்யச் சொல்கின்றன, ஆனால் மதத்தை வைத்துப் பிழைப்பு […]

10/12/2021 Dinesh R
மாநாடு விமர்சனம் சினிமா

மாநாடு விமர்சனம்

ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா என்பது படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. எந்தவொரு கணத்திலும் அவனுடைய கவனத்தை வேறுபக்கம் சிதறவிடாமல் தொடர்ந்து அவனைத் தன் வசம் வைத்திருப்பது. இப்போது இன்றைக்கு இந்தக் கவனத்தில் உங்கள் கவனம் சிதறாமல் உங்களால் ஒரு திரைப்படத்தைப் பார்த்து முடிக்க முடியுமா சொல்லுங்கள்? சொல்வீர்கள் என்றால் உங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிட முடியும். கடந்த பத்தாண்டுகளில் ஒரு திரைப்படம் சார்ந்த நமது பார்வை வெகுவாக மாறி […]

25/11/2021 Dinesh R
ஜெய் பீம் விமர்சனம் OTT

ஜெய் பீம் விமர்சனம்

‘ஆர்ட்டிகிள் 15’ போல் ஒரு திரைப்படம் தமிழில் வராதா என்ற ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளது ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், காண்பவர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கி வருகிறது. நம்முடன் வாழும் சக மனிதர்கள் இத்தகைய கொடுமைகளை அனுபவிக்கின்றனரா என பொதுச் சமூகத்தின் அங்கலாய்ப்பை சமூக ஊடகங்கள் எங்கும் காண முடிகிறது. படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவை கட்டியம் கூறுகின்றன. காவல்காரர்கள் எப்படி இருளர்கள் மீதும், குறவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் போட்டு, அவர்களின் […]

04/11/2021 Dinesh R
Afterlife of the party விமர்சனம் சினிமா

Afterlife of the party விமர்சனம்

தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடப் பார்ட்டிக்குச் செல்லும் கேஸி, பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வந்ததும் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். இறந்த கேஸி, சொர்க்கத்திற்கும் செல்லாமல், நரகத்திற்கும் செல்லாமல் இடைப்பட்ட ஓர் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். ஐந்து நாளில், அவளது மரணத்தில் பாதிக்கப்பட்ட அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்க்கையில் கார்டியன் ஏஞ்சலாக இருந்து உதவினால், மேலே சொர்க்கத்திற்குச் செல்லலாம். இல்லையேல் கீழே நரகத்திற்குச் செல்ல வேண்டி வருமென்று கேஸிக்குச் சொல்லப்படுகிறது. கேஸியால், எவ்விதச் சக்திகளுமற்ற கார்டியன் ஏஞ்சலாக இருந்து தன் […]

19/10/2021 Dinesh R
வினோதய சித்தம் விமர்சனம் OTT

வினோதய சித்தம் விமர்சனம்

விபத்தில் சிக்கும் பரசுராமிடம், ‘தொண்ணூறு நாட்கள் தான் நீ உயிருடன் இருக்கப் போகும் காலம்’ என காலன் ஓர் ஒப்பந்தம் போடுகிறான். சாகும் நாள் தெரிந்துவிடும் பரசுராம், தந்தையாக தன் கடமைகளை முடிக்க ஆசைப்படுகிறார். “சாகுற நாள் தெரிந்து விட்டால் வாழுற நாள் நரகமாகிவிடும்” என்றொரு வசனத்தை ‘சிவாஜி’ படத்தில் பேசியிருப்பார் ரஜினிகாந்த். அப்படி, சாகும் நாளைப் பற்றி வாய்ப்பு வழங்கப்பட்டால், அது செய்து முடிப்பதைத் துரிதப்படுத்த அளிக்கப்படும் கிரேஸ் டைம் ஆகும். அதை வரமாக்கிக் கொள்வதும், […]

14/10/2021 Dinesh R
உடன்பிறப்பே விமர்சனம் OTT

உடன்பிறப்பே விமர்சனம்

ஜோதிகாவின் 50 ஆவது படம். தனது இரண்டாவது இன்னிங்ஸில், நாயகியை மையப்படுத்தும் கதைகளாகத் தேர்வு செய்து அசத்தி வருகிறார். எல்லா வயதினருக்கும் இங்கே ஒரு வாழ்க்கையும் கதையும் உண்டு என்பதைத் தமிழ் சினிமா பொருட்படுத்துவதில்லை. நாயகனுக்கு எத்தனை வயதானாலும், நாயகியைச் சுற்றியோ, சுற்றி வர வைத்தோ காதல் செய்யும் கதாபாத்திரங்களையே ஆண் நடிகர்கள் விரும்ப, கதையின் நாயகியாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு தனக்கென்றொரு தனிப்பாதையை உருவாக்கி, அனைவருக்கும் முன்மாதிரியாக உருமாறியுள்ளார் ஜோதிகா. இவையெல்லாம், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட்டாலே […]

14/10/2021 Dinesh R
டாக்டர் விமர்சனம் சினிமா

டாக்டர் விமர்சனம்

நோயாளிகளைக் காப்பாற்ற அறுவை சிகிச்சைக்காகக் கத்தியைப் பிடிக்கும் மருத்துவர், ஒரு கடத்தல் கும்பலை எதிர்கொள்ள நேருகிறது. தன்னை வேண்டாம் என்ற நிராகரித்த பெண்ணின் வீட்டில் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது. அந்த வீட்டிற்கு சிவகார்த்திகேயன் உதவச் செல்கிறார். ஆனால் கடத்தப்பட்டிருப்பது ஒரு குழந்தை அல்ல பற்பல எனத் தெரிய வருகிறது. அவர்களை எல்லாம் சிவா எப்படி மீட்டார் என்பதுதான் படத்தின் கதை. ஸ்மார்ட்டான சிவகார்த்தியன், துளியும் அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கிறார். மறந்தும் கூட பன்ச் வசனம் […]

10/10/2021 Dinesh R
லிஃப்ட் விமர்சனம் OTT

லிஃப்ட் விமர்சனம்

விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ புகழ் கவின் நாயகனாக நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படத்தினை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார். டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அலுவலகத்தில் தனது முதல் நாள் வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் குரு பிரசாத், லிஃப்டில் மாட்டிக் கொள்கிறான். அமானுஷ்ய அச்சுறுத்தல்களுக்கு ஆளாகித் தப்பிக்க வழியின்றித் திணறிக் கொண்டிருக்கும் குரு பிரசாத்துடன், மனிதவள மேலாளரான ஹரினியும் சேர்ந்து சிக்கிக் கொள்கிறாள். இருவரையும் பாடாய்ப்படுத்தும் அமானுஷ்ய சக்தி எது, அதிலிருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. […]

02/10/2021 Dinesh R
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம் OTT

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்

யார் ஆண்டாலும் கவலையில்லாமல் வாழ கெட்டப் பய காளியால் 1978 இல் முடிந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில், யார் ஆண்டாலும் அவர்களால் ஒரு பயனும் இல்லையென்ற விரக்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். படத்தின் மையப்பகுதியாக அந்த விரக்தியே உழல்கிறது. பூச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த குன்னிமுத்து என்பவர் வளர்க்கும் காளை மாடுகளான வெள்ளையனும் கருப்பனும் காணாமல் போய் விடுகிறது. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் சலசலப்பைப் பற்றியும், அச்சலசலப்பு, மாடுகள் கிடைக்க எந்த அளவு உதவின என்பதாகப் பயணிக்கிறது படத்தின் […]

28/09/2021 Dinesh R
அனபெல் சேதுபதி விமர்சனம் OTT

அனபெல் சேதுபதி விமர்சனம்

ஒரு மிகப் பெரிய அரண்மனை. பெளர்ணமி அன்று அங்கு யாரேனும் தங்கினால், அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். அத்தகைய அரண்மனைக்குள், திருட்டைத் தொழிலாகக் கொண்ட ஓர் ஏமாற்றுக்காரக் குடும்பம் நுழைகிறது. பின் என்னாகிறது என்பதை, பேய்ப்படத்திற்கான டெம்ப்ளேட்டில் இருந்து மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார் தீபக் சுந்தர்ராஜன். இயக்குநர் சுந்தர்.சி-இன் அரண்மனை, அரண்மனை 2, ஜாக்ஸன் துரை, பெட்ரோமேக்ஸ் என தமிழில் வரிசை கட்டிக் கொண்டு, அண்மையில் வந்த பேய்ப்படங்களின் வரிசையே மிக நீளம். பார்த்துப் பழகி அலுத்துவிட்ட ஒரு ஜானரில், […]

19/09/2021 Dinesh R
துக்ளக் தர்பார் விமர்சனம் OTT

துக்ளக் தர்பார் விமர்சனம்

அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை. கவுன்சிலர் […]

12/09/2021 Dinesh R
டிக்கிலோனா விமர்சனம் சினிமா

டிக்கிலோனா விமர்சனம்

ஓர் அம்பாஸிடர் கார் டிக்கியில் இருந்து படம் தொடங்குகிறது. ஷங்கரின் ‘ஜென்டில் மேன்’ உலகத்திற்கு அளித்த indoor game களில் ஒன்று ‘டிக்கிலோனா’. இந்தப் படமும், சில விளையாட்டுகளை (!?) அடிப்படையாகக் கொண்டதே என்பதால் இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என படக்குழு தீர்மானித்திருக்கலாம். ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா; நயன்தாராக்கு த்ரிஷாவே மேல்’ என்பது தான் படத்தின் ஒன்லைன். எதிர்பார்ப்புகள் பொய்த்து விரக்தியான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு கால இயந்திரம் (Time machine) கிடைத்து, தனது கடந்த காலத்தை […]

11/09/2021 Dinesh R
லாபம் விமர்சனம் சினிமா

லாபம் விமர்சனம்

ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவுக் குரலாக தமிழ்த்திரையில் எஸ்.பி.ஜனநாதனின் குரல் எப்பொழுதும் ஒலிக்கும். தன் படங்களின் வழியே எளிய மக்களுக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவத்தையும், அதற்கு துணைபோகும் அமைப்புகளையும் அரசையும் அவரது படங்கள் கேள்வி கேட்கும். லாபத்திலும் அந்தக் கேள்வியை எழுப்பி, கேள்விக்கான விடைகளை வசனங்களாக அள்ளித் தெளித்துள்ளார். கம்னியூசத்தை அவ்வளவு எளிதில் மக்களுக்குப் புரிய வைக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் சம்மட்டி வைத்து அடிப்பது எஸ்.பி.ஜனநாதனின் பாணி. எதையுமே மிக எளிதாகப் புரிய வைக்கும் வல்லமை […]

10/09/2021 Dinesh R