Shadow

திரை விமர்சனம்

காட் ஃபாதர் விமர்சனம்

காட் ஃபாதர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையில் எண்ணற்ற வலிமையுண்டு என்பதை நிரூபித்து இருக்கிறது காட்ஃபாதர். ஒரு சாதாரண அப்பாவிற்கும், மற்றொரு தாதா அப்பாவிற்கும் முட்டல் வந்தால் முடிவு என்னாகும் என்பதைத் தான் காட்ஃபாதர் பேசி இருக்கிறது. திரைக்கதை அமைப்பில் வலுவாக இருக்கிறார் காட்ஃபாதர். அமைதியை விரும்பும் நட்டிக்கு மகன் என்றால் உயிர். அந்த மகனின் உயிரைத் தன் மகனுக்காக வாங்க நினைக்கிறார் வில்லன் லால். நட்டி தன் மகனைக் காப்பாற்ற அப்பார்ட்மென்ட் உள்ளிருந்தே எடுக்கும் முயற்சிகள், அதற்கு லால் எதிர்வினையாற்றும் செயல்கள் என படம் நெடுக பரபரப்பிற்குக் குறைவேயில்லை. நடிகர் நட்டிக்கு இந்தப் படம் நல்லதொரு அடையாளம். எல்லாக் காட்சிகளையும் சரியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். அவரின் மனைவியாக வரும் அனன்யாவும் குறை காண முடியாதளவில் தன் பங்களிப்பைக் கொடுத்துள்ளார். வில்லன் லானின் நடிப்பில் வீரியம் அதிகம். குட்டிப்பையன் அஸ்வந்த் அட...
கன்னிமாடம் விமர்சனம்

கன்னிமாடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும். நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் - கதிர் ஜோடியை அரவணைக்கிறான். கதிர் விபத்தில் இறந்து விட, நிராதரவாய் இருக்கும் கர்ப்பிணியான மலரைப் பாதுகாக்கும் பொறுப்பு அன்புவிற்கு ஏற்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் அது அத்தனை எளிதான காரியமா என்ன? அன்புக்கு நேரும் சோதனையும் சவால்களும் தான் படத்தின் கதை. 'இன்னுமா சாதி பார்க்கிறாங்க?' என அப்பாவித்தனமாய்க் கேட்கும் கவுன்சிலர் அழகுராணியாக ரோபோ ஷங்கரின் மனைவி பிரி...
ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

ஏற்றத்தாழ்வினைப் பேசும் பாராசைட்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘பாராசைட் (Parasite)’ என்பது ஒட்டுண்ணியைக் குறிக்கும். மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரை ஒட்டுண்ணி என்பர். படத்தின் கருவை உணர்த்தும் குறியீட்டுப் பெயராக, ‘பாராசைட்’ எனும் தலைப்பினைக் கொள்ளலாம். இந்தக் கொரியன் படம் மொத்தமாக 4 ஆஸ்கார் விருதுகளை அள்ளியிருக்கிறது. அதுவும் சிறந்த படம், சிறந்த சர்வதேச படம் எனும் இரண்டு முக்கிய கேட்டகரியிலும் வென்றதால் வியத்தகு பாராட்டுகளையும், கடுமையான விமர்சனங்களையும் சம அளவில் சந்தித்து வருகிறது. ஆஸ்கார் விருதுகளில் லாபி அதிகம், அதே போல ஹாலிவுட் தயாரிப்பாளர்களின் வணிக நோக்கமும் விருதுக்கான தேர்வில் அழுத்தத்தினைக் கொடுக்கும். ஆசிய மார்கெட்டை ஹாலிவுட் பக்கம் திருப்பக் கூடுதல் கவனத்தை, சமீப வருடங்களில் ஆஸ்கார் விருதின் போது அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, ஆஸ்கார் விருதுகளைப் பெரிய அங்கீகரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்த விருதுகளைத் தாண்டி, உண்மையிலேயே ...
வானம் கொட்டட்டும் விமர்சனம்

வானம் கொட்டட்டும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேனி மாவட்டத்தில் பாசமான அண்ணன் தம்பி பாலாஜி சக்திவேலும், சரத்குமாரும். ஒரு உள்ளூர் தேர்தல் பிரச்சனையில் பாலாஜி சக்திவேலை வெட்ட, அண்ணனுக்காக எதிராளிகளை வெட்டிவிட்டு 20 வருடங்கள் சிறைக்குச் செல்கிறார் சரத்குமார். ராதிகா தனி ஆளாக இருந்து விக்ரம் பிரபுவையும், ஐஸ்வர்யா ராஜேஷையும் வளர்க்கிறார். விக்ரம் பிரபு கோயம்பேடு மார்கெட்டில் வாழைக்காய் மண்டி வைக்கிறார். 20 வருடங்கள் கழித்துச் சிறையில் இருந்து வரும் சரத்குமாரை விக்ரம் பிரபுவும் ஐஸ்வர்யா ராஜேஷும் வெறுக்கிறார்கள். இதே நேரம் சரத்குமாரால் இறந்து போனவரின் மகன் நந்தா, சரத்குமாரைக் கொலை செய்யத் துரத்துகிறான். கடைசியில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சரத்குமாரை ஏற்றுக் கொண்டார்களா, நந்தா சரத்குமாரைப் பழி வாங்கினாரா என்பதுதான் கதை. தேனியின் அழகை கேமராவில் அழகாகக் காட்டியுள்ளனர். அந்த வாழைத் தோட்டம் மிக அழகு. இப்படத்தில் சரத்குமாரும், ...
மாயநதி விமர்சனம்

மாயநதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அட்வைஸ் கேட்டகரியில் வரும் படங்கள் நல்ல கலைத்தன்மையோடு இருப்பதில்லை என்ற விமர்சனம் சமீபகாலமாக அதிகமாக வைக்கப்படுகிறது. அந்த விமர்சனத்திற்கு வலு சேர்ப்பது போல் தான் சில படங்களும் வெளியாகின்றன. "ஆ, ஊ"ன்னா சாட்டையைச் சுழட்டி விடுகிறார்கள். ஆனால் மாயநதி அதிலிருந்து விலகி ஒரு தனித்துவத்தைth தொட முயற்சி செய்துள்ளது. நாயகி வெண்பா, அப்பாவின் கனவைத் தன் நினைவெனக் கருதி 12-ஆம் வகுப்பில் முதலாவதாகத் தேர்ச்சி பெறப் படிக்கிறார். அவருக்குள் காதலனாக நுழைந்த ஆட்டோ டிரைவர் அபி சரவணன் படிப்பில் தேக்கத்தை ஏற்படுத்துகிறார். அப்பாவின் கனவுக்கும், இடையில் தோன்றிய அப்பாவித்தனமான காதலுக்கும் இடையில் என்னானது என்பதே படத்தின் கதை. அப்பாவாக ஆடுகளம் நரேனும், மகளாக வெண்பாவும் நடிப்பில் ஒரு அத்தியாயத்தை எழுதி இருக்கிறார்கள். அப்பா மகளுக்கான கெமிஸ்ட்ரி அத்தனை அழகாகப் பொருந்தியுள்ளது. அபி சரவணன் கேரக்டர் அந்தளவிற்கு ஸ்...
சைக்கோ விமர்சனம்

சைக்கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கண் பார்வையற்ற காதலனின் கண் எதிரே அவரது காதலி, சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படுகிறார். காதலியை மீட்க நாயகன் போராடி எழுவது தான் இப்படத்தின் கதை. படத்தின் முதல் ஜீவன் இளையராஜா தான். அவரின் இசை இன்றி இப்படத்தோடு நிச்சயம் ஒன்ற முடியாது என்பது உறுதி. அடுத்து ரன்வீரின் அட்டகாசமான ஒளிப்பதிவு. இவை இரண்டும் தான் சைக்கோவின் கடவுள்கள். பெண்களின் தலையை வெட்டும் வித்தியாச சைக்கோ, கண்பார்வையற்ற ஹீரோ, வீல்சேரில் அமர்ந்தும் சிங்கமாக கர்ஜிக்கும் கதையின் நாயகி, ஒரே ஆடையில் ஒரே அறையில் தேங்கிக்கிடக்கும் கதாநாயகி, எந்தத் துக்கத்திலும் பாட்டுப் பாடும் காவல் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிஷ்கினின் தனித்துவ வார்ப்பு. ஆனால் யாருடைய கதாபாத்திரமும் வலிமையாக எழுதப்படவில்லை. அதனால் அவர்களுக்கு நேரும் சுக துக்கங்களில் நம்மால் பங்கெடுக்க முடியவில்லை. இது, சைக்கோவில் உள்ள ஆகப்பெரும் பிரச்சனை. முன்பாதி மெதுவாகச் ச...
தர்பார் விமர்சனம்

தர்பார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முருகதாஸ் இயக்கியிருந்தாலும், இது ரஜினி படமாக மட்டுமே உள்ளது. ரஜினி படம், ரஜினி படமாக இல்லாமல் இருந்தால்தான் ஏமாற்றமளிக்கும். ரஜினி எனர்ஜியாக, ஸ்டைலாக, அழகாகத் தெரிகிறார் திரையில். தர்பார் என்பது அரசவையைக் குறிக்கும். தனது தர்பாருக்கு உட்பட்ட மும்பையைக் காவல் பரிபாலனம் செய்யும் ஐபிஎஸ் அதிகாரியான ஆதித்யா அருணாச்சலத்தின் மகள் கொல்லப்படுகிறார். மரணத்தால் மிகுந்த மனச்சோர்வில் உழலுகிறார். யாரால் அவர் மகள் கொல்லப்பட்டார் என்று கண்டுபிடிப்பதும், எவ்வாறு தன் மகளின் மரணத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கினார் என்பதும்தான் படத்தின் கதை. இப்படத்திற்கு, என்கவுன்ட்டர் என்ற தலைப்பு தான் பொருத்தமாய் இருந்திருக்கும். என்கவுன்ட்டரை ஆதரிக்கும் ஆபத்தான போலீஸ் கருவைத் தொட்டுள்ளார் முருகதாஸ். லில்லி எனும் பாத்திரத்தில் நயன்தாரா தோன்றியுள்ளார். உண்மையில் இது நாயகியே தேவையில்லாத படம். நயன்தாரா வரும் காட்சிகள...
தி க்ரட்ஜ் விமர்சனம்

தி க்ரட்ஜ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘ஜு-ஆன்: தி க்ரட்ஜ்’ என 2002 இல் வெளிவந்த ஜப்பானியப் படத்தின் ரீமேக்காக, ஆங்கிலத்தில் ‘தி க்ரட்ஜ்’ எனும் படம் 2004 இல் வெளியானது. அதைத் தொடர்ந்து, ‘தி க்ரட்ஜ் 2 (2006)’, ‘தி க்ரட்ஜ் 3 (2009)’ ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜப்பானில் இருந்து ஒரு சாபத்தைத் தன்னோடு அமெரிக்கா கொண்டு வருகிறாள் நர்ஸ் ஃபியோனா லேண்டர்ஸ். இப்படத்தினை, 2004 இல் வெளிவந்த ‘தி க்ர்டஜ்’ படத்தின் இணைப்பாகமாகக் (sidequel) கொள்ளலாம். 2004 இல் லேண்டர்ஸ் குடும்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது.அதை விசாரிக்க வந்த போலீஸ்காரர் மீதும் சாபம் படிகிறது. பின், அந்த வீட்டை யார் யாரெல்லாம் மிதிக்கிறார்களோ அவர்கள் அனைவரின் மீதும் சாபம் படிகிறது. அப்படி, 44 எனும் இலக்கமிட்டு அந்த வீட்டிற்குச் சென்று, அதன் துர் அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சும் லோர்னா, காரில் தப்பித்துச் செல்ல முற்படுகையில் விபத்தில் எரிந்து போகிறாள். அவ்வூருக்கு 2006 இல் மாற்றலாகி...
பிழை விமர்சனம்

பிழை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளை மையப்படுத்தி வரும் படங்களில், கதையினூடாக மறைமுகமாகவோ, நேராகவோ பாடம் புகட்டுதலும் இருக்கும். பிழை படமும் அப்படியான ஒரு முயற்சி தான். ஆனால் பிழை ஒரு நல்ல பாடத்தைத் தாங்கி வந்திருந்தாலும் ஒரு நல்லபடமாக உருபெற சற்றே திணறுகிறது. வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கல்வி என்பது கசப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால், அக்குழந்தை மாணவர்கள் மட்டம் தட்டப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வர, அதன் பின் அவர்களுக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை. படத்தில் நடித்துள்ளவர்கள் எல்லாரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான பின்கதை ரைட்டிங் மிகவும் பின் தங்கி இருப்பதால், ஒரு கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களின் பொறுமையை மிகவுமே சோதித்து விடுகின்றனர். படிக்காமல் தனது உழைப்பால் முன்னேறியவர்களை மட்டும் கணக்கில் எடுத்...
சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்த உலகம் அன்பிற்கானது. இந்த மனிதர்கள் அன்பால் ஆனவர்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள். அன்பை அதிகாமாக வைத்திருப்பவர்களும் கூட என்பதைக் கவித்துவமாகச் சொல்லிச் செல்கிறது சில்லுக்கருப்பட்டி. நான்கு கதைகளுக்குள் நான்கு வாழ்க்கையை வைத்து சில்லுக்கருப்பட்டியைத் திகட்டாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். குப்பை மேட்டில் கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் ஒரு சிறுவன் கையில் கிடைக்கும் வைரமோதிரமும், அந்த மோதிரத்தைத் தொலைத்த பணக்கார வீட்டுச் சிறுமியும் எப்படி நட்பாகிறார்கள் என ஒரு கதை. திருமணம் நிச்சயமாகி இருக்கும் வேளையில் கேன்சர் வந்த ஐடி இளைஞனும், அவனோடு ஓலா காரில் ட்ராவல் ஷேர் செய்து, பின் காதலை ஷேர் செய்யும் பெண்ணுக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒரு கதை. முதிர்ந்த வயதிலும் காதல் வரும் என்பதையும், அந்தக் காதல் வருவதற்கான காரணத்தையும் அற்புதமாகச் சொல்லும் ஒரு கதை. திருமணம் முடி...
V1 விமர்சனம்

V1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விசயத்தை மீள் விசாரணை செய்வதாக முடிகிறது. லிவிங் டுகெதரில் இருக்கும் ஒரு ஜோடியில், பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவளின் காதலன், ‘கொலையை நான் தான் செய்தேன்’ என ஒப்புக் கொள்கிறான். ஆனால் கொலையை அவன் செய்யவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார் என்ற கேள்வியோடு படம் விரிகிறது. யார் கொலைகாரர் என்ற கேள்வியில் பயணிக்கும் படத்தில் திருப்புமுனைகள் தான் பிரதானம். V1 படத்தில் அது திரும்பும் இடத்தில் எல்லாம் இருக்கிறது. அவையெல்லாம் நம்மை ஈர்ப்பதற்கான திருப்புமுனைகளையே ஒழிய லாஜிக் ரிதீயான திருப்புமுனையாக இல்லை. இதுதான் இப்படத்தின் சறுக்கல். நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ சிரமம் இல்லாமல் நடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் சிரமப்பட்டிருக்கிறார். நாயகி விஷ்ணுபிரியா ஓரளவு அவரின் காதாபாத்திரத்திற்குரிய நியாயத்தை நடிப்பில் சேர்த்துள்ளார். லிஜீஸ் ...
ஹீரோ விமர்சனம்

ஹீரோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜென்டில் மேன் 2 என்றே படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கலாம். அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற நன்நோக்கமுடைய கொள்ளைக்காரன் சத்தியமூர்த்தியாக அர்ஜுன் வருகிறார். படத்தின் நாயகன் அவர் தான். ஸ்கூல் படிக்கும் பொழுது சக்திமான் தொடர் பார்த்து சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென ஆசைப்படுகிறான் சக்தி. வளர்ந்த பின்னும் அந்த ஆசை விடாமல் சக்தியைத் துரத்த, ஜென்டில் மேன் சத்தியமூர்த்தியின் உதவியுடன், ஒரு முகமூடி அணிந்து சூப்பர் ஹீரோவாகி விடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. தொழிலதிபர் மகாதேவாக அபய் தியோல். சத்தம் போடாத, பணம் சம்பாதிப்பதில் கண்ணாக இருக்கும் காரிய வில்லனாக அசத்துகிறார். ஆனாலும், க்ளைமேக்ஸில் அவரை வழக்கமான சோப்ளாங்கி வில்லனாக்கி, சூப்பர் வில்லனாகப் பரிணமிக்க வேண்டியவரைச் சாதாரண வில்லனாக்கி உச்சபட்ச அநியாயம் செய்துள்ளார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். கடல் நீரில் ஓடும் வாகனத்தைக் கண்டுபிடித்ததற்கான பேடன்ட் உரி...
தம்பி விமர்சனம்

தம்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசத்தைப் போலவே தம்பியும் ஒரு த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கின்றது. கதை சொல்வதில் தனது த்ரில்லர் திறமையைக் கொட்டி இருக்கிறார் ஜீத்து. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கொட்டியுள்ளார். கதைக்கு ட்விஸ்ட் என்பது சுவாரசியமாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று வெறும் ட்விஸ்டாக மட்டுமே கொடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி? ஜீத்து, மலையாள வாசத்தோடு படத்தை எடுத்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆனால் அது மலையாளப் படமாகத்தான் நகருகிறது. தமிழில் பேசுவதாலேயே தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால், ஒவ்வொரு காட்சிக்குமான அரேஞ்ச்மென்ட்ஸ் மலையாள மார்க்கமாகவே இருக்கிறது. ஒரு காட்சிக்குள் படிப்படியாகக் கதாபாத்திரங்களைக் கொண்டு வர இயக்குநர...
ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகரும...
மெரினா புரட்சி விமர்சனம்

மெரினா புரட்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு 2016-ஆம் ஆண்டில் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மெரினா புரட்சி தான் பெரிய போராட்டம். அப்போராட்டத்திற்கான முதல் புள்ளியை வைத்தவர்கள் யார்? அப்போரட்டத்தின் போது நடைபெற்ற அரசியல் சூதாட்டங்கள் என்ன? அப்போராட்டத்திற்கு எதிராக நின்ற இரண்டு தமிழர்கள் பற்றிய தகவல்கள் என படம் பல ஆச்சர்யம் & அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் படமாகப் பதிவு செய்வதில் தான் இயக்குநர் எம்.எஸ் ராஜ் வெற்றி பெற்றுள்ளாரே ஒழிய இதை ஒரு நல்ல திரைக்கதையாக மாற்ற இயலவில்லை அவரால். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு வேலை கேட்டு வருகிறார்கள் ஒரு இளைஞனும் இளைஞியும். சேனல் நிர்வாகி இவர்களுக்கான டெஸ்ட் ஆக ஜல்லிக்கட்டு வரலாற்றையும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் சேகரிக்கச் சொல்கிறார...