Shadow

திரை விமர்சனம்

ட்ரான்ஸ் விமர்சனம்

ட்ரான்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
Trance என்றால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. போதையூட்டப்பட்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம். மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் காக்க இறைவன் பிரசன்னம் ஆவான் என எதிரிலுள்ள ஆபத்தை உணராமல், எளிய தீர்வுகளை நோக்கி நகராமல் கட்டிப் போடும் விஷப்போதையைத் தரவல்லது. போதைக்கு அடிமையானவர்கள், கடவுளின் பெயரால் தங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தருவது கற்பனைக்கெட்டாத அளவற்ற பணமும், அரசியலில் அசைக்க முடியாத அதிகாரமுமே! இதில், ட்ரான...
மது வடலாரா விமர்சனம்

மது வடலாரா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நாயகனும், நாயகனின் நண்பனும் ஒரு ஆன்லைன் டெலிவெரி கம்பனியில் டெலிவெரி பாய்ஸாக வேலை செய்கிறார்கள். நாயகனின் நண்பன் கேஷ் ஆன் டெலிவெரி பண்ணும்போது கஸ்டமர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நோட்டை மறைத்துவிட்டு, “சார் 500 ரூபாய் குறையுது, 100 ரூபாய் குறையுது” என ஏமாற்றிப் பணத்தை அபகரிப்பார். இதைப் பார்த்த நாயகனும் அதைப் போல முயற்சி செய்யப் போக, அவன் பல சிக்கல்களில் மாட்டுவதுதான் கதை. வித்தியாசமான மேக்கிங்கால் கவர்ந்துள்ளார் இயக்குநர். ஒரு கஸ்டமர். அதுவும் பாட்டி. அப்பாட்டியை ஏமாற்ற முயன்று, அப்பாட்டியிடம் மாட்டிக் கொள்கிறார் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும்போது பாட்டி இறந்து விடுகிறார். பாட்டியின் பிணத்தை மறைக்க அந்த வீட்டுக்குள் போய், அது தேவையில்லாமல் பெருஞ்சிக்கலில் இழுத்துவிட்டு விடுகிறது. அதைச் சமாளிக்க முடியாமல் அவ்வீட்டிலேயே மயங்கிவிடும் நாயகன், மீண்டும் விழிக்கும் பொழுது, ரத்த...
அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி. நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணி நேரத் திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி, பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ‘ட்ரைவிங் லைசென்ஸ்’ திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர். உண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது. பொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்க...
பிளட்ஷாட் விமர்சனம்

பிளட்ஷாட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பிளட்ஷாட் என்பது வேலியன்ட் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோவின் பெயர். ‘பிளட்ஷாட்’ எனும் பிராஜெக்ட்டை உருவாக்கும் RST நிறுவனம், இறந்துவிடும் ஒரு இராணுவ அதிகாரியான ரே கேரிசனுக்குச் செயற்கை உயிரூட்டி, உடலில் நேனைட்ஸ் (Nanites) –ஐச் செலுத்தி விடுகின்றனர். நேனைட்ஸ் அதி வேகத்தில் செயற்பட்டு, பழுதுபடும் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவல்லது. ஆனால், ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜியின் (RST) சி.ஈ.ஓ.வான டாக்டர் எமில் ஹார்டிங், பிளட்ஷாட்டை ஒரு ஆயுதமாக மட்டுமே உருவாக்குகிறார். மனதில் குமுறும் பழிவாங்கும் உணர்ச்சிதான், ஒரு மனிதனை உச்சபட்ச ஆயுதமாக மாற்றும் என்பதால், ரே-வின் மூளையில் ஒரு கதையை விஷுவலாகப் பதிக்கிறார். அதை உண்மையென நம்பும் பிளட்ஷாட், பழிவாங்கும் உணர்ச்சியில் கொதித்து, அவர் மூளையில் பதியப்பட்டிருக்கும் எதிராளியைத் தேடிக் கொல்கிறார். தான் உபயோகிக்கப்படுகிறோம் என ஒரு கட்டத்தில் ...
தாராள பிரபு விமர்சனம்

தாராள பிரபு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘விக்கி டோனர்’ என 2012இல் வெளிவந்த ஹிந்திப் படத்தின் ரீமேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. ஜுஹி சதுர்வேதியின் கதையை, விவேக்கை உள்ளே கொண்டு வந்து மேலும் நகைச்சுவையாகப் படத்தை எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ‘என்னது நீ ஸ்பேர்ம் டோனரா?’ என நாயகி கேட்கும் பொழுது கேவலமாகத் தெரியும் தொழில், விவேக் ஸ்பேர்ம் (விந்து) பற்றிப் பேசும்பொழுதெல்லாம் ரசிக்க முடிகிறது. படத்தின் நாயகனே விவேக் தான் எனச் சொல்லுமளவு, முதல் ஃப்ரேமில் இருந்து கடைசி வரை அதகளம் புரிந்துள்ளார். தன் வசன உச்சரிப்பாலும், கண்ணை உருட்டும் நடிப்பாலும் படத்திற்குக் கலகல டோன் கொடுத்துள்ளார் விவேக். ஜாலியான படத்திற்குத் தனியொரு நபராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தடம் படத்து நாயகி தான்யா ஹோப், நிதி மந்தனா எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். அதிகம் பேசாதவராக அறிமுகமாகி, மெல்ல நாயகன் மேல் விருப்பம் கொண்டு, மிக மெச்சூர்டாக த...
கயிறு விமர்சனம்

கயிறு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்திற்கு ‘பூம்பூம் மாடு’ என்றே தலைப்பிட்டிருக்கலாம். கந்தன் எனும் ஒரு பூம்பூம் மாட்டையும், சின்ராசு எனும் பூம்பூம் மாட்டுக்காரனையும் சுற்றியே கதை நகர்கிறது. கதையின் மையமான மாட்டை, நாயகன் கயிற்றில்தானே கட்டி வச்சிருப்பார்! ஆக, மாடு வாங்குவதை விட அதற்கு மூக்கணாங்கயிறு வாங்குவது முக்கியமென்ற உயரிய கருத்தை உணர்த்துவதாக படத்தின் தலைப்பைக் கொள்ளலாம். நன்றாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டிடம், குறி கேட்பவர் கேள்விகளை முன்வைக்க, மாடு தலையாட்டுவதைக் கொண்டு பலன்கள் சொல்வர் பூம்பூம் மாட்டுக்காரர்கள். கோயில் திருவிழா போன்று மக்கள் கூடுமிடங்களிலோ, அல்லது ஒவ்வொரு வீடாகச் சென்று குறி சொல்லி காணிக்கை பெறுவதே அவர்களது ஜீவிதம். ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் கந்தன், பாண்டிய மன்னன் போல் மணமகன் கிடைப்பான் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த தாமரைக்குக் குறி சொல்லுகிறான் சின்ராசு. சின்ராசுக்கும், தாமரைக்கும் காத...
எட்டுத்திக்கும் பற விமர்சனம்

எட்டுத்திக்கும் பற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாதி, இனம், மதம் என குறுகிய பரப்பில் கிணற்றுத் தவளையாய்ச் சிக்கித் தவிக்காமல், அதிலிருந்து மீண்டு, விடுதலை பெற்று, பரந்த விரிந்த உலகத்தை எட்டுத் திசைகளிலும் சுதந்திரமாய்ப் பறக்கவேண்டும் என்ற பொருளில் தலைப்பைச் சூட்டியுள்ளார் இயக்குநர் வ.கீரா. திரெளபதி படத்திற்கு நேர் எதிரான அரசியலைப் பேசியுள்ளது இப்படம். அரசியலில் எதிரெதிர் துருவம் என்றாலும் இரண்டு படத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எப்படி திரெளபதி படத்தில், வில்லனாக ஓர் இயக்கத் தலைவரைச் சித்தரித்திருந்தார்களோ, அப்படியே இந்தப் படத்திலும். அதே போல், ஒரு வழக்குரைஞரும், சார்பதிவாளர் அலுவலகமும், அப்படத்தில் எப்படிச் சித்தரித்திருந்தனரோ,  இங்கே அப்படியே உல்டாவாகக் காட்டப்பட்டுள்ளது. வயதான இணையின் காதல், சாலையோரம் வாழும் இணையின் காதல், சாதி மாறி காதலிக்கும் இணையின் காதல் என படத்தில் மொத்தம் மூன்று காதல்கள். சமூக நீதிக்காகப் போராடும் வழக்கு...
ஜிப்ஸி விமர்சனம்

ஜிப்ஸி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜிப்ஸி என்றால் நாடோடி எனப் பொருள்படும். காஷ்மீரில், ஒரு முஸ்லீம் அம்மாக்கும், ஹிந்து அப்பாக்கும் பிறக்கும் குழந்தை, இந்தியாவெங்கும் பயணிக்கும் ஒரு நாடோடியிடம் வளர நேருகிறது. அந்நாடோடி குழந்தைக்கு ‘ஜிப்ஸி’ எனப் பெயரிடுகிறார். அரசியல் புரிதலுள்ளவனாக வளரும் ஜிப்ஸிக்குக் கட்சிச் சார்போ, கொள்கைச் சார்போ எதுவும் கிடையாது. ஆனாலும், புரட்சிகர தெருப் பாடகனாக அடையாளம் காணப்படுகிறான். தனக்கான முகம் என நாகூரில் ஒரு பெண்ணை அடையாளம் காணுகிறான். அந்தப் பெண், திருமணத்திற்கு முன் தினம் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறான். உடனே ஜிப்ஸி, “கவலைப்படாதீங்க உங்க ஆளுங்க (பாகிஸ்தான்) தான் ஜெயிப்பாங்க (கிரிக்கெட்டில்)” என வஹிதாவிடம் சம்பந்தமே இல்லாமல் சொல்கிறான். அதுவரை அழகான விஷுவல்ஸ்களினால் கள்ளுண்ட போதையில் மதி மயங்கி படம் பார்த்துக் கொண்டிருந்த மயக்கம் சட்டெனத் தெளிகிறது. நம்முடன் வாழும் முஸ்லிம்கள் இந்தியர்கள் ...
வெல்வெட் நகரம் விமர்சனம்

வெல்வெட் நகரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை. படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள் நடப்பதாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவு கெளரி இறக்க, அவர் சேகரித்த தரவுகள் அடங்கிய கோப்பினைத் தேடி பிரியா வீட்டுக்குச் செல்கிறார் பிரியா. அன்றைய இரவு, பிரியாவின் வீட்டுக்குள் நுழையும் மைக்கேல் குழுவின் தலையீடால் என்னாகிறது என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி. பிரியாவாக மாளவிகா சுந்தர் நடித்துள்ளார். அவரது கணவர் முகிலனாக பிரதீப் பெனி...
தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

தி இன்விசிபிள் மேன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பாறையில் கடல் அலைகள் மோதி, அந்த நீரலைகள் கீழே விழும் பொழுது 'தி இன்விசிபிள் மேன்' எனப் பெயர் போடுவதே அட்டகாசமாக உள்ளது. மலையுச்சியில் இருக்கும் பங்களாவில் இருந்து செசிலியா காஸ் எனும் பெண், தப்பிப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அங்குத் தொற்றிக் கொள்ளும் பதற்றம் படம் முழுவதுமே தொடர்கிறது. பல இடங்களில், பெஞ்சமின் வால்ஃபிஷின் பின்னணி இசை மனதைத் தொந்தரவு செய்வதாகவே உள்ளது. அந்தத் தொந்தரவு, செசிலியா காஸிற்குக் கண்ணுக்குப் புலனாகாத அவளது காதலன் ஆட்ரியன் தரும் டார்ச்சர். தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடும் ஆட்ரியன், தான் கண்டுபிடித்த மாயமாகும் உடையை அணிந்து கொண்டு, செசலியா காஸ் யாருடனெல்லாம் நெருக்கமாக இருக்கிறாளோ அவர்களிடம் இருந்தெல்லாம் பிரிக்கிறான். மனதளவில் அவளை முடக்கும் முயற்சியில், செசிலியாவின் சகோதரியையே கொன்று அந்தப் பழியையும் செசிலியா மீது போடுகிறான் ஆட்ரியன். கண்ணுக்குத் தெரியாத ஒரு...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இடைவேளையின் பொழுது ஓர் எதிர்பாராத ட்விஸ்ட், படத்தின் முடிவில் புன்னகையை வரவைக்கும் ஒரு ட்விஸ்ட் என படம் ஸ்வீட் சர்ப்ரைஸாய் வந்துள்ளது. படத்தின் தலைப்பைக் கொண்டே இது ஓர் அழகான காதல் படமென யூகிக்கலாம். அப்படிக் காதல் படமாக மட்டும் தேங்கிவிடாமல், ஆன்லைன் குற்றத்தையும், டெக்னிக்கல் குற்றத்தையும், அவற்றை நூல் பிடித்துத் தொடரும் காவல்துறையின் சாமர்த்தியத்தையும் அழகாகக் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மானும், ரிது வர்மாவும் ஒரு காதல் ஜோடி என்றால் விஜய் டிவி புகழ் ரக்‌ஷனும், நிரஞ்சனி அகத்தியனும் ஒரு காதல் ஜோடியாக வருகின்றனர். படத்தை மைய இணைக்கு நிகரான ஒரு ஜோடியாகக் கலக்கியுள்ளனர். சொப்பு பொம்மை போலிருக்கும் சன்னி (Sunny) வகை ஸ்கூட்டரைக் காட்டி நாயகியை அறிமுகப்படுத்த, நிரஞ்சனி அகத்தியனை தண்டர்பேர்ட் புல்லட்டில் அறிமுகப்படுத்துகின்றனர். அவரது அலட்சியம் கலந்த பார்வையும்...
திரெளபதி விமர்சனம்

திரெளபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தென்னாற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் 'திரெளபதி அம்மன்' கோயிலும், அக்கோவிலில் நிகழும் சித்திரை தீ மிதி திருவிழாவும் மிகவும் பிரசித்தி. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கதை நிகழுவதாகக் காட்டப்படும் இப்படத்தின் பிரதான பெண் பாத்திரத்தின் பெயர் திரெளபதி. ஊருக்கு ஒன்றெனில் முதலாளாக முன்னிற்கும் தைரியமான பெண்மணி. இவரைப் போலவே, படத்தில் இன்னும் இரண்டு பெண் பாத்திரங்களும் வலுவானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் முறையே ஓர் அரசு மருத்துவரும், ஒரு பத்திரிகையாளரும் ஆவர். தைரியமான பெண் என்பதற்கான குறியீடாய் இத்தலைப்பினைக் கொள்ளலாம். பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ட்ரெய்லரின் மூலம் அருமையான கவன ஈர்ப்பினைப் பெற்றுவிட்டது படம். படத்தின் வில்லனாக இயக்குநர் யாரைச் சுட்டுகிறார் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. எனினும், மிகப் புத்திசாலித்தனமாய், ஒரு பொதுப் பிரச்சனையைப் பற்றிப் பட...
ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்

ஓம் என்கிற மீண்டும் ஒரு மரியாதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓம் எனத் தொடங்கப்பட்ட படத்தை, 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளனர். மகனால், லண்டன் ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்க்கப்படுகிறார் பாரதிராஜா. அங்கே அவரது நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரளிக்கும் உயிலை உரியவரிடம் சேர்க்க ஸ்காட்லாந்திற்குக் கிளம்புகிறார். இடையில், தற்கொலைக்கு முயலும் ராசி நட்சத்திராவிடம் ஆதரவாகப் பேசி, அவரைத் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்கிறார். தன்னுடன் ஸ்காட்லாந்து வரை பயணித்தால், தற்கொலை எண்ணம் விலகும் எனக் கூறி ராசி நட்சத்திராவுடன் பயணிக்கிறார். பயணத்தின் முடிவில் என்னாகிறது என்பதே படத்தின் கதை. OM (ஓம்) என்றால் ஓல்ட் மேன். ராசி நட்சத்திரா பாரதிராஜாவை, ஓல்ட் மேன் என்றே படம் முழுவதும் அழைக்கிறார். ஆனால், அவரை யாராவது அப்படி அழைத்தால் ராசி நட்சத்திராவிற்குக் கோபம் வந்துவிடுகிறது. 'நம் வீட்டுக் குழந்தையை நாம் விருப்பப்பட்ட பெயரில் கூப்பிடலாம். ஆனால் இன்னொரு...
மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

மாஃபியா: அத்தியாயம் 1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாஃபியா – குற்றத்தை நிறுவனமயப்படுத்தும் ஓர் இயக்கம் எனப் பொருள் கொள்ளலாம். அப்படி, போதைப் பொருள் கடத்துவதை நிறுவனமயப்படுத்தும் திவாகர் குமரனைப் பிடிக்க நினைக்கிறார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஆரியன். இதுதான் மாஃபியா படத்தின் கதை. Ground to Earth பெர்ஸ்னாலிட்டியாக நடித்துள்ளார் பிரசன்னா. டிகே (DK) எனும் திவாகர் குமரன், பெரிய சிண்டிகேட்டின் லோக்கல் தலைவராக இருந்தும், யாரையாவது மிரட்ட, தானே நேரடியாகக் களம் இறங்குகிறார். அவரது அலட்டலில்லாத அமைதி ரசிக்க வைக்கிறது. காட்டில் தானொரு நரி எனச் சொல்லிக் கொள்ளும் அவர், அது போன்று குயுக்தியாக எதுவும் செய்வதில்லை. நாயகனைக் காதலிக்கவும், ஸ்லோ-மோஷனில் நடக்கவும், ஆரியனின் குழு உறுப்பினர் சத்யாவாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இன்னொரு குழு உறுப்பினர் வருணாக பாலா ஹாசன் நடித்துள்ளார். வில்லனின் குடோனைத் தாக்கும் மிக முக்கிய பணியை இருவரும் ...
பாரம் விமர்சனம்

பாரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேசிய விருது பெற்ற இப்படத்தின் தலைப்பே சற்று குழப்பம்தான். உடம்பு முடியாமல் படுத்துவிடும் முதியவர்களை தான் 'பாரம்' எனத் தலைப்பு சுட்டுகிறதோ என எண்ண வேண்டியுள்ளது. தலைக்கூத்தல் (Thalaikkoothal - தலைக்கு ஊத்தல்) என்பது பற்றி ஆன்லைனில் படிக்க நேரிடும் இயக்குநர் பிரியா கிருஷ்ணாசாமிக்கு, மேலும் அது சம்பந்தமான ஒரு உண்மைக் கதையும் தெரிய வருகிறது. இது கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியதென முடிவுக்கு வந்து, திரைப்படமாக எடுக்க ஆய்வு மேற்கொள்கிறார். இப்படமும் டாக்குமென்ட்ரி டிராமா வகையைச் சார்ந்ததே! தங்கை வீட்டில் தங்கி, வாட்ச்மேன் வேலை பார்க்கும் கருப்பசாமிக்கு விபத்து ஏற்பட்டு இடுப்பெலும்பு உடைகிறது. அவரது மகன் செந்தில், அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்காமல், நாட்டு மருத்யுவர் குணப்ப்டுத்துவார் என கிராமத்திற்கு அவரை அழைத்துச் சென்றுவிடுகிறான். அவர் இறந்து விடுகிறார். தனது தாய்மாமா கருப்பசா...