Shadow

திரை விமர்சனம்

காளிதாஸ் விமர்சனம்

காளிதாஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  காளிதாஸ் நல்ல சைக்காலஜிகல் த்ரில்லர் படம். பரத்துக்கு இந்த படம் நல்லதொரு கம்பேக்காக அமையும். அடிக்கடி மர்மமான முறையில் பெண்கள் இறந்து போகிறார்கள். அவை தற்கொலைகள் என்றும், அதற்குக் காரணம் ப்ளூவேல் கேம்தான் என பரத் நினைக்கிறார். பரத்தால் இந்த வழக்கை முடிக்க முடியாததால் சுரேஷ் மேனன் அவ்வழக்கைத் துப்பு துலக்க வருகிறார். இருவரும் சேர்ந்து அது கொலையா தற்கொலையா எனக் கண்டுபிடிப்பதுதான் கதை. இது போக, பரத் வீட்டுக்கே வராமல் போலீஸ் வேலையிலையே பிசியாக இருப்பதால் அவரது மனைவி, வீட்டு மாடியில் வாடைகைக்குக் குடியிருக்கும் ஆதவ் கண்ணதாசன் மீது காதல் கொள்கிறார். அதனால் அவருக்கு என்ன ஆச்சு என்பதுதான் செம க்ளைமேக்ஸ் ட்விஸ்ட். இதில் மிகுந்த சுவாரசியமான விஷயம், சுரேஷ் மேனனுக்கும் பரத்துக்கும் உள்ள உறவு. இப்படி ஒரு மேலதிகாரியும் இருப்பாரா என்று பார்வையாளர்களுக்குத் தோன்றும். பரத்துக்கு ஆலோசனை செய்வதாகட...
ஜடா விமர்சனம்

ஜடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
    வடச்சென்னையில் செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளைப் பின்பற்றாத கால் பந்தாட்டத்தில் கலந்து கொள்ள கதிர் ஆசைப்படுகிறார். அந்த ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும், அதனால் நிகழ்ந்த சில பயங்கரங்களையும் கோச் எடுத்துரைக்கிறார். அதை மறுத்துரைத்து, 'செவன்ஸ் ஆடுவேன்' என்பதில் உறுதியாக நிற்கிறார். அதற்கான காரணமும், முடிவில் செவன்ஸில் கதிர் அணி எப்படி வெற்றி கொண்டது என்பது தான் ஜடா. ஒரு படத்திற்குச் சிறந்த துவக்கம் மிக முக்கியம். அதை ஜடா இயக்குநர் குமரன் மிகச் சிறந்த முறையில் கையாண்டுள்ளார். நடிகர்களை வேலை வாங்கியதிலும் ஒரு தேர்ந்த இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓவியர் ஸ்ரீதர் நடிப்பும், அவரது கதாபாத்திர வார்ப்பும் அத்தனை துல்லியம். கதிர் நடிப்பில் எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் பரியேறும் பெருமாள் பரியன் எட்டிப் பார்க்கிறார். மற்ற இடங்களில் ...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. கு...
அடுத்த சாட்டை விமர்சனம்

அடுத்த சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிடுகின்றனர் சாட்டை படத்தின் இயக்குநர் அன்பழகன். அப்பா கலை கல்லூரியில், ஒரு டிப்பார்ட்மென்ட்டின் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்களின் வகுப்பில் கதை நிகழ்கிறது. சாதி வெறியில் ஊறிய பிரின்சிபல் சிங்க பெருமாளின் மகன் பழனியால் வகுப்பில் சாதிப் பிரிவினை ஏற்படுகிறது. படத்தின் முதற்பாதியில் மகன் திருந்தி விட, இரண்டாம் பாதியில் பிரின்சிபலும் திருந்தி விட படம் சுபமாய் முடிகிறது. சமுத்திரக்கனி முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி வரை சாட்டையை அட்வைஸ்களாகச் சுழற்றியபடியே உள்ளார். அவருக்கு இதே வேலையாகப் போய்விட்டதென அவர் சொல்வதை யாரும் காதில் வாங்கவேயில்லை. ஆனால், நாயகியான போதும்பொண்ணு, “நான் அந்த சாதியைச் சேர்ந்த பையனைக் காதலிக்கவில்லை. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். அவனைக் கூடப் பிறந்தவனா நினைச்சுத்தான் பழகுறேன்” என்று நாயகனிடம் சொன்னதும், ஒட்டுமொத்த கல்லூரியிலுள்ள மாணவர்களுக்கும் சாத...
அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

அழியாத கோலங்கள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில், இயக்குநர் பாலு மகேந்திராவின் முதல் படம் 'அழியாத கோலங்கள்'. 1979 இல் வெளியான இப்படம், தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான ஒரு சோதனை முயற்சி. எப்படி குழந்தைப் பருவ நட்பு, அழியாத கோலங்களாய் கெளரிசங்கர் மனதில் பதிந்திருந்தது என்பதே அப்படத்தின் கதை. நாற்பது வருடங்களுக்குப் பின் வெளியாகியிருக்கும், 'அழியாத கோலங்கள் 2' படத்திற்கும், பாலு மகேந்திராவின் முதல் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தலைப்பைத் தவிர்த்து. இன்னொரு ஒற்றுமை, பிரதான கதாபாத்திரத்தின் பெயர் கெளரிசங்கர் என்பதாகும். 'மோகனப் புன்னகை' எனும் புத்தகத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெறுகிறார் கெளரிசங்கர். டெல்லியில் சாகித்திய அகாதெமி விருது பெற்றதும், தான் எழுதுவதற்குக் காரணமாக இருந்த மோகனா எனும் தனது கல்லூரிக் காலத்துத் தோழியை, 24 வருடங்களுக்குப் பின் காண சென்னைக்கு வருகிறார். கிண்டியில் தனியாக வசிக்கும் 44 வயதான மோகனாவின்...
ஆதித்ய வர்மா விமர்சனம்

ஆதித்ய வர்மா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து, 2017 இல் வெளிவந்த “அர்ஜுன் ரெட்டி” படத்தின் தமிழ் ரீமேக்காய் வந்துள்ளது ஆதித்ய வர்மா. விக்ரம் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்துள்ள படமிது. விக்ரமிற்கு, ‘ப்ரேக்’ கொடுத்த படம், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’. ஒரு பிராமணப் பெண்ணை உருகி உருகிக் காதலிக்கும் கோபக்கார இளைஞனான சேதுவிற்கும் இப்படத்திற்கும் ஓர் ஒற்றுமையுண்டு. முக்கியமானதொரு வேற்றுமையும் உண்டு. அது, சேது படத்திலுள்ள நேட்டிவிட்டி இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இவன் தான் நாயகனென உள்வாங்கிக் கொள்ள சிரமமாக உள்ளது. முக்கியமாகப் படத்தின் முதற்பாதி ஒட்டாமல் மிக அந்நியமாக உள்ளது. இரண்டாம் பாதியும் ஸ்லோவாகப் போனாலும், நாயகனின் வலியையும் காதலையும் தன் அநாயாசமான நடிப்பால் பார்வையாளர்களுக்குக் கடத்தி விடுகிறார். வசனங்களை மிகக் கவனமாகக் காது கொடுத்து கேட்டாலன்றி முழுவதுமாகப் புரியவில்லை. சட்டென ...
கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோமாவில் உள்ள கருப்புதுரை எனும் முதியவரைத் தலைக்கு ஊத்திக் கொல்லப் பார்க்கின்றனர். கோமாவில் இருந்து எழும் கருப்புதுரை, பிள்ளைகளின் திட்டம் அறிந்து மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு கோயிலின் பிரகாரத்தில் சந்திக்கும் குட்டி எனும் அனாதை சிறுவனுடனான நட்பு, ஆவர் வாழ்வில் புது வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிறுவனுக்கும், பெரியவருக்குமான அழகான நட்பின் பயணம்தான் படத்தின் கதை. தலைக்கூத்தல் என்பதை கருணைக் கொலை (Euthansia) என்ற வகைமைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். விருப்ப மரணத்தினைத்தான் அப்படிச் சொல்லமுடியும். இங்கு தமிழகத்தில் நிலவும் இப்பழக்கம், சுமை எனக் கருதும் பெரியவர்களை அகற்ற நடக்கும் குடும்பத்தினரால் திட்டமிடப்பட்ட கொலைகள். படத்தின் தொடக்கத்தில், ஓர் ஆவணம் போல் ‘தலைக்கூத்தல் அவசியமா? ஏன் அவசியம்?’ என்ற கேள்விகளை அணுகியுள்ளனர். அந்த ஆவணம் அதற்கு ஆதரவான குரலைத் தர...
இரும்புக் கடையின் நீல இசை

இரும்புக் கடையின் நீல இசை

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது, "நீலம் புரொடக்சன் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனைக் கொண்டுவந்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்க வைத்தாரோ, அதே போல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்?' என்ற ஆசை எனக்குள் இருந்தது. இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்" என்றார் நடிகை ஆனந்தி, "ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொந்...
சங்கத்தமிழன் விமர்சனம்

சங்கத்தமிழன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில், விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரே படத்தின் தலைப்பாகும். மருதமங்கலத்தில் காப்பர் ஃபேக்டரி நிறுவ நடக்கும் முயற்சியைச் சட்டத்தின் உதவியோடு சங்கத்தமிழன் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படத்தின் முதற்பகுதி சுமார் 1 மணி 10 நிமிடங்கள் கால அளவு ஓடுகிறது. கதையைத் தொடங்காமல், விஜய் சேதுபதியும் சூரியும் அநியாய மொக்கை போடுகிறார்கள். கதை தொடங்காததால், கதையோடு இயைந்த நகைச்சுவைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விஜய் சேதுபதி மாஸோ மாஸ் என்பதை நிறுவுவதற்காக மட்டுமே படத்தின் முதற்பாதியை உபயோகித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் விஜய் சந்தர். இரண்டாம் பாதியில், ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர். அப்பிரச்சனையில் நிகழ்ந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாமல், வழக்கமான கார்ப்ரேட் வில்லனின் அட்டூழியம் என்பதாகப் படம் பயணிக்கிறது. அந்தப் பயண...
சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
கெலிஸ்டோ எனும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஆயுதமாக மாற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவை திருடப்படுகின்றன. அது தீயவர்களின் கையில் சிக்காமல் தடுக்கின்றனர் சார்லிஸ் ஏஞ்சல்ஸ். தொலைக்காட்சித் தொடராகத் தொடங்கப்பட்ட பொழுது, கவர்ச்சியில் தாராளமாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. 2000 இலும், 2003 இலும், இத்தொடர் படமாக எடுக்கப்பட்ட பொழுது கேமரூன் டயஸ், ட்ரூ பேரிமோர், லூசி லியோ ஆகியோரையும் கூடக் கவர்ச்சிக்கென சில காட்சிகளில் பயன்படுத்தியிருந்தனர். 'இப்படத்தில் அத்தகைய குறைகள் இருக்காது' என இயக்குநர் எலிசபெத் பேங்க்ஸ் உறுதியளித்திருந்தாலும், படத்தின் தொடக்கக் காட்சிகளில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெண் இயக்குநர் என்பதால், ஒரு பெண்ணின் பார்வையில், ஏஜென்ட்களாக இருப்பதின் சங்கடங்கள் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். தயாரிப்பாளர்களில் ஒருவராகக் களமிறங்கியதோடு, திரைக்கதையையும் எழுதியுள்ளார...
ஆக்‌ஷன் விமர்சனம்

ஆக்‌ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிற்குத் தகுந்தாற்போல் படம் முழுவதும் விஷாலின் முழு நீள ஆக்‌ஷன் மட்டுமே! சுநதர்.சி படங்களின் வழக்கமான கலகலப்பை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சும். தேர்தலில் நின்று முதல்வராக வேண்டிய அண்ணனையும், தனது காதலியையும் கொன்றவர்களைத் தேடி லண்டன், இஸ்தான்புல், அங்கிருந்து தரை மார்க்கமாகப் பாகிஸ்தான் வரை சென்று பழி தீர்க்கிறார் இந்திய ராணுவத்தின் கர்னலான சுபாஷ். படம் தொடங்கியதுமே, 'அட!' போட வைக்குமளவு டட்லியின் ஒளிப்பதிவில் இஸ்தான்புலின் நிலப்பரப்பு ஈர்க்கிறது. விஷால் யாரை ஏன் அடிக்கிறார் என்று தெரியாவிட்டாலும், இஸ்தான்புல்லின் குன்றுகளாலான ஏரியாவும், அந்த அடுக்கி வைத்தாற்போல் இருக்கும் குடியிருப்புகளும், மர்டர் மிஸ்ட்ரி போல் தொடங்கும் படம் நாயகனின் புஜபல பராக்கிரமத்தை மட்டுமே நம்பிப் பயணிக்கிறது. படத்தின் முக்கியமான திருப்பங்களை எல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் கடந்துள்ளது மிகக் கடியாக உ...
டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து இயந்திரங்களால் பூமிக்கு அனுப்பப்படும் கொலை இயந்திரங்களே டெர்மினேட்டர்கள். 1984 இல் தொடங்கிய 'டெர்மினேட்டர்' தொடரின் எல்லாப் பாகங்களுக்கும் அநேகமாய் ஒரே கதை தான். என்ன செய்தாலும் அழிக்க முடியாத டெர்மினேட்டர் எனும் அதி நவீன வில்லனுக்கும், என்ன செய்தாவது டெர்மினேட்டர் கொலை செய்ய நினைக்கும் டார்க்கெட்டைக் காப்பாற்ற நினைக்கும் எதிர்கால மனிதர்கள் அனுப்பும் கலப்பு (ஹைப்ரிட்) மனிதனுக்கும் இடையே நடக்கும் துவந்த சண்டையே படத்தின் கதை. 1991 இல் வந்த 'ஜட்ஜ்மென்ட் டே' படம் இன்று பார்த்தாலும் ரசிக்க முடியும். ஆனால், தொடர்ந்து எடுக்கப்படும் தொடர் படங்களில், கதையில் புதிய விஷயங்கள் ஏதும் சேர்க்கப்படாதது, இந்தத் தொடர்ப்படங்களின் மிகப்பெரிய பலவீனம். இப்படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஆனால், இம்முறை ரேவ்-9 எனும் அதிநவீன டெர்மினேட்டரால் இரு உருவ...
கைதி விமர்சனம்

கைதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை மீட்க ஒரு குழு கமிஷ்ணர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறது; போதையூட்டப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளை லாரியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியான பிஜோய், லாரி ஓட்டக்கூடிய டில்லி எனும் சிறையில் இருந்து விடுதலையான நபரின் உதவியை நாடுகிறார்; அந்த லாரியில் இருக்கும் 5 அதிகாரிகளை மட்டும் கொல்ல பல குழுக்கள் வட்டமிடுகின்றன. கதாநாயகி இல்லாத படம்; அதனால் டூயட்டும் இல்லை; ஓரிரவில் நடக்கும் கதை என வழக்கமான படத்திலிருந்து மிக ஃப்ரெஷான மேக்கிங்கில் கவர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், மீடியாவிற்குச் செய்தி கசிந்துவிடும் என அஞ்சி கமிஷ்ணர் ஆஃபீஸைப் பாதுகாக்க பேட்டலியனின் உதவியை நாட மாட்டேங்கிறார் பிஜோய் என கதை விட்டுள்ளதை ஏற்க முடியவில்லை. போலீஸ் என்ன சொல்லுகிறதோ அது தானே செய்தி? இரவில் எமர்ஜென்சிக்குப் பத்திருபது காவலர்களைக் கூட கமிஷ்ணர் ஆஃ...
பிகில் விமர்சனம்

பிகில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'ப்யூகல் (Bugle)' என்பதொரு ஊது கருவி. பொதுவாக இராணுவத்திலும், ஸ்கெளட்டிலும் ப்யூகலை உபயோகிப்பார்கள். அதன் மழூஉவே 'பிகில்'. தற்போது அது விசிலுக்கான மாற்று சொல் என்பது போல் திரிபடைந்துவிட்டது. இப்படத்தில், பிகில் என்பது சிறந்த கால்பந்தாட்ட வீரரான மைக்கேலின் ஜெர்சியில் இடம்பெற்றிருக்கும் செல்லப்பெயர். மேலும், டீமின் கோச் விசில் ஊதி வீரர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சியளிக்கிறார் என்பதாகத் தலைப்பினைக் காரணப் பெயராகவும் கொள்ளலாம். மைக்கேல் தலைமை வகிக்கும் அணி 'கப்' அடிக்க வேண்டுமென்பது அவரது தந்தை ராயப்பனின் ஆசை. ராயப்பனின் கண் முன்பே அந்தக் கனவைச் சரிக்கும் மைக்கேல், பின்பு மைக்கேல் ராயப்பனாக தனது தந்தையின் கனவை எப்படி நனவாக்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் ஒரே ஒரு காட்சி கூடப் புதிதாக அமைக்கப்படவில்லை. பலமுறை பல படங்களில் பார்த்துப் பழகிய, அடுத்து என்னவென்று சுலபமாய் யூகிக்கக் கூடியதா...
பெளவ் பெளவ் விமர்சனம்

பெளவ் பெளவ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சிறுவனுக்கும், அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள நேசம் பற்றிய கதை. 110 நிமிடப் படம். முதற்பாகத்தில் சிறுவனும், இரண்டாம் பாகத்தில் நாயும், கதையை நகர்த்தும் பிரதான பாத்திரங்களாக உள்ளனர். லண்டன் டாக்கீஸ் K.நடராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். மாஸ்டர் அஹான், அவனது தாத்தா பாட்டி, எதிர் வீட்டில் வசிக்கும் ஓர் அங்கிள் ஆன்ட்டி. அஹான் பிறந்தவுடனே அவனது பெற்றோர் இறந்துவிடுதால், அதிர்ஷ்டம் கெட்டவன் என அவனது வகுப்பில் பயிலும் ஒரு மாணவனின் அம்மாவால் முத்திரை குத்தப்படுவதால், அவனை நண்பர்களாக ஏற்க யாரும் முன் வருவதில்லை. பள்ளிக்குப் போகும் வழியிலோ, போகும் பொழுதும் வரும் பொழுதும் தெரு நாய் ஒன்றின் தொந்தரவு. இவையனைத்தும் அஹானை எப்படிப் பாதிக்கின்றன என்பதும், எதிர்வீட்டு தம்பதியின் காதல் கதையும் படத்தின் முதற்பாதி. எதிர்வீட்டு அங்கிள் - ஆன்ட்டியாகவும், காதல் திருமண...