Shadow

திரை விமர்சனம்

ஈக்வலைஸர் 2 விமர்சனம்

ஈக்வலைஸர் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தன் கண்ணெதிரே தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து மீட்டு, தவறைச் சரி செய்வதால் நாயகனுக்கு ஈக்வலைஸர் எனும் குறியீட்டுப் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளனர். முதல் பாகம் பார்த்தவர்கள், ராபர்ட் மெக்காலை நெருக்கமாக உணர்வார்கள். இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முந்தைய பாகம் போலின்றி, முதல் ஃப்ரேமிலேயே அதிரடி ஆக்ஷனை ஆரம்பித்து விடுகிறார் ராபர்ட் மெக்காலாக வரும் டென்செல் வாஷிங்டன். இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கி இரயில் ஓடும் மலைப்பாதை மிக அற்புதமான இயற்கை எழிலில் அமைந்துள்ளது. அந்த இயற்கையின் அமைதிக்கு எந்தப் பாதகமும் விளைவிக்காமல், கடத்தப்படும் குழந்தையைச் சொற்ப நொடிகளில் மிக அசால்ட்டாக மீட்கிறார் மெக்கால். அவருக்கு எல்லாமே மிக நேர்த்தியாக ப்ரோட்டோகால் படி கனகச்சிதமாகக் குறித்த நேரத்தில் நிகழவேண்டும். மனைவியை இழந்து, தன் அடையாளத்தை அழித்துக் கொண்டு நடைப்பிணமாய் மறைந்து வாழும...
ஏகாந்தம் விமர்சனம்

ஏகாந்தம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சென்னையில் பணி புரிபவர் விவாந்த். கிராமத்தில் இருக்கும் தனது மாமன் மகளைக் காதலித்து வருகிறார். அத்தை மகன் மீது உயிரையே வைத்துள்ளார் நீரஜா. அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம், திடீரென நின்று விடுகிறது. அக்கல்யாணம் ஏன் எதற்காக நின்றது என்றும், அது குடும்பங்களுக்குள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்றும் கதை நீள்கிறது. கிராமத்துப் பண்பாட்டிற்கும், நகரத்து நாகரீகத்துக்கும் உள்ள ஏற்ற இறக்கங்களைச் சொல்ல முயற்சி செய்கிறது படம். கதைக்குள் செல்லாமல், முதல் பாதியில் படம் ஏற்படுத்தும் சலிப்பு ஏகத்துக்கும் நெளிய வைக்கிறது. முன்னோர்கள் நமக்களித்த சிலம்பம், சித்த மருத்துவம் எல்லாம் அழிந்து கொண்டு வருகிறதும் அவற்றைக் காக்கவேண்டியது நம் பொறுப்பு என வலியுறுத்தும் காட்சிகளுக்குப் பிரத்தியக கவனமும் முக்கியத்துவமும் அளித்துள்ளார் இயக்குநர் ஆர்செல் ஆறுமுகம். மனோபாலாவின் உதவியாளரான இவர், ஜெயா டீவி...
ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கான்ஸ்டபிள் ராஜாக்கு எழுத்தாளர் ரங்குஸ்கி மீது பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. யாரோ ஒரு அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர்க்கும் ரங்குஸ்கி மீது காதல். அந்த அநாமதேய தொலைப்பேசி அழைப்பாளர், ராஜாவை ஒரு கொலைக் குற்றத்தில் லாகவமாகக் கோர்த்து விட்டுவிடுகிறான். அதிலிருந்து ராஜாவும் ரங்குஸ்கியும் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை.எழுத்தாளர் சுஜாதாவிற்குப் படத்தை டெடிகேட் செய்துள்ளனர். ரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜனின் செல்ல வடிவம். நாயகி, சுஜாதாவின் தீவிர ரசிகை என்பதால் தனது புனைப்பெயராகச் சூடிக் கொள்கிறாள். நாயகன் ராஜாவோ, சுஜாதாவின் அதி தீவிர வாசகன். அவனது வீட்டுச் சுவரில் சுஜாதாவின் புகைப்படங்கள். படத்தின் மர்டரி மிஸ்ட்ரியையும் சுஜாதாவின் பாணியில் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர்.தனது பெயரில் பதியப்பட்ட சிம் நம்பரில், தனது குரலிலேயே பேசி அலைக்கழிக்கும் நபர் யாரெ...
சாமி² விமர்சனம்

சாமி² விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக சாமி ஸ்கொயர் வந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு ஜம்ப் எடுத்து ஆறுச்சாமியின் வாரிசு, பெருமாள் பிச்சையின் வாரிசுகளை வேட்டையாடுவதுதான் படத்தின் கதை. ஆறுச்சாமியே வேட்டையாடி இருந்தால் அது சாமி 2 ஆக இருந்திருக்கும். ராம்சாமிக்குள், ஆறுச்சாமியின் ஆவி புகுந்து வேட்டையாடுவதால் படத்திற்கு சாமி ஸ்கொயர் என்ற குறியீட்டுப் பெயர் சாலப் பொருந்தும். சாமி படத்தின் பலம் அதன் வில்லனான கோட்டா ஸ்ரீநிவாச ராவ். அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் ஆளுமையான வில்லன். உடற்பல பராக்கிரமத்தை மட்டும் நம்பும் வெற்றுக் கூச்சலில்லாதவர் பெருமாள் பிச்சை. அவருக்கு மாற்றாக 'பிச்சை க்யூப்' என மூன்று வில்லன்களை இறக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இளைய மகன் ராவணப் பிச்சையாக பாபி சிம்ஹா; மூத்த மகன் மகேந்திரப் பிச்சையாக ஓ.ஏ.கே.சுந்தர்; இடையில், தெய்வேந்திர ப...
யு டர்ன் விமர்சனம்

யு டர்ன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய 'யு டர்ன்' எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் 'கேர்ஃபுல்' என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. ஆனால், அப்படி யு டர்ன் எடுத்த அன்றே அவ்வனைவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகின்றனர். அது தற்கொலையா, கொலையா என்று, நாயக் எனும் காவல்துறை அதிகாரியின் உதவியோடு துப்புத் துலக்குகிறார் ரட்சனா. வேளச்சேரி மேம்பாலத்தில், யு டர்ன் எடுத்தவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களுக்கு, முழு நீள த்ரில்ல...
சீமராஜா விமர்சனம்

சீமராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"முத்து, அருணாச்சலம், லிங்காலாம் பார்த்திருக்கீங்களா பங்கு? அதுல வர்ற மாதிரி நான் பெரிய பணக்காரனாவும், ராஜ பரம்பரையாவும் வரணும்" - சிவகார்த்திகேயன் "வர வச்சுடலாம்." - பொன்ராம் "எம்.ஜி.ஆர்., ராஜாவ நடிச்சு கத்திச்சண்டை போடுற படம்லாம் பார்த்திருக்கீங்க?" "ஓ.. பார்த்திருக்கேனே! சிறப்பா பண்ணிடலாம்." "ஐய்யோ பங்கு! அப்படிலாம் பண்ணிடாதீங்க. 'இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்டா!' என ஓட்டிடுவானுங்க மீம் பசங்க." - சி.கா "அப்ப ரஜினி மட்டும் போதுங்கிறீங்களா? ராஜா கெட்டப் வேணுமா?" - பொ.ரா "கண்டிப்பா வேணும் பங்கு. எம்.ஜி.ஆர். லெவலுக்குப் போனா வைவாங்க, அதுமில்லாம அது ரொம்ப ஓல்ட் ஸ்டைல். நாம சின்னதா பாகுபலி அளவுக்கு, ராஜமெளலி 'மஹாதீரா'ல வச்ச மாதிரி லேசா ராஜா சீனை வச்சுப்போம்." "சரி அப்படியே பண்ணிடலாம்." "முழுசா பாகுபலி மாதிரியும் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர். டச் கண்டிப்பா வேணும். நம்பியார் கிட்ட இருந்து ம...
வஞ்சகர் உலகம் விமர்சனம்

வஞ்சகர் உலகம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வஞ்சகர் சூழ் உலகிற்கு, சமூகத்தின் சில பிற்போக்குத்தனமான பார்வைகளும், பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும், காலாவதியான சட்டங்களுமே காரணமாக அமைகின்றன என்பது மிகவும் துரதிர்ஷ்டம். காலமாற்றமும் அதற்குத் தோதான சட்டங்களும், சக மனிதன் மீதான பார்வையை, மேலும் கரிசனத்துடனும் நட்புடனும் மாற்றும் என நம்புவோமாக! படம் மெதுவான தாள லயத்தில் பயணிக்கிறது. இந்த லயத்திற்கு, இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் என்பது மிக நீண்ட நேரமாய்த் தோற்றமளிக்கிறது. போதைப்பொருள், மணி லாண்டரிங் போன்ற சட்டவிரோத செயல்களை நிழலில் இருந்து இயக்கும் துரைராஜைப் பிடிப்பது, இளம்பெண் மைதிலியைக் கொன்றது யாரென விசாரிப்பது என்று கதை இரண்டு குதிரைகளின் மேல் ஒரே நேரத்தில் சவாரி செய்கிறது. மைதிலியின் கொலையில் இருந்து படம் தொடங்குவதால், அந்த ஒன்றின் மீதே இயக்குநர் மனோஜ் பீதாவும், கதாசிரியர் V.விநாயக்கும் சவாரி செய்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு க...
தொட்ரா விமர்சனம்

தொட்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு சம்பவங்களை ஒன்றாக இணைத்து ஒரே படமாக எடுத்துள்ளதாக விளம்பரப் பதாகைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆணவக் கொலையை மையப்படுத்திய படமும் கூட! ஆணவக்கொலை சம்பந்தமான இரண்டு சம்பவங்களையும் திரையில் பதியப்படவேண்டும் என்ற எண்ணத்திற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். படத்தின் தொடக்கமே உடுமலைப்பேட்டையில் ஷங்கர் கொலை செய்யப்பட்டது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. கதாபாத்திரத்தின் பெயரும் ஷங்கரே! ஆனால், அவரது காதலியின் பெயர் திவ்யா. அதாவது, கதாநாயகிக்குத் தர்மபுரி இளவரசனின் காதலி பெயரை வைத்துள்ளார் இயக்குநர். நாயகியின் அண்ணன் கதாபாத்திரம் பெயர் பவுன்ராஜ். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை யுவராஜின் குறியீடாகக் கொள்ளலாம். ஷங்கர் திவ்யாவைக் காதலித்தார் என எழுதவே நெருடலாக உள்ளதால், நாயகன் ப்ரித்விராஜன் நாயகி வீணாவைக் காதலித்தார் எனக் கொள்ளலாம். ப்ரித்விராஜ் நாயகன் என்றாலும், பவுன்ராஜாக வ...
60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)' என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. 'கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு' என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், '60 வயது மாநிறம்' எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் தந்தை எங்குப் போனார், எப்படிக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் கதை. ராதாமோகன் மீண்டும் ஒருமுறை தன் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் அறிமுகமான நொடி முதல் படம் கலகலப்பாகிறது. கொலைக்காரர்களான சமுத்திரக்கனியிடமும், அவரது அசிஸ்டென்ட்டிடமும் மாட்டிக் கொள்ளும் குமரவேலின் கவுன்ட்ட...
ஆருத்ரா விமர்சனம்

ஆருத்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைளுக்கு எதிரான வன்முறையைப் பேசும் படமென பா.விஜயே, இசை வெளியீட்டில் படத்தின் ஒரு வரிக் கதையைச் சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு, இல்லையில்லை பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்களே போலீஸாக இருந்து பாதுகாக்கவேண்டும் என்பது தான் படம் முன் வைக்கும் அழுத்தமான கருத்து. படம் ஆகாயவதத்தில் தொடங்கி, நிலசதுக்கத்தில் முடிகிறது. அதாவது பஞ்சபூதங்களைக் கொண்டு, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களைப் பழிவாங்குகிறார் படத்தின் நாயகனான சிவமலை. ஜல சமாதி, அக்னி சாபம், காற்றுப்படலம் என இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் வைத்துக் கொல்கிறார். ஆனால், படத்தின் முதற்பாதியில் பா.விஜய் மிகவும் இம்சிக்கிறார். நான் கடவுள் இராஜேந்திரனையும் கே.பாக்யராஜையும் கொண்டு மிக அசட்டுத்தனமான மலிவான நகைச்சுவை, திணிக்கப்பட்ட கவர்ச்சி, ஐட்டம் சாங் என அநியாயத்திற்கு ஒப்பேத்தி நெளிய வைத்துவிடுகிறார். எதிர் வீட்டுப் பெண்ணை நான் கடவுள் இராஜேந்திரன...
இமைக்கா நொடிகள் விமர்சனம்

இமைக்கா நொடிகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை. ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு டப்பிங் தர மகிழ் திருமேனியையும் தேர்வு செய்ததற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதை முழுதும் ரசிக்க முடியாதளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக அதர்வா - ராஷி கண்ணாவின் காதல் அத்தியாயம் குறுக்கிடுகிறது. படத்தின் நீளமோ அயர்ச்சித் தருமளவுக்கு இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களாக உள்ளது. ந...
சுடானி ஃப்ரம் நைஜீரியா

சுடானி ஃப்ரம் நைஜீரியா

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
திருவனந்தபுரம் பொறியியற் கல்லூரிக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் அங்கேயிருந்த கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள் மலபார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். மலப்புரத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பதினைந்து மணி நேரம் பயணம் செய்து ஆட்டம் முடித்த உடனேயே ஞாயிறன்றே இரவோடிரவாகத் திரும்பி வரும் ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். கால்பந்தாட்டம் என்பது மலபார் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை பெரும்போதை என்பதை உணர்ந்த காலம் அது. பேசும்போது கூட உலகப் புகழ் பெற்ற ஆட்டக்காரர்களைப் பற்றி மட்டுமில்லாமல் ஸ்பானிஸ் ஜெர்மன் இங்கிலிஸ் லீகுகளில் ஆடும் ஆட்டக்காரரகள் குறித்தும் விரல் நுனியில் தகவல் வைத்திருப்பார்கள் அவர்கள். அதிலும் பதினொருவர் ஆடும் ஆட்டத்தை வெட்டிச் சுருக்கி எழுவர் ஆடும் ஆட்டமாக மாற்றி, 'செவன்ஸ்' என்று நாமகரணம் சூட்டி மலபாரின் மூல...
லக்ஷ்மி விமர்சனம்

லக்ஷ்மி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்ற சிறு பொறி லக்‌ஷ்மியாக வளர்ந்துள்ளது. லக்‌ஷ்மி எனும் சிறுமிக்கு நடனம் என்றால் உயிர். எங்கும் எப்பவும் நடனம். தனது அம்மாவிற்குத் தெரியாமல், மும்பையில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்து கொள்கிறாள். லக்‌ஷ்மியின் கனவு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதாநாயகியாக சிறுமி தித்யா. பேருந்து நிறுத்தத்தில், சாலையில், குளியலறையில், பள்ளியில், பேருந்தில், டீக்கடையில் (Cafe'teria) என ஆடிக் கொண்டே இருக்கிறார். தெய்வத்திருமகளில் சாரா, தியாவில் வெரோனிகா என அவர் ஆடிஷனில் தேர்வாகும் சிறுவர்கள் அனைவரும் உள்ளத்தைக் கவர்பவர்கள். தித்யாவும் தனது நடனத்தால் கவர்கிறார். அவரது முகம் வடக்கத்தைய சாடையாக இருப்பதாலும், அழுத்தமற்ற திரைக்கதையாலும், 'நம்ம பொண்ணு' என்ற உணர்வு எழவில்லை. லக்‌ஷ்மி போட்டியில் ஜெயித்து விடுவாள் என்பது உள்ளங்கை நெல்லிக்...
ஆல்ஃபா விமர்சனம்

ஆல்ஃபா விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஆல்ஃபா என்பது தலைமை பொறுப்பில் உள்ள ஆளுமையைக் குறிக்கும் சொல். குறிப்பாக, தனது கூட்டத்தில் தலைமைப் பதிவு வகிக்கும் மிருகத்தை அப்படிச் சொல்வார்கள். படத்தின் மையக்கருவும் அதுதான். ஆல்ஃபா என்ற அங்கீகாரம் தரப்படுவதல்ல, உறுதியை நிரூபித்துப் பெறப்படுவது. 20000 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில், ஓர் இனக்குழு காட்டெருது (Bison) வேட்டைக்குச் செல்கிறது. அக்குழுவின் தலைவன் தன் மகன் வேகேடாவை வேட்டைக்கு அழைத்துச் செல்கிறான். தன் மகனுக்கு அவர் சொல்லும் பாடம், தலைவர் பதவி தரப்படுவதல்ல, சக்தியை நிரூபித்துப் பெறப்படுவது. கேடாவின் சிறு பலவீனத்தால் அவன் காட்டெருதால் தூக்கி வீசப்படுகிறான். மலை முகட்டில் இருந்து, இடையில் பாறையில் விழும் கேடாவை அவனது குழு இறந்துவிட்டதாக நினைத்துவிடுகிறது. அவர்களைப் போலவே வழுக்கைத் தலை கழுகொன்றும் நினைத்து கேடாவின் இரத்தம் வழியும் வாயைக் கொத்துகிறது. கழுகின் தலையைப் பிடித்து மலைய...
களரி விமர்சனம்

களரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
களரி என்பது பழந்தமிழர் தற்காப்புக் கலை. 'போர்க்களம்' என்ற பொருளில் படத்தின் தலைப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது. மிகத் தைரியமான பெண்ணான தேன்மொழி மீது பாசமாக உள்ளார் பயந்தாங்கொள்ளி அண்ணன் முருகேஷ். தங்கையின் கல்யாணத்திற்காக ஓடியோடி உழைக்கிறார். அன்வரைக் காதலிக்கும் தேன்மொழிக்கு, மூர்த்தியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். மூன்று மாதங்களில், தேன்மொழி தன்னைத் தீயிட்டுக் கொள்கிறாள். ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் முருகேஷ் தன் தங்கையின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்துப் பழி வாங்குகிறாளா என்பதுதான் படத்தின் கதை. கொச்சியில் குடியேறிய தமிழர்கள் வசிக்கும் பகுதியான வாதுருத்தி தான் படத்தின் களம். கதாபாத்திரங்கள் அனைவரும் கேரளாவிலேயே பிறந்த தமிழர்கள். நாயகனின் குடிக்காரத் தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் தவிர்த்து அனைவரும் மலையாளம் கலக்காத தமிழே பேசுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான செனித் கெலோத...