Shadow

திரை விமர்சனம்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஷ்மீர் ஆசிபா, அயனாவரம் சிறுமி போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கண்ணுறும்பொழுது, மனிதரகள் இவ்வளவு ஆபத்தானவர்களா என்ற நடுக்கம் அடிமனதில் இருந்து எழுந்தது. சக மனிதர்கள் என்று மனதில் எழும் நெருக்கம் மெல்ல அமிழ்ந்து, இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் எழுகிறது. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் யாரும் அத்தகைய பயத்தை விதைப்பவர்களில்லை. சிறை சென்றுவிட்டு வரும் மாமன் டேவிட்டும், ரோட்டில் அநாதையாகத் திரிந்து அடிபட்டு வளரும் மருமகன் தாமஸும் இணைந்து ஸ்வேதாவைக் கடத்துகின்றனர். ஸ்வேதா, தாமஸின் காதலி. ஸ்வேதாவும், தாமஸும் இணைந்து டேவிட்டை ஏமாற்றி எல்லாப் பணத்தையும் சுருட்ட முடிவு செய்கின்றனர். யார் யாரை ஏமாற்றுகின்றனர் என்பதே படத்தின் கதை. ஃபிரான்சிஸ் டி'செளசாவாக யோகி பாபு நடித்துள்ளார். தாமஸின் ரூம் மேட்டாக வரும் இவர் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவிடவில்லை. ஸ்வேதாவின் அப்பாவாக ஜெயக...
மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

சமூகம், சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த உணர்வையும், கோம்பையில் இருந்து கேரள எல்லை இடுக்கி மாவட்டம் வரை மலையைச் சுற்றிப் பார்த்த ஒரு திருப்தியையும் தருகிறது படத்தின் விஷுவல். மனம் பிசகிய பாட்டி ஒருவர் தன் கையிலுள்ள வளையல்களை எண்ணிக் கொண்டிருப்பார். தகதகக்கும் பொன்னிற சூரிய வெளிச்சத்தின் பின்னணியில் வரும் அந்த ஷாட்டு ரசனையின் உச்சம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் ...
கோலமாவு கோகிலா விமர்சனம்

கோலமாவு கோகிலா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை. ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வன்மம் மிகவும் அச்சுறுத்துகிறது. காதலில் விழுந்த சேகராக யோகி பாபு. எல்.கே எனும் லக்‌ஷ்மண குமாராக அன்புதாசன் நடித்துள்ளார். அவரது அறிமுகமே அட்டகாசம் எனினும் யோகி பாபுவுடனான அவரது காட்சிகளில் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். 'சாய்பாபா படத்தை 30 பேருக்கு ஷேர் பண்ணா...
ஓடு ராஜா ஓடு விமர்சனம்

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தில் வேலையை விட்டு எழுத்தாளர் ஆகிவிடுகிறான் மனோகர். நர்ஸாக வேலை புரியும் அவனது மனைவி மீரா தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். மனோகரிடம் பணம் கொடுத்து, செட்-டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறாள் மீரா. தனது நண்பன் பீட்டருடன் செட்-டாப் பாக்ஸ் வாங்கக் கடைக்குப் போகும் மனோகர், ஒன்றிலிருந்து மற்றொன்றெனப் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சிக்கல்களில் இருந்து மனோகர் மீண்டு, வீட்டுக்குச் செட்-டாப் பாக்ஸ் வாங்கிக் கொண்டு போனானா என்பதுதான் படத்தின் கதை. ஆனாலும், கதையை இப்படி நேர்க்கோட்டிற்குள் அடைத்து விட முடியாது. மூன்று கிளைக் கதைகள், மையக் கதையுடன் நான்-லீனியராக ஒட்டி உறவாடுகிறது. ஒன்று, வேஷ்டி சட்டை கேங் சகோதர்களான காளிமுத்து மற்றும் செல்லமுத்துவின் தந்தையான பெரியதேவர், தன் மகன்கள் இருவரும் ரெளடியிசத்தை விட்டுவிடவேண்டுமெனச் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். தந்த...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாட்டு, ஒரு அழகான காதல் பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்திருக்கும் இப்படமோ, ‘செயின் ஸ்னாட்சிங்’ பற்றிய படம். சுலபமாய் உருக்கிவிடக்கூடிய தங்கம் தான், மறைந்திருந்து பெண்களின் கழுத்தை மர்ம கும்பல் நோட்டமிடக் காரணம். பெண்களின் செயினை அறுப்பது வெறும் கொள்ளைக் குற்றம் மட்டுமில்லை, அது அட்டெம்ப்டட் மர்டரில் வரும் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. நகை அணிந்து கொண்டு, இரவில் ஒரு பெண் தனியாக, என்று நடக்கிறாளோ அன்று தான் உண்மையாகச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் எனக் காந்தி சொன்னதை மாற்றி, என்று ஒரு பெண் பகலில் தைரியமாக நகையணிந்து நடக்க ஆரம்பிக்கிறளோ, அன்று தான் சுதந்திரம் எனப் படத்தின் இறுதியில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளார் இயக்குநர். பெண்களின் தங்கச்சங்கிலியை அறுக்கும் கும்பலிடம் இருந்து சங்கிலியைப...
விஸ்வரூபம்.. II விமர்சனம்

விஸ்வரூபம்.. II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2013 இல் வந்த விஸ்வரூபம் படத்தின் முதல் 45 நிமிடங்கள் இப்பொழுது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் ஃப்ரெஷாக இருக்கும் அப்படத்தின் இரண்டாம் பாகம் என்றால் எதிர்பார்ப்பைக் கேட்கவேண்டுமா என்ன? ஓமரை உயிருடனோ, பிணமாகவோ விசாம் அகமது காஷ்மீரி பிடிப்பது தான் இரண்டாம் பாகத்தின் கதையென, முதற்பாகம் பார்த்த அனைவரும் இலகுவாக யூகித்துவிடுவர். அமெரிக்காவைக் காப்பாற்றிய கையோடு, விசாம் அகமது காஷ்மீரி நேராக இந்தியா வந்திருக்கலாம். ஆனால், சேகர் கபூரின் பிரிட்டிஷ் நண்பரின் சடலத்தைத் தர இங்கிலாந்து செல்கின்றனர். போன இடத்தில், இங்கிலாந்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கமலின் தோள்களில் விழுந்துவிடுகிறது. 'சீசியம் பாம்'-இன் மீதான காதலைப் புறந்தள்ள முடியாமல் இயக்குநர் கமல் தத்தளித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இங்கிலாந்தைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு இந்தியாவிற்கு வந்தால், ஆண்ட்ரியாவையும் பூஜா குமாரையும் வில்ல...
பியார் பிரேமா காதல் விமர்சனம்

பியார் பிரேமா காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல். நிறையக் காதல் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். மிகச் சாதாரணனான ஸ்ரீகுமாரும், அதி நவீனமான சிந்துஜாவும் காதலிக்கின்றனர். ஸ்ரீகுமார்க்குக் கல்யாணம் பண்ணிக் குடும்பம் குட்டியோடு வாழ ஆசை; சிந்துஜாவிற்குத் தன் லட்சியக் கனவை அடைய கல்யாணமும் குழந்தையும் தடையாக இருக்கும் என எண்ணும் லிவ்விங் டுகெதர் யுக பெண். அப்போ இருவருக்குமிடையேயான காதல்? அதுதான் படத்தின் கதை. படத்தில் மூன்று நாயகர்கள். ஒன்று படத்தைத் தயாரித்து, இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து, கலை இயக்குநர் E.தியாகராஜன். கடைசியாகப் பிரதான நாயகனெனச் சொல்லக் கூடிய அளவு இளமைத் துள்ளலை வண்ணமயமாகத் திரையில் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சர்யா. பாடல் காட்சிகள் தோன்றும் பொழுதெல்லாம், திரையரங்கில் இளைஞர்களின் ஆரவாரம்தான். ஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். சிந்துஜாவாக நடித்துள்ள கதாநாயகி ரெய்ஸாவைக் காட்டிலும் க்யூட்டான முகபாவனைகளில்...
காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்த படமென்று இசை வெலியீட்டு விழாவில் சொன்னதோடு நில்லாமல், படத்தின் தொடக்கத்தில் தலைப்புப் போடும் முன் நேரடியாகவும் தோன்றித் திரையிலும் சொல்கிறார் இயக்குநர் யுரேகா. அதென்ன கருத்து என்பதை க்ளைமேக்ஸில் நாயகன் ஜெய்வந்த் வசனமாகச் சொல்கிறார். தமிழ்நாட்டில் சிகப்பு விளக்கு பகுதி வேண்டுமென, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலமாக ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார் யுரேகா. அதன் நீட்சியாக இப்படத்திலும், “லைட்டுங்கோ, ரெட்டு (reddu) லைட்டுங்கோ” என்றொரு பாடலை முன் வைத்துள்ளார். கஞ்சா எனும் சிவமூலிகையை உபயோகித்தால் தெளிவு பிறக்குமென, “சிவசம்போ” என்றொரு பாடல். “புத்திசாலிங்க கையில நாடு” என சமூக நிலையைத் துகிலுரிக்கும் பாடலெனப் படத்தின் இசை ஆல்பம் விஜய் ஷங்கரின் இசையில் வித்தியாசமாக உள்ளது. “சைக்கோ உன்னைத்தேடி” என்ற பாடல் படத்தின் கதையை ஒட்டி கானா ரஹிமான் குரலால் பெப்பி...
அரளி விமர்சனம்

அரளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலேயே குறியீடாகக் கதையைச் சொல்லிவிடுகின்றனர். பூக்களாகத் தோன்றும் அரளி, பூக்கள் உதிர்ந்து விஷமாய் எஞ்சுகிறது. எத்தனை பேருக்கு இது புரியுமென்ற கவலையில், இயக்குநர் படத்தலைப்பின் பொருளை க்ளைமேக்ஸில் வசனமாகவும் வைத்துள்ளார். அவரது இந்தக் கவலை படத்தின் தொடக்கக் காட்சியில் இருந்தே அப்பட்டமாய்த் தெரிகிறது. நேரடியாகக் கதைக்குள் சென்று, அது யாருக்கேனும் புரியாவிட்டால் என்ன செய்வதென அஞ்சி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இன்னாரென்று வாய்ஸ்-ஓவரில் அறிமுகப்படுத்துகிறார். நாயகிக்கு, மனிதர்களை விடப் பணமே பிரதானமாய் உள்ளது. அதற்காக அவர் எந்த எல்லைக்குப் போகிறார் என்றும், அதனால் எத்தகைய பாதிப்புகள் விளைகிறது என்பதும்தான் படத்தின் கதை. உள்ளபடிக்குக் கதை இடைவேளையின் பொழுது தான் தொடங்குகிறது. அதற்கு முன்பான திரைக்கதை, கதைக்கு உதவாத பில்டப்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. கணேசன் எனும் பாத்திரத்திற்கு வேலை போகக...
மணியார் குடும்பம் விமர்சனம்

மணியார் குடும்பம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது மகன் உமாபதியை அவையத்துள் முந்தி இருக்கச் செய்ய, கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி, மணியார் குடும்பத்தை இயக்கித் தயாரித்துள்ளார் தம்பி ராமையா. "லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்" என மைனா படத்தில் பேசிய வசனத்தை ஒன்-லைனாக எடுத்துக் கொண்டுள்ளார் தம்பி ராமையா. மாமன் மகனான குட்டிமணியைக் காதலிக்கிறாள் அத்தை மகளான மகிழம்பூ. அந்தக் காதலால் குட்டிமணியின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. காவல்துறை உயரதிகாரி நல்லவனாக சமுத்திரக்கனி இரண்டு காட்சிகளில் தோன்றி மறைகிறார். "என் தம்பி" என்ற அடைமொழியுடன் அவரது பெயரைத் திரையில் காட்டுகிறார் தம்பி ராமையா. 'கலக்கப் போவது யாரு' ராமரும் தங்கதுரையும், சிங்கம்புலி, சிங்கமுத்து, ராதாரவி Y.G.மகேந்திரன் போன்றோர் கெளரவத் தோற்றத்தில் வருகின்றனர். அனைவரும் தனக்குரிய காட்சிகளை நிறைவாகச் செய்துள்ளனர். ஒரு பாடலுக்கு யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ள...
கஜினிகாந்த் விமர்சனம்

கஜினிகாந்த் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார். இத்தகைய தீவிர ஞாபக மறதியுடைய கஜினிகாந்த்க்குக் காதல் வந்தால்? தனது மறதியை மீறி எப்படித் தன் காதலில் ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை. ‘பலே பலே மகாதிவோய்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீ-மேக் இந்தப் படம். ‘ஹர ஹர மஹாதேவகி’ புகழ் சன்தோஷ் P.ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்...
எங்க காட்டுல மழை விமர்சனம்

எங்க காட்டுல மழை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஊரை விட்டுச் சென்னைக்கு வந்துவிட்ட முருகனுக்கும் குபேரனுக்கும் ஒரு பெட்டி நிறைய அமெரிக்க டாலர்கள் ($) கிடைக்கிறது. அப்பணத்தைத் தொலைத்த சேட்டு ஒருபுறமும், அதைச் சேட்டிடம் இருந்து திருடிய போலீஸ் அதிகாரியொருவர் மறுபுறமும் தேடுகின்றனர். அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் முருகனும் குபேரனும் எப்படித் தப்பிக்கின்றனர், பணம் என்னானது என்பதுதான் படத்தின் கதை. முருகனாக மிதுன் மகேஸ்வரன் நடித்துள்ளார். படத்தில் எந்தக் கதாப்பாத்திரத்திற்கும் வலுவான பின்னணி இல்லை. சென்னை வரும் முருகனுக்கு, 'மதுரைக்காரன்' என்ற ஒரே காரணத்திற்காக வீடு கிடைக்கிறது. அதுவும் மிக மிகச் சுலபமாக. அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் படத்தின் எல்லாக் கதாப்பாத்திரங்களும் இப்படித்தான் வந்து செல்கின்றன. இளமைத் துள்ளலுடன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், மிதுன் மகேஸ்வரன், முருகன் எனும் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். எந்தப்...
கடிகார மனிதர்கள் விமர்சனம்

கடிகார மனிதர்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு மகள், இரண்டு மகன், கணவன், மனைவி எனக் கிஷோரின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, வீட்டைக் காலி செய்யவேண்டிய இக்கட்டான சூழல் நேர்கிறது. பொருட்களை வண்டியில் ஏற்றிய பின்பே வீடு தேடி அலைகின்றனர். பல போராட்டத்திற்குப் பிறகு, 3500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு வீட்டில் அதிகபட்சம் நான்கு பேர் ...
ஜுங்கா விமர்சனம்

ஜுங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கோகுலும், விஜய் சேதுபதியும் இணையும் படம். இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களை விட அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள படம். படத்தில் வரும் டான் ஜுங்கா தான் கஞ்சமே தவிர, படத்தின் பிரம்மாண்டத்திற்காக விஜய் சேதுபதி தாராளமாகவே செலவு செய்துள்ளார். ஜுங்காவிற்கு, விற்கப்பட்ட 'சினிமா பாரடைஸ்' எனும் தனது தாய் வழி பூர்வீக சொத்தான திரையரங்கினை மீண்டும் வாங்கவேண்டும் என்று ஆசை. ஆனால், திரையரங்கத்தை விற்க மறுத்துவிடுகிறார் கோடீஸ்வரச் செட்டியார். லிங்கா, ரங்கா என்ற பாரம்பரிய டான் ஃபேமிலியில் வந்த ஜுங்கா, திரையரங்கை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. டான் படங்களைக் கலாய்க்கும் ஸ்பூஃப் மூவியாகப் படம் தொடங்குகிறது. திடீரெனச் சீரியசாகி, பின் ஸ்பூஃபாக, சீரியஸ், ஸ்பூஃப் எனப் படம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால் 157 ந...
ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
225 மாடிகளைக் கொண்ட விண்ணைத் தொடும், ‘பேர்ள் (Pearl)’ எனும் கோபுர நகரமொன்றை ஹாங்காங்கில் நிர்மாணிக்கிறார் தொழிலதிபர் சாவ் லாங் ஜி. 3500 அடி உயரமான அந்தக் கோபுரத்தின் 96வது தளத்தில், ராக்கின் குடும்பம் மட்டும் தனியாக வசிக்கிறது. ராக், அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் காவலர் பொறுப்பை ஏற்கிறார். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், கோபுரத்திற்குள் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்து, கோபுரத்தின் தானியங்கி தீயணைக்கும் பாதுகாப்பு வசதியையும் நிறுத்திவிடுகிறான். பிரம்மாண்டமான பேர்ள் நகரத்திற்குள் சிக்கிக் கொள்ளும் தன் குடும்பத்தை ராக் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. ட்வெயின் ஜான்சன் எனும் ராக்-கோடு, இயக்குநர் ராசன் மார்ஷல் தர்பர் இணையும் இரண்டாவது படமிது. சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் படத்தில், ஸ்டேண்ட்-அப...