Shadow

திரை விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சதுரங்க வேட்டை இயக்குநரின் அடுத்த படைப்பு என்ற ஆவல் ஒரு பக்கம் என்றால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் போலீஸைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று எதிர்பார்ப்பு மறுபக்கம். இந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் வினோத் நூறு சதவிகிதம் பூர்த்திச் செய்துள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாக, நெடுஞ்சாலையில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் நடக்கும் கொடூரமான கொலை, கொள்ளைகளைத் துப்புத் துலக்கி, அதற்குக் காரணமானவர்களை எப்படிக் கஷ்டப்பட்டு கொள்ளையர்களின் வேரைத் தீரன் திருமாறன் கலைகிறார் என்பதே படத்தின் கதை. ராஜஸ்தானின் பவேரியர்கள் செய்தது திருட்டில் வராது; வழிப்பறிக் கொலையில் வரும். ஐந்தல்லது ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டால் அது வழிப்பறி (Dacoity) ஆகும். பவேரியர்கள் கொடூரமாக அடித்துக் கொல்கிறார்கள் என்ற சித்தரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அம்மனநிலைக்கான பின்புலத்தை...
அறம் விமர்சனம்

அறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாஞ் செயல் ஆந்திர எல்லையில் இருக்கும் காட்டூர் எனும் கிராமத்தில், தன்ஷிகா எனும் நான்கு வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகிறாள். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மதிவதனி, எப்பாடுபட்டாவது சிறுமியை மீட்டு விட வேண்டுமெனப் போராடுகிறார். கண் கலங்காமல், இப்படத்தைப் பார்த்து விடுவது இயலாததொரு காரியம். சுபமான முடிவு தானெனினும், ஒரு சிறுமியை மீட்க கலெக்டர் தலைமையிலான அரசாங்க ஊழியர்கள் திணறுவதைப் பார்க்கப் படபடப்பாக உள்ளது. இது படமாக இல்லாமல், பார்வையாளர்களின் கண் முன்னே உண்மையிலேயே நடப்பது போன்று மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படம். அந்தப் பெற்றோரின் தவிப்பை, ஊர் மக்களின் கோபத்தை, கலெக்டரின் கையறு நிலையை, ஃபையர் சர்வீஸ் ஆட்களின் இயலாமையை, ஆளுங்கட்சியின் ‘பவர் பாலிட்டிக்ஸ்’ குறுக்கீட்டை எனப் படம் அத்தனை விஷயங்களையும் உணர வைக்கிறது. படம் பதைபதைப்...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்த...
அவள் விமர்சனம்

அவள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிறைவேறாத ஆசையுடன் இருக்கும் ஆவியொன்று, 80 வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குடி புகுபவர்கள் மூலமாகத் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கதைக்கு, 'அவள்' என்பதை விட இன்னும் பொருத்தமான தலைப்பைச் சூட்டியிருக்கலாம். பேய்கள் என்றாலே, அவை பெண்ணாகத்தான் இருக்க வேண்டுமென்ற டெம்ப்ளட்டை வலுவாக்கும் விதம் உள்ளது தலைப்பு. ஆண்ட்ரியா சித்தார்த் முதல் சந்திப்பை, அது காதலாக மாறுவதை, அவர்களுக்கு இடையேயான அன்யோன்யத்தை எனப் படத்தின் தொடக்கம் க்யூட்டானதோர் அத்தியாயமாக எடுக்கப்பட்டுள்ளது. பேய்ப் படம் என்றால் காமெடிப் படமென அந்த ஜானருக்கே புது அடையாளம் கொடுத்துவிட்டார்கள் தமிழ் சினிமாவில். அதிலிருந்து விலகி, சீரியசனாதொரு படமாக இது உள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சித்தார்த்தாலும், இயக்குநர் மிலிந் ராவாலும் எழுதப்பட்ட கதை இது. கதாசிரியர்களாக இருவரின் கூட்டணி அபார வெற்றி பெற்றிரு...
திட்டிவாசல் விமர்சனம்

திட்டிவாசல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திட்டிவாசல் என்றால் பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில் ஆகும். கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும் போது ஆட்கள் உள்ளே சென்று வருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே திட்டிவாசல். படத்தின் தலைப்போ, மத்திய சிறைச்சாலையின் உட்கதவான திட்டிவாசலைக் குறிக்கிறது. படத்தின் டைட்டில் அனிமேஷனே, சிறைச்சாலை திட்டிவாசலில் இருந்து பான்-அவுட் (Pan-Out) ஆகி மத்தியச் சிறைச்சாலையின் முகப்பிற்கு வந்து நிற்பதுதான். சிலரின் பகாசூரப் பேராசைக்கு, முள்ளம்பாறை எனும் மலைக்கிராம மக்கள் எப்படி பலியாகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. மகேந்திரன், வினோத் கின்னி என இரண்டு நாயகர்கள் படத்தில். அவர்களுக்கு தனு ஷெட்டியும், ஐஸ்வர்யாவும் முறையே ஜோடிகள். இயற்கையைக் கூறு போடும் சுரண்டலைப் பற்றிப் படம் பேசுவதால், பிரதான பாத்திரங்களான இவர்களுக்குக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையில்லை. என்றாலும், செம்பருத்தியா...
பிளேட் ரன்னர் 2049 விமர்சனம்

பிளேட் ரன்னர் 2049 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
படத்தின் கதை 2049இல் நடக்கிறது. 1982இல் வந்த இப்படத்தின் முதல் பாகமான 'பிளேட் ரன்னர்' 2019 இல் நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தின் தொடர்ச்சி தான் என்றாலும், சுருக்கமாக முன் கதை போல் ரெப்ளிகன்ட்ஸ் என்றால் யார், பிளேட் ரன்னர்களின் வேலையென்ன என்று படத்தின் தொடக்கத்திலேயே எழுத்துக்களாகப் போட்டு விடுவது சிறப்பு. அதனால் முதல் பாகம் பார்க்கவில்லையென்றாலும் கதை நன்றாக புரியத் தொடங்கிவிடும். ரெப்ளிகன்ட்ஸ் என்றால் மனிதர்களின் வேலைக்காரர்கள் எனக் கொள்ளலாம். மனிதர்களை விட வலிமையான ரெப்ளிகன்ட்ஸின் உடல், ரத்தம் சதை எலும்புகளால் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்படும். 2019 இல், அதாவது முதல் பாகத்தில் வரும் ரெப்ளிகன்ட் எல்லாம் நெக்சஸ்-6 வகையைச் சார்ந்தது. அதன் வாழ்நாட்களே மொத்தம் நான்கு வருடங்கள்தான். அதற்கு மேல் உயிர் வாழவிட்டால், அவர்களின் உணர்ச்சிகள் விழித்தெழுந்து விட்டால் மனிதர்களின் இருத்தல...
களத்தூர் கிராமம் விமர்சனம்

களத்தூர் கிராமம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திடீரென்று ஒரு படம் நல்லதொரு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு படம் தான் ‘களத்தூர் கிராமம்’. பழி வாங்கும் கதை என மூன்றே வார்த்தையில் படத்தின் கதையைச் சுருக்கி விடலாம். ஆனால், எந்தச் சமயத்தில் யார் யாரைப் பழி வாங்குகிறார்கள் என்பதும், கதைக்களமும் காலமும் தான் படம் ஏற்படுத்தும் ஆச்சரியத்திற்குக் காரணம். ஒரு மகன் தனது தந்தையைக் கொல்ல நினைக்கின்றான்; தந்தையின் மரணத்தித்திற்காக ஓர் ஊரையே காவு வாங்க நினைக்கின்றான் அதிகாரத்தில் இருக்கும் ஒரு மகன்; தனது திருமணம் நின்றதற்குக் காரணமாக இருந்ததால் நண்பனைப் பழி வாங்குகிறான் சபலன் ஒருவன்; தனக்கொரு பிரச்சனை என வந்த பொழுது உதவாதவனை நேரம் பார்த்துச் சிக்கலில் மாட்டி விடுகிறான் பூசாரி; மகன் சாவிற்குக் காரணமான ஒருவனை அவனது மகனைக் கொண்டே கொல்லத் துடிக்கும் ஒரு முதிய தம்பதி; தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க நினைக்கும் பண்ணையார் மகன் எனப் படத்தில் அத்த...
மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள் கொள்ளலாம். இந்தத் தலைப்பை அட்லி, இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தின் மெர்சலாயிட்டேன் பாடலின் வரிகளில் இருந்து 'இன்ஸ்பையர்' ஆகி எடுத்திருக்கச் சாத்தியங்கள் உள்ளன. கபிலனின் அந்தப் பாடல் வரிகளைப் பார்த்தால், பயத்தால் மிரள்வது மெர்சல் அல்ல என்று புரியும். ஒரு திகைப்பில், ஆச்சரியத்தில் எழும் பரவச உணர்வு என்பதாக மெர்சலுக்குப் பொருள் வருகிறது. படத்தில் அத்தகைய மெர்சல் உணர்வு மூன்று நபர்களுக்கு எழுகிறது. முதலாவதாக, ஃபிரான்ஸ் கேஃபே-வில் காஜல் அகர்வாலுக்கு. கையிலிருக்கும் ஒரு பணத் தாளில் இருந்து, விஜய் நிறைய பணம் வர வைக்கும் பொழுது. இரண்டாவதாக, நியூஸ் சேனல் வாசலில் நிற்கும் சமந்தாவிற்கு. பந்து பொறுக்கிப் போடும் தம்பி தான் ஐந்து ரூபாய் டாக்டர் மாறன் எனத் தெரிய வரும் பொழுது. மூன்றாவதாக, கிராமத்தில் பெரிய மருத்துவமனைக் கட்டடத்தை டீன் எஸ்.ஜே.சூர்யா...
மேயாத மான் விமர்சனம்

மேயாத மான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான் என்ற தலைப்பு மிகவும் ஆச்சரியமூட்டுகிறது. ஏன் பரவசமூட்டுகிறது என்று கூடச் சொல்லலாம். தலைப்பு விஷயத்திலேயே நாயகன் ஓர் அடிப்படை நேர்மையைக் கடைபிடித்துள்ளார் என்றே தோன்றுகிறது. 'ஸ்ரீவள்ளி (1945)' படத்தில் வரும் பாடல் வரியில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. முருகன் வள்ளியைக் கரெக்ட் செய்யப் பாடும் பாடலில், வள்ளியினது கற்பைப் போற்றும் வகையில் வரும் பதம்தான் 'மேயாத மான்'. அதாவது படி தாண்டா விர்ஜின் கேர்ள் என்பதன் கவித்துவ பதம் தான் மேயாத மான். ஆனால் இதையே இயக்குநர் ரத்ன குமார், நாயகன் தான் மேயாத மான் என மிகச் சாதுரியமாக நிறுவுகிறார். ஒரே வகுப்பில் படித்தும், மூன்று வருடமாக நாயகியிடம் காதலைச் சொல்லாத நாயகன் (இதயம் முரளி) தான் மேயாத மேனாம். கண் முன் புல்லுக்கட்டு இருந்தும் அதை மேயாதவன், அதாவது காதலைச் சொல்லாததால் நாயகன் மேயாத மேனாம். அடடே.! ஆனால், நாயகனுக்கு ஏன் நாயகியைப் பிடிக்கி...
சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் கதை கோயம்புத்தூரில் நடந்தாலும், கோவைக்கு மாற்றலாகும் சென்னையில் ஒரு நாள் படத்தின் கதாபாத்திரமான காவல்துறை உயரதிகாரி சுந்தரபாண்டியனைச் சுற்றி கதை நிகழ்கிறது. ஆனால் இது முந்தைய படத்தின் தொடர்ச்சியோ நீட்சியோ இல்லை. இப்படம் துருவங்கள் பதினாறு போல் ஒரு க்ரைம் த்ரில்லர். அந்தப் படத்தின் தாக்கத்தையும் படத்தில் உணர முடிகிறது. 'ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?' எனக் கோவை முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்படுகிறது. ஏஞ்சல் பெயரில் ஒரு மிரட்டல் கடிதம் காவல் அதிகாரி சுந்தரபாண்டியன் வீட்டிற்கு வருகிறது. சென்னையில் இருந்து கோவை வரும் ஏஞ்சல் எனும் பெண் கடத்தப்படுகிறாள். இது மூன்று சம்பவங்களுக்கும் காரணகர்த்தா யார் எனத் துப்பு துலக்குவது தான் படத்தின் கதை. ராஜேஷ்குமாரின் நாவலொன்றினைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் என கிரெடிட் கொடுத்திருப்பது சிறப்பு. படம் முழுவதும் சுந்தரபாண்டியனாக நடித்திருக்கும் சரத்குமார்...
விக்டோரியா & அப்துல் விமர்சனம்

விக்டோரியா & அப்துல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பொறாமை கொள்ள வைக்கும் கதைக்கரு. மகாகனம் பொருந்திய இங்கிலாந்து பேரரசிக்கும், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பணியாளரான அப்துல் கரீம்க்கு இடையேயான நட்பினைச் சொல்லும் படம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எனக் காட்டி, பின் சில மைக்ரோ நொடிகளில் ‘பெரும்பாலும்’ என்ற வார்த்தையைக் குசும்புடன் இணைக்கிறார் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ். இந்தக் கதைக்கருவிற்கு ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒரு வார்டு கவுன்சிலரையே மையக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவரைக் கலாய்க்க இயலாத முதிர்ச்சியற்ற உணர்ச்சி பொங்கும் சமூகத்தில் இருந்து, இப்படத்தை நோக்கினால் எழும் பிரம்மாண்ட பிரமிப்பைத் தவிர்க்கவே முடியவில்லை. படத்தின் முதற்பாதி அங்கதம் மிகவும் ரசிக்க வைக்கிறது. உதாரணத்திற்கு, அப்துலும் மொஹமதும் இங்கிலாந்து துறைமுகத்தில் காலடி வைத்ததும், அவர்களை வரவேற்கும் ஆங்கிலேயர், “நாகரிகத்திற்கு வரவேற்கிறோம்” என்கிறார். பின்னணிய...
கருப்பன் விமர்சனம்

கருப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை. வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் கதைமாந்தர்கள் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, 'ஆலுமா டோலும...
ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முரளீதர சுவாமிகளின் உபன்யாச தொனியை இமிடேட் செய்து, யாரோ ஓர் அநாமதேய நபர், பாலியல் நெடி கமழச் சொன்ன கதைகள் மிகப் பிரபலமாகப் பரவியது. அவர் தமிழ்ச் சமூகத்துக்கு அளித்த கொடையே 'ஹர ஹர மஹாதேவகி' எனும் அற்புதமான பதம். அந்த அநாமதேய ஆடியோவின் வெற்றிக்குக் காரணம், அவை ரகசியமாக அளித்த கிளுகிளுப்பே! அவ்வளவு நேரடியாகவும் வெளிப்படையாகவும் இல்லாவிட்டாலும், பாலியல் இரட்டை அர்த்த வசனங்களை, இவ்வளவு பதற்றமின்றி இயல்பாகவே சபைக்குக் கொண்டு வந்தது நாட்டுப்புற கலைகள். அவற்றின் வீழ்ச்சியோடும், காலத்தின் நாகரீக மாற்றத்தாலும், பாசாங்கும் பாலியல் வறட்சியும் நம்மிடம் மிகுந்து விட்டது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் மொக்கையாய் இரட்டை அர்த்தத்தில் பேசி அதைப் போக்கிக் கொள்ள முனைகிறோம். உதாரணத்திற்கு, சந்திரமுகி படத்தில் கேரம்போர்ட் விளையாடும் பொழுது, 'காயைப் பார்த்து அடிக்கணும்; முதலில் எல்லாத்தையும் கலைக்கணும்' என ரஜினி...
ஸ்பைடர் விமர்சனம்

ஸ்பைடர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்கு நடிகரான பிரின்ஸ் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்; படத்தின் பட்ஜெட் 125 கோடி என நீளும் சிறப்புகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது, இது ஏ.ஆர்.முருகதாஸின் படம். பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் ஒற்று (SPY) வேலை செய்கிறார் நாயகன். அப்படிக் கேட்பதில் இருந்து கிடைக்கும் மைனாரிட்டி ரிப்போர்ட்-டினைக் கொண்டு, தவறுகள் நடக்கும் முன் தடுக்கிறார் ஸ்பைடரான நாயகன். இறந்தவர்களினுடைய உறவினர்களும் நண்பர்களும் அழுகின்ற குரல்களைக் கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் (sadist) ஒருவனை, ஒற்றேவல் புரிந்து பிடிக்கிறார் ஸ்பைடர். அவன் தீட்டி வைத்திருக்கும் கொடூரமான திட்டங்களை ஸ்பைடர் தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் ஹைதராபாதில் தொடங்கி அங்கேயே முடிகிறது. படத்தின் தொடக்கத்தில், கதாபாத்திரங்களின் உதட்டசைவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரம்...
பிச்சுவாகத்தி விமர்சனம்

பிச்சுவாகத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இனிகோ பிரபாகர், யோகி பாபு, ரமேஷ் திலக் ஆகிய மூவரும் நண்பர்கள். ஓர் ஆட்டினைத் திருடி போலீஸில் மாட்டிக் கொண்டு, கும்பகோணம் காவல் நிலையத்தில் ஒரு மாதம் கையெழுத்து போடவேண்டும் என நீதி மன்றத்தில் தீர்ப்பாகிறது. அந்தக் காவல் நிலையத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரி, மூவரிடமும் தலா பத்தாயிரம் கேட்கிறார். கையில் பணமில்லாச் சூழலில், அவர்களின் நிலை என்னாகிறது என்பது தான் படத்தின் கதை. படத்தில் ஒரு கிளைக்கதையும் உண்டு. இரண்டாம் நாயகனான செங்குட்டுவனுக்கு அனிஷாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதல் வந்துவிடுகிறது. நாயகிக்காகச் செங்குட்டுவனும் எம்.எல்.எம்.-இல் சேர்கிறான். அந்த எம்.எல்.எம். எபிசோட், எப்படி இளைஞர்களை ஏமாற்றுகிறது என அழகாகப் பதிந்துள்ளார் இயக்குநர் ஐயப்பன். இளைஞர்களுக்கு ட்ரெயினிங் தரும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் காளி வெங்கட். பாலசரவணனிடம் மாட்டி அவர் குட்டு உடையும் காட்சி ரசிக்க வைக்கிறது. ...