Shadow

திரை விமர்சனம்

ஸ்கெட்ச் விமர்சனம்

ஸ்கெட்ச் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி கட்டாதவர்களின் வண்டிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் நாயகன், தாதாவான ராயபுரம் குமாரின் காரைத் தூக்குவதால் அவனது கோபத்திற்கு உள்ளாகிறான். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. ஸ்கெட்சிற்கு வண்டிகளைப் பறிமுதல் செய்ய உதவும் நண்பர்களாக 'கல்லூரி' வினோத், 'கபாலி' விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் வருகின்றனர். படத்தில், ஸ்டைலான பளபளப்பான பரோட்டா சூரியும் உண்டு. ஆனால், நாயகனின் நண்பனாகவோ, நகைச்சுவைக்காகவோ இல்லாமல், கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். சேட்டாக ஹரீஷ் பெராடி நிறைவாக நடித்துள்ளார். படத்தின் திரைக்கதை, தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொண்டு சுவாரசியப்படுத்த முற்படவில்லை. விக்ரமின் உடல்மொழியும், வசனம் உச்சரிக்கும் தொனியும் ஒரு டெம்ப்ளட்க்குள் உறைந்துவிட்டதாகவே தெரிகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வது மிக அவசியம். காரின...
குலேபகாவலி விமர்சனம்

குலேபகாவலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள நகைச்சுவைப் படமாக எடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கல்யாண். குலேபகாவலி கோவில் மதில் சுவரருகே புதைக்கப்பட்டிருக்கும் புதையலை, நான்கு திருடர்கள் இணைந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களுக்குப் புதையல் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படத்தின் வகைமை காமெடி என முடிவு செய்து விட்டதால் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை இயக்குநர் கல்யாண். பி.எம்.டபுள்யூ. கார் வைத்திருக்கும் காவல்துறை அதிகாரி மயில் வாகனமாக சத்யன் நடித்துள்ளார். அவருக்கு வாழ்வில் நான்கு எதிரிகள். அவர்களைப் பழி வாங்குவது தான் அவரது வாழ்நாள் லட்சியமென்பதாக ஒரு தனி அத்தியாயமே வைத்துள்ளனர் படத்தில். சபதத்தை எடுக்கவிட்டு சத்யனைக் கதையில் இருந்து ஓரங்கட்டி விடுகின்றனர் கதையில். இப்படி, கதாபாத்திர அறிமுகங்கள் கோர்வையில்லாமல் தனித்தனியே தொக்கி நிற்கின்றன. காரணம் படத்தில் அத்தனை கதாபாத்...
சங்குசக்கரம் விமர்சனம்

சங்குசக்கரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளுக்கான ஒரு ஸ்பூஃப் பேய்ப்படம். தெறிக்க விட்டாலும், பேய்கள் யாரையும் கொல்வதில்லை. மாறாகச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தன் அறிவை மேம்படுத்திக் கொள்கின்றன பேய்கள். பாழடைந்த கோட்டை போன்ற பங்களாக்குள் சிக்கிக் கொள்ளும் ஒன்பது சிறுவர்களை பணப்பேய் பிடித்த மனிதர்கள் கொல்லப் பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சிறுவர்களைப் பேய்கள் எப்படிப் பாதுகாக்கின்றன என்பதுதான் படத்தின் கதை. படத்தில் அழகழகான சிறுவர்களின் பட்டாளம் ஒன்றுள்ளது. குட்டிப் பேய் மலராக நடித்திருக்கும் மோனிகா செம க்யூட். தனிமையில் விளையாட ஆள் இல்லாமல் தவிக்கும் அந்தக் குட்டிப் பேய்க்குச் சிறுவர்களைப் பார்த்ததும் செம குதூகலமாகி விடுகிறது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ள திலீப் சுப்புராயன், ஆகாயம் எனும் குழந்தைக் கடத்தல்காரனாக நடித்துள்ளார். நல்ல காமிக்கலான கதாபாத்திரத்தை நகைச்சுவையாகச் செய்துள்ளார். ...
ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காட்டுக்குள் ஜாலியான அட்வென்ச்சர் சஃபாரிக்கு உத்திரவாதம் அளிக்கிறது படம். பள்ளியில் நான்கு மாணவர்களை 'டெடன்ஷன்' செய்து அவர்களுக்கு ஓரறையைச் சுத்தம் செய்யும் பணியைத் தருகின்றனர். அங்குள்ள 'ஜுமான்ஜி' எனும் வீடியோ கேமை விளையாடி அதற்குள் உறிஞ்சப்படுகின்றனர் மாணவர்கள். ஜுமான்ஜி காட்டின் சாபத்தை அவர்கள் போக்கினால் தான் அந்தக் காட்டில் இருந்தும், விளையாட்டில் இருந்தும் வெளியேற முடியும். ஜுமான்ஜியின் சாபத்தை மாணவர்கள் எப்படிப் போக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மாணவர்கள் விளையாட்டுக்குள் போகும் பொழுது, வேறு உருவத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவதாரங்களில் காட்டுக்குள் விழுகின்றனர். அதில், மேக்கப் மற்றும் செல்ஃபி விரும்பியான பெத்தானி எனும் பள்ளி மாணவி, 'கர்வி ஜீனியஸ்' என்று அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து ஆணாக ஜுமான்ஜியில் உலா வருகிறார். அந்தக் கதாபாத்திரம், அதாவது நடு வயது ஆணின் உடம்புக்குள் பு...
மாயவன் விமர்சனம்

மாயவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலைகள், கொலையாளி இறந்த பின்னும் தொடர்ந்து நடக்கின்றன. யார் இக்கொலைகளைச் செய்வது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் மாயவன் படத்தின் கதை. மாயவன் – யார் கண்ணுக்கும் தெரிவதில்லை; அவனுக்கு இறப்பும் நேருவதில்லை. உடல்களை மட்டும் மாயவன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஆனால், இது கூடு விட்டு கூடு பாயும் கதையில்லை. தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் முதல் படமிது. நேரத்தை வளர்க்காமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடுகிறார். அதுவும் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே, ஒரு கொலைச் சம்பவத்தைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்க்க நேரிடுகிறது எனச் சுவாரசியமான ஒரு காட்சியினை வைத்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலும், இசையமைப்பாளர் ஜிப்ரானும், அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ளனர...
சென்னை2சிங்கப்பூர் விமர்சனம்

சென்னை2சிங்கப்பூர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் அப்பாஸ் அக்பர். சிங்கப்பூர் அரசின் மீடியா டெவலப்மென்ட் வாரியமும் (MDA), தமிழ்த் திரையுலகமும் கை கோர்த்துள்ள முதற்படமிது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராகும் கனவில் ஹரீஷ் சென்னையில் இருந்து சிங்கப்பூர் பயணிக்கிறான். அங்கு அவனுக்கு என்ன நடந்தது என்றும், நினைத்தது போல் திரைப்படம் இயக்கினானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நாயகன் கோகுல் ஆனந்த பல ஃப்ரேம்களில் துல்கரை ஞாபகப்படுத்தும் சாடையில் உள்ளார். ஏமாற்றப்படும் கோபத்தில் அவர் செய்யும் ஒரு காரியம், அவரது ஃப்யூச்சரைத் தலைதெறிக்க ஓடச் செய்கிறது. ஆம், ஃப்யூச்சரே (எதிர்காலம்) தான். ஃப்யூச்சர்கள் எனப் பன்மையில் கூடச் சொல்லலாம். அவரது கனவு அவரை விட்டு தூரம் செல்கிறது எனப் படத்தின் தொடக்கமே காமிக்கலாகக் காட்டப்படுகிறது. “யார்றா இவன்? எங்கிருந்துடா வர்றான்?”...
அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அருவியில் நனைவது போல் சிலர்ப்பூட்டும் விஷயம் வேறு ஏதேனும் உண்டா? அதன் அழகில் மயங்கி, கீழ் நோக்கிப் பாய்ச்சலாய் எழும் அதன் வேகத்தில் தலையை நுழைப்பது விவரிக்க இயலா ஆனந்தத்தைத் தந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்டத் தொடங்கிவிடும். சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அருவியில் கரைவது குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இப்படமும் அத்தகைய உணர்வுகளையே ஏற்படுத்துகிறது. அருவி எனும் இளம்பெண்ணின் வாழ்க்கை, அதன் பாதையில் இருந்து விலக நேர்கிறது. எங்கோ தொடங்கி எப்படியோ முடிகிறது அருவியின் வாழ்க்கை. ஜீ டி.வி.யின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியைச் ’சொல்வதெல்லாம் சத்தியம்’ எனச் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்துள்ளனர். மீம்ஸ் யுக மேம்போக்கான கிண்டல் இல்லை. அவர்கள் தரப்பு சங்கடங்களையும் பதிந்துள்ளது சிறப்பு. ஒவ்வொரு எபிசோடையும் பிளான் செய்ய, ஆட்களை ஒருங்கிணைக்க, தொகுப்பாள...
சத்யா விமர்சனம்

சத்யா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1988 இல் வந்த கமல் படத்திற்கும், இப்படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; படத்தின் நாயகன் பெயர் சத்யா என்பதைத் தவிர்த்து. தெலுங்குத் திரையுலகில், 2016இன் தொடக்கத்தில் வெளிவந்த 'க்ஷணம்' என்ற வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கே இந்த "சத்யா" படம். ஆஸ்திரேலியாவில் பணி புரியும் சத்யாவிற்குத் தன் முன்னாள் காதலியான ஸ்வேதாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவளைப் பார்க்கச் சென்னை செல்றான் சத்யா. தன் மகளைக் காணவில்லை என்றும், தேடித் தரும்படியும் சத்யாவைக் கேட்கிறாள் ஸ்வேதா. அப்படியொரு மகளே ஸ்வேதாவிற்கு இல்லையெனக் காவல்துறையினரும், ஸ்வேதாவின் கணவனும் திட்டவிட்டமாகச் சொல்லிவிட, அடுத்து என்னாகிறது என்பதுதான் படத்தின் த்ரில்லிங் கதை. சதீஷைக் காமெடியனாக ஏற்றுக் கொள்வதிலேயே மனத்தடை விலகாத பட்சத்தில், அவரைச் சீரியசான பாத்திரத்தில் நடித்திருப்பதை உள்வாங்கிக் கொள்ள சிரமமாய் உள்ளது. ஆனால், தலையும் புரிய...
ரிச்சி விமர்சனம்

ரிச்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரிச்சி எனும் ரிச்சர்ட்டின் வாழ்க்கை எவ்வாறு எதனால் திசை மாறி, அவன் வாழ்க்கை என்னானது என்பதுதான் படத்தின் கதை. 2014இல் வெளியான 'உள்ளிடரு கண்டன்தே' என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும். ஓர் அசாத்திய பொறுமையைக் கோருகிறது படம். துண்டு துண்டாய், அத்தனை கதாபாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் கதையை நேர்க்கோட்டிற்குக் க்ளைமேக்ஸில் கொண்டு வரும் முன் ஒரு வழியாகிவிடுகிறோம். படத்தில் கையாண்டுள்ள கதை சொல்லும் பாணிக்கு நாம் தயார் ஆகாதது ஒரு காரணம் என்றாலும், மெதுவாகத் தனித்தனி காட்சிகளாகக் கோர்வையற்று நகரும் திரைக்கதையே அதற்குப் பிரதான காரணம். தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டதால் கிறிஸ்துவப் பின்னணியில் கதை நகர்கிறது. கதை தொடங்கும் முன், அனிமேஷனில் சொல்லப்படும் மீனவன் கதையை உள்வாங்கிக் கொள்ள முடியாதளவு வேகமாகவும் அந்நியமாகவும் உள்ளது. அந்த முன் கதை, படத்தின் கதையைப் புரிந்து கொள்ள அவசியம். அது என்ன சிலை...
கொடிவீரன் விமர்சனம்

கொடிவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொடிவீரன் எனும் பெயர் கொண்ட சாமியாடியின் அருள்வாக்கு பலிதம் ஆகிறது. தீர்க்கதரிசணங்கள் நிகழ்ந்தே தீரும் என்ற மனிதனின் ஆதி நம்பிக்கை தான் படத்தின் மையச் சரடு. வீரன் என்பதை நாயகன் கொடிவீரன் என்றும், கொடி என்பதை அவன் மனம் கவர்ந்த மலர்க்கொடி என்றும் கூடத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். ஆனால், கொடிவீரனுக்கும் அவன் தங்கை பார்வதிக்கும் உள்ள பாசப்பிணைப்புத்தான் கொடிவீரன் படத்தின் கதை. பெண் கதாபாத்திரங்களை வழிபாட்டுக்குரியவர்களாகத் தன் படைப்புகளில் சித்தரித்து வருபவர் இயக்குநர் முத்தையா. இந்தப் படத்தின் தொடக்கமும் அப்படியொரு உணர்வுபூர்வமான அத்தியாயமே! ரத்தினச் சுருக்கமாய், அது பல விஷயங்களைப் பேசி விடுகிறது. சமூகத்தில் வேர் விட்டிருக்கும் ஆணாதிக்க மனோபாவம், குற்றவுணர்வின்றி அதைப் பெருமையாகக் கருதும் ஆண்கள், அத்தகைய ஆண்களுக்குத் துணையாக இருக்கும் 'ஆம்பளடா!' கடவுள்கள் என அந்தக் காட்சிகளில் பொதிந்திருக்...
12-12-1950 விமர்சனம்

12-12-1950 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரஜினி பிறந்த நாள் தான் படத்தின் தலைப்பு. தொண்ணூறுகளில் நாயகனாக நடித்த செல்வா தான் படத்தின் இயக்குநர் செல்வா. 1998இல் கோல்மால் எனும் படத்தை இயக்கிய பின், 19 வருடங்கள் கழித்து இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார். தன் பெயரையும் கபாலி செல்வா என மாற்றிக் கொண்டுள்ளார். அந்தளவிற்கு செல்வா ஒரு தீவிர ரஜினி ரசிகர். ரஜினி படத்துப் போஸ்டரை ஒருவன் கிழித்து விட, அதைத் தட்டிக் கேட்கச் செல்லும் ரஜினி ரசிகரான குங்ஃபூ மாஸ்டர் எதிர்பாராத விதமாக அவனைக் கொன்று விடுகிறார். சிறையில் இருக்கும் தனது மாஸ்டர், கபாலி படத்தை முதல் நாள் பார்க்கவேண்டுமென அவரால் வளர்க்கப்பட்ட மாணவர்கள் விரும்புகின்றனர். சிறையில் இருக்கும் மாஸ்டரை எப்படி அவரது மாணவர்கள் பரோல் எடுக்கின்றனர் என்பதும், கபாலி படத்தை மாஸ்டர் பார்த்தாரா இல்லையா என்பதும் தான் படத்தின் கதை. மாஸ்டரின் மாணவர்களாக ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரஷாந்த் கிருபாகரன்...
அண்ணாதுரை விமர்சனம்

அண்ணாதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘அண்ணாதுரை’ எனும் தலைப்பு வைத்ததற்கு எந்தச் சிக்கலும் எழாதது அதிசயத்திலும் அதிசயம். ஆனாலும் உண்மை. அனைவரும் எதிலோ பிசியாக இருந்து விட்டதால், இந்தப் படத்துக்கு இலவச விளம்பரம் கிடைக்காமல் போய்விட்டது. அண்ணாதுரையும் தம்பிதுரையும் இரட்டையர்கள். விதி அவர்கள் வாழ்வைப் புரட்டிப் போட, தியாகத்தில் சிறந்தவர் யாரென்று இருவருக்குள் நடக்கும் போட்டிதான் படத்தின் கதை. விஜய் ஆண்டனி முதன்முறையாக இரட்டையர்களாகத் தோன்றியுள்ளார். தாடி இருந்தால் அண்ணன், இல்லாவிட்டால் தம்பி. போதையில் இருந்தால் அண்ணன், தெளிவாக இருந்தால் தம்பி. விஜய் ஆண்டனிக்கு அம்மா சமைத்துக் கொடுத்தால் அவர் அண்ணாதுரை, அம்மாவிற்கு விஜய் ஆண்டனி சமைத்துக் கொடுத்தால் அவர் தம்பிதுரை. படத்தின் தலைப்பு வரும் முன், வருகின்ற விஜய் ஆண்டனியின் அறிமுகம் மிக அட்டகாசமாய் உள்ளது. ஆனால் அந்தப் பூர்வாங்க பில்டப், அதோடு முடிந்து விடுவது துரதிர்ஷ்டம். யமன் படத்...
திருட்டுப்பயலே – 2 விமர்சனம்

திருட்டுப்பயலே – 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அவன் இவன் ரகசியத்தை, இவன் அவன் அந்தரங்கத்தை என ஒருவரை ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவிக் கொண்டு உளவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவனா, இவனா, வல்லவன் எவனோ அவனே வெல்வான் என்பதுதான் படத்தின் கதை. உளவுத்துறைப் பிரிவைச் சேர்ந்த ஒட்டு கேட்கும் காவல்துறை அதிகாரி செல்வமாக பாபி சிம்ஹா நன்றாக நடித்துள்ளார். அவரொரு காட்சியில், தன் அம்மாவின் கையைப் பிடித்தவாறு, "தொழில்நுட்பம் கொல்லுதும்மா" என்பார். அது தான் படத்தின் மையச் சரடு. நம்மைச் சுற்றிச் சுற்றி ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் செவிகளுடனும் இருக்கும் தொழில்நுட்பத்தில் இருந்து ஓடவோ ஒளியவோ முடியாது என்பதுதான் படம் அச்சுறுத்தும் உண்மை. கூடவே வாழ்ந்தாலும், தன் மனைவி அகல் விளக்கின் ரசனைகள் பற்றி பாபி சிம்ஹாவிற்குப் பெரிதாய்த் தெரிவதில்லை. ஆனால், அகல்விளக்கிற்கு ஃபேஸ்புக்கில் நண்பராய் இருக்கும் பால்கி எனும் பாலகிருஷ்ணனுக்கு எல்லாம் தெரிகிறது. அகல்விளக்காய...
தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

தீபக் ஷிவ்தசானியின் ஜூலி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஹிந்தியில் தான் 'ஜூலி 2'. தமிழ் டப்பிங்கில், இயக்குநரின் பெயரோடு சேர்ந்தே தலைப்பிடப்பட்டுள்ளது. ஜூலி என்ற நடிகையின் அகச் சிக்கல்களைப் பேசுவதுதான் படத்தின் கதையாக இருந்திருக்க வேண்டும். ராய் லக்‌ஷ்மியின் பாலிவுட் அறிமுகம் மிக எரோடிக்காக (Erotic) அமைந்துள்ளது. படத்தில் கதை என்ற ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும் என்ற போதிலும், அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத திரைக்கதை, ராய் லக்‌ஷ்மியின் உடலையே மொய்த்துக் கொண்டிருக்கிறது. கதைக்கான துகிலுரிப்பாக இல்லாமல், துகிலுரிப்பிற்காகவே இப்படமென்ற இயக்குநர் தீபக் ஷிவ்தசானியின் தெளிவு திடுக்கிட வைக்கிறது. தனது தெளிவிற்கு நியாயம் கற்பித்துள்ளார் என்ற ரீதியில் மட்டும் அவரைப் பாராட்டலாம். நல்ல நடிகையாக எவ்வித சமரசத்துக்கும் உட்படாமல் இருக்க முயன்று, அதிலிருந்து வழுவி, தொப்புத் தொப்பென்று பிராவை நழுவ விட்டு, தன் உடலை மூலதனமாக்கி பிரபல நடிகை ஆகி விடுகிறார...
இந்திரஜித் விமர்சனம்

இந்திரஜித் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் ஒருவருக்குத் துணையாக வேலைக்குச் சேர்கிறான் துறுதுறு இந்திரஜித். மருத்துவக் குணம் கொண்ட விண்கல் ஒன்றைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அந்தக் குழு, சவால்களையுக் எதிரிகளையும் சமாளித்துச் சாதித்தனரா என்பதே படத்தின் கதை. படத்தின் எந்தக் காட்சியும் மனதில் பதியவில்லை. ரோலர் கோஸ்டர் பயணம் போலவும், அவசரமானதொரு சாகசப் பயணம் போலவும் படம் முடிகிறது. ராசாமதியின் ஒளிப்பதிவில் கேரளக் காடுகளும், கோவா காடுகளும் கண்களுக்கு மிகக் குளிர்ச்சியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசுமையையும், இயற்கையின் செழுமையையும் தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல். சோனாரிகா என்றொரு கதாநாயகி மின்னல் போல் மின்னி மறைகிறார். பாடலுக்காக மட்டும் வந்து போகிறார். யானை மீது அறிமுகமாகும் அஷ்ரிதா ஷெட்டி தான் படத்தின் நாயகி. அவரும் பாடலுக்காகத்தான் என்றாலும் மின்னி மறையாமல் படம் நெடுகேவும் வருகிறார். ம...