Shadow

கட்டுரை

அதிரசம்

அதிரசம்

சமையல், மற்றவை
வணக்கம்,அதிரசம் இல்லாத தீபாவளியா???? அரிசிமாவையும், வெல்லப்பாகையும் பக்குவமா கலக்கி, நல்லா புளிக்கவிட்டு, பொரிச்சு எடுத்தா... மெது மெதுன்னு அதிரசம், சும்மா வாயில் உருகும்... எங்க ஊர் பக்கம்,, தட்டு கச்சாயம்னும் சொல்வோம்.  எவ்வளவுதான் புது புது இனிப்பு வகைகள் வந்தாலும், நம்ம பழமையான , இனிப்புகளுக்கு எப்பவும் மவுசு குறைஞ்சதே இல்லீங்க.. தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1 கிலோ (2 கப் மாவு தனியாக எடுத்து வைக்கவும்) வெல்லம் / நாட்டு சக்கரை - 3/4 கிலோ நெய்- 2 ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க செய்முறை:step 1:  பச்சரிசியை நல்லா ஒரு 3-4 மணி நேரம் ஊற வச்சுக்கோங்க. பிறகு, எடுத்து வடிகட்டி,  தண்ணி இறங்கற துணியை காரையிலோ இல்லை கயிற்று கட்டலிலோ விரித்து போட்டு இந்த அரிசியை போடுங்க. ஒரு 10-15 நிமிஷத்தில், நல்லா தண்ணியெல்லாம் வடிஞ்சிருக்கும். அரிசியை அள்ளி ப...
(வால்) பூந்தி மிச்சர்

(வால்) பூந்தி மிச்சர்

சமையல்
வணக்கம்,  எப்பவும் வட்ட பூந்தி மிச்சர்  சாப்பிட்டு போர் அடிச்சு போய், இந்த தடவை வால் பூந்தி மிச்சர் செய்தோம்.. எல்லாம் எங்க வீட்டு வாலுங்களோட வேலை.. :-) .. ஒன்னும் வித்யாசம் இல்லீங்க,, பூந்தி வட்டத்துக்கு பதிலா வால் வாலா இருக்கும்..  ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு பலகாரம்... அரை கிலோ மாவுக்கு, 1 சம்படம் வந்திருச்சு. கடையில் வாங்கி, சுத்தமா செய்தாங்களா, கலப்பட எண்ணெய்யா, கம்மியா இருக்கே இப்படி யோசிப்பதை விட்டு, நாமே செய்யறது நல்லது. இது மிக சுலபமானதும் கூட.தேவையான பொருட்கள்:கடலை மாவு - 1/2 கிலோ அரிசி மாவு - 50 கிராம் எண்ணெய் - பொரிக்க பூண்டு - 1 கட்டி கறிவேப்பிலை - 1 கொத்து அவுல் (எண்ணெயில் பொரித்தது)-  1 கப் நிலக்கடலை (வறுத்தது) - 1 கப் உப்பு, மிளகாய் பொடி- தேவைக்கு  செய்முறை:step 1: 1/2 கிலோ கடலை மாவையும், ஒரு க...
பக்கோடா

பக்கோடா

சமையல்
வணக்கம்,  தீபாவளி வந்தாச்சு, பருவ மழையும் வந்தாச்சு... அப்படியே மழை பெய்யறப்போ, மொறு மொறுன்னு கொஞ்சம் காரமா பக்கோடாவும், டீயும் குடிச்சா.. எப்படி இருக்கும்...? இதோ செய்திடலாமே, ரொம்ப ஈஸியா.... தேவையான பொருட்கள்:அரிசி மாவு- 1 படிபொட்டுகடலை மாவு -1 படிஇஞ்சி -கையளவுபச்சைமிளகாய் - 15பூண்டு -2 கட்டிசின்ன வெங்காயம் -1/4 கிலோஉப்பு -தேவைக்கேற்பகறிவேப்பிலை -1 கட்டு செய்முறை:Step 1:  இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இதை எல்லார்தையும், நல்லா தட்டி எடுத்துக்கோங்க. மிக்சியில் அரைச்சுடாதீங்க.. டேஸ்டே போயிரும்.. தட்டி எடுத்தால்தான் சுவையும் மணமும் கூடும்.step 2: அரிசி மாவு, பொட்டுகடலை மாவு, தட்டி வச்சது, உப்பு எல்லார்த்தையும் போட்டு நல்லா கலக்குங்க. கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் தெளிச...
சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்

சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்

சமூகம்
குழந்தைகளுக்குப் பிடித்த சேனலான சோனி YAY!, விழா காலத் திருவிழாவை கொண்டாடட்டத்தை மேலும் சிறப்பாக்க முடிவு செய்துள்ளது. அதன் படி, ‘YAY! Party 75 on Wheels’ என்னும் வாகனம் (Van), இந்தியாவின் அனைத்து நகரங்களில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் குழந்தைகளைச் சந்திக்க வருகின்றது. புத்தாண்டு வரை 75 நாட்களுக்கு, சேனலில் இந்தச் சிறப்பு அத்தியாயம் வெளியாகும். பல்வேறு ஆச்சரியங்களைத் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குக் கொண்டு வருகிறது இந்தப் ‘பார்ட்டி 75’. சென்னையில் தொடங்கிய YAY!-வின் பயணம், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் நீள்கிறது. சோனி YAY!-இன் இந்தப் பார்ட்டி 75, குழந்தைகளின் முகத்தில் புன்னகையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருமென்பது திண்ணம். வாகனத்தில் என்னென்ன சிறப்பு? குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வண்ணம், போட்டிகள், புதிர் விளையாட்டுகள், பரிசுப் பொருட்கள் எனக் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் ...
ரவா குலாப் ஜாமூன்

ரவா குலாப் ஜாமூன்

சமையல்
வணக்கம் நண்பர்களே!குலோப் ஜாமூன், அப்படின்னாலே குட்டீஸ் முதல் பெரியவங்க வரைக்கும், ரொம்பப் பிடிச்ச ஒரு இனிப்புங்க. இப்பெல்லாம் ரெடிமிக்ஸ் வந்திருச்சு, வாங்கினோமா, சாப்பிடோமான்னு ஆகிருச்சு. திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, என்ன செய்யலாம்? யோசிக்க வேண்டிய அவசியமே இல்லீங்க. வீட்லயே சுலபமா கிடைக்கக் கூடிய பொருட்களை வச்சு மிக்ஸ் இல்லாம, கொஞ்சம் வித்தியாசமா செய்யறதுதான்இந்த ரவா ஜாமூன். தேவையான பொருட்கள்: ரவை – 1 கப்பால் – 3 கப்சர்க்கரை – 21/2 கப் + 2 ஸ்பூன்நெய் – 3 ஸ்பூன்எண்ணெய் – பொரித்தெடுக்கரோஸ் எசென்ஸ்- 1 ஸ்பூன்ஏலக்காய் -3  (பொடித்தது)செய்முறை:Step 1:பாத்திரத்தில், ரவையைப் போட்டு மிதமான சூட்டில், 1 நிமிடம் வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும். Step 2:    பாத்திரத்தில், 3 கப் பாலை ஊற்றி , 2 ஸ்பூன் சக்கரை, 3 ஸ்பூன் நெய், ரோஸ் எ...
கத்தரிக்காய் சாம்பார்

கத்தரிக்காய் சாம்பார்

சமையல்
வணக்கம் நண்பர்களே,சாம்பார் இல்லாத நாட்களே இல்லைன்னு சொல்றளவுக்கு, நம்ம வாழ்கையில் பருப்பு சாம்பார் கலந்திருச்சுன்னே சொல்லலாம்ங்க. சாதம், இட்லி, தோசை, பொங்கல், பணியாரம், இப்படி அடுக்கிட்டே போகலாம். :-) இப்போ நாம பார்க்கிறது, சாதத்துக்கான சாம்பார். காய்கறிகள் எது வேணாலும் எவ்ளோ வேணாலும் போட்டுக்கலாம். தேவையான பொருட்கள்:கத்தரிக்காய் -2 வெண்டைக்காய் – 1 துவரம் பருப்பு – 1 கப் வரமிளகாய் – 2 தக்காளி – ½ (நறுக்கியது) சின்ன வெங்காயம் – ½ கப் மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் சாம்பார் தூள் – 1 ஸ்பூன் புளி (ஊறவைத்து வடிகட்டவும்)- ½ எலுமிச்சை அளவு கறிவேப்பிலை- கைப்படி எண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப   செய்முறை:Step 1:    1 கப் துவரம் பருப்பை, 3 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு குக்கரில் 3 விசில் ...
பீர்க்கங்காய் பொரியல்

பீர்க்கங்காய் பொரியல்

சமையல்
வணக்கம் நண்பர்களே,என்னதான் புதுப்புது காய்கறிகள் வந்தாலும், நம்ம நாட்டு காய்கறிகளுக்கு இருக்கும் மவுசும், அதனுடைய சுவையும் என்றைக்கும் மறக்காதுங்க. அதுவும், நம்ம பீர்க்கங்காய் பொரியல், செம்ம சுவையா இருக்குமே! கூடவே நம்ம நோய் எதிர்ப்த்பு திறனை அதிகரிக்குது; ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவைக் குறைக்குது; அதனால சக்கரை நோயாளிங்க சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் கம்மியா இருக்குது. விட்டமின்- சி, நார்சத்து, இப்படி பலது இருக்குதுங்க. இவ்ளோ அருமையான காய்கறிய ஏன் விட்டு வைக்கனும்!? தேவையான பொருட்கள்:பீர்கங்காய் – 1 (பெரியது) பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) – 1 வரமிளகாய் -3 சாம்பார் தூள் -1 கரண்டி மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் தேங்காய் – 1 மூடி (துறுவியது) கறிவேப்பிலை – கைப்பிடி உப்பு – தேவைக்கு எண்ணெய் – 1 கரண்டிசெய்முறை:Step 1:  பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,...
நோய் முதல் நாடி #MeToo

நோய் முதல் நாடி #MeToo

சமூகம்
முறைகேடான பாலியல் விழைவால் ஒரு தனிமனித அத்துமீறல் நடக்கிறது என்றால், அதற்கு முக்கிய தூண்டுதலாக இருப்பது மூன்று விஷயங்கள். தன்னை / தன் உடலை, தன் விருப்பத்திற்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்கிற புரிதல் இல்லாத விக்டிம்கள் (பாதிக்கப்பட்டவர்கள்). அடுத்து, இது ஓர் அத்துமீறல் என்கிற உணர்வே இல்லாது இருக்கும் சுற்றுப்புறத்திலிருப்பவர்கள். மூன்றாவதாக, தங்கள் வக்கிரத்தை மறைத்து, அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கயவர்கள். தற்போது பெருகிவரும் பாலியல் குற்றசாட்டுகளை முன்னிறுத்தி, பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு அறிவுறுத்தல் நிகழ்வை (counseling session) ஒருங்கச் செய்திருந்தார். அப்போது நான், 'பலருக்கும் எது அத்துமீறல் என்பதே புரியாது இருக்கும் நேரத்தில் இது போன்ற செஷன்கள் முக்கிய தேவை' எனக் குறிப்பிட்டிருந்தேன். இது இருபுறத்தார்க்கும் பொருந்தும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நா...
ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )

ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )

சமையல்
வணக்கம் தோழிகளே,அசைவப் பிரியர்களுக்கு, மிகப் பிடிச்ச ஒரு உணவுகளில் ஆட்டுத்தலை வறுவலும் இடம்பெறும். இது சாப்பாட்டுக்கும் அருமையா இருக்கும், சப்பாத்தி, தோசைக்கும் அருமையா இருக்கும். கொலஸ்ட்ரால் இருக்கறவங்க சாப்பிட்டராதீங்க. சுவையான ஆட்டுத்தலை வறுவல் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். வாங்க. :-) தேவையான பொருட்கள்:ஆட்டுத்தலை – 1 வெங்காயம் – 1 கப் மிளகு – 1 ஸ்பூன் கரிவேப்பிலை - கைப்பிடி பச்சை மிளகாய் - 2 விளக்கெண்ணெய் – 4 ஸ்பூன் கடுகு – ½ ஸ்பூன் மஞ்சள்தூள் – 1 ஸ்பூன் உப்பு - தேவைக்கு பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்) கொத்துமல்லி தூள் (கறி மசாலா தூள்)-  2 கரண்டிStep 1:பாத்திரத்தில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊத்தி  வெங்காயம், மிளகைப் போட்டு வதக்கவும்.Step 2:                   &nb...
சேனைக்கிழங்கு பொடிமாஸ்

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

சமையல்
வணக்கம் நண்பர்களே,சேனைகிழங்கு பார்க்க கரடுமுரடா இருந்தாலும் நிறைய சத்து இருக்குதுங்க. இந்த பைல்ஸ், உடம்புசூடு இருக்கறவங்களுக்கு, இது கண்டிப்பா சாப்பிட வேண்டிய உணவு. இதில், விட்டமின் பி இருக்கறதால, லிவர்க்கும் நல்லது. சரி சாப்பிட நல்லாருக்காதோ அப்படின்னு டவுட் வருதா???? சாப்பிட செம்மயா இருக்கும். இப்படி செஞ்சு பாருங்க… தேவையான பொருட்கள்: சேனை கிழங்கு- ½ பெரிய வெங்காயம் – 1 வரமிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – கைப்பிடி தேங்காய்- ½ மூடி செய்முறை: Step:1   சேனைகிழங்கை மேல் தோல் சீவி விட்டு, சின்னச் சின்னதா நறுக்கி, குக்கர்ல போட்டு, 2 கப் தண்ணீர், விட்டு 3 விசில் வரை வேக விடவும். ஆறியதும், தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும். Step 2:பாத்திரத்தில் எண்ணெ ஊற்றி, கடுகு போட்டு, பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்....
பருப்புப் போளி (ஒப்பிட்டு)

பருப்புப் போளி (ஒப்பிட்டு)

சமையல்
வணக்கம் தோழிகளே,  போளி (அதாங்க ஒப்பிட்டு), எல்லோருக்கும் பிடிச்ச ஒரு இனிப்புன்னே சொல்லலாம். விநாயகர் சதுர்த்தி, வீட்ல எதாவது பூஜைனாலும், இந்தப் பலகாரம் கண்டிப்பா இருக்கும். அந்த மிருதுவான பருப்புப் போளியோ இல்ல தேங்காய் போளியோ, சுடச் சுடவே எங்க வீட்ல தட்டு காலியாகிரும். இன்னிக்கு பருப்புப் போளி செய்யறது எப்படின்னு பார்க்கலாம்! தேவையான பொருட்கள்:ஒப்பிட்டு பருப்பு- ½ கிலோ மைதா மாவு – ½ கிலோ சக்கரை – ½ கிலோ எண்ணெய் – 1 கப் ஏலக்காய் - 3Step1:  பருப்பை, நல்லா தண்ணில ஒரு 2 மணி நேரம் ஊறவச்சு, குக்கர்ல 3 விசில் வரும் வரை வேக விடவும். Step 2:மைதாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஒரு 2 ஸ்பூன் சக்கரை போட்டு, 3 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி நல்லா கலக்கி வைங்க. பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து நல்லா மாவைப் பிசைங்க. கொஞ்சம் பிசுபிசுன்னுதான் இருக்கணும். அப்படியே, மூ...
நாரத்தை சாதம்

நாரத்தை சாதம்

சமையல்
வணக்கம் தோழிகளே,நாரத்தை ஊறுகாய் தானே சாப்பிட்டிருக்கோம், சாதம் கூடவா? ஆமாங்க. நார்த்தை சாப்பிட்டா, இந்த வயிறு பொருமல், அஜீரணம், சூடு எல்லாம் பறந்து போயிரும். எங்க வீட்ல நார்த்தை சாதம் அப்படினாலே, கூடவே சட்னி வேணும்னு வேண்டுகோளும் வந்திரும். தேவையான பொருட்கள்:நார்த்தைப் பழம்- 1வெங்காயம்தக்காளிபூண்டுமஞ்சள் தூள்- 1 தேக்கரண்டிகறிவேப்பிலை - கைப்படிஉப்பு- தேவைக்குசெய்முறை:Step 1:பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போடவும்.Step 2:கடுகு பொரிந்ததும்; வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். Step 3:நார்த்தைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். அந்தச் சாற்றை, இப்பொழுது ஊற்றி, மஞ்சள் தூள் போட்டுக் கலக்கி விட்டுக் கொதிக்க விடவும். Step 4:எண்ணெய் பிரிந்து வரும் சமயம், நன்கு ம...
மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு)

மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு)

சமையல்
வணக்கம் தோழிகளே,மீன் குழம்புன்னு பார்த்தா, ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு பக்குவம் இருக்கு. இன்னிக்கு, நாம கொங்கு நாட்டு புளி மீன் குழம்பு எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம்.                            தேவையான பொருட்கள்:மீன் – 1 கிலோசின்ன வெங்காயம் – ¼ கிலோபூண்டு – 5 பல்கறி மசாலா தூள் – 1 கரண்டிவெந்தயம் – 1 டீ ஸ்பூன்தக்காளி- 1புளி- 1 முழு எலுமிச்சை பழம் அளவுகறிவேப்பிலை- கைப்பிடிஉப்பு- தேவைக்குStep 1:முதலில், சின்ன வெங்காயத்தையும், கறிமசாலா தூளையும் அப்படியே பச்சையா அரைச்சு எடுத்து வச்சுக்கோங்க. Step 2: பாத்திரத்தில், எண்ணெய் ஊத்தி, கடுகு போட்டுப் பொரிந்ததும், வெந்தயம் போட்டுச் சிவந்ததும், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். Step 3: இப்போ, அரைச்ச விழுது, புளி...
மீன் ரோஸ்ட்

மீன் ரோஸ்ட்

சமையல்
வணக்கம் தோழிகளே,“மீன் ரோஸ்ட்”, நல்லா மொறுமொறுன்னு சுவையான ரோஸ்ட்,  அதுவும் இந்த மழைக் காலத்தில், புரட்டாசி வேற முடிஞ்சிருச்சு, சொல்லவே வேனாம் போங்க. அடடே,,, கேட்டாலே நிறைய பேருக்கு! சரி சுவை மட்டும்தானா?  மீன்ல பார்த்தா ஒமேகா 3 அமிலங்கள் அதிகமா இருக்குது. இது உடம்பு தன்னால உருவாக்க முடியாத மிக முக்கியமான அமிலம். அதனால மீன் ரொம்ப சத்தானதுங்க. சரி இன்னைக்கு, சுவையான மீன் ரோஸ்ட் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்:மீன் – 1 கிலோ பூண்டு – 8 பல் மிளகாய் தூள் – 2 குழி கரண்டி மிளகு – 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் – 10-15 மைதா – 1 கரண்டி உப்பு, எண்ணெய் - தேவைக்கு Step 1:மைதா, எண்ணெய், மீன் தவிர, மீதி எல்லாப் பொருளையும் மிக்சியில் போட்டு நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க. நல்லா அரைச்ச பிறகு, மைதா போட்டு, ஒரு சுத்து மிக்சில விட...
சப்பாத்தி, வெஜிடபுள் குருமா

சப்பாத்தி, வெஜிடபுள் குருமா

சமையல்
வணக்கம் தோழிகளே,இன்னைக்கு நாம, சப்பாத்தி - காய்கறி குருமா எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். இது மிகவும் சுவையான, சத்து மிகுந்த உணவு. பசங்க ஸ்கூலுக்கும் செய்து கொடுத்து அனுப்பலாம். அதுவே சப்பாத்திய வெவ்வேறு உருவத்தில் (சதுரம், நட்சத்திரம், வட்டம் இப்படிச் செய்தால்) பார்க்கச் சூப்பராக இருப்பதாலும், மிச்சம் வைக்காம அப்படியே சாப்பிட்டிருவாங்க. தேவையான பொருள்கள்:மாவு பிசைய: 1.    கோதுமை மாவு -  ½ கிலோ2.    தண்ணீர்- தேவையான அளவு3.    உப்பு- தேவைக்கு  குருமா: 1.    கேரட்- 12.    பீட்ரூட்- 13.    காலிபிளவர்-50 கிராம்4.    பீன்ஸ் – 50 கிராம்5.    உருளை கிழங்கு– 36.    பெரிய வெங்காயம...