Shadow

Tag: தினேஷ் ராம்

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

இது புதிது, கட்டுரை, சினிமா
“வாழ்த்துகள் (2008) படம் தோல்வி அடைந்ததற்கு என்னுடைய திமிர்த்தனம்தான் காரணம். என் தாய்மொழி தமிழிலேயே எல்லா உரையாடலும் எழுதணும்னு நினைச்சேன். அதுக்கு வருத்தப்படுறேன். இந்த இனத்தில் பிறந்ததற்கு, பெருமையடையுறேன். அதே சமயம் சிறுமையும் அடையுறேன். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ எனச் சொல்வது நெருடலாக இருக்குன்னு விமர்சனம் எழுதுறாங்க. காசி அண்ணனிடம் சொன்னேன். அன்பைக் கூட தாய்மொழியில் பரிமாறிக் கொள்ளாத ஓர் இனம் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்று கேட்டார். தமிழர்களுக்குத் தாய்மொழி அந்நியப்பட்டுப் போச்சு. இதை விட இழிவு வேறெதுவுமில்லை.” - இயக்குநர் சீமான் (சீமான் செய்த துரோகம்) ... வாழ்த்துகள் படத்தின் கதைச்சுருக்கம்: மாமியார், மாமனாரை நேசிக்கும், குடும்பத்தைச் சிதைக்காத மனைவி அமைந்தால் தேவலாம் என நினைக்கிறார் நாயகன். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அப்படியொருவரைப் பார...
2 11 17 சர்வதேசத் திரைப்பட விழா

2 11 17 சர்வதேசத் திரைப்பட விழா

சினிமா
இத்திரைப்பட விழா, திரைப்படம் சார்ந்து தமிழகத்தில் நிகழும் ஓர் அற்புதமான முயற்சி எனக் கண்ணை மூடிக் கொண்டு கூறலாம். அதற்குப் பல காரணங்களை முன் வைக்கலாம். அதில் பிரதானமானது, சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு வைக்கப்பட்ட, ‘2 11 17’ என்ற பெயரே! ‘பாரத ரத்னா’ அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்ற எடுத்துக் கொண்ட காலம், 2 ஆண்டு 11 மாதம் 17 நாட்கள் ஆகும். அதை நினைவுகூரும் விதமாகவே, இந்தச் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு 2 11 17 எனப் பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்பட விழா, FilmFreeway எனும் திரைப்பட விழா அமைப்பின் கீழ் இயங்குகின்றது.இவ்விழாவின் இன்னொரு சிறப்பம்சம், திரையிடல் முடிந்ததும், அப்படத்தின் இயக்குநரோடு கலந்துரையாடப் பார்வையாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றனர். மேற்கு வங்கம், ஈரான், பிரேஸில், லண்டன் என பன்னாட்டுக் கலைஞர்களுடனான உரையாடல், எல்லைகளைக் கடந்து கலையை ரசிப்...
மதுரம் விமர்சனம்

மதுரம் விமர்சனம்

OTT, OTT Movie Review, அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது. கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், எப்படி மருத்துவமனை ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று விவரிப்பார். மருத்துவமனையின் பரபரப்பு மெல்ல அடங்கி, ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் க்யூட்டான ஷாட்களில், மருத்துவமனையின் அழகு மிளிரத் தொடங்குகிறது. மலையாளப் படங்களுக்கே உரிய பிரத்தியேக அழகுகளில் ஒன்று, உணவினையும், அது சமைக்கப்படும் நேர்த்தியையும் மிக அற்புதமான ஷாட்களில...
தப்பட் விமர்சனம்

தப்பட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. 'தப்பட்' என்றால் "அறை (slap)" என்று பொருள். 'ஆர்டிகிள் 15' எனும் அதி அற்புதமான படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் படம். அதுவும் குடும்ப வன்முறையைப் (Domestic violence) பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. மாமியார் கொடுமை, வரதட்சணைக்காகத் துன்புறுத்தப்படுவது, வசை மாரி பொழிதல், கையை நீட்டி அடித்தல் என்ற பிசிக்கல் & வெர்பல் அப்யூஸ்கள் மட்டும் டொமஸ்டிக் வயலன்ஸில் வராது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குடும்ப நலனெனக் காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது போன்றவையும் டொமஸ்டிக் வயலன்ஸ்தான். "நான் கார் ஓட்டக் கத்துக்கவா?" - டாப்சி. "முதலில் ஒழுங்கா பராத்தா போடக் கத்துக்க?" - டாப்சியின் கணவன். இந்த உதாசீனத...
பெர்முடா | நாவல் விமர்சனம்

பெர்முடா | நாவல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
கேபிள் சங்கரின் பெர்முடா நாவல், மூன்று ஜோடிகளின் பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுகிறது. மூன்று ஜோடிகளிலுமே ஆண் மூத்தவராகவும், பெண் இளையவராகவும் உள்ளார். பெர்முடா எனும் தலைப்பினை ஒரு குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பொருந்தாக் காமம் எனும் கவர்ச்சியான ஈர்ப்பில் அந்த ஜோடிகள் சிக்குகின்றனர். அந்தப் பொல்லாத ஈர்ப்பு அவர்களைத் தன்னுள் இழுத்துப் புதைத்துக் கொள்கிறதா அல்லது அந்த ஈர்ப்பிலிருந்து லாகவமாய் வெளியேறி விடுகின்றனரா என்பதுதான் நாவல். பொருந்தாக் காமத்திற்குத் தொல்காப்பியர் சூட்டும் பெயர் “பெருந்திணை.” அதை மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கிறார். அதில், இரண்டாம் வகையான ‘இளமைதீர் திறம்’ என்பதில்தான் நாவலின் அச்சாணி சுழல்கிறது. இளமை நீங்கிய நிலையில் கொள்ளும் காதல் என்பதே ‘இளமை தீர் திறம்’ ஆகும். ஆனால் ஒருவரின் வயதைக் கொண்டு இளமை தீர்ந்தது என எப்படிச் சொல்ல முடியும்? வயதைக் கொண்டு பருவ நிலை...
The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

The tale of the Princess Kaguya (2013) விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜப்பான் நாட்டுப்புறக் கதை ஒன்றை அழகான அனிமே (Anime – Japanese animation) படமாக உருவாக்கியுள்ளார் இசாவோ டகஹாட்டா (Isao Takahata). இது அவர் இயக்கிய கடைசிப்படமும் ஆகும். சிறிய வயதில் அவர் படித்த, ‘ஒரு முங்கீல் வெட்டியின் கதை’ என்ற நாட்டுப்புறக் கதைக்கு அனிமேஷன் உருவம் கொடுக்க வேண்டுமென்பது அவரது ஆசை. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அனிமேஷன் துறையில், கதாசிரியராகத் தயாரிப்பாளராக இயக்குநராகப் பணியாற்றிய டகஹாட்டா, தனது இளம் வயது கனவிற்கு அவரது 78 வது வயதில் உயிர் கொடுத்தார். வழக்கம் போல், மலையில் மூங்கிலை வெட்டிக் கொண்டு திரும்பும் பொழுது, ஓர் அதிசயமான வெளிச்சம் மூங்கிலின் அடித்தண்டில் இருந்து வருவதைக் காணுகிறார் ஒரு மூங்கில் வெட்டி. அருகில் சென்று பார்க்கும் பொழுது, ஒரு மூங்கில் குருத்து பிரகாசமாய் வளர்ந்து மலருகிறது. அந்த மலர்ந்த மூங்கில் குருத்தில் இருந்து, உள்ளங்கைக்குள் அடங்கி விடுமளவு ...
நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

நான் இனி நீ.. நீ இனி நான் | ஜெகன் சேட் – நூல் விமர்சனம்

கட்டுரை, புத்தகம்
குறுநாவல் என்று கூடச் சொல்ல முடியாத ஒரு நெடுங்கதை. ரோலர்கோஸ்டர் போல் விறுவிறுவென ஓடும் 90'ஸ் கிட் ஒருவரின் காதல் கதை. முதல் வரியிலேயே, தான் பார்த்த பெண்ணின் அழகு பற்றிய பிரமிப்பில் இருந்து தொடங்குகிறது ஜெயராமனின் காதல் கதை. பேச்சுமொழியில், தனக்கு நெருங்கிய ஒருவரிடம் ஜெயராமன் கதை சொல்வது போல் எழுதியுள்ளார் ஜெகன் சேட். ஒருவரின் காதல் கதையை, அவர் வாயாலேயே கேட்பதுதான் எத்தனை சுவாரசியம்? இயக்குநர் ராஜேஷின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) ஆரம்பக் கால படங்கள் போல் தொடங்கும் கதை, கே. பாலசந்தரின் உறவுச் சிக்கல்களைப் பேசும் கதையைப் போல் முடிகிறது. அந்த சிக்கல்களையும், சுந்தர்.சி பாணியில் கலகலப்பாகவே அணுகியுள்ளார் ஜெகன் சேட். ஜெயராமன் தனது கதையைச் சொல்லும் போக்கில் பல அதிர்ச்சிகளைத் தருகிறார். அவரிடம் ஒரு பெண், 'நீ விர்ஜினா?' என வினவுகிறார். 90'ஸ் கிட்ஸ்களுக்குத்தான் தெரியும், அது எத்தனை வலி மிகுந்த கலாச்சார...
எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

எழுதாப் பயணம் – ஒரு போராட்ட வீரரின் கள அறிக்கை

கட்டுரை, சமூகம், புத்தகம்
ஒரு ஆட்டிசக் குழந்தையின் அம்மாவாக, சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியையாக, தனது அனுபவங்களை அழகாகத் தொகுத்து, 'எழுதாப் பயணம்' எனும் நூலை எழுதியுள்ளார் லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன். இந்நூலின் சிறப்பம்சம், எவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள ரொம்ப எளிமையான மொழிநடையே ஆகும். சமூகத்தில், ஆட்டிசம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை. அது ஏற்படுவதற்கு முன்பாகவே, அதை வைத்துச் சம்பாதிக்க சிலர் தொடங்கிவிட்டனர். நம் மக்களின் அறியாமை மேல உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில், ஆட்டிசத்துக்குத் தீர்வு உண்டு என மக்களை நம்ப வைத்து பணம் பார்க்கின்றனர். லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன் போன்றோர் தொடர்ந்து, இத்தகைய வலையில் ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர்கள் ஏமாந்து விடக்கூடாதென, கிடைக்கும் அத்தனை சந்தர்ப்பத்திலும் பேசி வருகின்றனர். ஆனாலும், ஆட்டிசம் பற்றி, பொதுவெளியில் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லவேண்டிய அவசியம் இன்னும் அப்படி...
ட்ரான்ஸ் விமர்சனம்

ட்ரான்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
Trance என்றால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. போதையூட்டப்பட்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம். மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் காக்க இறைவன் பிரசன்னம் ஆவான் என எதிரிலுள்ள ஆபத்தை உணராமல், எளிய தீர்வுகளை நோக்கி நகராமல் கட்டிப் போடும் விஷப்போதையைத் தரவல்லது. போதைக்கு அடிமையானவர்கள், கடவுளின் பெயரால் தங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தருவது கற்பனைக்கெட்டாத அளவற்ற பணமும், அரசியலில் அசைக்க முடியாத அதிகாரமுமே! இதில், ட்ர...
அப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்

அப்பா காண்டம் – குறும்பட விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாருமே பேசாத, பேச விரும்பாத ஒரு கருவைத் தனது அப்பா காண்டம் குறும்படத்தில் இயக்குநர் ஆர்வா தொட்டுள்ளார். இப்படத்தை ரெட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  வயதுக்கு வந்த கல்லூரி படிக்கும் மகனிடம், ஒரு அப்பா, செக்ஸ், மாஸ்டர்பேஷன், சேஃப்ட்டி, காண்டம் எனப் பேசுகிறார். மகனின் வளர்ச்சியில் அப்பாவின் பங்கு பற்றிய அத்தியாயம் அல்லது அப்பாவின் ஆணுறை என படத்தின் தலைப்பையே இயக்குநர் இருபொருள்பட வைத்து அசத்துகிறார். முதலில், இப்படத்தின் கதைக்கு 26 நிமிட கால அளவு என்பது மிக மிக அதிகம். நேரடியாகக் கதைக்குள் செல்லாமல், படத்தின் தொடக்கத்திலேயே சுமார் 6 நிமிடங்களுக்கு ட்ரோன் மூலமாக எடுக்கப்பட்டுள்ள ஏரியல் ஷாட்களால் எக்ஸ்ப்ரீமென்ட் செய்துள்ளனர். அத்தகைய எக்ஸ்ப்ரீமென்ட் குறும்பட இயக்குநர்களுக்கு அவசியம் தான் என்றாலும், கதைக்குத் தேவைப்படாத பட்சத்தில் அதை எடிட்டிங் டேபிளிலேயே கத்தரித்து வீசியிருக்கல...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

சினிமா, திரை விமர்சனம்
தியாகராஜன் குமாரராஜாவின் உலகத்தில், வேம்பு, ஷில்பா, துளசி, லீலா என 4 பெண் கதாபாத்திரங்கள் பிரதான இடம்பெறுகின்றனர். படைப்பாளன் அவர்களுக்கு அளித்துள்ள குணம் (!?- குற்றம்), வாழ்விடம், தண்டனை குறித்து நான்-லீனியரில் அடுக்கினால், படைப்பாளனின் அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். குணவார்ப்பு: வேம்பு, தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்கிறார். ஷில்பா சர்வைவலுக்காகப் பிச்சை எடுக்கிறார், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார், குழந்தைகளைக் கடத்தி விற்கிறார். ஜோதி - நெருப்பு; பதிவிரதை; படி தாண்டாப் பத்தினி. லீலா, பார்ன் (Porn) படங்களில் நடித்து லீலைகள் புரிந்தவர். வாழ்விடம்: வேம்பு - நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். லிஃப்ட் வசதி உள்ள குடியிருப்பில் வசிப்பவர். ஷில்பா - சமூகத்தை விட்டு ஓடிப்போனவர். ஜோதி - பாரம்பரியமான வீட்டில். லீலா - குடிசை மாற்றுக் குடியிருப்பில். இனி தான் சூப்பர் டீலக்ஸின் விள...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 3

சினிமா, திரை விமர்சனம்
எந்த ஒரு தமிழ்ப்படமும் தந்திராத அனுபவத்தைத் தந்துள்ளதால், சூப்பர் டீலக்ஸ் மிகப் பெரிய விவாதத்தைப் பொதுவெளியில் திறந்துவிட்டுள்ளது. படத்தினை விடப் பார்வையாளர்களின் கோணங்கள் வெகு சுவாரசியமாய் உள்ளது. ரசனையில் முதிர்ந்தோரை, இந்தத் தமிழ்த் திரையுலகம் தான் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது? ஷில்பாவை சக உயிராகப் பார்க்காமல் ஒரு ஜடமாகப் பார்த்துள்ளார் என்ற எனது குறைப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு மறுமொழி இது: 'மீட்சிக்காக, பாவமன்னிப்பிற்காகப் பயணம் போற ஒரு ஜீவன் ஷில்பா. சுனாமியில் தப்பித்து, ஏன் தப்பித்தோமெனத் தெரியாமல் குழம்பி, உள்ளம் உந்த மும்பை ஓடி, பெண்ணாக மாறி, பிழைப்பிற்காக அந்தப் பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்து, தான் செய்த செயலோட தீவிரத்தை உணரும் தருணத்தில் பாவமன்னிப்பு வேண்டி, தன் வீடடைந்து, கடைசியில் தான் மட்டும் தான் புறக்கனிக்கப்பட்டவன் அப்படிங்கற சுயபச்சாதாபத்தை விட்டு வெளிய வந்து தன் மன...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 2

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கதை சொல்லட்டுமா? திருவாரூர் தொகுதியில், அமமுக கட்சியின் வேட்பாளர் பெயர் எஸ்.காமராஜ். அமமுக-விற்குக் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்த அதிகார மையம், அதே தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் B.காமராஜ்க்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கிக் குழப்பத்தை உண்டு செய்ய முயல்கிறது. தோட்டத்து வாசல் மூலம் உள்ளே நுழைவதில் பெரும் பிரேமை கொண்டவர்களின் தர்மம் (தேவை), இப்படியான குழப்பத்தை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கும். 'தென்னந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கம்’ தொடங்க உதவி செய்து தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய ‘ரெட் டீ’ நாவல் எழுதிய பி.எச்.டேனியலை அசிங்கப்படுத்துவது போல மருத்துவர் பரிசுத்தம் கதாபாத்திரத்தினைப் பரதேசி படத்தில் அமைத்திருப்பார் இயக்குநர் பாலா. பி.எச்.டேனியல் எனும் மனிதர் வாழ்நாளெல்லாம், தொழிலார்களுக்காகப் போராடி, அவர்களுக்கு உரிமையையும் அடிப்படை வசதியும் மீட்டதோடு, ...
சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 1

சினிமா
சூப்பர் டீலக்ஸ், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ள படம் என்பதில் யாதொரு மாற்றுக் கருத்துமில்லை. குத்துப்பாட்டு, சண்டை என ஒரே மாதிரியான திரையிலக்கணத்தில் படங்கள் பார்த்துச் சலித்துவிட்ட ரசிகர்களுக்குப் புத்தம் புதியதொரு உலகத்தைத் திறந்துவிட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஒவ்வொரு ஃப்ரேமும், முழுமையாக அவரது கிரியேட்டிவ் கட்டுப்பாட்டிற்குள் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினைக் காட்டுகிறார் என்றால், அந்த வீட்டின் சுவரின் நிறம், அங்குள்ள பொருட்கள், அவற்றின் நிறம், அவை வைக்கப்பட்டிருக்க வேண்டிய இடமெனச் சகலத்தையும் கவனமாகச் சிருஷ்டிக்கிறார். ஒரு முழுப்படத்திற்குமே இது சாத்தியமாக, சினிமா மீது விவரிக்க இயலாக் காதலும், வேலையில் அதீத அர்ப்பணிப்பும் தேவைப்படும். பொதுவாக, கிடைத்த லொக்கேஷனில், லைட் உள்ளவரை படப்பிடிப்பு, பட்ஜெட்டுக்கேத்த இசை என்ற சமரசங்களில் தான் சினிமா உலகம் இயங்கிக் கொண்டுள்ள...
90 ML விமர்சனம்

90 ML விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்துள்ள மிக முக்கியமான படம். இப்படியொரு படம் வருவது மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. தண்ணியடிப்பது, தண்ணியடித்துவிட்டுக் காதலியிடம் காதலின் மாண்பையும் மகத்துவத்தையும் பிதற்றுவது, காதலியின் வீட்டிற்குச் சென்று கலாட்டா செய்வது, காதலியின் அப்பாவை ஒருமையில் பேசுவது, ஆற்றோரத்திலோ கடலோரத்திலோ 'பொண்ணுங்கள லவ் பண்ணக்கூடாது' என போதையில் நண்பர்களுக்குப் போதிப்பது என்பதெல்லாம் தமிழ்ப்பட நாயகர்கள் காலந்தோறும் கடைபிடித்து வரும் கலாச்சாரம். வாரத்துக்கு ஒரு படமாவது, பாரில் குத்துப்பாட்டு இல்லாமல் வருவதில்லை. சிகரெட் பிடிப்பது ஹீரோயிசம், தண்ணியடிப்பது ஆண்களின் பிறப்புரிமை என்பது சமூகத்தில் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால், பெண்கள் குடித்தால் மட்டும் கலாச்சாரம் என்னாவது என்ற பதற்றம் ஆண்களுக்குத் தொற்றிக் கொள்கிறது. ஆண்கள் குடிப்பது தவறில்லை; பெண...